
Post No. 11,960
Date uploaded in London – – May 2 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இறந்து போன உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசுவது உண்மையா? அது நல்லதா? என்று கேள்வி கேட்ட ஒருவருக்கு காந்திஜி எழுதிய பதில் இதோ: (கீழே மதுரையில் எனக்கு ஏற்பட்ட சொந்த அநுபவத்தையும் எழுதியுள்ளேன் – லண்டன் சுவாமிநாதன்)

காந்திஜி எழுதிய பதில்:
இறந்து போனவர்களின் ஆவிகளிடமிருந்து எனக்கு எப்போதும் செய்திகள் கிடைத்தது இல்லை. அப்படி இறந்து போனோருடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் இல்லவே இல்லை என்று சொல்லவும் என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை.ஆனாலும் இறந்து போனவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பது அல்லது தொடர்புகொள்ளுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.பெரும்பாலும் அவைகள் ஏமாற்று வித்தைகள் அல்லது மனதின் கற்பனைகளே. ஒருவேளை அப்படித் தொடர்புகொள்வது சாத்தியம் என்று வைத்துக்கொண்டாலும், அது மீடியமாகச் செயல் படுவோருக்கும் ஆவிகளுக்கும் தீங்கு பயப்பதே. (இறந்து போன்றவர்களுடன் தொடர்புகொள்வோரை மீடியம் என்பார்கள்).எந்த ஆவியை நாம் அழைக்கிறோமோ அதை பூமியுடன் கட்டிப்போட முயற்சி செய்வதாகும்.உண்மையில் பூமியிலிருந்து விடுபட்டு அது உயர் நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் . உடலிலிருந்து விடுபட்டவுடன் அவைகளை தூயவை என்று நம்புவதற்கில்லை.பூமியில் வசித்தபோது இருந்த பலவீனங்களில் பெரும்பாலானவைகளுடன்தான் ஆவிகள் இருக்கும் . ஆகையால் அவை தரும் தகவலோ புத்திமதியோ உண்மையாகவோ, ஆதாரமானதாகவோ இராது . பூமியிலுள்ளோருடன் தொடர்பு கொள்ள , ஆவிகள் ஆசைப்படுகின்றன என்ற கருத்தும் இன்பம் தரக்கூடியதல்ல. அப்படி விரும்புவதும் தர்மவிரோதமானது அதை நாம் தவிர்க்க உதவ வேண்டும் . அல்லது அவைகளுக்கு தீமை செய்தது போலாகும்.
மீடியம் ஆக செயல் படுவோர் பற்றி நான் அறிவது என்னவென்றால் அவர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாகவோ பலவீனமான புத்தி உடையவர்களாகவோ இருப்பதை அறிவேன். அவர்கள் அப்படி ஆவியுடன் பேசும் நம்பிக்கை இருந்தவரை உருப்படியான வேலைகளையும் செய்ய முடியவில்லை . அப்படிப்பட்ட ஆவி உலகத் தொடர்பினால் பலன் அடைந்த எந்த நண்பரையும் நான் அறியேன் .
யங் இந்தியா பத்திரிகை Young India 12-9-1929
xxxx

லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்ததை எழுதுகிறேன். நானும் என் சகோதர்களும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது , தந்தையுடன் மதுரை ஆதீன கர்த்தரை சந்திக்கச் செல்லுவோம். அப்போது ஆதீனகர்த்தராக இருந்தவர் நிறைய கிறிஸ்தவர்களை மீண்டும் தாய்மதத்துக்குக் கொண்டு வந்தார். எனது தந்தை திரு . வெ சந்தானம், மதுரை தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்ததால் அடிக்கடி தாய்மதம் திரும்பிய செய்திகளை வெளியிட்டு உதவுவார் .
நாங்கள் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் தமாஷாகச் சொல்லுவார் பாதிரி எல்லாம் என்னுடன் பேசிய பின்னர் ஜாஸ்திரி ஆகிவிடுவார்கள் (சிலேடையைக் கவனிக்கவும் ; கிறிஸ்த்தவ பாதி +ரி ; இந்துக்கள் ஜாஸ்தி/ சாஸ்தி+ரி.)
நாங்கள் எல்லோரும் சிரித்து மகிழ்வோம்.
தம்பி என்னிடம் பொருட் பிரசாதம் கிடையாது. அருட் பிரசாதம் மட்டுமே உண்டு என்று சொல்லி ஒரு சிட்டிகை விபூதி தருவார். அதன் வாசனை அந்த ஹால் முழுதும் பரவி நிற்கும். அவர் வசித்த திருஞான சம்பந்த மடமோ 1400 ஆண்டு பழமை வாய்ந்தது. கோவிலுக்கு அருகில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சின்னப்பையனாக சம்பந்தர் தங்கி இருந்தபோது சமணர்கள் தீ வைத்து அவரை எரிக்கப் பார்த்த இடம் அது. அவரோ இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக என்று சொன்னவுடன் அது பாண்டிய மன்னர் வயிற்றில் ஏறி சூலை நோயாக மாறியது ..
ஆதீன கர்த்தருடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவர் அடித்த துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து படியுங்கள் என்பார்.அவர் எழுதிய புஸ்தகங்களையும் என் தந்தைக்கு கொடுப்பார் . அவர் எழுதிய விஷயங்கள் எல்லாம் ஆதார பூர்வமாக இருக்கும் . அவர் எழுதிய நூல்களில் ஒன்று
இறந்தவர் வாழும் நிலையும் பேசும் முறையும்

அந்த நூலை நாங்கள் அண்ணன் தம்பி அத்தனை பேரும் படித்த பின்னர் அதில் ஆர்வம் ஏற்பட்டது. ஞான சம்பந்தர் மடத்தில் அவர் விற்ற பிளான்செட் Planchette/ the ouija board போர்டையும் விலைக்கு வாங்க்கினோம். அதில் நாற்புறமும் ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களும் இருக்கும். ஏதேனும் ஒரு காசு அல்லது கேரம்போர்டின் COIN காயினை நடுவில் வைத்துக் கொண்டு , அதில் மீடியம் ஆகச் செயல்படும் இருவர் கைவிரல்களை வைத்துக்கொண்டு, இறந்து போன ஒருவர் பெயரைச் சொல்லி அழைப்போம். உடனே அந்த COIN காயின் வேகமாக நகரத் தொடங்கும். உன் பெயர் என்ன? நீங்கள் யார்? நான் பரீட்சையில் பாஸ் ஆவேனா ? என்று வாய்க்கு வந்த கேள்விகளை எல்லாம் நாங்கள் கேட்போம். நம் கை விரல் வைத்த COIN காயின், நம்மை அறியாமலே வெகு வேகமாக நகர்ந்து பதில் சொல்லும். அந்தக் காயின் தொடும் எழுத்துகைளை எல்லோரும் உன்னிப்பாகக் கவனித்து பதிலை எழுதிக்கொள்ளுவோம். ஆமாம் என்றால் ஒய், ஈஎஸ் Y E S என்ற எழுத்துகளைத் தொடும். இப்படி பாரதியார், தாத்தா, பாட்டி என்று ஒவ்வொருவரையாக அழைத்துப் பேசுவோம்..
மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் எல்லோருக்கும் இதுதான் பொழுதுபோக்கு. எனது அண்ணன் தம்பிகளில் சிலர் கை விரல் வைத்தால் மிக வேகமாக காயின் நகரும். சில நண்பர்கள் வைத்தாலும் வேகமாக நகரும். சில பெயர்களைச் சொல்லி அழைத்தால் ஒன்றுமே வரா து/ நிகழாது. . மொத்தத்தில் எங்களுக்குக்கிடைத்த பதிலில் உருப்படியாக எதுவுமே இல்லை. மீடியமாகச் செயல்பட்ட என் தம்பிக்கும் பள்ளிக்கூட நண்பருக்கும் இடையே ஒரு முறை சண்டை வெடித்தவுடன் இறந்தோர் தொடர்பை அறவே விடுத்தோம். சண்டைக்குக் காரணம் ஆவிகள்தான் என்பது எங்கள் துணிபு.
ஆயினும் மதுரை ஆதீன கர்த்தர் எழுதிய நூலில் நிறைய பாசிட்டிவ் விஷயங்களாக எழுதியுள்ளார். வீட்டில் நடக்கப்போகும் திருட்டைக்கூட இறந்த ஆவிகள் எச்சரிக்கவே, அ வர்கள் உஷாராக இருந்து திருடன் வந்தபோது அதை முறியடித்த கதை போல பல நிகழ்ச்சிகள் அந்தப் புஸ்தகத்தில் உள்ளன..
லண்டனில் வசித்த போது ஒருநாள் எத்தேச்சையாக டெலிவிஷனை Switch On ஆன் செய்தபோது இப்படி ஒரு குரூப், வாரம் தோறும் இறந்தோருடன் பேசும் Session செஷனை நடத்துவதையும் அங்கு பெரும் கூட்டம் கூடுவதையும் காட்டினார்கள் எனக்குப் பழைய ஞாபகம் அனைத்தும் திரும்பிவந்தன . இப்போது இந்து மதம் பற்றி காந்தி என்ற ஆங்கிலப் புஸ்தகம் படித்தபோதும் நினைவுகள் பளிச்சிட்டன
இறந்த ஆவிகள் இருப்பது உண்மைதான் என்பதை சுவாமி விவேகானந்தரும் உறுதிப்படுத்தி, அப்படிப்பட்ட ஆவிகள் தன்னைத் தொடர்ந்து வந்து விமோசனம் கேட்டபோது, ஒரு முறை இறைவனிடம் அழுத்தமாக வேண்டிக்கொண்ட பின்னர் அவைகள் தன்னைத் தொடரவில்லை என்றும் எழுதியுள்ளார்.
ஆனால் பெரும்பாலோருக்கு இவை மனப் பிரமைதான். பலவீனம்தான் உண்மை இல்லை.
இதுபற்றி விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உய்ஜா போர்டு என்ற தலைப்பில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஒரு காசு அல்லது காயின் மீது கை வைத்தவுடன் எப்படி அது வேகமாக போர்டில் நகர்ந்து நாம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் சொல்கிறது? எங்கிருந்து அந்த சக்தி நம் மீது பிரவேசிக்கிறது? என்பன பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் இறந்த ஆவியுடன் பேசுவது பொய் என்றும் உடலில் பாயும் சக்தி the ideomotor response ஐடியோமோட்டர் செயல்பபாடு என்றும் காட்டுகினறன இல்லை அல்லது ஆமாம் என்ற கேள்விகளின் பதில்கள் பெரும்பாலும் உண்மையா வருகின்றன. நம்முடைய உள்மனம்/ அடி மனது இதைச் செய்கிறது என்றும் உள்ளவியல் (Psychologists) அறிஞர்கள் செப்புவர்
Scientific investigation (from Wikipedia)
The ouija phenomenon is considered by the scientific community to be the result of the ideomotor response. Michael Faraday first described this effect in 1853, while investigating table-turning.
Various studies have been conducted, recreating the effects of the ouija board in the lab and showing that, under laboratory conditions, the subjects were moving the planchette involuntarily. A 2012 study found that when answering yes or no questions, ouija use was significantly more accurate than guesswork, suggesting that it might draw on the unconscious mind.
xxx

The planchette is guided by unconscious muscular exertions like those responsible for table movement. Nonetheless, in both cases, the illusion that the object (table or planchette) is moving under its own control is often extremely powerful and sufficient to convince many people that spirits are truly at work … The unconscious muscle movements responsible for the moving tables and Ouija board phenomena seen at seances are examples of a class of phenomena due to what psychologists call a dissociative state. A dissociative state is one in which consciousness is somehow divided or cut off from some aspects of the individual’s normal cognitive, motor, or sensory functions. Pseudoscience and the Paranormal (2003)Neurology Professor Terence Hines
(Go to Wikipedia for more information)
–subham—
Tags- மதுரை ஆதீன கர்த்தர், இறந்தவர் வாழும் நிலையும் பேசும் முறையும் , லண்டன் சுவாமிநாதன், சொந்த அனுபவம், ஆவிகளுடன் பேசுவது , காந்திஜி