.jpg)
PICTURE OF AMBERNATH TEMPLE (WIKIPEDIA)
Post No. 11,928
Date uploaded in London – – 23 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
நேற்று வெளியான முதல் பகுதியின் தொடர்ச்சி
Part 2
5.அம்பர்நாத் சிவன் கோவில்
இது மஹா தேவனுக்குரிய மிகப் பழைய கோவில். சக ஆண்டு 982 (பொது ஆண்டு 1060) கல்வெட்டும் இதற்கு சான்று தருகிறது. மஹா சிவராத்திரியின் போது மிகப்பெரிய திருவிழா நடைபெறும்.
இது மும்பை நகரிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகில் ரயில் நிலையம் உண்டு.இந்தக் கோவிலில் ஒரு அதிசயம் என்னெவென்றால் கர்ப்பக்கிரகம் பூமிக்கடியில் இருக்கிறது ;20 அடிகள் இறங்கிச் செல்ல வேண்டும். இது வல்துணி (வத்வன் ) நதியின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமியின் பெயர் அம்பரநாதர். அதற்கேற்ற மாதிரி சிகரத்துக்கு மேல் வானம் தெரியும். சித்தராஜா என்ற மன்னனும் அவன் மகன் மும்முனியும் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் . இந்த கோவிலில் உள்ள மூர்த்திக்கு அம்பரநாதர் என்றே பெயர்.
****
கொஞ்சம் மொழி ஆராய்ச்சி செய்வோம்
அம்பலம் என்றால் வெட்டவெளி. அதாவது வானம் பார்த்த இடம். சம்ஸ்க்ருதத்தில் அம்பரம் என்றால் வானம்/ ஆகாயம் . சிதம்பரம்= சிற்றம்பலம் ஒன்றே. அதாவது அம்பலம்= அம்பரம்
அம்பலம் என்றால் மரத்துக்கு அடியில், வெட்ட வெளியில் கூடும் ஊரின் சபை. இதனால்தான் ஒரு விஷயம் வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டால் விஷயம் அம்பலமாகிவிட்டது என்கிறோம்.
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூலத்திலிருந்து வந்தன என்ற என் ஆராய்ச்சியை இது உறுதி செய்கிறது.
Xxxx
6.அவாச பாம்புக்கோவில்
இமயம் முதல் குமரி வரை நாகர் கோவில்கள் இருக்கின்றன. இந்துக்கள் பாம்புகளின் தேவையை நன்கு உணர்ந்தவர்கள் . பாம்புகளைக் கொன்றால் எலிகள் பெருகும். தானியத்தை அழி க்கும். இன்றும்கூட எலிகள் அழிக்கும் தானியம்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆகையால் பாம்புகளைக் கொல்லக்கூடாது ; அப்படிக் கொன்றால் நாக தோஷத்தால் அந்தக் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்காது என்ற பேச்சும் உண்டு. இதனால் மஹாராஷ்டிரர்கள் நாக பஞ்சமி விழாவை மிகப்பெரிய விழாவாக கொண்டாடுவர். கேரளத்திலும் வீட்டிலேயே பாம்புகளுக்கு ஒரு கோவில் இருக்கும்.. கார்த்திகை மாத சுக்ல பட்ச சதுர்தசி தினத்தில் ஆடல் பாடலுடன் பெரிய பாம்பு விழா நடக்கும் கோவில் இது எல்லோரும் கம்புகளின் நுனியில் பாம்பு உருவங்களை வைத்துக்கொண்டு ஆடுவர்.
இப்போது இந்த இடம் அலிபாக் என்ற பெயரில் இருக்கிறது. அங்குள்ள கோவிலை நாகோபா கோவில் என்று அழைக்கின்றனர்.
Xxxx
7.பாஹி சிவன் கோவில்
இது சாதாரா மாவட்டத்தில் பாடன் அருகில் உள்ளது. இது இராமலிங்க கோவில் என்று அழைக்கப்படுகிறது. விஷ்ணு பக்தர்களும் சிவ பக்தர்களும் வழிபடும் இந்தக் கோவிலில் சிவ லிங்கமும் ராமர் உருவங்களும் இருக்கின்றன. ராமர் வனவாச காலத்தில் இங்கு வந்ததாக ஐதீகம் . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது பெளஸ மாத அமாவாசையிலும் சித்திரை சுக்ல நவமியில் (ராம நவமி) விழாக்கள் நடைபெறும் .
8. பூலேஸ்வர் சிவன் கோவில்

புனே நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த அதிசயக் கோவில் கட்டப்பட்டுள்ளது . யாவத் என்னும் இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர்தான் ஆதிகாலத்தில் பஞ்ச பாண்டவர் இதைக் கட்டியதாகவும் சொல்லுவர். சிவனுக்கு அளிக்கப்படும் இனிப்புகள் மாயமாய் மறையும் கோவில் இது
மலைமேல் அமைந்துள்ள இந்தக்கோவில் 1200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை உடைத்து. நிறைய சிற்பங்களைக் கண்டு களிக்கலாம் . இங்குள்ள சிவலிங்கத்துக்குப் படைக்கப்படும் இனிப்புகளில் (பேடா) ஒன்றோ, இரண்டோ மறைந்துவிடுமாம். நடிகரும் பயணக் கட்டுரை எழுத்தாளருமான மிலிந்த் குணாஜி MYSTICAL MAGICAL MAHARSHTRA மிஸ்டிகல் மாஜிகல் மஹாராஷ்டிரா (அதிசயமும் அற்புதமும் நிறைந்த மஹாராஷ்டிரா ) என்ற நூலில் தனது அதிசய அனுபவத்தை எழுதியுள்ளார்.
கிருஷ்ண தேவராயர் கட்டிய இந்தக்கோவிலின் இன்னுமொரு சிறப்பு, விநாயகர் பெண் உருவத்தில் அமைந்திருப்பதாகும் கணேஸ்வரி, லம்போதரி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
தெளலத் மங்கள் கிரி என்ற கோட்டையும் இங்கே இருக்கிறது. அருகில் பல கோவில்களும் பறவைகள் சரணாலயமும் இருக்கிறது. இங்குள்ள அபூர்வ சிற்பங்களால் இதை அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட சின்னம் என்று அறிவித்துள்ளது .

WOMAN GANESH FIGURE
9. பன்புரி நாயக்பா சிவன் கோவில்
பாடன் நகரிலிருந்து பத்துமைல் தொலைவிலுள்ள வன புரி நாயகபா
சிவன் கோவிலில் வெள்ளியிலான முக கவசம் உண்டு. அதை இரண்டு விழாக்களின்போது ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் சித்திரை மத பஞ்சமியிலும் ஆஸ்வீன மாத தசமியில் இதைச் செய்கின்றனர் . நாயகி பா என்பது சக்தியின் மற்றும் ஒரு வடிவம்; சிவனின் மனைவி.
ஒரு விவசாயி சிவனை வணங்கும் பக்தர். அவர் ஒரு நாள் வந்து கொண்டிருக்கையில் மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து கீழே விழுந்து சிதறியது. அன்றைய தினம் கனவில் அவர்தான் சிவன் என்று கண்டார். பின்னர் அங்கே கோவில் கட்டினார்.

SNAKE TEMPLE, NAGOBA
–to be continuedபாம்பு, கோவில், பூலேஸ்வர், அம்பரேஸ்வர், இனிப்பு மறையும்