ஜெர்மனியை விட்டு ஓடிய விஞ்ஞானிகள்!(Post.11,941)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,941

Date uploaded in London –   27 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 8

ஜெர்மனியை விட்டு ஓடிய விஞ்ஞானிகள்!

ச.நாகராஜன்

பகுதி 10

இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய மக்கள் மட்டுமல்ல; உலகின் ஆகச் சிறந்த அறிவாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக யூத மேதைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். உயிருக்கு பயந்து அவர்கள் ஜெர்மனியை விட்டு பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடினர்.

செமிடிக் இனத்திற்கு எதிரான தனது தொடர் வேட்டையைத் தொடர்ந்தான் ஹிட்லர்.

ஜெர்மனியின் மொத்த ஜனத்தொகையான 65,000,000 பேரில் 600,000 யூதர்கள் இருந்தனர். அதாவது மொத்த ஜனத்தொகையான ஆறரைக் கோடியில் ஆறு லட்சம் என்பது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு தான். என்றாலும் கூட  29% நோபல் பரிசுகள் ஜெர்மனியால் வெல்லப்பட்டன.

முதல் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த கெமிக்கல் நிபுணரான ஹேபர் ஒரு யூதர்.  ஐன்ஸ்டீன் இன்னொரு யூதர்.  ஆனால் நாஜிக்களோ அவர்கள் ஜெர்மனிக்குத் தேடித் தந்த புகழையும் பெருமையையும் சற்று கூட கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. யூதரா, விரட்டு என்பதே ஹிட்லரின் ஒரே கொள்கையாக இருந்தது.

ஹேபரும் ஐன்ஸ்டீனும் இதர மூன்று லட்சம் யூதர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினர். மீதி மூன்று லட்சம் யூதர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டனர்.

பகுதி 11

ஜெர்மனியை விட்டு வெளியேறிய அறிஞர்கள்!

ஜெர்மனியில் மட்டும் இந்தக் கொடுமை நடக்கவில்லை. ஹிட்லர் கொஞ்சம் கொஞ்சமாக ஜெர்மனியை அடுத்துள்ள நாடுகளைப் பிடிக்க பிடிக்க அங்கேயும் இந்த பயம் பரவ ஆரம்பித்தது.

யூதர்கள் ஆரிய இனத்திற்கு தாழ்ந்தவர்கள் என்பதே ஹிட்லரின் ஒரே பார்வையாக இருந்தது.

ஏராளமான மேதைகள் ஜெர்மனியை விட்டுக் கிளம்பினர். அவர்களுள் முக்கியமான சிலர்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்

பால் எர்லிச் – (Paul Ehrlich) – Discoverer of Drug salvarsan against Syphilis – மேகநோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர்

ஜாகப் எப்ஸ்டீன்  -Jacob Epstein – நவீன காலத்தின் மிகப் பெரும் சிற்பி

பெர்னார்ட் பரூச் – Bernard Baruch – அமெரிக்க விற்பனை நிபுணர், பொருளாதார நிபுணர்

ராபர்ட் ஓப்பன்ஹீமர் – Robert Oppenheimer – அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி

லியான் ட்ராட்ஸ்கி – Leon Trotsky – ரஷிய கம்யூனிஸ தலைவர்

ஹென்றி கிஸ்ஸிங்கர் – Henry Kissinger – அமெரிக்க செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் பதவி வகித்தவர் – ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில்

இவர் ஜெர்மனியை விட்டுத் தப்பி ஓடி ஐன்ஸ்டீன் போலவே அமெரிக்காவிலேயே தங்கி விட்டவர்)

தாமஸ் மேன் -Thomas Mann – ஜெர்மனியின் மாபெரும் நாவலாசிரியர்

எரிச் மரியா ரெமார்க் -Erich Maria Remarque -ஜெர்மானிய ஜனரஞ்சக எழுத்தாளர்

டாக்டர் ப்ரனிங் – Dr Bruningn- ஜெர்மனியின் முன்னாளைய பிரதம மந்திரி

மரிலீன் டைட் ரிச் – Marelene Dietrich – ஜெர்மனியின் பெரிய நடிகை

வில்லி ப்ராண்ட் – Willy Brandt -நோபல் பரிசு பெற்றவர் 

முடிவற்ற இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

பலர் சித்திரவதை முகாமில் இறந்தனர். அவர்களுள் ஒருவர்:

கார்ல் ஓஸிட்ஸ்கி  – நோபல் பரிசு பெற்றவர் – நாஜி சித்திரவதை

முகாமில் கொடுமைக்குள்ளாகி 1938இல் இறந்தவர் – ஹிட்லரை எதிர்த்துப் பேசியதால்!

                                                ***                                          தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: