அத்தி மரத்தின் கதை: மரம், செடி, கொடிகளை வழிபடுவது பற்றி புதிய செய்திகள்! (Post No.11,901)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,901

Date uploaded in London – –  14 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் வழிபாட்டில் மரங்களும் செடிகளும் ஏன் ?

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த:

ச’த்ருஜிச்‌-ச’த்ருதாபன: /

ந்யக்ரோதோதும்பரோ(அ)ச்வத்த

ச்சாணூராந்த்ர நிஷூதன: ||88 (விஷ்ணு ஸஹஸ்ரநாம வரி)

(ந்யக்ரோத – ஆலமரம் , அவுதும்பர- அத்தி மரம், அஸ்வத்த – அரச மரம்)

shloka-88 of Vishnu Sahasranama

Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah            |

Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||88||

सुलभः सुव्रतः सिद्धः शत्रुजिच्छत्रुतापनः ।

न्यग्रोधोऽदुम्बरोऽश्वत्थश्चाणूरान्ध्रनिषूदनः ॥ ८८॥

உலகில் வேறு எந்த சமய மக்களையும்விட இந்து சமயத்தினரின் வாழ்வே தாவர , பிராணிகளின் உலகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது . தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற எனது  நூலில் இது தொடர்பான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்து அளித்தேன் .

துளசி, வில்வம் முதலிய தாவரங்களை இந்துக்கள் வழிபடுவது எல்லோருக்கும் தெரிந்ததே. இவை மருத்துவ குணங்கள்  உடையவை அரச மரத்தைச் சுற்றிப்பார்த்து அடிவயிற்றில் கைவைத்தாளாம்  என்று பிள்ளைப்  பேற்றுக்காக ஏங்கும் பெண்களைப்பற்றிச் சொல்வதெல்லாம் விஞ்ஞான உண்மையே என்பதையும் சொன்னேன். குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தைச் சுற்றி, அங்கே வீற்றிருக்கும்  பிள்ளையாரையோ அல்லது வேறு தெய்வத்தையோ வழிபடும்போது, அந்தப் பெண்மணி நல்ல ஆக்சிஜனை சுவாசிப்பதோடு உடற்பயிற்சியும் செய்வதால் ஆரோக்கியம் பெருகி குழந்தை பிறப்பது வேகப்படுகிறது- விரைவாகிறது. அரசமர இலைகள் வெளிவிடும் காற்றின் – ஆக்சிஜனின் அளவும் அதிகம் . எங்கெங்கோ ஞானத்தைத் தேடி அலைந்த புத்த பிரானுக்கு இறுதியில் அரச மரத்துக்கடியில் ஞானம் கிடைத்ததும் இதனாலன்றோ! இன்று இலங்கை வரை அந்த அரச மரத்தை எடுத்துச் சென்று வழிபடுகிறார்கள் அல்லவா?!.

இவை தவிர இந்தியா முழுதும் பல்வேறு மரம், செடி, கொடிகளை இறைவனுடன் இணைத்து வழிபடும் விஷயங்களை மேலும் ஆராய்வோம் இன்று தாவர இயல் விஞ்ஞானிகள் FICUS பைகஸ் என்னும் ஒரே பிரிவில் வைத்துள்ள ஆல மரம், அரச மரம், அத்தி மரம் மூன்றையும் அன்றே விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் திருநாமங்களாக வைத்து பெருமைப்படுத்தினார்கள் இந்துக்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களுடைய தாவரவியல் அறிவு அந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது.

அந்த மூன்றில் அத்தி மரம் (Fig Tree)  பற்றிய புதிய செய்தி இதோ:

உடும்பரா என்பது இதன் ஸம்ஸ்க்ருதப் பெயர்.

பைகஸ் க்ளோமெரெட்டா (Ficus glomerata, Ficus racemose) என்பது தாவர வியல் பெயர் (Botanical name)

இதன் பழங்களை இன்று வரை நாம் சத்துணவாக உண்கிறோம்.

இதை திரிமூர்த்தியின் வடிவமான தத்தாத்ரேயரின் இருப்பிடமாக மக்கள் வழிபடுகின்றனர் . குழந்தை இல்லாதோர் இந்த மரத்தைப் பலமுறை சுற்றி வணங்குகின்றனர்.

இதை அவுதும்பரா, உமரரோ என்றும் வட இந்திய மொழிகளில் அழைப்பர் .

தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமி (1378- 1458 )நரசிங்கவாடி (நர்ஸோபவாடி Narsobawadi) ) மஹாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ளது . அங்கு அவரது கோவிலில் உருவங்கள் கிடையாது. ஆனால் அவரது பாதுகைகள் மட்டும் அத்தி மரத்துக்கடியில் வைக்கப்பட்டுள்ளன . அவைகளை தத்த பக்தர்கள்  வணஙகி  குரு சரித்திர என்ற நூலை வாசிப்பார்கள் . இதனால் அவர்கள் எண்ணிய பலன்கள் கிடைக்கும். இந்த குரு சரித்திரத்தில் அத்தி மரத்தின் பெருமை உள்ளது .

நரசிம்ம வாடி கிருஷ்ணா நதி- பஞ்ச கங்கா நதிகளின் சங்கமத்தில் உள்ளது. அங்கு நரசிம்ம சரஸ்வதி 12 ஆண்டுக்காலம் தவம் செய்தார்.

கங்காதர சரஸ்வதி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் குரு  சரித்திர என்ற நூலை மராட்டிய மொழியில் இயற்றினார். அதை பின்னர் வாசுதேவானந்த சரஸ்வதி சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூலின் இருபதாவது அத்தியாயத்தில்தான் அத்தி மர மஹிமை உள்ளது . எப்படி அரசமரத்துக்கடியில் புத்தர் ஞானம் பெற்றாரோ அதே போல அதே குடும்பத்தைத் (Family- Moraceae, Genus- Ficus) சேர்ந்த அத்தி மரத்தின் கீழ் தத்தாத்ரேயரும் அவரது சீடர்களும் ஞானம் பெற்றனர்.

xxx

இதோ அந்தக் கதை :

பிரஹலாதனைக் காப்பாற்றுவதற்காக  விஷ்ணு,  நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். ஹிரண்யகசிபு என்னும் அசுரனை சிங்க விரல்களால் கிழித்தார். பின்னர் அந்த விரல்கள், நகங்களில் பெரும் வலி துவங்கியது. அப்போது லெட்சுமி வந்து அருகிலுள்ள அத்திப் பழங்களில் நகங்களை நுழைக்கச் சொன்னார். அதனால் அவர் நக வலி அகன்றது. உடனே அத்தி மரத்துக்கு ஒரு வரம் தந்தார் . உன்னை வழிபடுவோர் சகல நன்மைகளையும் பெறுவார்களாகுக என்று.

இந்தக் கதை மராட்டிய மொழி, பின்னர் அதன் வடமொழி பெயர்ப்பு குரு சரித்திர நூல்களில் உளது.

இதனால் தத்தாத்ரேயரை வழிபடும் கர்நாடக, மகாராஷ்டிர  பக்தர்களுக்கு அத்தி மரத்தின் மீது மதிப்பும் மரியாதையும் பய பக்தியும் உண்டு. அதை வெட்ட மாட்டார்கள்.

அத்தி மரத்தின் ,மருத்துவப் பயன்களை உலகிற்கு அறிவிக்கவே தத்தாத்ரேயர், நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் அவதாராம் தோன்றியது என்றாலும்  மிகையாகாது.

Xxx

வேதத்தில் அத்தி மர தாயத்து

இந்துக்கள் யாக, யக்ஞங்களில் இதன் குச்சிகளைப் போட்டு வழிபட்டனர்.

வேத காலம் முதலே இந்த அவுதும்பர /அத்தி மரம் பிரபலமாகிவிட்டது . அதர்வண வேதத்தில் இதன் மரத்திலான தாயத்துக்களின் பெருமை பேசப்படுகிறது அதர்வண வேதம் 19-31 சூக்தத்தின் பெயர் ஒளதும்பர  மணி. இதிலுள்ள 14 மந்திரங்களும் இந்த தாயத்தை அணிந்தவர்களுக்கு, தனம் , தானியம் , பசுமாடுகள், வீரம், வெற்றி கிடைக்கும் என்கிறது .

பிற் கால புராணங்களும் ஹரிச்சந்திரன் முதலிய ராஜாக்கள் அத்தி மர சிம்மாசனத்தில் அமர்ந்து உலகப் புகழ் பெற்ற செய்தி வருகிறது. இந்த மரத்தின் மஹிமை தொடர்ந்து வருவதை அதற்குப் பின்னர் வந்த நூல்களும் இயம்புகின்றன

3000 ஆண்டுகளுக்கு முந்தைய சதபத பிரமாணம் என்னும் நூலிலும் இது பற்றிய வேறு ஒரு கதை உள்ளது . இந்திரன் சோம பானம் என்னும் மூலிகை திரவத்தை அருந்திய பின்னர் அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தாவரமாக மாறியதைப் போற்றுகிறது. அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அரச மரம், ஆல மரம், சதையிலிருந்து அத்திமரம், அரிசி முதலியன தோன்றியதாகப் பகர்கிறது.

இதன் காரணமாகத்தான் மஹாபாரதத்தில் வரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் 3 மரங்களும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன . இன்றுவரை அந்த துதியை பல லட்சம் பேர் தினமும் சொல்லும்போது அத்தி, ஆல, அரச மரங்கள் போற்றுதலுக்கு உள்ளாகின்றன 

.-subham—

Tags அத்தி மரம், கதை, தத்தாத்ரேயர், நரசிம்ம சரஸ்வதி, குரு சரித்திரம் , மர வழிபாடு, ஒளதும்பர  மணி, தாயத்து, அதர்வண வேதம்.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: