
Post No. 11,946
Date uploaded in London – – 28 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அஷ்ட விநாயகர் கோவில்கள் (Part one)
அஷ்ட விநாயகர் அல்லது எட்டு விநாயகர் ( अष्टविनायक) எனப்படும் எட்டு கோவில்கள் மகாராட்டிர மாநிலத்தின் புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் இருக்கின்றன
இந்த எட்டு விநாயகர் கோயில்களுக்கும் கால்நடையாகச் சென்று வழிபடுவது மராத்தியர்களின் வழக்கமாகும். அஷ்டவிநாயக மூர்த்திகளும் தானாக தோன்றிய சுயம்பு மூர்த்திகளாகும்.
அஷ்டவிநாயகர் கோயில்கள்
24 .மோரேஷ்வர் மோர்காவ்ன், புனே மாவட்டம்
25. சித்தி விநாயகர் கோயில் சித்தடெக், அகமது நகர் மாவட்டம்
26. பல்லாலேஷ்வர் பாலி, ராய்கட் மாவட்டம்
27. வரதவிநாயகர் மகத், ராய்கட் மாவட்டம்
28. சிந்தாமணி விநாயகர் தேயுர், புனே மாவட்டம்
29. லெண்யாத்ரி கணபதி குடைவரைக் கோயில் லெண்யாத்திரி, புனே மாவட்டம்
30. விக்னேஸ்வரர் கோயில் ஒஸா ர், நாசிக் மாவட்டம்
31. ரஞ்சன்கான் கணபதி ரஞ்சன்கான் , புனே மாவட்டம்
अष्टविनायक मंदिरे
क्रमांक मंदिर स्थान
१ मोरेश्र्वर मंदिर मोरगाव, पुणे जिल्हा
२ सिद्धिविनायक मंदिर सिद्धटेक, अहमदनगर जिल्हा
३ बल्लाळेश्वर मंदिर पाली, रायगड जिल्हा
४ वरदविनायक मंदिर[२३] महड, रायगड जिल्हा
५ चिंतामणी मंदिर थेऊर, पुणे जिल्हा
६ गिरीजात्मज मंदिर लेण्याद्री, पुणे जिल्हा
७ विघ्नेश्वर मंदिर ओझर, पुणे जिल्हा
८ महागणपती मंदिर रांजणगाव, पुणे जिल्हा

மோர்காவ்ன் கணேசர் ஆலயத்திலிருந்து பாதயாத்திரையைத் துவக்கி, பின்னர் சித்திவிநாயகர் கோயில், பல்லாலேஷ்வர் விநாயகர் கோயில், வரதவிநாயகர் கோயில், சிந்தாமணி விநாயகர் கோயில், லேண்யாத்திரி விநாயகர் கோயில், விக்னேஸ்வரர் கோயில் வழியாக ரஞ்சன்காவ்ன் கணபதியை வழிபட்டு மீண்டும் மோர்காவ்ந் கணேசரை வழிபட்டு பாதயாத்திரையை முடிப்பது பக்தர்களின் மரபாகும்.
24. மோர்காவ்ன் மயூரேஷ்வர் கணபதி கோவில்
(புனே மாவட்டம்)
புனே நகரிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் எல்லோரும் அஷ்ட விநாயகர் யாத்திரையைத் துவங்குவர். இங்குதான் முடிக்கவும் வேண்டும் ; பாமனி சுல்தான் காலத்திலிருந்து கோவில் இருக்கிறது. மசூதிகளின் மினாரெட் கோபுரம் போல 4 உண்டு. முஸ்லிம்கள் இந்துக் கோவில்களை தாக்கி நிர்மூலமாகினர். அந்த அசுரர்களின் கைகளில் இருந்து தப்பிக்க இந்த ஏற்பாடு என்று அறிஞர்கள் கருது கின்றனர்.; கோவிலைச் சுற்றி 50 அடி உயர மதில் சுவரும் உண்டு.
கோவிலில் ஒரு நந்தியும் இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மயில் மீது பவனி வரும் கணபதி இக்கோவிலில் இருப்பதால் மயூரேஸ்வரர் என்று பெயர். ஊரின் பெயரே மராத்தி மொழியில் மயிலூர்.
சிந்துராசுரனை கணபதி துவம்சம் செய்த இடம் இது. முக்கண்ணுடை ய கணபதியின் உடலில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.. தலையில் நாகப்பாம்பு குடை பிடிக்கிறது. சித்தி, புத்தி என்ற இரு துணைவியாருடன் பிள்ளையார் காட்சி தருகிறார். விநாயகரை வணங்குவோருக்கு காரிய சித்தியும் மகா மேதாவியின் புத்தியும் வரும் என்பதைக் குறிக்க வட இந்தியாவில் பல இடங்களில் கணபதி இரு மனைவியருடன் காட்சி தருவார்.
பிள்ளையாருக்கு முன்னால் மயிலும் மூஷிகம் என்னும் எலியும் உள்ளன கோவிலில் உள்ள மரங்களில் புனிதமானது . வன்னி மரம். இதன் கீழ்தான் மோரியா கோசாவி என்னும் மஹான் ஞானம் பெற்றார்.. கோவிலுக்குள் பல கடவுளர் திரு உருவங்கள் இருந்த போதிலும் நக்ன பைரவர் என்னும் மூர்த்தத்தை முதலில் வணங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உள்ளது..
Xxx

25.சித்தி விநாயகர் கோவில்
(அகமது நகர் மாவட்டம்)
சித்தடெக் என்னும் ஊரில் பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் இது.
தாண்ட் என்னும் ஊரிலிருந்து 18 கிலோமீட்டர் செல்லவேண்டும் .இங்குள்ள விநாயகர் வலம் சுழி தும்பிக்கை உடையவர் . மது, கைடபன் என்ற இருவரை விஷ்ணு சம்ஹாரம் செய்யும் முன்னர் , இந்தப் பிள்ளையாரை வணங்கிச் சென்றதாக தல புராணம் சொல்லும். நாராயண மஹராஜ் என்ற மஹான் வசித்ததாலும் இந்த இடத்துக்குக் கூடுதல் மஹிமை. .ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக் கோவிலுக்கு அஹல்யாபாய் ஹோல்கர் என்ற புகழ்பெற்ற மஹாராணி கர்ப்பகிரகம் அமைத்து திருப்பணி செய்தார்.ஒரு முறை கோவிலை வலம் வரவேண்டுமானாலும் கிரிப் பிரதட்சிணம் செய்தாகவேண்டும். அதற்கு குறைந்தது அரை மணி நேரம் ஆகும். குன்றின்மேல் குடியிருக்கும் பிள்ளை அவர்.
Xxx
26. பல்லாலேஷ்வர் விநாயகர் கோவில்
(ராய்கட் மாவட்டம்)
பாலி என்னும் கிராமத்தில் உள்ள கோவில் இது. கர்ஜத் என்னும் இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் சென்றால் பாலி கிராமத்தை அடையலாம்.பல்லாலேஷ்வர் என்பது ஒரு பக்தரின் பெயர். அப்படி பக்தரின் பெயர் தாங்கிய கோவில் இது ஒன்றுதான்; ஆகையால் பிராமண பக்தரின் உருவத்தில் பிராமணர் போல உள்ள சிலை இது.
கோவிலின் வடிவமைப்பு ஸ்ரீ என்னும் எழுத்து வடிவத்தில் இருக்கிறது அருகில் இரண்டு புண்ய தீர்த்தங்கள் உள . இந்தக் கோவிலில் இரண்டு கர்ப்பக் கிரகங்களில் இரண்டு கணேசர் இருக்கிறார்கள். மராட்டிய வீரர் ஒருவர், இப்பகுதியை ஆண்ட போர்ச்சுகீசியரைத் தோற்கடித்து அவர்களிடமிருந்த மணிகளைக் (Bells) கொண்டுவந்தார். அவைகளை, இந்தக் கோவில் உள்பட பல கோவில்களுக்கு தானம் செய்தார்.
Xxx
27. வரதவிநாயகர் கோவில்
( மஹட் , ராய்கட் மாவட்டம்)
மஹட் என்னும் இடம் புனே நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் மும்பாய் நகரிலிருந்து செல்வதே எளிது.
இந்தக்கோவிலைப் பற்றி ஒரு தல புராணக் கதை இருக்கிறது வாசக்னவி என்ற முனிவரின் மனைவி முகுந்தா, இளவரசன் ருக்மாங்கதன் மீது ஆசை கொண்டாளாம். அவர் வர மறுத்தவுடன் அவருக்கு தொழுநோய் ஏற்பட அவள் சபித்தாளாம். இதற் கிடையில் முகுந்தாவை இந்திரன் திருப்திப்படுத்தினான் முகுந்தாவை மகன் கிருத்சமடன் , தாயாரை ‘போரி’ என்னும் மரமாக சபித்தவுடன், அவள் உனக்கு திரிபுராசுரன் என்னும் அசுரன் பிறப்பான் என்று சபித்தாளாம். பின்னர் கிருத்சமடன் புஷ்பக வனத்துக்குச் சென்று , தவம் செய்து, கணபதியை வணங்கினார் . அவர்தான் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே என்ற முக்கிய கணபதி மந்திரத்தை ரிக் வேதத்தில் ஆக்கியவர்.
திரிபுராசுரனை, சிவபெருமான் வதம் செய்தார் .வரத விநாயகர் என்ற பெயருக்கு அர்த்தம் “கேட்டதை எல்லாம் அளிக்கும் வர பிரசித்தி பெற்றவர்” என்பதாகும். அருகிலுள்ள குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிலை என்பதால் மற்ற சிலைகள்போல வழுவழுப்பாக இல்லாமல் காணப்படும். இங்குள்ள தீபம் 1892-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணையாமல் எரியவிடப்படுவது மற்றும் ஒரு சிறப்பு அம்சம்.
எட்டு விநாயகர் கோவில்களில் இந்த ஒரு கோவிலில் மட்டுமே பக்தர்கள் , பிள்ளையாருக்கு அருகில் சென்று தாங்களே வழிபடஅனுமதிக்கப்படுகிறது.
கோவிலைச் சுற்றி நான்கு யானை சிலைகள் , கோவிலை அலங்கரிக்கின்றன.. மேலே கோபுரம் பாம்பு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम् ।
ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत
आ नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥
Gannaanaam Tvaa Ganna-Patim Havaamahe
Kavim Kaviinaam-Upama-Shravastamam |
Jyessttha-Raajam Brahmannaam Brahmannaspata
Aa Nah Shrnnvan-Uutibhih Siida Saadanam || (RV 2.23.1).

To be continued…………………………………….
Tags – அஷ்ட விநாயகர், கோவில், மந்திர் , மகாராஷ்டிரம் , புனே , பிள்ளையார், கணபதி, கணேசர் கிருத்சமடன், கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே