ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்! (Post No.11,970)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,970

Date uploaded in London –   May 5, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 11

ஹிட்லர் கொல்லாமல் விட்ட ஒரே யூதர்!

.நாகராஜன்

பகுதி 15

அனைத்து யூதர்களையும் சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி, வயதில் மிக மிக மூத்தவர்களாக இருந்தாலும் சரி, இரக்கமின்றி கொன்று குவித்த ஹிட்லர் ஒரே ஒரு யூதரை மட்டும் கொல்லவில்லை. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை இது.

இதை வெளிப்படுத்தியது ஒரு கடிதம்.

ஃப்யூரர் ஹிட்லர் தனது SSக்கு (Secret Service) ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். அதன் படி ஜட்ஜ் எர்ன்ஸ்ட் ஹெஸ் -ஐக் (Judege Ernst Hess) கொல்ல வேண்டாம் என்று கூறினான்.

முதல் உலகப் போரில் ஹிட்லரின் கமாண்டராக இருந்தவர் எர்ன்ஸ்ட் ஹெஸ்.

அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ஈவு இரக்கமின்றிக் கொல்ல உத்தரவிட்ட ஹிட்லர் தனது ஒரு காலத்திய கமாண்டரைக் கொல்ல வேண்டாம் என்று கூறி விட்டான்.

ஹெஸ்-இன் மகள் ஊர்சுலா (Ursula) தனது 86ஆம் வயதில் இந்த அபூர்வமான சம்பவத்தை 2012இல் வெளியிட்டார்.

2012ஆம் ஆண்டு டெய்லி மெயில் இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் வெளியிட்டது.

கெஸ்டாபோ (Dusseldorf Gestapo) வின் ஃபைல்கள் பத்திரமாக ஓரிடத்தில் இருந்தன. அதில் சீக்ரட் சர்வீஸின் தலைவனான ஹென்ரிச் ஹிம்லர்  (SS – Heinrich Himmler) 1940, ஆகஸ்ட் 27ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் ஹெஸ்-க்கு ஒரு நிவாரணம் (relief and protection as per the Fuhrer’s wishes) மற்றும் பாதுகாப்பு ஃப்யூரரின் விருப்பத்திற்கிணங்க தரப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தான்.

எர்ன்ஸ்ட் மோரிஸ் ஹெஸ் (Ernst Moritz Hess) 1890ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் இரண்டாம் ராயல் பவேரியன் ரிஸர்வ் இன்ஃபண்ட்ரியில் (Second Royal Bavarian Reserve Infantry) ஒரு ஆபீசராக – அதிகாரியாகச் – சேர்ந்தார்.

இதே ரெஜிமெண்டில் தான் ஹிட்லரும் தானாக வந்து சேர்ந்தார்.

இருவரும் 1914ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் ஃப்ளான்டர்ஸ் (Flanders) போர்க்களத்தின் முன்னணி நிலைக்கு அனுப்பப்பட்டனர்.  1918முடிய அதில் அவர் பணியாற்றினார்.

1916ஆம் ஆண்டு ஹெஸ் தற்காலிகமாக ஹிட்லரின் கம்பெனி கமாண்டராக இருந்தார்.

ஹெஸ்ஸின் தாயார் ஒரு யூதர். ஆனால் ஹெஸ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார்.  ஆனால் நாஜிக்களின் 1935ஆம் ஆண்டு சட்டப்படி ஹெஸ் ஒரு யூதர் தான்.

 1936ஆம் ஆண்டு இந்த விதிகளின் படி ஹெஸ் தனது நீதிபதி பதவியிலிருந்து கட்டாயமாக விலகுமாறு வற்புறுத்தப்பட்டார்.

 1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த விதியிலிருந்து தனக்கு ஒரு விலக்கு அளிக்குமாறு ஹெஸ் ஒரு பெடிஷனை ஹிட்லருக்கு அனுப்பினார். தனது மகளுக்கும் இனச் சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் படி அவர் வேண்டினார்.

1937 அக்டோபரில் இத்தாலியில் போல்ஜனாவிற்கு (Bolzano)விற்கு இடம் பெயர்ந்த ஹெஸ் மீண்டும் 1938இல் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். 

ஹிட்லருடனான தனது நட்பு தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தனது குடும்பத்துடன் பவேரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 1940ஆம் ஆண்டு மத்தியில் குடியேறினார்.

ஹிம்லரின் கடிதத்தின் ஒரு நகல் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை மூனிஸ் நகரில் சீக்ரட் சர்வீஸ் முன்னால் ஆஜராக வேண்டும் என்று SS உத்தரவிட்டது.

அவர் தனக்கு ஹிம்லர் அளித்த ‘பாதுகாப்பு” அளிக்கப்பட்ட கடிதத்தை அங்கு காண்பித்த போது அது 1941இல் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இப்போது அவர் மற்றவர்களைப் போல நூறு சதவிகிதம் யூதர் தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் கொல்லப்படவில்லை.

இந்த விவரத்தை எல்லாம் 2012ஆம் ஆண்டு 86 வயதான ஊர்சுலா பத்திரிகை பேட்டியில் தெரிவித்தார்.

ஆக ஹிட்லர் உயிருடன் விட்ட ஒரு யூதரும் இருந்திருக்கிறார் என்பது இரண்டாம் உலகப் போரின் ஒரு மிக மிக அபூர்வமான செய்தியாக ஆகிறது!

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: