Post No. 11,910
Date uploaded in London – – 17 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

மானசா தேவி வழிபாடு தற்போது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது பாம்புகளின் ராணி அவள்.
சக்தி தேவியை இந்த ரூபத்தில் வழிபட்டால், பாம்புகளிடலிருந்து ஆபத்து வராது என்பது நம்பிக்கை. பாம்புகளின் தலைவியான மானசா தேவி எப்படிப் பெண்களைக் காப்பாற்றினாள் , குழந்தைகளை விஷக்கடியிருந்து காப்பாற்றினாள் என்று ஊருக்கு ஊர் பல்வேறு கதைகள் இருக்கின்றன. வேதத்தில் பாம்பு ராணி இருக்கிறாள். சிந்து- ஸரஸ்வதி நதி முத்திரையிலும் பாம்பு வழிபாடு காணப்படுகிறது. கிரேக்கநாட்டிலும் பாம்புரணி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவளை விஷ ஹரி (விஷத்தைக் கொல்லுபவள் ) என்றும் நூல்கள் போற்றும்
நாகர் என்ற பெயரில் பாம்பு உருவத்துடன் சிலைகள் இருப்தை நாம் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களில் காண்கிறோம் .இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் கள்ளி வகைச் செடி (Cacti) களையும் பாம்பு தேவியாக வழிபடும் வழக்கமாகும் இந்த வழக்கம் வங்காளத்தில் இன்றும் இருக்கிறது. மானசா தேவிக்கு அதிகமான கோவில்கள் இருப்பது வங்காளம் மற்றும் அதை ஒட்டிய ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களாகும் . ஆயினும் மானசா தேவி கோவில்கள் ஆந்திரம் முதல் ஹரித்வார் வரை காணப்படுகின்றன.
கள்ளிச் செடி பற்றி சில சுவையான விஷயங்களை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகத்தில் காண முடிகிறது.
மும்பாய் நகரின் ஆரம்ப குடியேறிகளில் ஒரு ஜாதி பாதாரி பிரபு குடியாகும். தீபாவளி தினத்தன்று இந்த ஜாதியில் பிறந்த சிறுவர்கள் கல்லிச் செடியிலான விளக்குகளை வேடிக்கையாகப் பயன்படுத்துடுவார்கள் நவதுங், பஞ்சதாரி என்று அழைக்கப்படும் கள்ளிச் செடிகளில் விளக்கு ஏற்றி அவைகளை சிறுவர்கள் நண்பர்கள் வீட்டின் வராந்தாவில் கொண்டுவைப்பர்கள். அந்த வீட்டிலிருந்து பெண்களைக் கல்யாணம் கட்ட ஆசை என்பது இதன் பொருள்.. ஆனால் இப்படிச் செய்யும் சிறுவர்கள் பத்து வயத்துக்குட்பட்டவர்கள் என்பதால் உறவினர்கள் இதைக் கண்டு சிரித்து மகிழ்வார்கள் . உடனே அந்த வீட்டுச் சிறுவன் அதை யார் கொண்டுவந்தார்களளோ அந்தச் சிறுவன் வீட்டிலே திரும்பக்கொண்டு வைப்பான். இவையெல்லாம் தீபாவளியின் ஒரு பகுதி ; எல்லோரும் சந்தோஷமாக இவைகளைக் கண்டு களிப்பார்கள்
(என் கருத்து – தீபவளிக்கு விளக்கு வைக்கும் வழக்கம், தென்னாட்டில் இல்லை; ஏனெனில் அது சமணர்களின் வழக்கம் என்பது தவறு. பாதாரி பிரபு ஜாதியினர் காயஸ்த ஹிந்துக்கள்.)
xxxxx

வங்காளத்தில் கள்ளிச் செடி
கள்ளிச் செடி Cacti) குடும்பம் மிகப்பபெரியது. இதன் பல்வேறு வகைகளை அந்தந்தப் பிரதேச மக்கள் பயன்படுத்துவர்.
ஒரு பெண்ணை, மாமியாரின் கொடுமையிலிருந்து மானசா தேவி காப்பாற்றியதும் பின்னர் மிகுந்த செல்வத்துடன் அவளை மாமியார் வீட்டில் கொண்டுவந்து விட்டதையும் வங்காளத்தில் கதையாகச் சொல்லுவார்கள். மானசா தேவி வழிபாடு ஆவணி மாதத்தில் நாகபஞ்சமியை ஒட்டி வரும்.. அப்போது அவள், தான் கள்ளிச் செடியில் வசிப்பதாக சொன்னதாக கதை முடிகிறது. மேலும் நாக பஞ்சமி, தசானந்த் தினங்களில் அந்தச் செடியைக் கொண்டுவந்து வழிபடவேண் டும் என்றும் சொன்னாள் . இதனால் அந்த வங்காள மக்கள் இன்றும் அந்தச் செடி அல்லது அந்த வகை மரத்தின் பகுதிகளை வைத்து வழிபடுகின்றனர்.
வெவ்வேறு மொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள். அதன்படி பார்த்தால் தாவரவியல் பெயர்களும் வேறுபடும். ஆயினும் அனைத்தும் யூபோர்பியம் (Euphorbium or Euphorbia) என்னும் வகைச் செடிகளாகவே இருக்கும். ஹிந்தியில் சிஜ் Sij என்றும் செஹந்த் Suhund என்றும் அழைப்பர்.
தாவரவியல் பெயர்
யூபோர்பியா பெண்டாண்டரா அல்லது ஹுஹ்ரியா
commonly known as: five-tubercled spurge, hedge euphorbia, Indian spurge tree, milk spurge, oleander spurge • Assamese: সৰু সিজু sarau siju • Bengali: মনসাসিজ mansa-sij • Gujarati: ભુંગરા થોર bhungara thor, થોર thor, થૂવર thuvar • Hindi: सेहुण्ड sehund, सीज sij, थूहर thuhar • Kannada: ಎಲೆಕಳ್ಳಿ elekalli, ಮಾಲೆಕಳ್ಳಿ malekalli • Malayalam: ഇലക്കള്ളി ilakkalli • Manipuri: তেঙনৌ tengnou • Marathi: मिंगुट mingut, पालेहुरा palehura, वई निवडुंग vayi nivadunga • Oriya: ଗୁଡ଼ା gurda • Sanskrit: सेहुण्ड sehunda, स्नुही snuhi • Tamil: இலைக்கள்ளி ilai-k-kalli, நாத்தாங்கி na-t-tanki • Telugu: ఆకుజెముడు aku-jemudu • Tibetan: si ri kha nda, snu-ha • Urdu: تهوهر thuhar
botanical names: Euphorbia neriifolia L. … synonyms: Elaeophorbia neriifolia (L.) A.Chev. • Euphorbia edulis Lour. • Euphorbia ligularia Roxb. ex Buch.-Ham. • Euphorbia pentagona Blanco [Illegitimate] • Euphorbia pentagona Noronha [Illegitimate] • Tithymalus edulis (Lour.) H.Karst. … The Plant List (2010). Version 1
The “Sij plant” (as called in Hindi or Euphorbia Hguhria called Sehund) is very sacred to Her, which belongs to cactus family and has the ability to cure poisons

நாக யட்சி | Tamil and Vedas
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › ந…
18 Jun 2012 — ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.
Manasa Devi
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › manasa-devi
4 Aug 2018 — It is a Hindu festival celebrated throughout India. Though the stories change from area to area the basis is same. People worship snakes or …
Manasa
https://tamilandvedas.com › tag › manasa
17 Jun 2012 — Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent Queen.
— subham —
Tags- இலைக்கள்ளி, யூபோர்பியா, மானசா தேவி , கள்ளிச்செடி