
Veerabhadra Swami
Post No. 11,939
Date uploaded in London – – 26 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
16..சிஞ்ச்வாடா கணபதி கோவில்
இது புனே நகரில் இருக்கிறது மோரோபா என்றும் மோர்யா கோசாவி என்றும் அழைக்கப்படும் ஒரு மஹான் நிறுவிய கோவில் இது. காணாபத்யம் என்னும் வழிபாட்டை பரப்பியவர். அவரையும் அவரது வழிவந்தோரையும் கணபதியின் அம்சமாகவே அவர்களுடைய பக்தர்கள் வழிபட்டு வந்தனர் அவர்கள் தலைமுறை 7 தலைமுறை வரை நீடித்தது.தேவா வகுப்பினர் என்று அறியப்பட்ட அவரது சந்ததியினர் இன்னும் இருக்கின்றனர். அந்த 7 பேர் நினைவாக மார்கழி மாத கிருஷ் ணபட்ச ஷஷ்டி முதல் நவமி வரை ஆராதனை நடைபெறுகிறது பழைய சிஞ்ச்வாடா, காந்தி பேட்டையில், மோரியா கோசாவி சமாதி இருக்கிறது .
17.தேஹு துகாராம் கோவில்
இது புனே நகரின் புறநகர்.
துகாராம் என்ற பெரிய மராட்டிய மகானின் பிறப்பிடம். இவர் மூலமாக பண்டரீபுர விட்டோபா (பாண்டுரங்கனின்) பக்தி இயக்கம் பரவியது. பங்குனிமாத கிருஷ்ண படச த்விதீயை முதல் பஞ்சமி வரை பெரிய திருவிழா நடக்கும். வருடத்தில் வரக்கூடிய 24 ஏகாதசிக்களிலும் இங்குள்ள விட்டோபா கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வரும்; ஆஷாட மாதத்தில் துகாராம் பல்லக்கு இங்கிருந்து பண்டரீபுரம் நோக்கிப் புறப்படும். இந்திர யாணி நதிக்கரையில் துகாராம் கோவில் உள்ளது . இதை அவர் மகன் கட்டினார் . இது தவிர அவர் தொடர்புடைய பல கோவில்களும் இங்கே இடம்பெற்றுள்ளன.
தேஹூவில் உள்ள துகாராம் காதா மந்திரில் அவர் இயற்றிய 4000 அபங்கங்களும் (துதிப் பாடல்கள்) பொறிக்கப்பட்டுள்ளன . அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடமும் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது .
xxx
18.தேவ்காட் கால பைரவ கோவில்
கால பைரவ கோவில் உள்ள இடம்.
பேய் பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
இங்கு வந்து மன நோய் தீர வழிபடுகின்றனர்.. மகா சிவராத்திரி காலத்திலும், கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி முதல் பெளர்ணமி வரை உள்ள காலத்திலும் விழாக்கள் நடைபெறும்.இப்போது இது சிந்துதுர்க் ஜில்லாவில் ஹிந்தலே என்னும் இடமாக இது இருக்கிறது.

xxxxxx
19.தாமன்கேல் கண்டோபா கோவில்
புனே மாவட்டத்தில் ஜுன்னார் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பலருக்கு குல தெய்வமான, கிராம தெய்வமான, கண்டோபா கோவில் இருக்கிறது ஆண்டுதோறும் மாசி, சித்திரா மாத பெளர்ணமியில் விழாக்கள் நடைபெறும்.இது தவிர , கண்டோபா கையில் வாள் ஏந்தும் திருவிழாவும் நடக்கிறது. சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் போவது போல மணி, மால்யா ஆகிய இரு அசுரர்களை அழிப்பதற்காக சம்ப சஷ்டி விழா நடத்தப்பட்டுகிறது அன்று சிவனே கண்டோபாவாக வருவதாக ஐதீகம்
இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அஷ்ட வினாயக் என்னும் எட்டு பிள்ளையார் கோவில்களில் ஒன்றும் இருக்கிறது .
xxx

20.தோம் நகர கோவில்கள்
சாதாரா மாவட்டத்தில் வை தாலுகாவில் உள்ள தோம் கிராமத்தில் நிறைய கோவில்கள் உண்டு. கிருஷ்ணா நதி உற்பத்தியாகும் இடத்திகற்கு அருகில் தோம் கிராமம் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம கோவில் , சித்தேஸ்வர் சிவன் கோவில் ஆகியவை முக்கியமானவை. வைசாக பெளர்ணமி தினத்தை ஒட்டி கோவில் விழாக்கள் நடக்கின்றன.
இவை சிற்பச் சிறப்புடைய கோவில்கள் . குறிப்பாக நரசிம்ம சுவாமி கோவிலில் உள்ள தாமரைக்குளம் , சித்தேஸ்வர் கோவிலில் உள்ள நந்தி மண்டபம் ஆகியன நுணுக்கமான கலை வேலைப்பாடுகளைக் காட்டுகின்றன.
xxx
21.டோங்கர் கான் மஹாதேவர் கோவில்
அகமத் நகர் ஜில்லாவிலுள்ள டோங்கர் கான் மஹாதேவர் கோவிலில் சிராவண மாத மூன்றாம் திங்கட்கிலையில் கொண்டாட்டங்கள் நடக்கின்றன .
xxxx
22.காராபுரி (எலிபண்டா தீவு)

மும்பைக்கு அருகிலுள்ள தீவு எலிபண்டா தீவு என அழைக்கப்படும். இங்குள்ள பெரிய சிவபெருமான் உருவங்கள் மிகவும் புகழ்பெற்றவை. யுனேஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டது. அதிலுள்ள திரிமூர்த்தி சிலை மிகப்பெரியதும் மிகப்பிரசித்தி பெற்றதும் ஆகும் .மகா சிவராத்திரி நாளில் பெரிய விழா நடைபெறுகிறது.
எலிபண்டா தீவு
எலிபெண்டா தீவு, இதனை காராபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் (Elephanta Island or Gharapuri Island or Pory Island) மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். இந்து, பௌத்தக் குடைவரைக் கோயிலைக் கொண்டுள்ளது.16 கிமீ பரப்பளவு கொண்டது.
எலிபெண்டா தீவு, ராய்காட் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இரண்டு குன்றுகளும் இடையில் பள்ளத்தாக்கும் உடைய பகுதி. தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது. 2200 ஆண்டுக்கு முந்திய தொல்பொருட் துறைத் தடை யங்கள் கிடைத்தாலும் குடைவரைக் கோவில்கள் ஜந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் செதுக்கப்பட்டுள்ளன.
முதல் குகையில் 7 மீட்டர் உயர சிவபெருமான் உருவத்தைக் காணலாம். சிவனின் அகோர, தத்புருஷ, வாமதேவ முகங்களை இவை குறிக்கின்றன. இந்த பிரம்மாண்டமான திரிமூர்த்தி உருவம் இந்தியாவின் தபால்தலைகளிலும் அஞ்சல் அட்டைகளிலும் இடம்பெற்றன
இன்னும் ஒரு இடத்தில் லிங்கத்தைச் சுற்றி புடைப்புச் சிற்பங்கள் செ துக்கப்பட்டுள்ளன. நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் யோகீஸ்வரர், கல்யாண சுந்தர மூர்த்தி, கங்காதர மூர்த்தி ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.
மும்பை நகரிலிருந்து கடலில் படகில் சென்றால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீவை அடையலாம் . மாலை 5 மணிக்கு மேல் எவரும் தங்க அனுமதி இல்லை.
Xxx
23.கொடாச்சி வீரபத்ர சுவாமி கோவில் (கர்நாடகம் )
கர்நாட- மஹாராஷ்ட்ரா எல்லையில் உள்ள பெல்காம் மாவட்ட, ராம் துர்க் அருகில் இந்த கிராமம் இருக்கிறது. இப்பொழுது இது கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளபோதிலும் இங்குள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு இரு மாநில மக்களும் வருகின்றனர் . தட்ச யக்ஞத்தை அழிப்பதற்காக சிவன் உண்டாக்கியவர் வீரபத்ரர்.
இது லிங்காயத் சமூகத்தினருக்குப் புனிதமான இடம்; .வீரபத்ரரின் பெரிய சிலை இங்கே இருக்கிறது. பலவண்ணம் படைத்த இந்த கம்பீரமான சிலை, தக்ஷனை வீரபத்திரர் சம்ஹாரம் செய்யும் கோலத்தில் இருக்கிறது கோவிலின் கட்டிடக்கலை சாளுக்கிய மற்றும் விஜயநகர அம்சங்களைக் கொண்டு இருக்கிறது . எல்லா அமாவாசை , பெளர்ணமி நாட்களிலும் பக்தர் கூட்டம் வருகிறது .மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் பெரிய விழா நடக்கிறது இது அமைந்துள்ள பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிரம் சொந்தம் கொண்டாடும் செய்திகள் இன்னும் பத்திரிகையில் வந்து கொண்டு இருக்கின்றன.
To be continued………………
Tags- எலிபெண்டா, குகைக்கோயில், காண்டோபா, துகாராம் , நரோபா கோசாவி, வீரபத்ர சுவாமி கோவில்