
Post No. 11,919
Date uploaded in London – – 20 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்துக்கள் வழிபடும் ஆல மரம், அரச மரம், அத்திமரம் மூன்றும் ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை மூன்றும் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் பயன்படுவதோடு பறவைகளுக்கும் பயன்படுகின்றன. மஹாபாரதத்தில் வரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இந்த மூன்று மரங்களையும் விஷ்ணுவின் அம்சங்களாக தினசரி இந்துக்கள் துதி பாடுகின்றனர். மாமன்னன் அலெக்ஸ்சாண்டர் கண்டு வியந்த இந்த ஆல மரம் ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்று குறிப்பிடப்படுகிறது.அந்த வேதத்தின் பிராமண நூலான ஐதரேய பிராமண புஸ்தகத்தில் , பின்னர் எல்லா சம்ஸ்க்ருத புராணங்களிலும் இது குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணர், ஆலிலையில் அமர்ந்த கோலம் பிரசித்த மானது.
நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம். இதன் விழுதுகள் கீழே சென்று பரவுவதால் இதைத் தமிழர்களும் பல மொழிகளிலும் பாடல்களிலும் குறிப்பிடுகின்றனர் (எனது 2012 ம் ஆண்டு 2020ம் ஆண்டு கட்டுரைகளில் முழு விவரங்களும் உள்ளன.)
இந்தக் கட்டுரையில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரதத்தில் ஆல மரத்தின் பங்கினைக் காண்போம். வட என்றால் ஆலமரம் என்று பொருள். அங்கோர் வட் என்னும் உலகப் புகழ்பெற்ற கம்போடியா நாட்டு இந்துக்கோவிலும் ஆலமரம் காரணமாகவே அங்கோர் ‘வாட்’ , ‘வட் ‘ என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை பானியன் ட்ரீ Banyan Tree என்று அழைப்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே. பனியா என்றால் வியாபாரிகள். அந்தக் காலத்தில் ஆலமரத்துக்கு அடியில் அவர்கள் கடை விரித்து வியாபாரம் செய்தனர். பணியா இருக்கும் மரம் பானியன் மரம் என்று ஆனது. பணியா என்பது வாணிக, என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு. ப= வ மாற்றம் தமிழ் உள்பட உலகின் எல்லா பழைய மொழிகளிலும் உளது
சாவித்திரியின் கதையை அறியாத இந்துப் பெண்கள்/ இந்தியப் பெண்கள் இருக்க முடியாது
தாவரவியலில் இந்த மரத்தை பைகஸ் பெங்காலின்சிஸ் என்றும் அழைப்பர் பழங்கால புஸ்தகங்களைப் பார்த்தால் பைகஸ் இண்டிகா என்றும் இருக்கும். இப்போது இதை வேறு ஒரு தாவரத்துப் பயன்படுத்துவதால் பைகஸ் பெங்காலின்சிஸ் என்ற பெயர் மட்டுமே நிலவுகிறது
Ficus benghalensis, commonly known as the banyan tree.
இந்த மரம் அழிவுக்கு அப்பாற்பட்டது. உலகில் அழியாத ஒரு உயிரினம் இருக்குமானால் அது ஆல மரம் மட்டுமே. இது விழுது விட்டு வேரூன்றி பரவிக்கொண்டே இருக்கும். ஆகையால் இதை சனாதன, சாஸ்வத, அக்ஷய , அழிவே இல்லாத என்ற பொருளில் இந்துக்கள் காண்கின்றனர். எமனுடன் சண்டைபோட்டு, சாவித்திரி என்னும் பெண், தனது கணவன் சத்தியவானின் உயிரை மீட்டுவந்ததால் இந்த மரம் வட சாவித்திரி வீரத்தில் இடம்பெறுகிறது.

ஜேஷ்ட எனப்படும் ஆனி மாத சுக்ல பட்ச 13,14, 15ஆவது நாட்களில் வட இந்தியா , நேபாளம் முழுதும் வட சாவித்திரி விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பார்கள் 15 ஆவது நாள் பெளர்ணமி ஆகும். ஆகையால் இதை வட பூர்ணிமா என்பர். அன்றுதான் மூன்று நாள் விரதம் நிறைவு பெறும். இதன் மூலம் அவர்களுக்கு சாவித்திரி போல கணவனை இழக்காத தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும். மூன்று நாட்களுக்கு விரதம், நோன்பு கடைப்பிடிக்கும் பெண்கள், புடவை, நகை நாட்டுக்குகளை அணிந்துகொண்டு ஆலமரத்தை வழிபடுவார்கள். அவர்கள் சத்தியவான் சாவித்திரி உருவங்களை வைத்து அல்லது சந்தனத்தால் வரைந்துவிட்டு ஆலமரத்தைச் சுற்றி 7 முறை நூல் சுற்றுவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஜன்ம சாவித்திரி ஹோ “जन्म सावित्री हो என்று வாழ்த்துவர். சாவித்திரி போல நீடூழி வாழ்க என்பது இதன் கருத்து. தீர்க்க சுமங்கலி பவஹ என்ற வாழ்த்துக்கு இணையானது இது.
மஹாபாரதத்தில் வரும் சாவித்திரி- சத்தியவான் கதையின் சுருக்கம் ,
அஸ்வபதி என்ற பத்ர நாட்டு மன்னனின் மகள் சாவித்திரி. மனைவி பெயர் மாலதி / மாளவிகா. சாவித்ரியை வணங்கியதால் நீண்ட காலத்துப் பின்னர் பிறந்தவள் சாவித்திரி.
உனக்குப் பிடித்த கணவனை நீயே தேர்ந்தெடு என்று அவர் சொல்ல, அந்தப் பெண் காட்டில் சந்தித்த சத்தியவான் மீது காதல் கொள்கிறார். ஏனெனில் சத்தியவான், கண் தெரியாத பெற்றோர்களை நன்றாக கவனித்து வந்ததைக் கண்டவுடன் இப்படிப்பட்ட நல்லவனைத்தான் நான் கல்யாணம் கட்டுவேன் என்று முடிவு செய்கிறாள்.
இடையில் நாரதர் வந்து , பதவி பறிபோன மன்னனின் மகன் சத்தியவான் என்றும் அவன் ஓராண்டுக் காலத்தில் இறந்து விடுவான் என்றும் ஆரூடம் சொல்கிறார். அப்படியே நிகழ்கிறது . அவனை மணந்து கொண்ட சாவித்திரி கணவனின் மரணம் நெருங்குவதற்கு முன்னர் மூன்று நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார். விதிப்படி எமன் உயிரைக் கவர்ந்தபோது தன்னுடைய கற்பின் சக்தியால் யமனைப் பின்தொடர்ந்து சென்று வாதாடுகிறாள் . அவன் கணவன் உயிரைத் தரமுடியாது , வேறு எந்த வரம் கேட்டாலும் தருவேன் என்கிறான். என்னை தீர்க்க சுமங்கலி என்று ஆசீர்வதி அது போதும் என்கிறாள். யமனும் அதன் முழு விளைவையும் அறியாது ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்கிறான். பின்னர்தான் யமனுக்கு ஷாக் shock அடித்தது. அடக்கடவுளே!
தீர்க்க சுமங்கலி என்றால் கணவன் உயிரோடு இருக்க வேண்டுமே என்று கருதி சத்தியவானை உயிர்ப்பிக்கிறான் . கணவனைத் தொழுபவள் பெய் என்றால் மழை பெய்யும் என்ற திருவள்ளுவரின் வாக்கை நம்பும் தமிழ்ப் பெண்கள் அனைவரும் இதை அப்படியே நம்புவதால் தமிழ் நாடு முழுதும் சத்தியவான்- சாவித்திரி நாடகமும், திரைப்படமும் பிரசித்தமாயின..
மாதம் பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும் எச்சரித்து வருகிறேன். மாதங்களை இரண்டுவிதமாக இந்துக்கள் கணக்கிடுவர். தமிழர்கள் 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதம் துவங்குவதாகக் கணக்கிடுவர். ஏனையோர் அமாவாசை முடிந்த மறுநாளைக்கு அந்த மாதம் துவங்குவதக்க கொள்ளுவர். அவரவர் பின்பற்றும் பஞ்சாங்க்கப்படி பண்டிகைகளைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
xxxx
சாவித்ரி பெளர்ணமி என்று அழைக்காமல் ஆலமர பெளர்ணமி (வட பூர்ணிமா ) என்று அழைப்பது ஏன் ?
ஆலமரம் போன்ற நிலையான, உறுதியான நீண்ட ஆண்டு வாழ்வு கணவனுக்கு இருக்க வேண்டும். அப்போது அந்தப் பெண்ணும் விதவை வாழ்வு வாழ வேண்டியிராது. இருவரும் சேர்ந்து பிள்ளைகளை நன்கு வளர்க்கலாம். இதனால் குல தருமம் செழிக்கும். பெண்களுக்கு மறுமணம் தேவைப்படாது . இப்படி எல்லா குடும்பங்களும் வாழ்ந்தால் சமுதாயம் முன்னேறும்
சாவித்திரி என்ற பெயர் தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு வைக்கப்படுகிறது. மேலும் பழைய தமிழ் நூல்கள் அனைத்திலும் சாவித்திரி விரதம் இருக்கிறது.
தமிழ் ஆண்டின் கடைசியில் காரடையான் நோன்பு இதே கதையியைக் கூறுவதால் வட சாவித்திரி விரதத்தை தமிழர்கள் வேறு நாளில் கொண்டாடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
சில மாநிலங்களில் அமாவாசை அன்றும் சாவித்ரி விரதம் பின்பற்றப்படுகிறது இந்தியாவில் பல்வேறு மொழிகளில் சத்தியவான் சாவித்ரி பற்றி 40 திரைப்படங்கள் வெளியாயின.
— subham—–

TAGS- இந்து மதம், ஆலமர வழிபாடு, வட சாவித்திரி , விரதம் , காரடையான் , நோன்பு ,நைஸ சாக , ந்யக்ரோத ,பனியா
ஆலமரம் மரம் | Tamil and Vedas
tamilandvedas.com
https://tamilandvedas.com › tag
·
1 Jun 2020 — ஆலமரம் மரம் – 4 பழமொழிகள் … ஆலமரம் பழுத்தால் வேடன் பாடு கொண்டாட்டம்.
ஆலமரம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
27 May 2012 — ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.