செகுலர் இந்தியர்களுக்கு அரசியல் சாஸனங்களைப் பற்றி ஒரு பார்வை! – 2 (Post.11,909)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,909

Date uploaded in London –   17 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செகுலர் இந்தியா

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி…

செகுலர் இந்தியர்களுக்கு சில நாடுகளின் அரசியல் சாஸன சட்டங்களைப் பற்றிய ஒரு பார்வை! – 2

ச.நாகராஜன்

5) யுனைடெட் கிங்டத்தின் பாராளுமன்றத்தில் 92 சீட்டுகள் வம்ச பரம்பரை அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

என்ன தூக்கிவாரிப் போடுகிறதா. உண்ம இது. வெறும் பொய் இல்லை.

இந்த வம்ச பரம்பரை சீட்டுகளுக்கு PEERS என்று பெயர்.  இவை அரச மற்றும் பிரபுக்கள் குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டவை.  இந்தியாவில் பஞ்சாயத்து உறுப்பினர் கூட வம்ச பரம்பரை அடிப்படையில் உறுப்பினர் ஆக முடியாது.

ஆனால் என்ன அதிசயம்! அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள் யு.கே. புரட்சிகரமான முன்னேற்றத்தைக் கொண்ட நாடு – இந்தியாவோ மிகவும் பின் தங்கிய மதவாத நாடு! என்று!!

இவர்களின் பார்வைக் கோளாறுக்கு ஒரு முடிவே இல்லையா?

6) இங்கிலாந்தின் தேசீயக் கொடியை எடுத்துக் கொள்வோம். அது செயிண்ட் ஜார்ஜின் க்ராஸ்- இன் அடிப்படையில் உருவானது. கிறிஸ்தவ மதத்திற்காக இந்த ராணுவ மகான் தியாகம் செய்ததற்காகப் போற்றப்படுகிறார். க்ரூசேட் போர்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தயவுசெய்து அது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் ஓம் என்ற தாரக மந்திரத்தைக் கொடியில் பொறிக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள், ஐ.நா.வே ஓடி வந்து விடும் அது மத சகிப்பற்ற மத சார்புள்ள தன்மை என்று.

7) பெயர் மதிப்பு மட்டுமே உள்ளது தான் என்றாலும் யுனைடெட் கிங்டம் இன்று வரை முடியாட்சி அரசியல் சட்டம் கொண்டது தான். அதில் காலனிகளை உருவாக்கி அடிமைகளை லக்ஷக்கணக்கில் உருவாக்கிய பெருமை கொண்ட மூன்றாம் உலக நாடுகளின் காரணகர்த்தாக்களான பிரபு வம்சாவழியினர் இன்றும் கூட சட்ட ரீதியாக மதிக்கப்படுகின்றனர். சர்ச் அரசின் தலைவி இங்கிலாந்து அரசியே தான். சர்ச் தான் தேசீய அடையாளத்தைக் காண்பிக்கும் மைய அச்சு.

இந்தியாவிலோ ஹிந்துக் கோவில்கள் படும் பாடு, ஐயோ சொல்லி மாளாது.

8) இந்தியாவில் அரச பரம்பரையினர் மதிக்கப்படுகின்றனர். ஆனால் ஐரோப்பாவில் 12 முடியரசர்கள் புகழோங்கிய பண்டை காலத்தை நினவுறுத்தி கிட்டத்தட்ட உலகின் முக்கால் பங்கை அடிமையாக்கி ஆண்டனர். ஆனால் பிபிசியின் படி இங்கிலாந்து மட்டுமே உண்மையான ஜனநாயக நாடு. இந்தியாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசர்களின் நாடு.

9. தேசீய கீதத்தை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்தின் தேசீய கீதம் அதன் ராணியை கடவுளின் பேரால் 11 முறை குறிப்பிட்டு கடவுள் ராணிக்கு உதவி செய்யட்டும் என்று குறிப்பிடுகிறது. அமெரிக்க தேசீய கீதம் ஒரு அடிமையால் உருவாக்கப்பட்டது தான்.  ஆனால் அதில் அடிமையப் பற்றிய குறிப்பு இன்னும் நீக்கப்படவில்லை.

ஆனால் இந்தியாவின் தேசிய கீதமோ அனைவருக்குமானது.  அதில் கடவுள்/ மதம் /பழைய அரசர்களைக் காண முடியாது.

10) அமெரிக்காவையும் யுகேயையும் விட்டு விடுங்கள். ஜெர்மனிக்கு வருவோம். 2006ஆம் ஆண்டு தனது EU அரசியல் சட்டத்தை கிறிஸ்தவமயமாக்கும் வேலையைச் செய்தது. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் சர்ச்சுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டுள்ளன.  பிரான்ஸோ  சர்ச்சுக்கும் அரசிற்குமான பிரிவு எல்லையைக் கொண்டிருக்கவே இல்லை.

நார்டிக் நாடுகளுக்கு வருவோம்.

நார்டிக் நாடுகள் எவை எவை? வட ஐரோப்பாவில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய  மூன்று ஸ்காண்டிநேவிய நாடுகளையும், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது நார்டிக் நாடுகள் (Nordic Countries)

இவற்றுடன் டென்மார்க்கைச் சேர்ந்த பிரதேசங்களான கிரீன்லாந்து, பஓயே தீவுகள், பின்லாந்தைச் சேர்ந்த ஆலந்து மற்றும் நார்வேயைச் சேர்ந்த சான் மேயன் தீவும், சுவால்பாத் தீவுகளும் இந்த நார்டிக் அமைப்பிற்குள் வருகின்றன.

இவை அனைத்தும் அரசு சர்ச்சுகளை நடத்துகின்றன.

11) அராபிய நாடுகள் பகிரங்கமாக இஸ்லாமை தங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் ஐரோப்பாவோ தன்னை மதசார்பற்ற ஜனநாயக நாடாக பெருமை பீற்றிக் கொண்டு கிறிஸ்தவத்திற்குள் போலிப் பாசாங்கு செய்து ஒளிந்து கொண்டிருக்கிறது. அவை கிறிஸ்தவ மதத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல பசுத்தோல் போர்த்திய சிறுத்தையாக இருந்து வேலை செய்கிறது. இந்த மேலைநாடுகள் கிறிஸ்தவ பிரக்ஞையை உள்ளார்து கொண்டுள்ளவை.  இப்போது நடக்கும் உக்ரேன் போரை சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.

12) கிறிஸ்தவத்தையும் காலனி ஆட்சியையும் கொண்டு இரட்டை வேடம் போடும் இந்த நாடுகள் அனைத்து நாடுகளையும் பார்த்து மதத்தை விட்டு விடுங்கள். அரசியல் அமைப்பில் சேர்க்காதீர்கள் என்று கூக்குரல் போடுகின்றன. மதம் சார்ந்த உங்கள் பண்பாட்டை விட்டு விடுங்கள், அந்த அடையாளத்தைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள் என்ற அறிவுரை இவர்களிடமிருந்து நமக்கு!!!!

பாரம்பரிய பண்பாட்டைக் கொண்டுள்ள எந்த ஒரு நாடும் இவர்களின் பேச்சிற்கு செவி மடுக்கலாமா?

மக்கள் – குறிப்பாக ஹிந்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

போலிகளைத் தோல் உரித்துக் காட்ட வேண்டும்.

செய்வோமா?

***

கட்டுரை நிறைவுறுகிறது                    

நன்றி, ஆதாரம் கல்கத்தா வார இதழ் ட்ரூத் தொகுதி 90 இதழ் 49 தேதி : 7-4-2023

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: