22 சிவன் கோவில்கள்: 108 மஹாராஷ்டிர புனிதத் தலங்கள்-10 (Post No.11,971)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,971

Date uploaded in London – –  May 5 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 10

தமிழ் நாட்டைப் போலவே, தடுக்கி விழுந்தால் கோவிலில்தான் விழுவோம் என்ற நிலையில் எங்கெங்கும் புனிதத் தலங்கள் நிறைந்த பூமி மஹாராஷ்டிரம் . ஆறு முக்கிய சக்தி கேந்திரங்களை  சென்ற சில கட்டுரைகளில் கண்டோம் இனி 22 முக்கிய சிவன் தலங்களைத் தரிசிப்போம். புகழ் பெற்ற எல்லோரா, எலிபெண்டா குடைவரைக் கோவில்களும் அவைகளில் அடக்கம். சிற்பக்கலை நிறைந்த கோவில்கள் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையவை. 22 கோவில்கள் சிவ பெருமானுக்கு என்றவுடன் அத்தனை மட்டுமே என்று எண்ணிவிடாதீர்கள். தற்காலத்தில் மக்களைக் கவர்ந்திழுக்கும் கோவில்களை மட்டுமே இந்தப் பட்டியலில் கொடுக்கிறேன் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் மூன்று இந்த மாநிலத்தில்தான் உள்ளன.

பிரபலம் அடைந்த 22 சிவன் கோவில்கள்

1.திரயம்பகேஸ்வரர் கோவில்ஜோதிர்லிங்கம்,நாசிக்

2.பீமசங்கரர் கோவில்ஜோதிர்லிங்கம்புனே

3.கிரிஷ்னேச்வரர் கோவில்,  ஜோதிர்லிங்கம்அவுரங்காபாத்

4.அவுந்த் நாகநாதர் கோவில், ஹிங்கோலி

5.கைலாசநாதர் கோவில்,, எல்லோரா குகை

6, அம்பர்நாத் சிவன் கோவில், அம்பர்நாத்

7.கோபேஸ்வர் சிவன் கோவில்,  கோலாப்பூர் மாவட்டம்

8.வைஜனாத சிவன் கோவில்,  (வைத்தியநாதர்), பரலி

9. எலிபெண்டா குகை திரிமூர்த்தி , மும்பை

10. கோண்டேஸ்வரர் சிவன் கோவில்,  , சின்னார்,

11. பாபுல்நாத் சிவன் கோவில்,  , மும்பை

12. பூலேஸ்வர் சிவன் கோவில்,  மும்பை

13.வாகேஸ்வரர் சிவன் கோவில்,  மும்பை

14. அம்ருதேஸ்வர் சிவன் கோவில், அகமதுநகர்

15. வேல்னேஸ்வரர் சிவன் கோவில்,  ரத்ன கிரி

16.பாணேஸ்வரர் மஹாதேவர் கோவில், நர்சாபூர்

17.ஜோதிபா சிவன் கோவில்,  . வாடி ரத்ன கிரி

18.மார்லேஸ்வர் குகை சிவன் கோவில்,  தேவருக்

19.சங்கமேஸ்வரர் சிவன் கோவில்,  ஹரிபூர்

20.கங்கேஸ்வரர் சிவன் கோவில்,  தேவகாட்

21. ஷிகர் ஷிக்னாபூர் சிவன் கோவில்,  ஷிக்னாபூர்

22. மஹா பலேஷ்வர் சிவன் கோவில்,  மஹாபலேஷ்வர் குன்று

xxxx

ஆங்கிலத்தில்

1.Triambakeshwar (Trayambakeswar) Jyotirlinga, Nasik

2.Bhimashankar Jyotirlinga, Pune

3.Grishneshwar Jyotirlinga, Aurangabad

4.Aundha Nagnath Temple, Hingoli

5.Kailasanatha Shiva Temple, Ellora Caves

6.Ambarnath Shiva Mandir, Ambarnath

7.Kopeshwar Shiva Temple, Kolhapur District

8.Vaijnath (Vaidyanath) Shiva Temple, Parali

9.The Elephanta Cave Trimurti Temple

10. Gondeshwar Temple at Sinnar, Nasik District

11. Babulnath Shiva Temple, Mumbai

12. Bhuleshwar Shiva Temple, Mumbai

13. Walkeshwar /Baan Ganga Temple, Mumbai

14.Amruteshwar Shiva Temple in Ahmednagar

15.Velneshwar Shiva Temple of Ratnagiri

16. Baneshwar Mahadev Temple in Nasrapur near Pune

17.Jyotiba temple, near Wadi Ratnagiri, Kolhapur District

18.Marleswar cave Shiva Temple 17 km from Devrukh and 44 km from Sangameshwar Road railway station

19. Sangameshwar Shiva Temple, Haripur

20. Kunkeshwar Shiva temple, Devgad

21. Shikhar Shingnapur temple | Shambhu mahadev mandir in shingnapur

22. Mahabaleswar

Xxxx

39.த்ரயம்பக ஈஸ்வரர் கோவில் (श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग मंदिर)

நாசிக் நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த த்ரயம்பகேஸ்வரர் கோவில் 12  ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாகும். த்ரயம்பக என்றால் முக்கண்ணன் என்று பொருள். யஜுர் வேத ருத்ர மந்திரத்தில் வரும் புகழ்பெற்ற ம்ருத்யுஞ்ஜய மந்திரம் த்ரயம்பகம் யஜாமஹே……………………… என்று துவங்கும் . தமிழ் இலக்கியங்களிலும் முக்கண்ணன் என்னும் சிவனைக் காண்கிறோம்.

கோதாவரி என்னும் புனித நதி இந்தக் கோவிலுக்கு மிக அருகில் உற்பத்தி ஆகிறது. கோவில் வளாகத்திலேயே குசவர்த்த என்னும் புனித தடாகமும் உள்ளது இந்த இடம் மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் லிங்கத்துக்கு மூன்று முகங்கள் இருப்பதாகும். அவை பிரம்மா , விஷ்ணு, சிவன்/ருத்ரன் ஆகிய மூவரையும் குறிக்கும். நான்கு வாயில்களுடைய கோபுரத்தில் வடக்கு வாசலே மிகப்பெரியது . இந்த வாயிலின் வழியே பக்தர்கள் உள்ளே செல்லலாம்.அதை அடுத்து இசை மண்டபம் காணப்படும். தெற்கு, மேற்கு வாசல்களுக்கு இடையே அம்ருத குண்டம் என்னும் ஏரி இருக்கிறது.

சிவன் சந்நிதிக்கு எதிர்ப்புறம் நந்தியை தரிசிக்கலாம். கிழக்கு வாசலில் நுழைந்தவுடன் 12 சதுர அடி சலவைக்கல்லில் ஆமை உருவம் அமைந்துள்ளது மேற்கு பகுதியில் சிவலிங்க சந்நிதி. ஐந்து படிகள் இறங்கிச் சென்றால் லிங்கத்தை தரிசிக்கலாம்.பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிக்கும் மூன்று மிகச் சிறிய பாணலிங்கங்கள் உள்ளன எப்போதும் தண்ணீர் ஊற்றெடுத்து வந்து கொண்டிருக்கிறது கிழக்குப் பகுதியில் சலவைக் கல்லாலான பார்வதி காட்சி தருகிறாள்.

கோவிலில் ஏனைய வட இந்தியக் கோவில்களிலிருப்பது போலவே வைணவ, சாக்த தெய்வ உருவங்கள் இருக்கின்றன. மூன்று சின்ன பாண லிங்கங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஆவடை யார் காணப்படுகிறது. இதன் மேல் ஒரு முகம் அல்லது 3 முகம் அல்லது 5 முகம் கொண்ட சிவபெருமானின் உருவத்தை வைத்து பூஜை செய்கிறார்கள்

Xxxx

பீம சங்கர ஜோதிர்லிங்கம் கோவில்

இதே தொடரில் வெளியான பகுதி 3-ல் எண் 10-ல் பீம சங்கரம் பற்றிய விவரத்தைப் படிக்கலாம்

xxx

40. கிரிஷ்ணேஸ்வரர் ஜோதிர் லிங்க கோவில்

அவுரங்காபாத் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் எல்லோரா குகைக் கோவிலுக்கு மிக அருகாமையிலும் இருக்கும் கிரிஷ்ணேஸ்வரர் கோவில் 12 ஜோதிர் லிங்க கோவில்களில் ஒன்றாகும் ; கருணைமிக்க சிவன் என்னும் பொருளில் கிரிஸ்ணேஸ்வர்  என்ற பெயர் உருவாகியது . டில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்திலும் அவுரங்க சீப் போன்ற மதவெறியர் காலத்திலும் முஸ்லீம்களால் சிதைக்கப்பட்ட இந்தக் கோ வில், பக்தர்களின் முயற்சியால் மீண்டும் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. இந்தூர் மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் ஏராளமான  கோவில்களை  புணருத்தாரணம் செய்தார். அதில் ஒன்று இந்தக் கோவில்.

12 முக்கிய சிவன் கோவில்களில் மிகவும் சிறியது இதுதான். மராத்திய பாணியில் சிவப்பு நிற பாறைகளால் அமைக்கப்பட்ட கோவில் இது. கோவிலுக்குச் செல்லும் வழியில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளையும் காணலாம் .ஐந்து நிலைக்கு கோபுரம் உடைய இங்கு பல தெய்வங்களின் உருவச் சிலைகளையும் தரிசிக்கலாம்

24 தூண்கள் உடைய மண்டபம் ஒன்றில் சிவ பெருமானின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்குள்ளே செல்லும் ஆண்கள் மேல் சட்டைகளையும் பனியன்களையும் கழற்றிவிட்டு உள்ளே செல்லவேண்டும்.

அவுரங்காபாத் பஸ்  நிலையத்திலிருந்து நிறைய பஸ்கள்  கோவிலை நோக்கிச் செல்கின்றன.

2022ம் ஆண்டில் கோவிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் எழுதுகிறார் : “நாங்கள் அவுரங்காபாத்திலிருந்து காரில் சென்றோம். முக்கால் மணி நேரத்தில் கோவிலை அடைந்தோம். கார் நிறுத்த வசதி உள்ளது 20 ரூபாய்க்கு பூக்கள் பூஜை சாமான்கள் நிறைந்த தட்டுகளை பல கடைகள் விற்கின்றன. நாங்கள் 100 ரூபாய்க்கு பூக்கள்  முதலியவற்றை வாங்கினோம். முக்கால் மணி நேரம் க்யூவில் / வரிசையில் நின்றோம். ஆயினும் சிவலிங்கத்தை நாமே வணங்கலாம். அதனால் நல்ல திருப்தி கிடைத்தது. அனைவரும் தரிசிக்க வேண்டிய இடமே.

xxx

My old article in this blog

திரயம்பகேஸ்வரம், ஜோதிர்லிங்கம், ஆமை …

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › த…

10 Dec 2015 — இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் …

To be continued……………………………..

Tags- திரயம்பகேஸ்வரம்,   ஜோதிர்லிங்கம், ஆமை, கிரிஷ்ணேஷ்வர் , த்ரயம்பக, முக்கண்ணான் , நாசிக், கோதாவரி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: