இந்துக்கள் கொண்டாடும் நான்கு நவராத்ரிகள் (Post No.11,898)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,898

Date uploaded in London – –  13 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்து மத நூல்களில் நான்கு நவராத்ரி விழாக்கள் குறிப்பிடப்படுகின்றன . அவைகளில் வசந்த நவராத்திரியும் பெரிய நவராத்ரியான சாரதா நவராத்திரியும் மட்டுமே இன்று பிரசித்தமாக உள்ளன

1.ஆஷாட நவராத்ரி – ஆஷாட மாதம் அமாவாசைக்குப் பிறகு

xxx

2.சாரதா  நவராத்ரி — புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு

xxx

3.சியாமளா நவராத்ரி – தை மாதம் அமாவாசைக்குப் பிறகு

xxx

4.வஸந்த நவராத்ரி – பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு

Xxx

தமிழர்கள் சொல்லும் மாதங்களுக்கும் பிற மாநில மக்கள் சொல்லும் மாதங்களுக்கும் இடையே ஒரு மாதம் (பெயர் அளவில்) வித்தியாசம் இருக்கும். ஏனெனில் அமாவாசை அன்றே அடுத்த மாதம் துவங்கி விடுவதாக வடக்கேயுள்ளவர்கள் கருதுகிறார்கள்.

நவ என்றால் ஒன்பது; ராத்திரி என்றால் இரவு.

9 நாட்களில் இரவில் தேவி பூஜை செய்வதோடு பகல் முழுதும் விரதம் இருப்பதும் வழக்கம். அதாவது நோன்பின்போது கடைப்பிடிக்கும் எல்லா விதிகளையும் பெண்களும், சக்தி வழிபாடு செய்யும் சாக்தர்களும் கடைப்பிடிப்பார்கள். தேவியின் துதிகளை குறிப்பாக லலிதா சஹஸ்ர நாமடத்தைப் பாராயணம் செய்வார்கள்.

காஞ்சி, சிருங்கேரி போன்ற சங்கராசார்ய மடங்களில் பெரிய அளவில் பூஜைகள் நடைபெறும்.

நான்கு நவராத்ரிக்கள் இருந்த போதிலும் தீபாவளிக்கு முன்னர் வரும் புரட்டாசி மாத சாரதா நவராத்ரிதான் கொலு பொம்மை அலங்காரத்துடன் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கொலு பொம்மைக்  காட்சிகளைக் காணலாம். மைசூரில் இதன் இறுதிநாள் — அதாவது பத்தாவது நாள் – தசரவாகவும் வங்காளத்தில் மிகப்பெரிய துர்கா பூஜாவாகவும்  கடைப் பிடிக்கப்படுகிறது.

பத்தாவது நாளின் மற்றோர்  பெயர் விஜய தசமி. வெற்றித் திருநாள்.

ஒன்பதாவது நாளை ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கொண்டாடுவார்கள்

XXX

விஜய தசமி, ஸரஸ்வதி பூஜை ஆகியவற்றைத் தனியாகக் காண்போம்.

முதலில் நவராத்ரி பூஜைகளைக் காண்போம் .

1957-ம் ஆண்டில் காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994) சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கொண்டாடிய நவராத்ரி நமக்கு சில சுவையான செய்திகளைத் தருகிறது;  செப்டம்பர் 24, 1957ல் துவங்கிய நவராத்ரி அக்டோபர் 3 ஆம் தேதி விஜய தசமியுடன் நிறைவு பெற்றது. சுவாமிகள் ஒன்பது நாட்களும் பேசாமல் மவுன விரதம் அனுஷ்டித்து விஜயதசமி நாளன்று அருளுரை ஆற்றினார்.

ஒன்பது நாட்கள் இரவிலும் ஏராளமான பக்தர்கள் கூடி நவராத்ரி பூஜையைக் கண்டுகளித்து சுவாமிகளின் தரிசனத்தையும் பெற்றனர் பூஜை நேரத்தில் மேடையில் தோன்றி தரிசனம் கொடுத்ததோடு பகல் நேரத்திலும் திடீரென்று வெளியே வந்து பக்கதர்கள் கூட்டத்திற்கு அருகில் நின்று அருள் பார்வை செலுத்துவார் . இதனால் எந்நேரமும் பக்தர் கூட்டம் இருந்தது. ஒன்பது நாட்களும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போகவே பந்தலைப் பெரிதாக்கிக் கொண்டே போனார்கள் 

காலையில் நடக்கும் வழக்கமான பூஜைகளும் மதியம் வரை  நீடித்தது. அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் உடன் இருந்தார். வழிபாட்டின் ஒரு பகுதியாக

கன்யா பூஜையும் நடந்தது.

முதல் நாள் – ஒரு வயதுக்  குழந்தைக்கு

இரண்டாம் நாள் –  ஒரு வயதுக்  குழந்தைக்கும் , 2 வயதுக்  குழந்தைக்கும்

மூன்றாம் நாள் –  ஒரு வயதுக்  குழந்தைக்கும் , 2 வயதுக்  குழந்தைக்கும் , 3 வயதுக்  குழந்தைக்கும்

இப்படி ஒன்பது நாட்களும் கூடிக்கொண்டே போனது.

சரஸ்வதி பூஜை அன்று, கன்யா பூஜையோடு  பிரம்மச்சாரி பூஜை, சுவாசினி பூஜைகளும் நடத்தப்பட்டன

விஜய தசமியன்று இரண்டு சங்கராசார்யார்களுக்கும் புனித நீர் கொண்டு அபிஷேகம்  செய்விக்கப்பட்டது.

(இந்தச் செய்தி மூலம் நவராத்திரியின் சில அம்சங்கள் நமக்குத் தெரிகின்றன )

Xxxx

குமாரி பூஜையின் சிறப்பு பற்றி தேவி பாகவதத்தின் மூன்றாவது , 27 ஆவது ஸ்கந்தத்தில் (அத்தியாயத்தில்) விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நவராத்ரி என்பது துர்கா தேவியின் வழிபாடு. துர்க்கையை ஒன்பது வித ரூபங்களில் வழிபடுவதே இதன் கருத்து

பொது இடங்களில் 16 தூண்களுடன் மண்டபம் கட்டி தேவியை நடுவில் வைத்து வழிபட வேண்டும். அங்க ஹீனம் இல்லாத சின்னப் பெண்களை தேவியாக வழிபடவேண்டும் . ஒரே குமாரியையும் இப்படி வழிபடலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணையாவது அதிகரித்துக் கொண்டே போகலாம் என்றும் தேவி பாகவதம் இயம்புகிறது

நவராத்ரி பூஜையால் வறுமையை அகற்றிய கதைகளும் தேவீ பாகவதத்தில் உள்ளது .

மொத்தக் கருத்து அசுரர் சக்தியை உலகிலிருந்து அழிப்பதாகும் . எருமை அசுரன் எனப்படும் மகிஷாசுரனை தேவி, அழித்த நாளே வெற்றித் திருநாள் – விஜய தசமி

இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு உருவில் வளர்ந்தது வினோதமானது.

குஜராத்தில் ஒரு பெரிய மண்டபம் அல்லது பந்தலில் தேவியை வைத்து அவளை சுற்றி கர்பா நடனம் ஆடுவது தேசீயத் விழாவாக வளர்ந்துவிட்டது. மேலை நாடுகளில் வாழும் குஜராத்திகள் இந்த நவராத்ரி கர்பா நடனத்தை டிக்கெட் கட்டணம் வைத்து நடத்துகின்றனர். புனிதத் தன்மையைக் காப்பதற்காக இந்துக்களை மட்டுமே,  நடனத்தைக் காண அனுமதிக்கின்றனர்.

வங்காளத்திலும்  வங்காளிகள் வாழும் உலகின் ஏனைய பகுதிகளிலும் துர்கா பூஜை தேசீயத் திருநாள் ஆகிவிட்டது.

மகிஷாசுரனை வதம் செய்ததால் மைசூரு என்று பெயர்பெற்ற கர்நாடக மாநிலத்தில் தசரா விழா தேசீய விழாவாக மாறிவிட்டது.

தெய்வீகம் பொங்கும் தமிழ் நாட்டின் கோவில்களிலும் இந்துக்களின் வீடுகளிலும் கொலு பொம்மைக் காட்சியாக இது உருவெடுத்துள்ளது. வித விதமான சுண்டல்  என்னும் சத்துணவு, நாள் தோறும் வித விதமான பாட்டுக் கச்சேரிகள், வீடு தோறும் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் சென்று குங்குமம், மஞ்சள் பெறுவது, கோவில்களுக்கு அணி அணியாகப் படையெடுப்பது என்று பல வகைகளில் பரிணமித்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு வேறு வேறு அலங்காரம் செய்வது, விளக்குகள் மூலம் கோவிலை ஜெகஜ் ஜோதியாக மாற்றுவது போன்றவையும் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.

நவராத்ரி காலத்தில் அலங்கரிக்கப்படாத , பூஜிக்காப்படாத தேவி கோவில்களைக் காண முடியாது. இமயம் முதல் குமரி வரை ஏதெனும் ஒருவகையில் கொண்டாடப்படுகிறது.

பெரிய சங்கர மடங்களில் தேவிக்கு நவாவரண பூஜையும் நடக்கிறது.

நவ ஆவரணம் என்பது  தேவியை ஒன்பது மதில் கோட்டையில் உருவகித்து வழிபடும் பூஜை . தேவியானவள் நடுவில் மலை உச்சியில் , அதாவது மஹா மேருவில் வீற்றிருப்பாள்

Xxx

ராம் லீலா 

ராமனும் கூட வனவாசத்தின் போது நவராத்ரி விரதம் அனுஷ்டித்து பூஜை செய்ததாக புராணங்கள் செப்பும் .வடக்கில், ராம் லீலா என்ற பண்டிகையாக இது உருவெடுத்துள்ளது. விஜய தசமி நாளன்று ராவணன், கும்பகர்ணன் , மேகநாதன் ஆகிய மூன்று அரக்கர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது டில்லி முதலிய பெரிய  நகரங்களில்  நடைபெறுகிறது

 நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் வழிபட முடியாதோர் குறிப்பாக சப்தமிஅஷ்டமி, நவமி (7th8th,9thநாட்களில் வழிபட வேண்டும் என்றும்  தேவீ பாகவதம் கூறும்

 நவராத்ரி என்பது கர்பா , துர்கா பூஜை , தசரா , ராம லீலா , கொலு பொம்மைக் காட்சி என்று  நாடு முழுதும் பேருரு எடுத்துள்ளது.

Xxx

வசந்த நவராத்ரி 

வசந்த காலத்தில் நடைபெற்ற நவராத்ரி இப்போது கோவில்களிலும் மடங்களிலும் மட்டுமே பூஜைகளுடன் நின்று விட்டது. ஆயினும் இப்போதும் பெண்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்

  ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் , ஹரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் இந்துக்கள் வசந்த நவராத்ரியைக் கொண்டாடுகின்றனர் . குறிப்பாக விரதம் காரணமாக  உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர் .

 துர்கா பூஜை செய்து ராணவனை, ராமர்,  கொன்றதால் புரட்டாசி மாத நவராத்ரி பெரிதாகி, வசந்த நவராத்ரி புகழ் இழந்துவிட்டது என்று கூறுவோருமுளர்.

வசந்த நவராத்ரி பற்றி தேவி பாகவதத்தில்  நீண்ட கதை உள்ளது. யுதாஜித் என்பவன் பேராசைகொன்டு ஆட்சியைப் பிடிக்க முயன்றபோது தேவியானவள்  நியாயமாக பதவி கிடைக்கவேண்டிய சுதர்சனனுக்கும் அவனை மணந்த சசிகலாவுக்கும் அவளது தந்தைக்கும் உதவிய கதை அது. யுதாஜித் என்ற மன்னனை தேவி அழித்து விடுகிறாள்.

வசந்த நவராத்ரியை கீழ் கண்ட வாறு கொண்டாடுவர்

முதல் நாள் –  கட ஸ்தாபனம்

2ம் .நாள் – சிந்தூர தூஜ் விரதம், நாக விரத பூஜை

3ம் நாள் – வரத விநாயக சதுர்த்தி

4ம் நாள் – பஞ்சமி விரத,  நாக விரத பூஜை

5ம் நாள் – பஞ்சமி

6ம் நாள் – ஸ்கந்த சஷ்டி, யமுனா ஜெயந்தி

7ம் நாள் – மஹா ஸப்தமி  விஜய ஸப்தமி

8ம் நாள் – துர்காஷ்டமி, , அன்னபூர்ணா அஷ்டமி

9ம் நாள் – நிறைவு, ராம் நவராத்ரி தினம் 

–subham— 

நவராத்ரி, கர்பா , துர்கா பூஜை , தசரா ,  கொலு பொம்மை ,

ராம்  லீலா , வசந்த நவ ராத்திரி, navaratri, ramlila

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: