
Battle of Stalingrad
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,935
Date uploaded in London – 25 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்
புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 6
சோஹம் ஸ்டேஷனில் நேர்ந்த சோக விபத்து!
ச.நாகராஜன்
பகுதி 7
இரண்டாம் உலகப் போரில் புழங்கிய வெடி மருந்துகள், குண்டுகள், துப்பாக்கிகளுக்கு ஒரு கணக்கேயில்லை.
வெடி மருந்துகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரயில், கார், டிரக் என பலவகை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் டி டேD DAY என்று சொல்லப்படும் நாள் ஜூன் 6 1944.
அதற்கு நான்கு நாட்கள் முன்பாக 1944 ஜூன் 2ஆம் தேதி டிரைவர் பெஞ்சமின் ஜிம்பர்ட் (Benjamin Gimbert) மற்றும் பயர்மேன் ஜேம்ஸ் நைட்டால் (James Nighttall) ஆகிய இருவரும் ஒரு குட்ஸ் ட்ரெயினுக்கு இன் சார்ஜாக இருந்தனர். அவர்களது வேலை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏர்ஃபோர்ஸுக்கு இங்கிலாந்தில் எஸக்ஸில் ஒயிட் கொல்ன் (While Colne, Essex, UK) என்னுமிடத்தில் பாம்ப்களை – குண்டுகளை டெலிவரி செய்ய வேண்டும்.
சோஹம் (SOHAM) என்பது ஒரு சிறிய கிராமம். அதை நோக்கி ரயில் விரைந்து கொண்டிருந்த போது பெஞ்சமின் தனது லோகோமோடிவுடன் இணைக்கப்பட்ட அடுத்த வாகன் தீப் பற்றிக் கொண்டது என்பதை உணர்ந்தார்.
என்ன ஆகும்? வெடி மருந்துகள் டன் கணக்கில் வண்டியில் உள்ளன. பிரம்மாண்டமான வெடி விபத்து ஏற்பட இருக்கிறது.
உடனே அவர் வண்டியை நிறுத்தினார். எரிகின்ற வாகனை இணைப்பிலிருந்து விடுபடச் செய்ய முயன்றார்.
சோஹம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 128 மீட்டரில் (420 அடி) வண்டி நின்று கொண்டிருந்தது.
வண்டி நின்ற முற்றத்தில் ஒரு பள்ளம் பறித்து அதில் வேகனைத் தள்ளி விட அவர்கள் முயன்றனர்.
ஆனால் அது எப்படி முடியும்? பெஞ்சமின் தீ பிடித்ததைப் பார்த்த ஏழு நிமிடங்களில் குட்ஸ் ட்ரெயின் வெடித்தது.
ஸ்டேஷன் தரைமட்டமாகியது. பெஞ்சமினை 200 மீட்டர் தூக்கி எறிந்தது. இரண்டு ரெயில் ஊழியரை சிதற அடித்தது.
வெடியினால். 20 அடி ஆழம் உள்ள ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டது.
ஆனால் அங்குள்ளவர்கள் சோர்ந்து விடவில்லை.
உடனடியாக ரயில் டிராக்கை சரி செய்ய ஆரம்பித்தனர்.
மாலைக்குள் ரயில் டிராக் சரியாகி விட்டது.
சண்டையில் போர்க்களத்தில் அல்லாது இதர விதத்தில் தைரியத்துடன் செயலாற்றிய அபூர்வமான வீரர்களுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் தரப்படும் ஜார்ஜ் க்ராஸ் நான் – காம்பாட் ப்ரேவரி விருது (Non Combat Bravery Award) அந்த இருவருக்கும் தரப்பட்டது.
சோஹம் ஸ்டேஷனில் அவர்கள் நினைவாக இரு ப்ளேட்டுகளும் வைக்கப்பட்டன!
பகுதி 8
ஒரு சண்டையிலேயே அதிகம் உயிரை விட்ட ரஷிய வீரர்கள்!

பிரிட்டிஷ், அமெரிக்க வீரர்களை விட அதிக அளவில் ரஷிய வீரர்கள் இரண்டாம் உலகப் போரில் இறந்தனர்.
ஸ்டாலின்கிராட் சண்டையில் தான் இது நிகழ்ந்தது.
ஜூலை 1942 முதல் 1943 பிப்ரவரி முடிய இந்தச் சண்டை நீடித்தது
ஜெர்மனி இந்த தொழில்நகரத்தை எப்படியேனும் பிடிக்க வேண்டும் என்று முயன்றது.
விமானத் தாக்குதல், வீட்டுக்கு வீடு சென்று சண்டை என எல்லாவிதத்திலும் கடுமையான போராக இது அமைந்தது.
ரஷிய வீரர்கள் சளைக்கவில்லை.
ஆயிரக் கணக்கானோர் ரஷிய தரப்பிலும் அதே போல ஜெர்மானிய தரப்பிலும் இறந்தனர்.
ஆக்ஸிஸ் பவர் என்பது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாட்டு அணியைக் குறிக்கும்
அல்லைஸ் என்பது பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாட்டு அணியைக் குறிக்கும்.
ஆக்ஸிஸ் பக்கம் 650,000 முதல் 868,000 வீரர்கள் இறந்தனர்.
ரஷிய தரப்பிலோ – 1100000 – பதினோரு லட்சம் வீரர்கள் இறந்தனர்
ஒரே ஒரு சண்டையில் அதிகமான வீரர்களை இப்படி ரஷியா இழந்தது இந்த ஸ்டாலின்கிராட் போரில் தான்!
***