
Post No. 11,888
Date uploaded in London – – 10 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நெல்லில் பல வகைகள் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் அரிசியில் எந்த வகை அரிசி மிகவும் நல்லது?
அரசி என்னும் உணவை மக்கள் சாப்பிடுவது 10,000 ஆண்டுகளாக நடைபெறுகிறது. உலகில் இன்று மூன்றாவது நிலையில் உள்ள பயிர் அரிசி. முதலில் மக்காச் சோளம், இரண்டாவது கரும்பு, முன்றாவது அரிசி ஆகும்.
இன்றைய கணக்கில் உலகில் அதிகமாக அரிசி பயிரிடுவது ஆசிய நாடுகள்தான் முதல் ஒன்பது நெல் பயிரிடும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. அது மட்டுமே 28 சதவிகிதத்தை பயிரிடுவதால், உலகில் கால் வாசிக்கும் உலக அரிசியை உற்பத்தி செய்யும் நாடு சீனா .
அரிசியில் என்ன சத்துக்கள் இருக்கின்றன?
மக்னீஷியம், பாஸ்வரம் , மாங்கனீஸ், செலீனியம், இரும்பு, போலிக் அமிலம், (Folic acid) நியாசின் (Niacin) , தைமின் (Thymin) ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. ஆயினும் புரோட்டீன் இல்லாததால் , பொதுவாக அரிசியுடன் பருப்பு, சாம்பார் முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும்.
வெள்ளை நிற அரிசியைவிட பழுப்பு நிற (Brown Rice) அரிசி (கைக்குத்தல் அரிசி) மிகவும் நல்லது. இயந்திரத்தில் கொடுத்து நெல்லை அறைக்கையில் அதிலுள்ள முக்கிய சத்தை இழந்துவிடுகிறோம்.தானியத்திலுள்ள முளை , தவிடு முதலியன வெள்ளை அரிசியில் இராது. இவை நமக்கு அளிக்கும் கொஞ் சம் புரோட்டீன், நார்ச் சத்து, கொழுப்புச் சத்து கிடைக்காது. ஆகவே கைக்குத்தல் அரிசி நல்லது.
பழுப்பு நிற கைக்குத்தல் அரிசியை சமைத்துச் சாப்பிடுவோருக்கு கூடுதலாக எதுவும் தேவை இல்லை. ஆனால் வெள்ளை நிற அரிசியை சமைத்துச் சாப்பிடுவோர், நார்ச் சத்துக்காக காய்கறிகளையும், புரோட்டீ னுக்காக (புரதச் சத்து) பருப்பு முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்துக்காக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சத்துணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
–subham—
Tags- பழுப்பு நிற , அரிசி, கைக்குத்தல் அரிசி