
Post No. 11,974
Date uploaded in London – May 6 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!
ச.நாகராஜன்
1
கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!
மஹாபாரதத்தில் ஆஸ்வமேதிக பர்வத்தில் (அத் 92) வரும் ஒரு விஷயம் கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களைப் பற்றிக் கூறுகிறது.
அமாவாசை, பௌர்ணமி தினங்களும் அவற்றை அடுத்து வரும் த்வாதசி தினங்களும் ச்ரவண நக்ஷத்திர தினங்களும் ஆக இந்த ஐந்து தினங்களும் கிருஷ்ண பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து தினங்களும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான தினங்களாகும்.
பர்வத்வயம் சா த்வாச்யௌ ச்ரவணம் ச நராதிப |
மத்பஞ்சமீதி விக்யாதா மதிப்ரியா ச விசேஷத: ||
2
உடலுக்குள் இருக்கும் அக்னிகள் ஐந்து!
ஒவ்வொருவரின் உடலுக்கும் மறைந்திருக்கும் அக்னிகள் ஐந்து. அவையானவன 1) மந்தாக்னி 2) தீக்ஷனாக்னி 3) விஷமாக்னி 4) சமாக்னி 5) பஸ்மாக்னி
இவை ஐந்துமே உணவை எடுத்துக் கொள்கின்றன.
3
முக்கியமான ஐந்து ‘உ’காரங்கள்!
‘உ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஐந்து ‘உ’காரங்கள் மிக முக்கியமானவை. இவை பஞ்ச ‘உ’காரங்கள் என அழைக்கப்படும்.
அவையாவன 1) உத்யோகம் 2) உத்ஸாகம் 3) உத்தேஜன் 4) உபகாரம் 5) உதாரத்வம்.
இந்த ஐந்தும் ஒரு மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை.
4
ஈஸ்வரின் தொழில்கள் ஐந்து!
ஈஸ்வரனின் தொழில்கள் ஐந்து. அவையாவன :
1) ச்ருஷ்டி 2) பாலன் (பரிபாலனம்) 3) சம்ஹாரம் (அழித்தல்) 4) அனுக்ரஹம் 5) நிக்ரஹம்
5
ஒரு காரியம் உருவாக உள்ள ஐந்து காரணங்கள்!
எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அது உருவாக ஐந்து காரணங்களே உள்ளன. அவையாவன:
1) காலம் 2) ஸ்வபாவம் 3) நியதி 4) புருஷ 5) கர்மம்
6
ஆசார்யர்கள் ஐவர்!
வைதிக சம்ப்ரதாயத்தின் படி ஆசார்யர்கள் ஐவர்.
அவர்கள் : 1) ஶ்ரீ சங்கராசார்யர் 2) ஶ்ரீ ராமானுஜாசார்யர் 3) ஶ்ரீ வல்லபாசார்யர் 4) ஶ்ரீ நிம்பார்காசார்யர் 5) ஶ்ரீ மத்வாசார்யர்
7
அந்தக்கரணம் ஐந்து!
அந்தக்கரணம் ஐந்து. இவை பஞ்ச அந்தக்கரணம் என அழைக்கப்படுகிறது.
அவையாவன: 1) மனம் 2) புத்தி 3) அஹங்காரம் 4) சித்தம்
5) சைதன்யம்
8
பஞ்ச மாதாக்கள்!
ஐந்து பேரைத் தாயாக மதிக்க வேண்டும் என்கிறார் சாணக்யர்! இந்த பஞ்ச மாதாக்கள் யார் யார்?
1) ராஜபத்னி 2) குருபத்னி 3) மித்ரபத்னி 4) பத்னி மாதா (மாமியார்) 5) ஸ்வமாதா (சொந்தத் தாயார்)
9
பஞ்ச மாதாக்கள்!
இன்னும் ஒரு ஸ்லோகம் பஞ்ச மாதாக்கள் யார் யார் எனக் குறிப்பிடுகிறது இப்படி:
ஜனனீ ஜன்ம பூமி ச ஜாஹ்னவீ வேத மாதர: |
சுரபி தத்ர விக்ஞேயா பஞ்சைதே மாதர: ஸ்ம்ருதா ||
சொந்தத் தாயார், பிறந்த பொன்னாடு, கங்கா, காயத்ரி, பசு – இவர்களே பஞ்ச மாதாக்கள்
***