இந்து மதம் பற்றி காந்திஜியின் பொன்மொழிகள் (Post No.11,952)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,952

Date uploaded in London – –  30 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மே 2023 மாத நற்சிந்தனை காலண்டர்

மே 1- மே தினம் ; 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்,; 5 சித்திரா பெளர்ணமி; புத்த பூர்ணிமா , மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்; 29 அக்னி நட்சத்திரம் முடிவு

அமாவசை – 19; பெளர்ணமி – 5; ஏகாதசி உண்ணா விரத நாட்கள் –  1, 15

சுப முகூர்த்த நாட்கள் – 11, 22, 24, 25

காந்தி பொன்மொழிகள்

மே 1 திங்கட் கிழமை

ஒரு மனிதன் கடவுளையே நம்பாமல் இருக்கலாம். அப்படியும் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளலாம் இந்து மதம் என்பது, ஓய்வு ஒழிவு இல்லாமல்  சத்தியத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று அது செயலற்று, வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் , கீழே போய்க்கொண்டு இருப்பதற்கு காரணம் அது களைப்படைந்துவிட்டதே. அந்தக் களைப்பு நீங்கிய பின்னர் முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டமான ஒளியுடன் அது பிராகாசிக்கும் மதங்களுக்குள்  மிகவும் சகிப்புத் தன்மை உடையது இந்து மதமே ; எல்லோரையும் அரவணைப்பது இந்து மதமே (Young India 24-4-1924)

xxx

மே 2 செவ்வாய்க் கிழமை

இந்து மதத்தின் அழகு , அது எல்லாவற்றையும் உள்ளடக்கிக்கொண்டு இருப்பதே என்பது  என்னுடைய கருத்து. மஹாபாரதம் என்னும் உன்னத இதிஹாசத்தை  எழுதிய தெய்வீக புருஷன் (வியாசர்) அதுபற்றி சொன்னது அப்படியே இந்துமதத்துக்கும் பொருந்தும் .எந்த மதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களும் இதில் உள்ளது. இந்துமதத்தில் சொல்லப்படாத விஷயம் இருந்தால் அது தேவையற்ற, பசையற்ற விஷயமாக இருக்கும்.

xxx

மே 3 புதன் கிழமை

விக்ரக  ஆராதனை

நான் விக்ரகங்களை வைத்து வழிபடுவதை ஆதரிப்பவனும் எதிர்ப்பவனும்தான் ; அதன் உண்மையான பொருளை உணரும்போது இது சரி. விக்ரக  ஆராதனையின் பின்னுள்ள கருத்தை நான் ஆதரிக்கிறேன் மனித இனத்தை உயர்த்துவதில் அது மிக முக்கியமான பங்குபணியைச் செய்கிறது . இந்தப் புண்ணியமான பூமியைப் புனிதப்படுத்தி நிற்கின்ற பல்லாயிரக்கணக்கான கோவில்களைப் பாதுகாக்கும் சக்தி எனக்கு வேண்டும் (Young India 28-2-1924)

xxxx

மே 4 வியாழக் கிழமை

கடவுளை நான் எப்படி உணருகிறேனோ அப்படியே உள்ளது உள்ளபடி நான் சொல்கிறேன் ஆவர் ஆக்குபவர், அழிப்பவர் . அவர் பலவண்ணம் உடையவர் என்ற என் நம்பிக்கையில் பிறந்தது இந்தக் கருத்து. சமண மதத்தினர் மேடையில் நன் பேசும்போது கடவுள் என்பவருக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை என்பேன் ராமாநுஜர் கூட்டத்தில் பேசுகையில் அவரே உலக நாயகன் என்பேன் .யார் ஒருவர் பற்றி  நாம் முழுதும் நினைத்தே பார்க்க முடியாதோ அவரை நாம் நினைக்கிறோம். யார் ஒருவரை வருணிக்கவே முடியாதோ அவரைப் பற்றி நாம் வருணிக்க முயல்கிறோம். அறிய முடியாத ஒருவரை  அறிய முயற்சி  செய்கிறோம். அதுவே உண்மை.; இதனால்தான் நாம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறோம். நம்முடைய வருணனை அவரை எட்டிப்பிடிப்பது இல்லை . இதே காரணத்தினால்தான் வேதங்களும் நேதி ,நேதி  (இது இல்லை ,இது இல்லை ) என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது (Young India 21-1-1926)

xxxx

மே 5 வெள்ளிக் கிழமை

நான்  விக்ரக ஆராதனை தேவையே இல்லை என்ற கட்சியிலும் நிற்பேன். அதாவது அந்த ஆராதனையின் பின்னுள்ள கருத்தை, தாத்பர்யத்தை உணராமல் வெறித்தனமாக வழிபடுவோர் விஷயத்தில் இதுவே என் நிலை.அவர்கள் என் சிலைதான் உயர்ந்ததுவேறு எங்கும் இறைவன் இல்லை என்ற வெறிபிடித்தவர்கள் சிலையிலோ, தங்க விக்ரகம் ஒன்றிலோ கடவுளைக் காண்பவர்களைவிட இது போன்றவர்கள் அபாயகரமானவர்கள் , மழுப்பல் பேர்வழிகள் ஆவர் (Young India 28-2-1924)

xxxx

மே 6 சனிக் கிழமை

கோவில் வழிபாடு

கோவில்கள் இருப்பது பாவம் என்றோ மூட நம்பிக்கை என்றோ நான் கருதவில்லை ஒரு பொது இடத்தில் கடவுளை வழிபடுவதும் எல்லோரும் கூட்டாக வழிபடுவதும் மனித இனத்தின் தேவை என்றே தோன்றுகிறது . அப்படி வழிபடும் கோவிலில் விக்ரகங்கள் இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவரவர்கள் ருசியையும், கண்ணோட்டத்தையும் பொருத்தது (Young India 5-11-1925)

xxxx

மே 7 ஞாயிற்றுக் கிழமை

பகவத் கீதையை இந்துக்களின் எல்லா பிரிவினரும் தங்களது என்று ஏற்கின்றனர் அதில் பிடிவாதமான கொள்கை  ஏதும் இல்லை..அறநெறி விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறது .புத்திக்குக்கும் இதயத்துக்கும் திருப்தி தருகிறது எல்லோரையும் ஈர்க்கும் சக்தி படைத்தது. மொழி நடையோ மிகவும் எளிதானது .

Xxxx

மே 8 திங்கட் கிழமை

கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் மூன்றும் அடங்கிய நூல் கீதை. இந்த மூன்றும் இணக்கமாக இருப்பதே நல்ல வாழ்க்கையை அமைக்கும் . இதற்கு அடிப்படை சேவை .

XXX

மே 9 செவ்வாய்க் கிழமை

உயர்ந்த தத்துவ எண்ணங்களையும் ஆன்மீக ரகசியங்களையும் உடைய கீதை சாதாரண மனிதர்களுக்கு எளிதில் விளங்காது . அதிர்ஷ்டம் வாய்ந்த சிலர்தான் அதைப்  புரிந்துகொண்டு பின்பற்ற முடியும்.. ஆட்சி புரியவோ சமூகக் கட்டமைப்புக்கோ ஏற்றதல்ல ,

XXX

மே 10 புதன் கிழமை

கீதை என்னுடைய  பைபிள்; குரான் மட்டுமல்ல அது என்னுடைய தாயார் போன்றது. என்னை ஈன்றெடுத்த தாய் என்றோ போய்விட்டாள் இந்த அழிவில்லாத தாய் அந்த இடத்தைப் பரிபூரணமாகப் பிடித்துக்கொண்டு என்னுடனே இருக்கிறாள்.

Xxx

மே 11 வியாழக் கிழமை

இந்து மதத்தில் கடவுளுக்குப் பல பெயர்கள் உண்டு ராமரும் கிருஷ்ணரும் வரலாறு பூர்வமானவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்கள் நம்புகின்றனர்.. ஆண்டவனே தசரதனுடைய மகன் ராமனாக பூவுலகிற்கு இறங்கிவந்தான் என்றும் நம்புகின்றனர் . அவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பதும்  அவர்களுடைய நம்பிக்கை .

Xxx

மே 12 வெள்ளிக் கிழமை

இந்துக்கள் பாதுகாப்பு சங்கம்

(பெண்கள் ) கடத்தல் போன்றவற்றைத் தடுக்கவும் தாங்கள் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் சமூக, தார்மீக, பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இந்துக்கள் சங்கம் துவங்குவது நியாம்தானே , காந்திஜி ?

காந்தியின் பதில்: உங்கள் கேள்வியில் கண்ட விஷயங்களுக்காக ஒரு அமைப்பைத் துவங்குவதை யாருமே ஆட்சேபிக்க முடியாது.. நான் கட்டாயம் எதிர்க்க மாட்டேன் (Young India 2o-10-1925)..

Xxx

மே 13 சனிக் கிழமை

மனு நீதி நூல்

மனு ஸ்ம்ருதியை நான் சாஸ்திரமாகவே கருதுகிறேன் . ஆனாலும் மனு ஸ்ம்ருதி என்ற பெயரில் அச்சிடப்பட்ட அத்தனை ஸ்லோகங்களையும் நம்புவதாக அர்த்தமில்லை.. ஒரு பகுதியை  நீங்கள் ஏற் றுக்கொண்டால்  அதற்கு முரணாக உள்ள பகுதிகளை நீங்களே ஒதுக்கி விடுவீர்கள். அச்சிடப்பட்ட தொகுதியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.. அதிலுள்ள உயர்ந்த கருத்துக்கள் காரணமாக அதை நான் ஒரு மத நூல் என்றே கருதுகிறேன்.

xxx

மே 14  ஞாயிற்றுக் கிழமை

இந்திய நாகரீகம்

இந்தியா உருவாக்கிய நாகரீகத்தை எவராலும் மிஞ்சமுடியாது நம்முடைய முன்னோர்கள் விதைத்த விதைகளுக்கு சமமானது எதுவும் இல்லை.ரோமானிய சாம்ராஜ்யம் போய்விட்டது;கிரேக்க சாம்ராஜ்யத்துக்கும் அதே கதி.தான். எகிப்திய பாரோ மன்னர்களின் பெருமை குலைந்துபோனது. ஜப்பான், மேற்கத்திய மயமாகிவிட்டது; சீனாவைப்பற்றியோ சொல்வதற்கே ஒன்றுமில்லை.ஆனால் இந்தியாவோ இன்னும் எப்படியோ வலுவான அஸ்திவாரத்தில் நிற்கிறது .

Xxx

மே 15 திங்கட் கிழமை

சத்தியம், அன்பின் வடிவம் இறைவன்; அவனே அறமும் வாழ்க்கை நெறியும் ; இறைவன் என்பவன் அச்சமற்றவன்.நமக்கு வழிகாட்டும் ஒளி; உயிர் மூச்சு ; இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனும் கூட.

Xxx

மே 16 செவ்வாய்க் கிழமை

இறைவன் நம்முடைய மனச்சாட்சி.; நாஸ்தீகனின் நாஸ்தீகவாதமும் அவனே ; அவனுடைய எல்லையற்ற கருணையே நாஸ்தீகனையும் வாழவிடுகிறது. இதய சோதனையை செய்பவன் அவன்.

Xxx

மே 17 புதன் கிழமை

ஐரோப்பிய நாகரீகம்

ஐரோப்பிய நாகரீகம் ஐரோப்பியர்களுக்கு உகந்தது என்பதில் சந்தேகமே இல்லை.; ஆனால் அதைக் ‘காப்பி’ அடிக்க நாம் எண்ணினால், அது இந்தியாவுக்கு அழிவையே ஏற்படுத்தும்.ஆயினும் அதிலுள்ள நல்ல அம்ஸங்களை ஏற்று  அதை நம்முடன் கலக்கலாம் ; அதுபோலவே, அதிலுள்ள தீமையான விஷயங்களை ஐரோப்பியர்களும் அகற்றலாம்..

Xxx

மே 18 வியாழக் கிழமை

நான் ஒரு சாநாதனி ஹிந்து . ஏனென்றால் நான் வேதங்களையும் உப நிடதங்களையும் புராணங்களையும் , இந்து சமயம்  என்ற பெயரில் உள்ள எல்லா நூல்களையும் நான் நம்புகிறேன்

Xxxx

மே 19 வெள்ளிக் கிழமை

ஏனென்றால் வர்ணாஸ்ரம தர்மத்தையும்  நான் நம்புகிறேன் ; வேதத்தில் குறிப்பிட்ட தர்மத்தை; இப்போதுள்ள பிரபலமான ஜாதிகளை அல்ல.

Xxxx

மே 20 சனிக் கிழமை

ஏனென்றால் பசுப் பாதுகாப்பை நான் நம்புகிறேன். இதிலும் குறுகிய நோக்கத்துடன் அல்ல.

Xxxxx

மே 21 ஞாயிற்றுக் கிழமை

நான் ஒரு சாநாதனி ஹிந்து ஏனென்றால் எனக்கு விக்ரகஆராதனையில் நம்பிக்கை இல்லாமல் இல்லை.

Xxxxx

மே 22 திங்கட் கிழமை

தத்துவ ஞானியின் லட்சிய வாசகம்

மேற்கத்திய தத்துவ ஞானி சொன்ன சொன்ன லட்சிய வாசகத்தை எளிய / நேர்மையான வாழ்க்கை; உயர்ந்த சிந்தனை. PLAIN LIVING; HIGH THINKING பல லட்சம் பேருக்கு உயர்ந்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.. சிலர்தான் பொதுமக்கள் பற்றி சிந்திக்க முடிகிறது.  .உயர்ந்த வாழ்க்கை நடத்தும் நாம், உயர்த்த சிந்தனை இல்லாமல் இருக்கிறோம்.

XXX

மே 23 செவ்வாய்க் கிழமை

மனம் ஒரு பறவை

மனம் ஒரு ஓய்வில்லாத பறவை என்பதை அறிவோம் கொடுக்கக்கொடுக்க அதிகம் கேட்கிறது.. எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி ஏற்படுவதே இல்லை.உணர்ச்சிகளுக்கு வசப்படும்போது அவை கட்டுக்கடங்காமல் போகிறது.

XXX

மே 24 புதன் கிழமை

நான் ஒரு அத்வைதவாதி; ஆயினும் த்வைதத்தையும் ஆதரிப்பேன்.உலகம் ஒவ்வொரு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் எல்லாமே நிலையற்றது; மாயம் என்று சொல்லலாம்.நிலையாமையில் உழ ல்கிறது.; இப்படி இருக்கையிலும் அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது அப்போது அது மாயம் இல்லை.

Xxx

மே 25 வியாழக் கிழமை

கலப்புத் திருமணம்

தீண்டாமையை ஒழிக்க, கலப்புத் திருமணம் அல்லது சம பந்தி போஜனம் தேவை என்று நான் கருதவில்லை. நான் உள்ள இந்து மதம் மரியாதை தர்மத்தைக் கடைப்பிடிக்கிறது. பழங்காலத்தில் ரிஷி முனிவர்கள் தியானம் மூலமாக நீண்ட ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தனர். உலகில் வேறு எந்த மதங்களிலும் இதைக் காண முடியாது.

xxx

மே 26 வெள்ளிக் கிழமை

பிராமணனும் நாய் தின்னும் புலையனும்

இந்து மதத்தின் உயர்ந்த நிலையில் ஒரு பிராமணன், ஒரு எறும்பு, ஒரு யானை,  நாயை அடித்துத் தின்னும் புலையன் (இது கீதை ஸ்லோகத்தில் உள்ள வரி) ஆகிய அனைவரும் சமமே..நம்முடைய தத்துவங்கள் மிகவும் உன்னதமானவை . அத்தைய உயர்ந்த லட்சியத்தை இன்று நாம் கைவிட்டதால் இன்று சகிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிட்டது இந்த மதம் மனிதர்களிடையே மட்டும் சகோதரத்துவத்தைப் போதிக்கவில்லை. உயிர் வாழும் எல்லாம் ஓரினம் என்று போதிக்கிறது  (Harijan 28-3-1936)

xxx

மே 27 சனிக் கிழமை

பகவத் கீதையில் 4 ஜாதி

நான்கு வர்ணங்கள் குணத்தின் அடைப்படையிலும், செய்யும் வேலையின் அடைப்படையிலும் அமைந்தன என்று பகவத் கீதையில் பேசப்படுகிறது சாதுர் வர் ண்யம் மயா ச்ருஷ்டம் — நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப்பட்டன என்று கண்ண பிரான் பகவத் கீதையில் செப்புகிறார். இது பிறப்பின் அடிப்படையில் அமைந்தது என்றே நான் நினைக்கிறேன் . அப்படி பிறப்பின் அடிப்படையில் இல்லாவிடில் அது ஒன்றும் இல்லாமல் போய்விடும் ( (ஜாதி வேறு , வர்ணம் வேறு என்றும் பின்னொரு இடத்தில் காந்திஜி பேசியிருக்கிறார் )

xxx

மே 28 ஞாயிற்றுக் கிழமை

திருக்குறள் பற்றி காந்திஜி

கேள்வி : காந்திஜி அவர்களே! திருக்குறள் என்னும் நூலில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிரும்’ என்று சொல்லி இருக்கிறாரே ?

காந்திஜி அளித்த பதில்: இப்போது (ஜாதிகள்) பல்கிப் பெருகிப்போன மிகைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் அப்படி சொன்னார். ஒரு ஜாதி நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று செல்லுகையில் அவர் எதிர்க்குரல் எழுப்பத்தானே வேண்டும் . ஆனால் பிறப்பின் அடிப்படையில் அமைந்த வர்ணாச்ரம தர்மத்தின் ஆணிவேரை அது வெட்டாது . சமத்துவம் இல்லாத சமூகத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்துவதற்கு ஒரு சீர்திருத்தவாதி செய்யும் முயற்சிதான் அது.

xxx

மே 29 திங்கட் கிழமை

கிறிஸ்தவ மத மாற்றம் பற்றி

நான் பல அமெரிக்க , ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரி கூட்டங்களில் பேசி இருக்கிறேன் ஏசு கிறிஸ்து என்ன சொன்னார் என்று போதிப்பதை விட ஏசு கிறிஸ்து அவரது மலைப் பிரசங்கத்தில் சொன்னபடி வாழ்ந்து காட்டினால் இந்தியா உங்களை சந்தேகப்பார்வையில் பார்த்திராது . அதற்குப்பதிலாக உங்களைப் பாராட்டி உங்கள் பிரசன்னம் மூலம் பலனும் அடைந்திருக்கும்.. .

xxx

மே 30 செவ்வாய்க் கிழமை

இந்தக்  கருத்தின் அடைப்படையில் , பதில் தரும் வகையில் அமெரிக்க நண்பர்களுக்கு நான் இந்துமதம் பற்றி போதிக்க ஒன்றுமில்லை;.மாற்று மத நம் பிக்கை உடையோரிடையே போதிப்பதில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது.அதிலும் அவர்களை மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு பேசுவதை விரும்பவில்லை போதிப்பதால் ஒரு மதம் பரவாது ; அந்த மத போதனை சொல்லும்படி வாழ வேண்டும்.அப்படி வாழ்ந்துகாட்டுவதே நல்ல பிரச்சாரமாக அமையும் (Young India 20-10-1927)

xxxx

மே 31 புதன் கிழமை

உதடும் இதயமும்

வழிபாடானாலும் பிரார்த்தனையானாலும் அது உதட்டிலிருந்து வந்தால் போதாது; இருதயத்தின் அடி மட்டத்திலிருந்து வரவேண்டும்.இதனால்தான் ஊமையும் , திக்குவாயனும், கல்லாதவனும் அறிவிலியும் கூட பிரார்த்தனை செய்ய முடிகிறது . வாயில் தேன் ஒழுகும் சொற்கள்; உள்ளத்திலோ விஷம் என்று வாழ்பவரின் பிரார்த்தனைகள் இறைவன் காதுகளில் விழுவதில்லை.

Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)

 –subham–

 Tags- காந்திஜி, பொன்மொழிகள், இந்து மதம் , மனுஸ்ம்ருதி , பகவத் கீதை, மத மாற்றம், வர்ணாச்ரம தர்மம், கலப்புத் திருமணம் , மே 2023, காலண்டர் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: