
Post No. 11,895
Date uploaded in London – – 12 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று அழிவேயில்லாத மூன்றாம் நாள் ஆகும். இந்த 2023-ஆம் ஆண்டு, இது ஏப்ரல் மாதம் 22-ம் தேதி வருகிறது.
அக்ஷய என்றால் அழிவே இல்லாத, குறையாத என்று பொருள். திருதியை என்றால் மூன்றாம் நாள் என்று பொருள். மாதத்துக்கு இரண்டு முறை திருதியை வரும்.தமிழில் அட்சய திருதியை என்றும் எழுதுவார்கள். இது தமிழ் நாட்டுப் பஞ்சாங்கங்களில் இருப்பதால் , இதைத் தமிழர்களும் காலா காலமாகக் கொண்டாடிவருவதை அறியலாம்.
பொதுவாக வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ் நாட்டுக்கு வெளியே அமாவாசை அன்றே அடுத்த தமிழ் மாதம் துவங்குவதாக ஒரு கணக்கு இருப்பதால் இது சித்திரை மாதமும் வரும்.
மஹாபாரதக் கதையில் வரும் திரவுபதியின் அக்ஷய பாத்திரக் கதையை அறியாதார் எவருமிலர்.
கோபமே உருவான துர்வாச முனிவர், இதோ சாப்பிட வருகிறேன் என்று நடுக்காட்டில் வனவாசம் செய்யும் திரவுபதியிடம் சொல்லிவிட்டு, சீடர்களுடன் குளிக்கச் சென்றார். திரவுபதி அம்மையார் அப்போதுதான் எல்லோருக்கும் பரிமாறி சாப்பிட்டு முடித்துவிட்டு சட்டியைக் கவிழ்த்து வைத்திருந்தார்..
அடே , கிருஷ்ணா, எபோதும் நீதானே உதவுவாய்; நான் என்ன செய்ய? ஐயா திரும்பி வருவதற்குள் நான் எப்படிச் சமைப்பேன்? என்ன செய்வேன்? என்று பதறத் துவங்கினாள் .
தங்கச்சி, அந்த சட்டியை இப்படிக் கொண்டுவா – என்றான் கண்ணன். இதோ ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டு இருக்கிறதல்லவா? இதன் பெயர்தான் இன்வெஸ்ட்மென்ட் Investment ; அதாவது முதலீடு. இதோ பார் மாஜிக் magic.
ஓம் சூம் மந்திரக்காளி என்றான்.
வாராத செல்வம் வருவிப்பாணை, தீராத நோயைத் தீர்விப்பானை என்று அப்பர் பெருமான் சிவனைப் பாடினார் வைத்தீச்வரன் கோவிலில். அது போல வாராத செல்வம் வந்தது அட்சய பாத்திரத்தில்.
துருவாசரும் சீடர்களும் வயிறு புடைக்க உண்டு, வரமும் தந்துவிட்டுப் போனார்கள்.
INVESTMENT PHILOSOPHY
இந்தக் கதையில் பெரிய தத்துவம் இருக்கிறது. ஒரு துளியை பெரு வெள்ளம் ஆக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் அடைவோர் கவலைப்படவேண்டியதில்லை. ஒரு சோற்றுப் பருக்கை எப்படி பலருக்கு அன்னம் இட்டதோ, அது போல ஒரு பைசா, ஒரு பென்னி, ஒரு சென்ட் நாணயத்தை முதலீடாக வைத்து பிரம்மாண்டமான செல்வத்தை உருவாக்கலாம். இறை அருளும், முயற்சசியும் இருந்தால் போதும்.
இதனால்தான் பெண்களும் கொஞ்சம் தங்கத்தை வாங்கி அன்று இறைவன் காலடியில் வைக்கின்றனர். அது பெருகிப் பல்கி ஆல மரம் ஆகும். ஆல மரத்துக்கே அட்சய வடம் என்று ஒரு பெயரும் உண்டு.
xxx
Jain Festival
வட நாட்டில் சமண மதத்தைப் பின்பற்றுவோருக்கும் இது முக்கிய பண்டிகை நாள். முதலாவது தீர்த்தங்கரர் ரிஷப தேவர் , தனது தவத்தை முடித்துக்கொண்ட நாள் அது.
ஒரிஸ்ஸாவில் கார்ப்பருவம் பயிரிடும் துவக்க விழா நாள் அட்சய திருதியை.
வட இந்தியாவில் இது பயிரிடும் காலம். ஒரிஸ்ஸாவைப் போலவே குஜராத்திலும் விவசாயிகள் நிலத்தை உழுது பயிரிடத் துவங்குவார்கள்.
xxxx
Parasu Rama’s Birth Day
பரசுராமர், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவர். அவரும் பலராமனும் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்பினார்கள். கேரள த்தில் உப்பு நிறைந்த கடற்பகுதியை விவசாயம் நடக்கும் சாகுபடி பூமியாக பரசுராமர் (Reclamation of salty lands) மாற்றினார். இதனால் கேரளத்தைக் கடவுள் தந்த பூமி என்பர். அத்தகைய பெரியோன் ஆன பரசுராமரின் பிறந்த நாள் அட்சய திருதியைதான்
கிருத யுகம் அல்லது த்ரேதா யுகம் இந்த நாளில்தான் துவங்கியது என்றும் சொல்லுவார்கள் .
xxx
முன்னோர்களுக்கு வழிபாடு Worship of the Departed Souls
வட இந்தியாவில் இது பற்றி ஒரு கதையும் உண்டு .பனியா என்பது வணிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு. ஒரு ஏழை பனியா இருந்தான். அவன் இறந்து போன தகப்பனுக்கு, அட்சய திருதியை நாளில் தர்ப்பணம் கொடுத்தான் அடுத்த ஜென்மத்தில் பெரிய அரசனாகப் பிறந்து தான தர்மங்கள், யாக யக்ஞங்கள் செய்தும் அவனுடைய செல்வம் பெருகிக்கொண்டே இருந்தது .
புதன் கிழமை அல்லது ரோகிணி நடசத்திர நாளில் இந்தப் பண்டிகை வந்தால் மேலும் விசேஷமாம்
இப்போதும் இந்த நாளில், இறந்தோரின் நினைவாக பிராமண புரோகிதர்களுக்கு விசிறியும் காலணியும் தானம் செய்யும் வழக்கம் நாட்டின் சில பகுதிகளில் இருக்கிறது .
இவ்வாறு ஏராளமான நல்ல விஷயங்களை இந்தப் பண்டிகை நினைவு படுத்துவதால் இது சிறப்பு மிக்கதே.
ஒரு சின்ன முதலீடும் பெருகும் என்பதை திரவுபதியின் கதை காட்டுகிறது ; இறந்து போன நம் உறவினர் பெயரில் தானம் செய்யவேண்டும்; கொஞ்சம் தங்கமாவது முதலீடு செய்ய வேண்டும்; விவசாயம் செய்து வாழ வேண்டும் போன்ற அரிய பெரிய கருத்துக்களை நினைவு படுத்துவது அக்ஷய திருதியை . ஆகையால் நாமும் கொண்டாடுவோம் .
–subham —
Tags- ரிஷப தேவர் , அட்சய திருதியை, அக்ஷய , அட்சய பாத்திரம், பரசுராமர், தங்கம், முதலீடு, முன்னோர் வழிபாடு