
picture of Ganga
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,903
Date uploaded in London – 15 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரை 11807 என்ற கட்டுரை எண்ணாக 15-3-23 அன்று வெளியிடப்பட்டது.
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் மூன்றாவது கட்டுரை 11897 என்ற கட்டுரை எண்ணாக 3-4-23 அன்று வெளியிடப்பட்டது.
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 4
ச.நாகராஜன்
மார்ச் இரண்டாம் தேதி, வருடம் 2023. வியாழக்கிழமை.
உத்தரபிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் 20 அடி ஆழம் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்ட ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மீட்டு எடுக்கப்பட்டு ஒரு வாரம் கழிந்த நிலை.
புதிதாக ஒரு சம்பவம் நடைபெற்றது. பிறந்து இரண்டே நாள் ஆன ஒரு பெண் குழந்தை பரெய்லி மாவட்டத்தில் கடாவா கிராமத்தில் (Bareilly District, Khataua village) ஒரு குளத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்டது.
குளத்தில் தூக்கி வீசி எறியப்பட்ட போதும் கூட அது உயிருடன் இருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
குளத்தின் ஆழம் சுமார் 15 அடி.
பின்னர் எப்படி அது உயிருடன் இருந்தது?!
அந்தக் குழந்தையைத் தாங்கியது குளத்தில் இருந்த நீலோற்பல மலர்க்கூட்டம்.
அதனது தலையை நீலோற்பல மலர்க் கூட்டம் (Hyacinth) தாங்கி இருந்தது.
குழந்தையைப் பார்த்த கிராமவாசி ஒருவர் அலறியவாறு உள்ளூர் போலீஸிடம் இதைத் தெரிவித்தார்.
கிராமத்தின் முன்னாள் தலைவரான வகீல் அஹ்மத் குளக்கரையோரம் வழக்கம் போலச் சென்று கொண்டிருந்த போது தான் இந்தக் குழந்தையைப் பார்த்து அலறினார். அவர் குழந்தையை எடுத்தவுடன் செய்தி தெரிந்த கிராமவாசிகள் கூட்டம் கூட்டமாக குளத்திற்கு விரைந்தனர்.
மீட்புக் குழுவும் குளத்திற்கு விரைந்தது.
குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்த போலீஸார் அதை உடனே நவாப்கஞ்ச் (Nawabganj) மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பதிவு செய்தனர். குழந்தை பரிசோதனை செய்யப்பட்டது. நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தைக்கு ஒரு வித காயமும் இல்லை!
குழந்தையை நீலோற்பல மலர்க் கூட்டம் தாங்கி இருந்த காட்சி வீடியோவில் படமாக எடுக்கப்பட அது வைரல் ஆகியது.
அடிஷனல் எஸ்.பி. (ரூரல்) ராஜ்குமார் அகர்வால், “ அந்தப் பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக நீலோற்பல மலரில் விழுந்திருந்தது. அதுவே குழந்தையை நீரில் மூழ்கி உயிரிழக்க விடாமல் செய்தது” என்று கூறினார்.
குழந்தை சைல்ட் வெல்ஃபேர் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் பரெயிலி நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
“இன்னும் 72 மணி நேரம் காத்திருப்போம். அதற்குள் குழந்தையின் பெற்றோர் வரவில்லை எனில், விதிப்படி ஒரு புகாரைப் பதிவு செய்வோம்” என்று கூறினர் போலீஸார்.
சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி தலைவரான தினேஷ் சந்திரா குழந்தைக்குத் தாங்கள் ஒரு பெயரைச் சூட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.
பெயர் : கங்கா!
கங்கையே! காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான் என்பது எவ்வளவு உறுதியான ஒரு விஷயம்!
***