
Post No. 11,955
Date uploaded in London – – May 1 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – Part 7
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆறு சக்தி கேந்திரங்கள் உள்ளன. இந்த ஆறும் புகழ்பெற்ற சக்தித் தலங்கள் ஆகும் .
அவையாவன:
1.கோலாப்பூர் அம்பாபாய்/ மகாலெட்சுமி கோவில்
2.துல்ஜாபூர் பவானி கோவில் (சத்ரபதி சிவாஜி புகழ்)
3.மஹாமாயா ரேணுகா கோவில் , மாஹுர்
4.சப்தச்ருங்கி ஜகதாம்பா கோவில் , வாணி , ஏழு மலை
5.அம்பே ஜோகை யோகேஸ்வரி , அம்பாஜோகை
6.ஒளந்த் யாமை தேவி கோவில், ஒளந்த்
ஆறு கோவில்களைத் தவிர வேறு பல தேவி கோவில்களும் ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்களும் உண்டு. அண்மைக் காலத்தில் புகழ்பெற்ற மும்பை மகாலெட்சுமி கோவில், இவைகளில் ஒன்று.
ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்
xxx
பகுதி 7
32.கோலாப்பூர் அம்பாப்பாய்/ மகாலெட்சுமி கோவில்

கோவிலின் சிறப்பு அம்சங்கள்
1. மூன்று அடி உயர மகாலெட்சுமி சிலை
2. பின்புஅர்ச் சுவரில் ஸ்ரீ சக்ர யந்திரம்
3. சிலையின் மேல் புறத்தில் ஐந்து தலை நாகம்
4. தேவியின் அருகில் சிம்ம வாஹனம்
5. இது 1400 ஆண்டுப் பழமையானது ; சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது.
புனே நகரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் 240 கிலோமீட்டர் தொலைவில் கோலாப்பூர் இருக்கிறது பஞ்ச கங்கா நதிக்கரையில் அமைந்த இந்த ஊரில் நிறைய கோவில்கள் இருக்கின்றன.முக்க்கிய நுழைவாயிலின் இரு புறமும் தீப ஸ்தம்பங்கள் இருக்கின்றன.சதுர வடிவ தூண்களோடு கருட மண்டபமும் உண்டு. கணேஷ் சந்நிதியும் கர்ப்பக் கிரகத்தை நோக்கி இருக்கும்.
மூன்று மேற்கு நோக்கிய சந்நிதிகளில் நடுவில் அமைந்திருப்பது மஹா லெட்சுமி. இருபுறங்களிலும் இருப்பது மஹா காளி , மஹா சரஸ்வதி கோவில்கள்..
கர வீர என்று அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில் கோலாசுரன் என்ற அசுரனை தேவி அழித்ததாக வரலாறு. லெட்சுமிக்கு மேல் சிவலிங்கம்-நந்தி காணப்படும்.. நவக்கிரகங்கள் உள்பட எல்லாக் கடவுளரும் இங்கே உளர்.
Xxx
சூரிய ஒளி விழும் அதிசயக் காட்சி
ஆண்டில் மக்கள் நடத்தும் திருவிழா தவிர சூர்ய பகவான் நடத்தும் திருவிழாவும் உண்டு.
ஆண்டுக்கு மூன்று முறை சூரிய ஒளி மகாலெட்சுமி சந்நிதியில் நுழையும் பொறியியல் திறனுடன் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளி மகாலெட்சமியின் கர்ப்பக் கிரகத்தில் அஸ்தமன நேரத்தில் புகும் நாட்களை கிரண உற்சவம் என்பார்கள் (சூரிய + கிரணம்)
கிரணோற்சவ நாட்கள் :
நவம்பர் – 9, 10, 11 ஜனவரி – 31 பிப்ரவரி 1,2.
இமயம் முதல் குமரி வரை உள்ள கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில், வழிபடும் விக்கிரகத்தின் மீது சூரிய ஒளி விழும்படி செய்த பொறியியல் அதிசயம் சுமார் 2000 ஆண்டுகளாக இருப்பது இந்தியாவில் மட்டுமே. இந்துக்கள்தான் வான சாத்திரத்தில் வல்லவர்கள் என்பதையும் பொறியியலில் மன்னர்கள் என்பதையும் இது காட்டுகிறது. ரிக் வேதத்திலும் சூரிய வழிபாடு இருக்கிறது. இன்றுவரை 12 மந்திரங்களை சொல்லி, சூரியனுக்கு நமஸ்காரம் செய்வதும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. காயத்ரி என்னும் சூரிய மந்திரத்தை நாள் தோறும் வணங்கும் வழக்கமும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. இன்றுள்ள கிழமை வரிசையை உண்டாக்கியவர்களும் இந்துக்களே. திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தில்தான் ஞாயிறு முதல் சனி வரை முதல் முதலில் காணக்கிடக்கிறது .உலகில் எகிப்திலோ பாபிலோனிலோ, ரோமிலோ , ஏதென்சிலோ இதே வரிசையில் கிரகங்களின் பெயர்கள் இல்லவே இல்லை . இன்றுள்ள ஆங்கிலக் கிழமைகளிலும் 4 நாட்களில் கிரகங்கள் பெயர்கள் இல்லை.
Xxx
33.துல்ஜாபூர் பவானி கோவில்

சத்ரபதி சிவாஜிக்கு வெற்றியும் வீரத்தையும் தந்தது துல்ஜாபூர் பவானி தேவிதான். அவளே வெற்றி தரும் வீர வாளை அவரிடம் தந்து, மொகலாயப்பேரரசை வீழ்த்தி, ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க, உதவியதாகவும் கதைகள் உண்டு .
51 சக்தி பீடங்களில் ஒன்றான துல்ஜாபூர் கோவில் சோலாப்பூர் என்னும் இடத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. குறைந்தது 800 ஆண்டு வரலாறு உடைத்து.
முக்கிய நுழைவாயிலின் பெயர் சர்தார் நிம்பல்கர்; மற்ற இரண்டு வாயில்களுக்கு சிவாஜி மஹாராஜின் தந்தை தாயாரான ஷாஜி, ஜீஜாபாய் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்.. வலது புறம் மார்க்கண்டேய மகரிஷிக்கு கோவில் இருக்கிறது. படிக்கட்டில் இறங்கி வந்தால் துல்ஜா கோவிலைக் காணலாம்.இங்குள்ள மூர்த்தத்துக்கு துல்ஜா , துரஜா , த்வரிதா , அம்பா என்று பல பெயர்கள் நிலவுகின்றன. இந்த விக்ரகம் ஸ்வயம்பூ (தானாக உருவாக்கியது; சிற்பிகள் செதுக்கியதல்ல) கோவிலுக்கு முன்னால் யாக குண்டமும் இருக்கிறது விநாயகர், ஆதி சக்தி ஆதிமாதா மங்கள தேவி , அன்ன பூர்ணா சிலைகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆதி மாயா ஆதி சக்தி கோவிலில் பூஜை முடிந்தவுடன் துல்ஜா கோவிலில் பூஜை துவங்கும்..
முக்கிய திருவிழா – வைசாக பெளர்ணமி
கோவிலில் ஒவ்வொரு நாளும் 4 கால பூஜை நடைபெறும். தமிழ்நாட்டுக்கு கோவில் போலவே அபிஷேகம், ஆராதனை, பள்ளியறை பூஜைகள் உண்டு அம்மனின் ஜெயந்தி திருக்கல்யாணம் முதலியவற்றின்போது வீதி உலா நடைபெறும்.. கோந்தால சமூகத்தினர் ஆடும் ஒருவகை நடனம் கோந்தாலா நடனம் என்று அழைக்கப்படும் . இதில் தேவியின் திருவிளையாடல்களைக் காட்டும் புராணக் கதைகளை நடித்துக் காண்பிக்கிறார்கள்.

துல்ஜாபூரின் மஹிமை காரணமாக ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்கள் தோன்றிவிட்டன ஜுன்னார் அருகிலும் சிவநேரி குகைத் தொடரில் ஒரு குகையில் பவானி இருக்கிறாள் . சிவாஜி மஹராஜ் பிறந்த இடம் சிவநேரி என்பது குறிப்பிடத்தக்கது .
To be continued………………………………………….
Tags- துல்ஜாபூர், கோலாப்பூர், தேவி கோவில்கள், சூரிய ஒளி , அதிசயக் காட்சி