மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் வழிபாடு- Part 2 (Post.11,945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,945

Date uploaded in London – –  28 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Second part

இடம் வலம் மாற்றும் இந்துக்கள்

மாக்ஸ்முல்லர், கால்டு வெல் கும்பல்களுக்கு செமை அடி கொடுக்கும் இன்னும் ஒரு வழக்கமும் இந்துக்களிடம் உண்டு. சுப காரியங்களை வலமாகவும் , அசுப காரியங்களை இடமாகவும் செய்வார்கள் இந்துக்கள். இது உலகில் எங்கும் பின்பற்றப்படாததால் இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள் Sons of the Soil , பாரத நாட்டின் ஒரிஜினல் குடிகள் என்பதும் தெளிவாகும். ஆண்டில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை, இறந்து போன உறவினருக்கு நீர்க்கடன் செலுத்தும் போதெல்லாம், பூணூலை இடது தோளிலிருந்து வலது தோளுக்கு மாற்றிக்கொள்ளுவர் அதாவது பூணூல் இடது கைக்கு அடியில் போய்விடும். அது போலவே மயானத்திலும் இடம் வருவார்கள்; கோவிலாக இருந்தால் நாம் வலம் வருவோம்.

இது மட்டுமல்ல எள்ளும் நீரும் இறைப்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்று முன்னர் காட்டினேன். இன்னொரு வழக்கம் ஏழு தலைமுறைகளை நினைத்து வழங்குவது உலகில் வேறு எங்கும் இல்லை. தர்ப்பணம் கொடுக்கையில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா , தாய், பாட்டி , கொள்ளுப்பாட்டி ஆகியோருக்கு எள்ளும் நீரும் கொடுத்துவிட்டு தாயார் வழியில் வந்த அப்பா அம்மா வகையில் மூன்று தலைமுறைக்கும் மரியாதை செய்வார்கள் இது போன்ற வழக்கங்கள் வேறு எங்கும் இல்லை.

மாதா – மதர் Mother , ப்ராதா – ப்ரதர் Brother , ஹோரா -ஹவர் Hour என்ற சொற்களை வைத்து நாம் வெளிநாட்டில் இருந்து வந்தோம் என்று சொன்ன வில்லியம் ஜோன்ஸ்களுக்கும் மாக்ஸ் முல்லர், கால்டு வெல் களுக்கும் யாக யக்ஞம் , திதி, தர்ப்பணம் முதலிய 1000 விஷயங்களில் ஒன்றைக்கூட, வெளிநாடுகளில்  முழுமையாகக் காட்டமுடியவில்லை . அது மட்டுமல்ல; பல்லாயிரக் கணக்கான சம்ஸ்ருத  சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை . உண்மையில் நாம்தான் இலக்கணம், மொழி முதலியவற்றைக் கொடுத்து அவர்களை நாகரீகம் உள்ளவர்களாக மாற்றினோம்.

இந்துக்கள் சுப காரியங்களின் போதும் தனது முன்னோர்களை வழிபடுவர். இதற்கு நாந்திசுமங்கலிப் பிரார்த்தனை என்று பெயர்

நாந்தி சடங்கிற்கு 11 பிராமணர்

வீட்டில் நடக்கும் கல்யாணம், உபநயனம் முதலிய 40 ஸம்ஸ்கா ரங்களுக்கும் முன்னர் நாந்தி என்னும் முன்னோர் வழிபாட்டைச் செய்வார்கள்.

நாந்தி என்றால்  நல்லாசி வழங்குதல் என்று பொருள்.. ஸம்ஸ்க்ருத நாடகங்களிலும், நடன அரங்கேற்றங்களிலும் முதலில் திரை விலகியவுடன் நாந்தி நடைபெறும். அரசன், மக்கள், இறைவன் ஆகியோரின் ஆசீர்வாதத்தைக் கோருதல் நாந்தி .

வீடுகளில் 7 தலைமுறையினரின் ஆசியைப் பெறுவதற்கு (தந்தை வழி , தாய் வழி களில் 3 தலைமுறைகள் வீதம் ) 11 பிராமணர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து, வணங்கி , விருந்து படைத்து, பின்னர் தானங்களைச் செய்வார்கள்; அரிசி, பருப்பு, காலணி , குடை , கூஜா, வேஷ்டி துண்டு, நல்ல தட்சிணை  என்று சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு தானம் வழங்கப்படும். இறுதியில் அந்தக் குடும்பத்தில் தோன்றிய பேரப்பிள்ளைகள் வரை அனைவரும் அந்த பிராமணர்களை வலம் வந்து நமஸ்கரிக்கும்போது, அவர்கள் மஞ்சள் அட்சதையைப் போட்டு மந்திரம் சொல்லி பரி பூரண ஆசீர்வாதம் செய்வர்.

இது போல குடும்பத்தில் சுமங்கலிகளாக இறந்து போன பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தப்படும் . சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு விருந்து  படைத்து , மஞ்சள், குங்குமம், புடவை, வெற்றிலை பாக்கு முதலியவற்றைக் கொடுப்பார்கள்.

xxx

ஒளியின் மஹிமை

வீட்டில் யாரேனும் இறந்து போனால் அந்த இடத்தில் 13 நாட்களுக்கு விளக்கு ஏற்றி வைப்பார்கள். இறந்து போனவரின் ஆவி 11 நாட்களுக்குப் பின்னர் good-bye குட் பை சொல்லிவிட்டு மேலுலகம் செல்லும். அப்போது வழி  தெரிவதற்காக விளக்கு ஏற்றி வைப்பார்கள். நம்மிடமிருந்து கிறிஸ்தவர்களும் இதைக்  கற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட, இறந்த இடத்தில் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைப்பதை மேலை நாடுகளில் காண்கிறோம்.

குறிப்பாக துர் மரணம் ஏற்பாட்டால் அங்கு பூவும் மெழுகு வர்த்திகளும் குவியும்.

இந்துக்கள்தான் இதை உலகிற்கு கற்றுக் கொடுத்தார்கள். புத்த மத துறவிகள் இதை ஜப்பான் முதலிய கீழை தேசங்களுக்கும் பிரிட்டன் முதலிய மேலை தேசங்களுக்கும் எடுத்துச் சென்றனர்.

யாரேனும் பெரியவர் இறந்தாலோ, நிறைய பேர் இயற்கை உற்பாதங்களில் இறந்தாலோ மோட்ச தீபம் என்ற பெயரில் கோவிலில் விளக்கு ஏற்றுவர்

டில்லியில் பிரதம மந்திரி இந்திராகாந்தியை சீக்கியர்கள் சுட்டுக் கொன்றவுடன், டில்லியில் நடந்த சீக்கிய-எதிர்ப்புக் கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக காஞ்சீபுரத்தில் மோட்ச தீபம் ஏற்ற காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்பாடு  செய்தார்.

இது போன்ற விளக்கு ஏற்றுதல் ஜப்பான் வரை சென்றுவிட்டது ; ஜப்பானில் இந்தக் கடவுளர் வெவ்வேறு பெயரில் இருப்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவர்களும் இறந்த முன்னோர்களுக்காக விளக்கு திருவிழா நடத்துகின்றனர். பாரம்பர்ய காலண்டரி ல் ஏழாவது மாதத்தில் 13ஆவது நாளில் இறந்த முன்னோர்கள், பூமிக்கு வருவர் என்று சொல்லி, அவர்கள்  விளக்கு (Feast of Lanterns ) ஏற்றுகிறார்கள் .

My old articles

96 முறை

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › 9…

26 Oct 2014 — 12 அமாவாசை தர்ப்பணங்கள் 12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 …

திதி

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › த…

·

28 Dec 2017 — தென்புலத்தாருக்கு 96 கும்பிடு! … 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)

அமாவாசைக்கு பெயர் வந்தது எப்படி? சூரிய- …

https://tamilandvedas.com › அம…

·

8 Dec 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … சந்திரன் மற்றும் அமாவாசை , பெளர்ணமி பற்றிய …

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய …

Blogger

https://swamiindology.blogspot.com ›

13 Oct 2019 — … இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! … posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.

—subham—

Tags- தர்ப்பணம், மஹாளய, அமாவாசை, part 2, திதி, மோட்ச தீபம், விளக்கு ஏற்றுதல், நாந்தி , ஜப்பான் , மூதாதையர், வழிபாடு,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: