
Post No. 11,948
Date uploaded in London – – 29 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Four devotees who covered all the 8 temples at one go.
பகுதி 6
நேற்று அஷ்ட விநாயகர் கோவில் எனப்படும் எட்டு பிள்ளையார் கோவில்களில் நான்கு கோவில்களை தரிசித்தோம். இன்று மீதமுள்ள நான் கு கணபதிகளைத் தரிசிப்போம்.
५ चिंतामणी मंदिर थेऊर, पुणे जिल्हा
६ गिरीजात्मज मंदिर लेण्याद्री, पुणे जिल्हा
७ विघ्नेश्वर मंदिर ओझर, पुणे जिल्हा
८ महागणपती मंदिर रांजणगाव, पुणे जिल्हा
28. தேவூர் சிந்தாமணி மந்திர்
புனே மாவட்டம்
புனே நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் தேவூர் இருக்கிறது. இங்குதான் மூலா , முத்தா , பீமா நதிகள் சந்திக்கின்றன.. ஏனைய 7 கோவில்களையும் விட இது அளவில் பெரியது கபில முனிவர் வைத்திருந்த சிந்தாமணி என்னும் அபூர்வ ரத்தினைக் கல்லை குணா என்ற பேராசைக்கார மன்னன் பறித்துக்கொண்டான். அந்த மணியை மீண்டும் கபிலருக்கு மீட்டுக்கொடுத்த கணபதி என்பதால் இவரை சிந்தாமணி விநாயகர் என்று அழைக்கிறார்கள் . கோவிலுக்கு ப் பின்னால் அமைந்துள்ள ஏரியை கடம்ப தீர்த்தம் என்பர் . சிந்தாமணி ரத்தினக் கதை முத்கல புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது .
Xxx
29. கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்
(புனே மாவட்டம்)
ஜுன்னார் என்னும் ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் லேனாத்ரி என்னும் இடத்தில் கிரிஜாத்மஜ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கிரிஜா (மலைமகள்) என்பது பார்வதியின் பெயர் ஆத்மஜ என்றால் மகன். பார்வதி என்னும் கிரிஜா, தவம் செய்து பிள்ளையாரைப் பெற்ற இடம் இது. இங்கு பாத்த மதத்தைப்போற்றும் 18 குகைகள் இருக்கின்றன. அவற்றில் எட்டாவது குகையை பிள்ளையார் பிடித்துக்கொண்டார்.ஒரே பறாங் கல்லில் அமைந்த குடைவரைக் கோவில் . குகைகளை கணேஷ்லேணி என்றும் அழைப்பர் . கோயிலுக்குச் செல்ல 307 படிகள் உண்டு பெரிய மண்டபம் ஆனாலும் தூண்கள் எதுவுமில்லை.. 53 அடி நீளம், 51 அடி அகலம்,7 அடி உயரத்துடன் உள்ள கம்பீரமான மண்டபம்.. மின்சார விளக்கு எதுவுமின்றி , சூரிய ஒளியால் மட்டும் சுயம் பிராகாசமாக ஜொலிக்கிறார் பிள்ளையார்.
Xxx

30. விக்னேஷ்வர் கோவில்
(புனே மாவட்டம்)
ஓஜர் என்னும் ஊரில் விக்னம் போக்கும் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது புனே நகரிலிருந்து சுமார் 85 கிலோமீட்டர். குக்டி நதிக்கரையில் அமைந்த கோவில் இது . நாராயண காவ்ன் என்னும் கிராமம் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது
அபிநந்தன் என்னும் அரசனின் வழிபாட்டுக்கு ஊறு விளைவித்த விக்னா சுரனை , பிள்ளையார் சம்ஹாரம் செய்த ஊரில் கோவிலைக் கட்டி இருக்கிறார்கள் .அப்போது அசுரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.. என் பெயர் எப்போதும் உங்கள் பெயருடன் நீடிக்க வேண்டும் என்றான். அது முதல் பிள்ளையாருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது . விக்னம் என்றால் தடைகள், இடையூ றுகள் . பிள்ளையார் சும்மா விடுவாரா ? மகா பாரதம் எழுதித்தருவதற்கு வேத வியாசருக்கே கண்டிஷன் போட்டவர் அல்லவா ! அவரும் ஒரு கண்டிஷன் போட்டார். எனது பக்தர்கள் எவரிடமும் நீ செல்லக்கூடாது என்று. அது முதல் பிள்ளையார் பக்தர்களுக்கு விக்னங்கள் (கஷ்டங்கள்) எதுவும் வருவதில்லை .
பிள்ளையாயர் சிலைகளில் நீலம் , வைரம் ஆகிய ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, கோவிலின் கோபுரமும் தங்கத்தால் வேயப்பட்டு இருக்கிறது சித்தி, புத்தி ஆகிய இரு தேவியர் புடை சூழ அமர்ந்து காட்சி தருகிறார் கணேசர்.
Xxx

31. மஹா கணபதி கோவில்,
புனே மாவட்டம்
ராஞ்சன் காவ்ன் என்னும் ஊர் புனே நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.திரிபுராசுரனை வாதம் செய்வதற்கு முன்னர், சிவன் வழிபட்ட இடம் இது. அருணகிரிநாதரின் திருப்புகழைப் படித்தோருக்கு இந்தக் கதை தெரியும். எல்லோரும் எந்தக் காரியத்தைத் துவங்கினாலும் கணபதியை வணங்கிவிட்டுதான் செல்ல வேண்டும். அவசரத்தில் சிவன் மறந்து போய், ‘ஹலோ’ Hello சொல்லாமல் கிளம்பிவிட்டார். சிவனுடைய கார் டயர் வெடித்துவிட்டது; அதாவது ரத்தத்தின் சக்கரம் அச்சு(Axis) முறிந்து அச்சோ என்று உட்கார்ந்து விட்டது உடனே சிவ பெருமான், Sorry, Sorry, Very Good Morning குட் மார்னிங் சொல்லி, ஸாரி , ஸாரி என்று சொன்னவுடன் வெற்றிபெற வாழ்த்துகிறர் கணபதி.
கைத்தல நிறைகனி என்று துவங்கும் திருப்புக்கழில்
முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதிதீரா
என்று அருணாகிரி பாடியதை தமிழர்கள் அறிவார்கள்
அத்தகைய பெருமை உடைடய இந்தக் கோவிலில் தட்சிணாயன காலத்தில் சூரிய ஒளி , பிள்ளையார் மீது விழும்படி கோவிலைக் கட்டியிருக்கிறார்கள் . இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை உடைத்து.
Xxx
மகாராஷ்டிரத்தில் பிள்ளையார் சதுர்த்தி தேசீயத் திருவிழா ஆகும். பால கங்காதர திலகர் இதைப் பிரபலப்படுத்தி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரக் கனலை மூட்டிவிட இந்த விழாவைப் பயன்படுத்தினார். ஆயினும் அவருக்கும் முன்னதாகவே விநாயகர் வழிபாடு உண்டு. மராட்டிய மாநிலத்தில் உள்ள பிள்ளையார் குடைவரைக் கோவிலைக் காண்கையில் நம்முடைய பிள்ளையார் பட்டிக்கும் அது முன்னோடியோ என்று எண்ணத் தோன்றுகிறது .
சித்தி, புத்தி என்ற விநாயகர் மனைவிகள், அடையாளபூர்வ சொற்கள் ; உண்மை மனைவியர் அல்ல. பிள்ளையாரை வழிபாட்டால் சித்தியும் புத்தியும் கிடைக்கும்.
எல்லா சதுர்த்தி தினங்களிலும், பிள்ளையார் சதுர்த்தியின் போதும் அஷ்ட விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பதை சொல்லத் தேவை இல்லை.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.–ஒளவையார்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா—ஒளவையார்
–சுபம்—

Tags- அஷ்ட விநாயகர், கோவில், மந்திர் , மகாராஷ்டிரம் , புனே , குடைவரைக் கோவில், பிள்ளையார், கணபதி, கணேசர் , விக்னம் , அசுரன்