
Post No. 11,977
Date uploaded in London – May 7 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இதற்கு முன்னர் வந்த கட்டுரையைப் படிக்க :-
Pl visit http://www.tamilandvedas.com
15-4-23 11903 காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 4
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 5
ச.நாகராஜன்
உண்மையில் நடந்த சம்பவம் இது!
நகரம் நியூயார்க்.
ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி. வருடம் 2008.
180 அடி உயரம் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று நியூயார்க்கில் உள்ளது. 14 அடுக்குகளைக் கொண்ட கட்டிடம் அது.
அதில் ஒரு புகைக்கூண்டு எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பது போல அது அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு நாள் 12 வயதே ஆன சிறுமி மிஸ் க்ரேஸ் பெர்கரே (Miss Grace Bergere) அதற்குள் தவறி விழுந்து விட்டாள்.
அனைவரும் ஓடி வந்தனர். ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஃபைர் – ஃபைட்டர்ஸ் (தீ அணைக்கும் படையினர்) வந்தனர்.
யாருக்கும் நம்பிக்கை இல்லை.
180 அடி உயரத்திலிருந்து புகைக் கூண்டில் விழுந்த பெண்ணின் உடல் பாகங்களாவது கிடைக்குமா?
அந்தப் பெண்ணின் தந்தை புகைக்கூண்டின் அடிப்பாகத்திற்கு ஓடி வந்தார்.
“என் பெண்! என் பெண்” என்று ஓவென்று கத்தினார்.
புகைக்கூண்டின் அடிக் கதவு திறக்கப்பட்டது.
“ஆ! எனது கால் உடைந்து விட்டது! எனது கால் உடைந்து விட்டது!” என்று ஒரு பெண்ணின் அலறும் குரல் அதிலிருந்து கேட்டது.
அனைவரும் பிரமித்தனர்.
மெதுவாக அந்தப் பெண்ணை வெளியே மீட்டனர்.
180 அடி உயரத்திலிருந்து விழுந்த அந்தப் பெண் இரண்டடி உயரமாகக் குவிக்கப்பட்டிருந்த சாம்பல் மற்றும் தூசி குவியலின் மீது வந்து விழுந்திருந்தாள்!
அவள் இடுப்பில் ஒரு சிறிய முறிவு ஏற்பட்டிருந்தது. ஆனால் அவளால் நன்கு பேச முடிந்தது; உயிருடன் தான் இருந்தாள்
அவள் வெளியே வந்த போது அவள் உடல் முழுவதும் கறுப்பாக இருந்தது.
கண்களும் வாயும் மட்டும் அனைவருக்கும் தெரிந்தன.
மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட அவள், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டாள்.
நலமுடன் மீண்டாள்.
உண்மை தான், காலம் வரும் முன்னே காலன் வரமாட்டான்.
எத்தனையோ சம்பவங்கள் உண்டு; அதில் இதுவும் ஒன்று!
***
ஆதாரம் : PTI NEWS