யாழ் மூரி பதிகம் பாடி அசத்திய சம்பந்தர் (Post No.11,887)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,887

Date uploaded in London – –  10 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Yaaz/Lyre at London Undergound, South Kensington Station

ஞான சம்பந்தர் வாழ்க்கை முழுதும் அற்புதங்கள் நிறைந்தது . அதில் ஒரு அற்புதம் சங்கீத அற்புதம் ஆகும். யாழில் அடங்காத ஒரு பாட்டைப்பாடி , திருநீல கண்ட யாழ்ப்பாணரையே திகைக்கவைத்தார் .

தருமபுரத்திலுள்ள சிவபெருமானைக் காண சம்பந்தர் வந்தார். அது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த இடம் . சம்பந்தர் வ்ருகையை அறிந்து யாழ்ப்பாணரின் குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்தனர்.

சம்பந்தரின் பாடல்களை யாழ்ப்பாணரும் யாழில் வாசிப்பதால் மேலும் அதற்கு மெருகு கூடிற்று. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சமப்ந்தன் என்று பின்னோர் புகழ்ந்ததற்கு இதுவே காரணம்  என்று யாழ்ப்பாணரின் உறவினரிடையே ஒரு தவறான எண்ணம் பரவி இருந்தது. தங்கள் குல யாழ்ப்பாணன் பாடுவதாலேயே சம்பந்தரின் பாட்டு- தேவாரம் — பிரபலமாகியது என்று எண்ணினார்கள். ஆனால் யாழ்ப்பாணரோ அகந்தை அற்றவர் . ஆகையால் தவறான கருத்தை போக்க எண்ணி பெருமானே, யாழில் இசையில் அடங்காத ஒரு பதிகத்தைப் பாடி அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

சம்பந்தரும் மாதர் மடப்பிடி என்று துவங்கும் பதிகத்தைப் பாடினார். அதை எவ்வளவு முயன்று பார்த்தும் யாழிசையில் வடிக்கமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த யாழ்ப்பாணர் தன கையில் இருந்த யாழை ஓங்கி அடித்து உடைக்க முயன்றார். சம்பந்தரோ அதைத் தடுத்து நிறுத்தி யாழைக் கையில் வாங்கினார். இறைவனின் பெருமை நம் சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதை ஒரு யாழில் அடக்க முடியுமா? என்ற அருள்வாக்கினை அருளினார். அதனால் இப்பதிகம் யாழ் மூரி என்று அழைக்கப்பட்டது

மூரி என்றால் வலிமை என்று பொருள். யாழைக்காட்டிலும் இறைவனின் இசை வலிமை வாய்ந்தது என்பது இதன் பொருள்..

முதல் பாட்டிலேயே வேதமோடு ஏழிசை என்ற வரி வருகிறது.

ஆகையால் சம்பந்தருக்கு ஏழு இசையும் தெரியும் :

குரல் – துத்தம் – கைக்கிளை — உழை – இளி – விளரி – தாரம் என்பது 7 இசை

குரல்- சங்கத் தொனி

துத்தம் – ஆண் மீன் பிளிறு

கைக்கிளை- குதிரையின் குரல்

உழை – மானின் குரல்

இளி – மயிலின் குரல்

விளரி – கடலோசை

தாரம் – கடலோசை

என்று உரைகள் சொல்லும்..

Xxxx

இன்னொரு சப்தஸ்வர ஒப்பீடும் உள்ளது

Sanskrit list and Tamil list of sounds of Sapta Svaras

ஸ – மயிலின் குரல் (சம்ஸ்க்ருதம்)- வண்டின் ரீங்காரம் (தமிழ்)

ரி –  பசு cow/ Sanskrit list  — கிளி parrot / Tamil list

க – ஆடு goat — குதிரை  horse

ம – கொக்கு heron – யானை elephant

ப – வானம்பாடிnightingale- குயில் cuckoo

த — குதிரை horse — பசு cow

நி – யானை elephant — ஆடு goat

ஸம்க்ருதமும் , தமிழும் வெவ்வேறு மிருகங்கள் பறவைகளின் குரல்களை  ஒப்பிட்டாலும் பிராணிகளையே பயன்படுத்திய ஒற்றுமையைக் காண முடிகிறது.

ஆழ்வார் பாடல்களைப்ப பாடிய பன்னிருவரிலும் திருப்பாண் ஆழ்வார் இருக்கிறார். அவரும் யாழ்ப்பாணரே .

Xxx

தருமபுரம் ஆராய்ச்சிக் குறிப்புகள்

மல்லிகை மலர்

சம்பந்தரின் தேவார யாழ்மூரி பதிகத்தில் வேறு சில சுவையான செய்திகளும் உள .

1. தருமபுரம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்துள்ளது.

2.பாடல் மூன்றில் எண்ணிதழ்  மெளவல் என்று மல்லிகையைக் குறிக்கிறார்.மல்லிகையின் ஒரு வகைக்கு எட்டு இதழ்கள் உண்டு. தாவரவியல் (Botanist Sambandar) வல்லுனரான சம்பந்தர் அதைக்கூடப்  பாடத்  தவறவில்லை.

3.பாடல் ஐந்தில் சிவ சஹஸ்ரநாமம் (1000 பேர்) குறிப்பிடப்படுகிறது.

4.சம்பந்தர் காலம் வரை யாழ் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

5.கடற்கரை முத்து பற்றிப் பாடுவதால் அக்காலத்தில் தருமபுரத்துக்குப் பின்னர் கிழக்கு திசையில் கடற்கரையே இருந்தது போலும்.

6. இந்தப் பதிகத்தில் கானல் கண்டகம் (கடற்கரை தாழை ), முண்டகம் – கடல் முள்ளி (பாடல் 7) பாடியது குறிப்பிட்டதக்கது (Mangrove Plants) .

ஒரு வேளை  தற்காலக் கோவில் இப்போதைய இடத்தில் சம்பந்தர் காலத்துக்குப் பின்னர் கட்டப்பட்டிருக்கலாம்.. இதை  மேலும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் .

xxxxx

மாதர்மடப் பிடியும் மடவன்னமு மன்னதோர்

நடையுடைம் மலைமகடுணையென மகிழ்வர்

பூதவினப் படைநின்றிசை பாடவுமாடுவ

ரவர்படர் சடைந் நெடுமுடியதொர் புனலர்

வேதமொடேழிசை பாடுவராழ் கடல் வெண்டிரை

யிரைந் நுரைகரை பொருதுவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னைதயங்கு மலர்ச்சிறை வண்டறை

யெழில் பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே       

—–  (முதலாம்திருமுறை –திருத்தருமபுரம் –பாடல்எண் 1)

xxx

பாடல் 3

தண்ணிதழ் முல்லையொடெண்ணிதழ் மெளவன்மருங்கலர்

xxxx

பாடல் 7

காமரு தண் கழி நீட்டிய கானல கண்டகங்

கடல் அடை கழி இழிய முண்டகத்தயலே

xxxx

பாடல் 9

தடங்கடல் விடும் திரைத் தரும புரம் பதியே

பாடல் இரண்டிலும் சங்கு, முத்துக் குவியல் வருகிறது

–subham—

Tags- யாழ் , மூரி , பதிகம், சம்பந்தர், கடல் தாவரங்கள், தருமபுரம், மல்லிகை , ஏழிசை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: