
Post No. 11,938
Date uploaded in London – 26 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்புதிய நெடுந்தொடர்.
அத்தியாயம் 7
ஹிட்லருக்கு அழிவைத் தந்த தவறான ஸ்வஸ்திகா!
ச.நாகராஜன்
பகுதி 9
உலகம் செய்த நற்தவத்தின் பயனாக ஹிட்லர் தேர்ந்தெடுத்த ஸ்வஸ்திகா சின்னம் அவனுக்குப் பேரழிவைத் தந்தது.
அது அவனது தற்கொலையில் முடிந்தது.
தனது இனமே உயரிய ஆரிய இனம் என்று கர்வம் கொண்ட ஹிட்லர்
தனது இனப்பெருமையைப் பறை சாற்றும் வண்ணம் ஒரு சின்னத்தை அடையாளக் குறியீட்டைத் தேர்ந்தெடுத்தான்.
ஹிந்துக்கள் தொன்று தொட்டு ஸ்வஸ்திகா சின்னத்தை மங்கலச் சின்னமான அனைத்து நல்ல வைபவங்களுக்கும் பயன்படுத்தி வந்தது வரலாறு எடுத்துக் கூறும் உண்மை.
கோவில்களிலும் கொடிகளிலும், கோலங்களிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் இடம் பெறும்.
ஸ்வஸ்தி என்றால் மங்கலத்தைத் தருவது என்று பொருள்.
ஸ்வஸ்தி வசனம் என்று ஆசீர்வாதம் தரச் செய்யப்படும் நல்ல வாசகங்களை ஓதுதல் கூறப்படும்.
இந்த சின்னத்தை – ஹிந்துக்களிடமிருந்து எடுத்து உலகெங்குமுள்ள இதர இனங்கள் தங்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்தன.
வலது புறம் சுழற்சியைக் கொண்ட இந்தச் சின்னமே தைவிக் ஸ்வஸ்திகா.
இதை ஆரியர் சின்னம் என்று பழைய நூல்களிலிருந்து அடையாளம் கண்டு கொண்ட ஹிட்லர் அதைத் தனது வெற்றிச் சின்னமாக அறிவிக்கக் கருதி அதைத் தேர்ந்தெடுத்தான்.
ஆனால் அனைவரின் நற்பயனாக அவன் அதில் ஒரு தவறு செய்தான்.
ஸ்வஸ்திகாவை வலது புறச் சுழற்சிக்குப் பதிலாக இடது புறம் சுழலச் செய்தான்.
அது ஆசுரிக் ஸ்வஸ்திகாவாக ஆனது. இந்த அசுர ஸ்வஸ்திகா அவனுக்கு அசுர வளர்ச்சியைத் தந்து இறுதியில் அதல பாதாளத்தில் ஆழ்த்தியது.
இடது புற சுழற்சியாக இதை மாற்றியதோடு அல்லாமல் 45 டிகிரி அதைச் சுழற்றி மாற்றி வேறு அவன் பயன்படுத்தினான்.
உலகில் ஆதி காலம் தொட்டு இன்று வரை சுமார் 20000 சிம்பல்கள் – சின்னங்கள் அல்லது அடையாளக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
அபாய அறிவிப்புகள், இடம் குறித்த செய்திகள் தரும் சின்னங்கள் என நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சின்னங்களை நாம் நன்கு அறிவோம்.
The Swastika : Symbol Beyond Redemption என்ற தனது புத்தகத்தில் அமெரிக்க கிராபிக் டிசைனர் ஸ்டீவன் ஹெல்லர் (Steven Heller) எப்படியெல்லாம் மேலை நாடுகள் கட்டிடக்கலையிலும் விளம்பரக் கலையிலும் இந்த ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தின என்பதை விளக்குகிறார்.
கோகோகோலோ பான வகைகளிலும், கார்ல்ஸ்பெர்க் பீர் பாட்டில்களிலும் கூட விளம்பரமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது.
பாய் ஸ்கவுட்ஸ் இதைத் தமது சின்னமாகத் தேர்ந்தெடுத்தனர். அமெரிக்க பெண்கள் சங்கம் (Girl’s Club of America) தங்கள் பத்திரிகைக்கு ஸ்வஸ்திகா என்று பெயர் சூட்டியது.
முதல் உலகப் போரில் அமெரிக்க ராணுவம் தனது ஆர் ஏ எஃப் விமானங்களில் அதைப் பயன்படுத்தியது. 1939ஆண்டு வரையிலும் கூட அதை அந்த விமானங்களில் பார்க்க முடிந்தது.
நாஜிக்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து உலகெங்கும் இந்தச் சின்னம் குறித்த பெருத்த மாறுதல் ஒன்று ஏற்பட்டது.
நாஜிக்களுக்கு எதிரான அனைவரும் இதைப் பார்த்தாலே பயப்பட ஆரம்பித்தனர்.
யூதர்களுக்கோ இது கொலைகாரச் சின்னம் ஆனது. ஹோலோகாஸ்ட் சின்னம் என்று இதை அவர்கள் கருதினர்.

நாஜிக்களின் கொடி
பல்வேறு வண்ணங்கள், வடிவமைப்புகளைப் பரிசீலித்த பின்னர் ஹிட்லர் தானே முடிவு செய்த கொடி நாஜிக்களின் கொடியானது.
இது பற்றி ஹிட்லர் தான் எழுதிய மெய்ன் காம்ஃப்’ (1925) நூலில் குறிப்பிட்டிருப்பது:
“I myself, meanwhile, after innumerable attempts, had laid down a final form; a flag with a red background, a white disk, and a black swastika in the middle. After long trials I also found a definite proportion between the size of the flag and the size of the white disk, as well as the shape and thickness of the swastika.”
— Adolf Hitler, Mein Kampf (1925)
“நானே பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இறுதி வடிவத்தை அமைத்துள்ளேன். கொடியின் பின்ணனியில் வெள்ளை வட்டில் கறுப்பு ஸ்வஸ்திகா நடுவில் இருக்கும். நிறைய சோதனைகளுக்குப் பின்னர் சரியான விகிதம் கொண்ட கொடியை வெள்ளை வட்டில் வடிவத்துடனும் ஸ்வஸ்திகாவின் கனத்துடனும் இதைக் கண்டுபிடித்துள்ளேன்.”
ஹிட்லர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ஜெர்மனியின் சான்ஸலராக நியமிக்கப்பட்டவுடன் கறுப்பு சிவப்பு தங்க நிறக் கொடி நீக்கப்பட்டது; மார்ச் 12 முதல் கறுப்பு-வெள்ளை- சிவப்பு மூவண்ணக் கொடி நாஜி கட்சியின் கொடி ஆனது.
A flag from Nazi Germany found near the south bank of the Rapido River about 4,000 feet (1,200 meters) west of Monte Cassino by J. McQuorkindale on the night of 17–18 February 1944. Note that the swastika appears to be left-facing in this image.
பஸ்மாசுரன் தன் தலையில் தானே கை வைத்துக் கொண்டு அழிந்த புராண வரலாறு போல ஹிட்லர் தன் அழிவுக் கொடியைத் தானே வடிவமைத்து வண்ணம் பூசி மகிழ்ந்து அழிந்தான் எனலாம்.
***