சீதையைப் பற்றிய ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை!(Post No.11,897)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,897

Date uploaded in London –   13 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி! 

சீதையைப் பற்றிய ஶ்ரீ ராமரின் ப்ரதிக்ஞை!

ச.நாகராஜன்

உத்தரகாண்டத்தில் 45வது ஸர்க்கத்தில் வரும் ஶ்ரீ ராமரின் பிரதிக்ஞை அனைவரின் வாயையும் அடைத்து விடச் செய்யும் ஒரு பயங்கரமான பிரதிக்ஞையாகும்.

இது சீதா தேவியை ராஜ்யத்தின் எல்லையில் கொண்டுவிடுமாறு லக்ஷ்மணருக்கு அவர் அறிவுறுத்திய பின் செய்யும் பிரதிக்ஞையாகும்.

எதற்காக சீதையை ராஜ்யத்தின் எல்லையில் கொண்டு விட வேண்டும்?

ஏனெனில் லோகாபவாதம் என்பது ஶ்ரீ ராமரால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.

“சீதை அக்கினியில் புகுந்து தனது தூய்மையை நிரூபித்தவள். அவளை தேவர்களும் ஏனையோரும் போற்றிப் புகழ்ந்தனர். எனக்கும் சீதை கற்புக்கரசி, தூய்மையானவள் என்பது தெரியும்.

என்றாலும் கூட அபவாதத்தால் வரும் கேடு எனக்கு தெரிந்திருக்கின்றமையால் கேடுக்கு நான் பாத்திரமாகிவிட்டேன் என்றால் நான் உயிரை என்றாலும் கூட உங்களையும் கூட ஒழித்து விடுவேன். ஜனகரின் புதல்வி விஷயத்தில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று கூறிய ஶ்ரீ ராமர் லக்ஷ்மணரை நோக்கி, “மஹாத்மா வால்மீகி முனிவரது சுவர்க்கம் போன்ற ஆசிரமம் கங்கை நதியின் அப்புறத்தில் உள்ளது. சீதையை ஜன சஞ்சாரமில்லாத அந்த பிரதேசத்தில் விட்டு விட்டு வா” என்கிறார்.

இதற்கு அனைவருமே ஆக்ஷேபணை கூறுவர் என்பதை நன்கு அறிந்திருந்த ராமர் இந்த இடத்தில் தான் தனது கோரமான பிரதிக்ஞை ஒன்றைச் செய்கிறார்.

24 ஸ்லோகங்கள் உள்ள 45வது ஸர்க்கத்தில் 20, 21 மற்றும் 22வது ஸ்லோகங்களில் இந்த பிரதிக்ஞையைக் காணலாம்.

ராமர் தீர்க்கமாகச் சொல்லும் வசனம் இது:

அப்ரீதிர்ஹி பராமஹ்யம் த்வயைதத்ப்ரதிவாரிதே |

ஷபிதா ஹி மயா யூயம் புஜாப்யாம் ஜீவிதேன ச ||

என்னால் உன் மேலும் புஜங்கள் மேலும் உயிர் மேலும் நீங்கள் ஆணையிட்டுச் சொல்லப்பட்டீர்கள். இப்பொழுது மறுத்து எதையும் மொழியும் பக்ஷத்தில்  அது எனக்கே அளவு கடந்த ப்ரதிகூலம் செய்வதாகும்.

யே மாம் வாக்யாந்தரே ப்ரூயுரனுநேதும் கதஞ்சன |

அஹிதா நாம தே நித்யம் மதபீஷ்டவிதாதநாத் ||

இந்த ஆக்கினை விஷயத்தில் என்னை எவர்களாவது எப்படியாவது நல்ல வார்த்தையைச் சொல்லி சமாதானப்படுத்த மன்றாடத் தலைப்படுகிறார்களோ அவர்கள் என் மனோரதத்திற்கு இடையூறு செய்வதால் அவர்கள் சாஸ்வதமான பகைவர்களே!

மாநயந்து பவந்தோ மாம் யதி மச்சாஸநே ஸ்திதா: |

இதோத்ய நீயதாம் சீதா குருஷ்வ வசனம் மம் ||

நீங்கள் எனது ஆக்கினையில் பக்தியுடையவர்கள் என்கின்ற பக்ஷத்தில் என்னைப் பெருமைப் படுத்துங்கள்; சீதை இப்போதே இங்கிருந்து அழைத்துச் செல்லப்படட்டும். எனது நியமனத்தைச் செய்து முடி.”

அனைவரும் வாய் மூடி மௌனியாகி விட்டனர் இதைக் கேட்டு.

லக்ஷ்மணருக்கு வேறு வழியில்லை. சீதையை அழைத்துக் கொண்டு சென்று ஜனசஞ்சாரமற்ற இடத்தில் விட்டு விடுகிறார்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் பிரதிக்ஞைகளில் இந்த ஶ்ரீ ராமரது ப்ரதிக்ஞை முக்கியமான ஒன்றாகும்.

ஒரு அரசனுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படவே கூடாது.

“அபகீர்த்தியானது இகழப் படுகின்றது. கீர்த்தி தேவர்களாலும் புகழ்ந்து கொண்டாடப்படுகிறது. உலகத்தில் சகல நல்ல மஹாத்மாக்களுடைய ப்ரவிருத்தி புகழ் பெறுவதற்கேயாம்” என்ற ராமரது வார்த்தைகள் பொன் மொழிகளே.

ஜெய் ஶ்ரீ ராம்!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: