
Picture of காசித் தும்பை (Balsam)
Post No. 11,916
Date uploaded in London – – 19 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்து மதத்தில் நாயுருவிச் செடி (Achyranthes aspera ; apaamaarga in Sanskrit) பற்றி சுவையான கதை உள்ளது . மஹாராஷ்ட்டிர மாநில இந்துக்கள் கெளரியை வணங்கும் ஒரு விழாவை புரட்டாசி மாதம் அனுஷ்டிக்கிறார்கள். சுக்ல பட்ச சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் கெளரியை (Gauri Festival) வணங்கி வழிபடுவார்கள் . சில இடங்களில் காசித் தும்பை (Balsam) அல்லது தொட்டாற் சிணுங்கி (Touch me not) செடிகளும் இந்தப் பண்டிகையில் பயன்படுத்தப்படுகின்றன
கெளரி என்பவள் சிவனின் மனைவியான பார்வதி ஆகும். பெண்கள் கொண்டாடும் பண்டிகை இது . கணேஷ் சதுர்த்தியைக் கொண்டாடிய பின்னர் இது வரும்.

Picture of நாயுருவிச் செடி (Achyranthes aspera
பிள்ளையார் சதுர்த்தியில் பயன்படும் 21 இலைகளில் அபமார்க என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடியும் ஒன்றாகும் . இதை மஹாராஷ்டிரர்கள் அகாத (aghaada) என்று அழைப்பார்கள் .
முதல் நாளன்று நாயருவிச் செடியின் ஒரு கட்டை (கட்டு bundle) எடுத்து வருவார்கள்.. அன்று மாலையில் அதை ஒரு பட்டுத் துணியில் (Silk cloth) கட்டி ஒரு திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணின் மடியில் வைத்து மந்திரங்களைச் சொல்லுவார்கள் .தரையில் அழகான ரங்கோலி கோலங்களை வரைவார்கள். அதில் சுவஸ்திகா, கெளரியின் பாதங்கள் இருக்கும். எந்தப் பெண்ணின் மடியில் நாயு ருவிச் செடிக் கட்டு உள்ளதோ அவள் தேவியின் அம்சம். அவளை ஒவ்வொரு அறைக்கும் வீட்டுத் தலைவி அழைத்துச் செல்லுவாள். ஒவ்வொரு அறையிலும் அவளை ஆசனத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டுவார்கள் தீபத்தை வலமாகச் சுற்றுவார்கள்.
ஒவ்வொரு அறையிலும் அவளை வீட்டுத் தலைவி (Housewife) கேள்வி கேட்பாள்.
நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?
உடனே தேவியின் அம்சமான அந்தப் பெண்,
‘நான் பெரிய பொக்கிஷத்தைக் கொண்டு வந்து இருக்கிறேன்’ என்பாள்.
அவளை சமையல் அறைக்கு அழைத்துச் செல்லுகையில் அவள் ‘நான் சுவையான உணவு வகைகைகளைக் கொண்டுவந்து இருக்கிறேன்’ என்பாள். ‘இன்னும் ஒரு அறைக்கு வருகையில் ‘அழகான குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்துள்ளேன்’ என்பாள் .
இவ்வாறு அறைக்குத் தகுந்தவாறு அந்தப் பெண், நல்ல விஷயங்களைச் (Positive matter) சொல்லிக் கொண்டே வருவாள்.
உடனே வீட்டுத் தலைவி தங்கக் கால்கள் உடைய பெண்ணே (woman with golden feet) எந்த நாளும் இங்கே தங்கி இருப்பாயாக என்று சொல்லிக்கொண்டே வருவாள்.
இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு அறைக்கும் நல்ல செல்வங்கள் வந்து சேரும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் .
வாழ்க்கையே எப்போதும் நல்லபடி நடக்கும் என்ற பாஸிட்டிவ் (Positive thoughts) எண்ணங்களை ஏற்படுத்தும் பண்டிகை இது. இந்துக்கள் இப்படி பல பாஸிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் பண்டிகைகளைக் கொண்டாடிய காலத்தில் மண முறிவு (Divorce) , தற்கொலைகள் (Suicides) , மனத் தொய்வு, மன நோய்கள் (Depression, mental illness) இல்லை. இப்போது பண்டிகைகள் திசை மாறிப்போனதால் பிரச்சனைகள் அதிகமாகிவிட்டன.

அன்றைய தினம் அந்தப்பெண்ணை உட்காரவைத்து நல்ல தெய்வீகப் பாடல்களைப் பாடுவார்கள் . அதற்கு முன்னதாக அவள் கொண்டுவந்த பட்டுத்துணி சுற்றிய நாயுருவிச் செடிக்கட்டை ஒரு ஆசனம் அல்லது ஸ்டூலில் (Stool) வைத்தது அதற்கு இனிய பண்டங்கள் , பால் முதலியவற்றைப் படைப்பார்கள் /நைவேத்யம் செய்வார்கள்
கெளரி ஒவ்வொரு அறைக்கு வரும்போதும் அவளுடைய கணவன் சிவனும் அவளை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவார். இதைக்குறிக்கும் வகையில் ஒரு பானையில் அரிசியையும் அதற்குள் தேங்காயையும் மறைத்துவைத்து அவளுடைய புடவை மடிப்புக்குள் வைத்துவிடுவார்கள்.
இரண்டாம் நாள் அந்தப் பெண்ணுக்கு விருந்து பரிமாறிவிட்டு குடும்பத்தினரும் நண்பர்களும் பெரிய விருந்தினை உண்டு களிப்பார்கள் . இரவில் ஆடலும் பாடலும் இடம்பெறும்.
மூன்றாம் நாள் கெளரி தேவியை (good bye) வழி அனுப்பிவைப்பார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு பணமும், மந்திரங்களைச் சொன்ன புரோகிதருக்கு தட்சிணையும் வழங்கப்படும்
இதே போல கெளரி பூஜை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் சிற்சில மாறுதல்களுடன் நடத்தப்படுகிறது. அங்கெல்லாம் நோன்புச் சரடில் 16 முடிச்சுகள் போடுவது, 16 லட்டுகள் படைப்பது, 25 கூடைகளில் பரிசுப் பொருட்களைப் பெண்களுக்கு வழங்குவது, கெளரி உருவத்தை மண்ணால் செய்து மூன்றாம் நாள் ஆற்றிலோ குளத்திலோ விடுவது முதலிய அம்சங்களும் இருக்கின்றன. இது பற்றிய கதைகளும் புழக்கத்தில் உள்ளன.
Number 16, எண் 16
அம்பாளுடைய மந்திரங்களில் ஒன்று சோடசி மந்திரம் ;இதன் பொருள் 16 எழுத்து. அவுளுடைய பெயர் சோடாசாக்ஷரி – 16 எழுத்து வடிவானவள். இதற்கு விளக்கம் எழுதியோர் அவள் என்றும் 16 வயது இளமை உடையவள் என்றும் எழுதியுள்ளனர். சோடசி என்பதை ச, ட , சி என்று பிரித்து 16 எண்ணையும் காட்டியுள்ளனர்
இதில் நாயுருவிச் செடி எப்படி வந்தது? என்பதை பண்டிகை பற்றி எழுதியவர்கள் விளக்கவில்லை
xxxx

என் கருத்து
நாயருவிச் செடி பற்றி அண்மைக்காலத்தில் மருத்துவ பத்திரிகைகளில் நல்ல கட்டுரைகள் வந்துள்ளன. சரகர் போன்ற வைத்தியர்களும் சம்ஸ்க்ருத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது சகல ரோக நிவாரணி என்னும் வகையில் அக்கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒருவேளை இதன் மருத்துவ குணங்கள் மக்களுக்குத் தெரியவேண்டும் என்று கருதித்தான் இதை கெளரி பூஜையில் அறிமுகப்படுத்தினார் போலும் .
இரண்டாவது விஷயம்,
நிறைய ஆடலும் பாடலும் விருந்தும் வேடிக்கையும் உள்ள இது போன்ற பண்டிகைகளில் கல்யாணமாகாத பெண்களையும் ஈடுபடுத்துகையில் வாழ்நாள் முழுதும் இவைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள். மதத்தை அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிடும். மாதத்துக்குப் பத்து பண்டிகைகளைக் கொண்டாடும் மதம் இந்து மதம் ஒன்றே.
மூன்றாவது விஷயம்,
இது ஒரு உள்ளவியல் / மன இயல் (Psychological) பண்டிகை. பாஸிட்டிவ் / நேர்மறை எண்ணங்கள் இருந்தால் செல்வமும் வெற்றியும் அங்கு தானே வரும். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை உலகில் எவருக்கும் இல்லை. கோடீஸ்வரர்களின் படாடோபங்களுக்கு அடியில் ஆழமாகவுள்ள துன்பங்கள் , அவர்கள் ஜோதிடர்களிடமும் சாது சந்நியாசிகளிடமும் வரும்போது அம்பலத்துக்கு வருகின்றன. அத்தகையோருக்கும் இது போன்ற பண்டிகை கள் ஷாக் அப்சார்பர்களாக (Shock absorbers) விளங்குகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே போன சமுதாயங்களில் பிரெஞ்சுப் புரட்சியும், ரஷ்யப் புரட்சியும் வெடித்து ரத்தக் களரியை உண்டாக்கியது. வேறு பல நாடுகளில் ராணுவப் புரட்சி வெடித்தது. இந்தியா மட்டும் புரட்சி வெடிக்காத, உலகின் மாபெரும் ஜனநாயகமாக விளங்குவதற்கு இந்து மதமே காரணம்.. இப்போது வறுமைக் கோட்டைக் கடந்து விட்டதற்கும் மதத்தின் அணுகுமுறையே காரணம் .
வாழ்க பண்டிகைகள் ; வளர்க பாசிட்டிவ் எண்ணங்கள்!
Xxx
Botanical Information
Achyranthes aspera (common names: chaff-flower,[1] prickly chaff flower, devil’s horsewhip,[3] Sanskrit: अपामार्ग apāmārga) is a species of plant in the family Amaranthaceae. It is distributed throughout the tropical world.[
21 பத்ரம் | Tamil and Vedas
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag › 21-பத்ரம்
–subham—Tags- நாயுருவி, காசித் தும்பை, வழிபாடு, கெளரி விழா, அபமார்க, எண் 16