
Nammalvar Tamaarind Tree
Post No. 11,904
Date uploaded in London – – 15 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் சுந்தரம் ராமசாமி எழுதிய நாவல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்ததை நாம் அறிவோம்.
Botanical term- Tamarind (Tamarindus indica)
உலகப்புகழ்பெற்ற வடஇந்திய பாடகர் தான்சேன், ஒரு புளியமரத்தின் இலைகளை சுவைத்து நல்ல சாரீரம் பெற்ற குவாலியர் நகர் புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.

Tansen Tamarind Tree
16 ஆண்டுக்காலம் தவம் செய்து புளிய மரத்துக்கு அடியில் ஞானம் பெற்ற நம்மாழ்வாரால் புகழ்பெற்ற ஆழ்வார்திருநகரி உறங்காப்புளிய (Never Sleepinng Tamarind Tree) மரத்தின் கதையையும் நாம் அறிவோம்.
புத்தருடைய விக்கிரகத்தைத் திருடி, அதிலுள்ள தங்கத்தை புளியமரத்துக்கு அடியில் புதைத்து விட்டு நீண்ட நேரம் தூங்கிப்போன, திருமங்கை ஆழ்வாரை இலைகளை உதிர்த்து எழுப்பிய புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.
புகழ்பெற்ற சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் வெளியிட்ட ஜய மங்கள ஸ்தோத்திரம் எட்டாவது பாகத்திலுள்ள பிராமணப் பேயின் கதையும் அது சொன்னபடி ஒருநாள் இரவில் புளியமரக்கிளையை ஒடித்து பரலோகம் சென்ற கதையையும் நாம் அறிவோம்.
இவை எல்லாம் என்னுடைய 2016-ம் ஆண்டுக் கட்டுரையிலும் தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ? என்ற நூலிலும் வெளியான விஷயங்கள் . மேலும் சில புளிய மரங்களைக் காண்போம்.
கோரக்நாத் புளிய மரம் Tamarind (Tamarindus indica)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிராலா (Sirala) என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு பெரிய பூதாகார புளியமரம் இருக்கிறது. அதனுடைய அடிமரத்தில் விரிசல்களும் குழிகளும் உண்டு. அருகில் கோரக் நாத் (Gorakhnatha Shrine) கோவில் இருக்கிறது. அவர் ஒரு குச்சியை பூமியில் ஊன்றியவுடன் அது புளிய மரமாகி கிளைவிட்டுப் பெருகியதாம் இந்த ஊர், பத்திரிக்கைச் செய்தியில் மிகவும் அடிபட்ட இடம். ஆண்டுதோறும் நாக பஞ்சமி அன்று பாம்புகளைப்ப பிடித்து வழிபட்ட பின்னர் அதை மீண்டும் புதருக்குள் விடுவது வழக்கம் . பாம்புகளைத் துன்புறுத்தக்கூடாது என்று ஒரு இந்து விரோதக் கும்பல் கும்பல், கோர்ட்டுக்குப் போகவே பம்பாய் ஹைக்கோர்ட்டும் பாம்பு பிடி விழாவுக்குத் தடை விதித்தது . இப்போது ஆண்டு தோறும் ட்ரோன்களை Drones இயக்கி பாம்புப் பிடாரர்களை கண்காணிக்கிறது அரசு.

கோரக்நாதர் நட்ட புளியமரத்தில் வாசிக்க முடியாத, புரியாத எழுத்துக்கள் இருப்பதாக ஒரு ஐதீகம் ; இது அங்கு வரும் பக்தர்களின் பெயர் என்ற
நம்பிக்கை இருப்பதை மஹாராஷ்டிர அரசு கெஜட் செய்தி கூறுகிறது.
இதே ஊரில் இன்னும் ஒரு கதையும் உள்ளது. சிரால செட்டி என்பவர் ஒன்னேகால் மணி நேரத்துக்கு அரசனாக இருந்தாராம். அவர் நினைவாக ஆண்டுகோரும் ஆவணி மாத சுக்கில பட்ச சஷ்டி யன்று ஒரு விழா நடக்கிறது. . அவருடைய உருவத்தை மண்ணால் செய்து அதைச் சுற்றி பெண்கள் நடனம் ஆடுவர். பின்னர் மண் பொம்மையை ஆற்றில் கரைத்து விடுவார்கள்.
ஒரு காலத்தில் இது பெரிய புளியம் தோப்பாக இருந்தது. அங்கு ஏராளமான மயில்கள் வரும். அதற்கு கோரக்நாத மடத்திலுள்ளோர் தானியங்களைப் போட்டு அதைப் புனிதப் பறவைகளாக கருதுவர். மேலும் அந்தப் புளியமரத்தின் ஒவ்வொரு சுழிவும் நெளிவும் , விரிசலும் அங்கு வரும் பக்தர்களின் பெயர்கள் என்றும் அது மக்களுக்குப் புரியாத ஒரு எழுத்தில் எழுதப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். கோரக்நாத் , சிவனின் உருவம் என்று மக்கள் நம்புவதால் லிங்ககாயத் பிரிவினர் இங்கு பெருமளவில் வருவார்கள்
Xxx
இன்னும் ஒரு புளிய மரக்கதையைக் காண்போம்
ஒரு பெண்மணியின் கணவன், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை மனதிற்கொண்டு நீண்ட காலம் வெளிநாட்டுக்குப் போக திட்டமிட்டான். அன்பு மனைவியிடமும் அதைச் சொன்னான். மனைவிக்கு அவனை, நீண்ட காலம் பிரிந்துவாழ இஷ்டமில்லை . உடனே ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தாள் . அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் மருத்துவ விஷயங்களையும் கதைப்பார்கள். அவர் சொன்னார்- உன் கணவனை அன்புடன் வழி அனுப்பி வை. ஆனால் ஒரு கண்டிஷன் Condition போடு; அன்பே , ஆருயிரே; போகும்போது புளிய மரத்துக்கு அடியிலும் வரும்போது வேப்ப மரத்துக்கு அடியிலும் நீங்கள் உறங்க வேண்டும். அது ஒன்றே என் நிபந்தனை என்று சொல் என்றார் . அவளும் அப்படியே கண வனிடம் பகர்ந்தாள் ; கணவனும் புறப்பட்டான்;, அவள் சொன்னபடியே இரவில் புளிய மரத்துக்கு அடியில் உறங் குவதை வழக்கமாகக் கொண்டான். சில வாரங்களுக்குள் அவன் உ டல் நலம் குன்றவே பாதியில் பயணத்தைக் கைவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். கணவனின் விரைவான திரும்புதலுக்கு உதவிய புளிய மரத்தை அவளும் மனதார வாழ்த்தினாள். இந்த நாட்டுப்புற கதை , புளிய மரத்துக்கு அடியில் உறங்காதே என்பதை விளக்குகிறது .
xxxx
பேய்க்கு வாக்குப்பட்டால் புளிய மரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும் என்ற பழமொழியால், புளிய மரத்துக்கு பெரிய அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது . உண்மையில் மரங்கள் இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் புளிய மரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடிக்கொள்ளும். இதைத் தூங்குகிறது என்று சொல்லுவார்கள். இந்த குணமும் இதற்குப் பேயின் பெயரைக் கொடுத்துவிட்டது போலும்!
இன்னும் எங்கெங்கோ எத்தனை புளிய மரங்கள் இப்படிக் கதைகளுடன் உள்ளனவோ! யார் அறிவார்?
புதிய கதை ஏதேனும் இருந்தால், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்; அது எதிர்கால மரத்தடியர்களுக்கு , மர மண்டைகளுக்கு உதவும்.
மரத்தடியர் = மரங்களின்பால் பேரன்பு கொண்ட அடியார்
மர மண்டை= மரங்களைப் பாதுகாப்பதே கடமை என்ற சிந்தனையில் ஊன்றி நிற்போர்..
–subham—
Tags— புளிய மரம், கோரக்நாத், சிராலா , கதை, கணவன் பயணம், மனைவி கண்டிஷன், பேய்க்கு வாக்குப்பட்டால்
புளியமரப் பேய்கள் | Tamil and Vedas
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › ப…
27 Mar 2016 — தான்சேன் புளியமரம், வட நாட்டில் எவ்வளவு புகழ்படைத்ததோ அது போல தமிழ் நாட்டில் …
புளிய மரம் பற்றிய 5 பழமொழிகளைக் …
https://tamilandvedas.com › புள…
13 Aug 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ANSWERS–. 1.புளி எத்தனை தூக்கு , ஒரே தூக்கு.