ஜோதிர் லிங்க ஸ்தலம் வைத்யநாதம்;  108 மஹாராஷ்டிர புனித தலங்கள் – PART 12 (11,984)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,984

Date uploaded in London – –  May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய ஸ்லோகம்

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்;

உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்;

பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம் 

ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ;

வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ;

ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .

ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர:

ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .  

ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.   இந்த 12 தலங்களை காலையிலும் மாலையிலும் நினைத்தாலே  ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்களும்       விலகிவிடும்; அழிந்துபோகும் என்று புராதன ஸ்லோகம் சொல்லுகிறது.

12 ஜோதிர் லிங்க தலங்களில் ஐந்து, மகாராஷ்டிரத்தில் இடம்பெற்றுள்ளன. இன்று பரலி என்னும் இடத்திலுள்ள வஜ்ஜிநாத் என்னும் வைத்யநாதரை தரிசிப்போம் .    

     45. பரலி வைத்தியநாதர் கோவில்  ज्योतिर्लिंग परळी वैद्यनाथ         

மஹாராஷ்டிர மாநிலத்தில் பீட் BEED என்னும் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெங்களூர், ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து ரயிலிலும் செல்லலாம்.

இந்தக் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதுபற்றி பல   கதைகள் இருக்கின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையை அறியாத இந்துக்கள் இல்லை. எமனிடமிருந்து சத்தியவானின் உயிரை வாதாடி      வாங்கி வந்த சாவித்ரியின் தந்தை அஸ்வபதி ஆண்ட மாத்ரா Madra Desa தேசம் இது. ஆகையால் இங்கேதான் அந்த சம்பவம் நடந்ததாக ஐதீகம் (செவிவழி வரலாறு).     

 இன்னொரு கதையும் உண்டு. சிவபெருமானை அதிகம் துதிபாடிய ராவணனுக்கு சிவனே ஒரு லிங்கத்தைக் கொடுத்து , இலங்கையில் கொண்டுபோய் கோவில் கட்டு; ஆனால் வழியில் எங்கேயாவது வைத்தால் அது அங்கேயே ஸ்தாபிக்கப்பட்டுவிடும் என்று சொன்னார் . ராவணன் அதை வாங்கிக்கொண்டு வருகையில் கை,  கால் கழுவுவதற்காக         ஒரு பையனிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அதன் எடை கூடிக்கொண்டே வந்ததாம். கனத்தைத் தாங்க முடியாதபடி அந்தப் பையன் அந்த லிங்கத்தை கீழே வைக்க அது பரலி க்ஷேத்திரமாகப் பரிணமித்தது.

கடைசி கதை என்னவென்றால், இங்குள்ள விஷ்ணுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க உதவினார் ஆகையால் இதை வஜ்ஜி நாத (அமிர்த) என்று மராத்தியில் அழைக்கின்றனர் என்பதாகும் .

இந்தக் கோவில் மிகவும் சிறியது. அரை மணி நேரத்துக்குள் கோவிலிருந்து வெளியே வந்துவிடலாம். சிறப்பு என்னவென்றால் ஒரு பெரிய தேக்கு மர மண்டபம் தூண்கள் இல்லாமலே கட்டப்பட்டிருப்பதாகும்.

நந்திக்கு மேலே பெரிய Chandelier தொங்கும் விளக்கு இருக்கிறது. ஜரோகா ஜன்னல்களும் இருக்கின்றன. கல்லிலான இந்த வகை ஜன்னல்கள், நின்று பார்க்கக்கூடிய பால்கனி போன்ற இடம் உடையது. மன்னர்கள் அந்தக் காலத்தில், இத்தைகைய ஜன்னல்களில் நின்று மக்களுக்கு காட்சி அளிப்பர் .

Xxxx

எலிபெண்டா குகைக் கோவில் திரிமூர்த்தி

முந்தைய பகுதிகளில் விவரங்களைக் கொடுத்துவிட்டேன.

Xxx

46. கோண்டேஸ்வர் மஹாதேவ் மந்திர் , சின்னார் , நாசிக் மாவட்டம்

நாசிக் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது; ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் செல்லும் வழி . 12ம் நூற்றாண்டில் யாதவ குல சேனா வம்ச மன்னர் கட்டியது . இதை கலை உலக அற்புதம் என்று சொல்லும் அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன . சுவரிலும் தூண்களிலும் இவற்றைக் காணலாம். ஒரு மேடையின் மேல் கோவில் அமைந்திருக்கிறது நடுவில் சிவ லிங்க சந்நிதி. நாற்புரமும்  விஷ்ணு, பார்வதி, கனேஷ் , சூரியன் ஆகியோருக்கான சந்நிதிகள். சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் கோவிலின் மீது படும் ஒளிக் கிரணங்கள் அற்புத ஜாலங்களைச் செய்யும் ..

Xxx

47. பாபுல்நாத் சிவன் கோவில் மும்பை बाबुलनाथ

மும்பை நகரில் உள்ள பழமையான சிவன் கோவில் இது.

சிவராத்திரி விழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் கோவில்..

செளபாத்தி வட்டாரத்தில் இருக்கிறது மரைன் லைன்ஸ் ரயில் நிலையாத்திலிருந்து 15 நிமிடம்தான் ஆகும். ஒரு குன்றின் மேல் அமைந்த இந்தக்கோவில் குறைந்தது 200  ஆண்டுப் பழமை உடைத்து.அந்தக் கால மும்பையைக் குறிக்க இந்தக் கோவில் படம்தான் இருக்கும்.. படிகளில் ஏறி ச் செல்லலாம் அல்லது எலிவேட்டரில் செல்லமாம். கருவேல (பாபுல் மரம்) மரக்கா ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம் என்றும் பாபுல் என்னும் இடையன் கண்டுபிடித்த லிங்கம் என்றும் பொருள்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோவில் காலப்போக்கில் மண்ணில் புதையுண்டு கருவேலமரக் காடாகியது . பின்னர் 4 விக்ரகங்களுடன் கண்டுபிடிக்கப்பது. ஐந்தாவது சிலை கடலில் தூக்கி எறியப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது . துவக்க காலத்தில் பார்சி மதக் கோவிலாக இருந்ததாகவும் சொல்லுவார்கள் .

Xxxx

பூலேஸ்வர் சிவன் கோவில்

முந்தைய பகுதிகளில் விவரம் உளது

xxx

48.வாகேஸ்வர் – பாண கங்கா கோவில்

மும்மை நகரில் மலபார் குன்ற ப் பகுதியில் அமைந்த கோவில் . இதன் அருகிலேயே பாண கங்கா குளம் உள்ளது சிலஹார வம்சத்தினர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாகேஸ்வரர் கோவிலைக் கட்டினர் . அதற்கு முன்னர், ராமபிரான் மண்ணினால் செய்து வழிபட்ட லிங்கம் இது என்பது ஐதீகம் . கடந்த காலத்தில் இருமுறை பெரிய திருப்பணிகள் நடந்தன.தற்காலத்தில் இந்துஸ்தானி இசை விழாக்கள் இங்கே நடத்தப்படுகின்றன.

Xxx

49. அம்ருதேஸ்வர் சிவன் கோவில், அஹமதுநகர் மாவட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் ரத்தன்வாடி கிராமத்தில் ப்ரவரா நதிக்கரையில் அம்ருதேஸ்வர் கோவில் அமைந்துள்ளது  இது மிகவும் பழங்காலக்  கோவில். இதனால் தொல்பொருட் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பண்டார் தரா பல்வேறு பொழுதுபோக்குகளுக்கு பயன்படும் இடம். அருகில் ரத்தன்காட் கோட்டையும் இருக்கிறது பண்டார் தரா என்னும் இடம் அஹமது நகரிலிருந்து 96 மைல் . பண்டார் தராவிலிருந்து இந்தக் கோவில் சுமார் 10 மைல். சுமார் 1200 ஆண்டு பழமையான இந்தக்கோவிலை சிலஹார வம்சத்தினர் கட்டினார்கள் . ஜாஞ்ஜா என்னும் மன்னர் கட்டிய 12 கோவில்களில் இதுவும் ஒன்று நல்ல சிற்பங்கள் அமைந்த இந்தக் கோவில் கட்டுவதற்கு  சிவப்பு, கருப்பு நிற பஸால்ட்  பாறைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.. சுவர்களிலும் கூரைகளிலும் வண்ண ஓவியங்களையும் காணலாம். பூக்கள் வடிவங்கள் வரையப்பட்ட 12 தூண்கள் உடைய மண்டமும் காண வேண்டிய காட்சி ஆகும்.

கோவிலின் சிகரம் அப்படியே உள்ளது . கலை வேலைப்பாடு மிக்கது;  கூ ரையில் சில கற்களைக் காணவில்லை கோவிலுக்கு அருகில் படிக்கட்டுகள் நிறைந்த குளம் கட்டப்பட்டுள்ளது.

சாலையில் செல்லுவதை விட படகில் செல்வது எளிது. மலைப்பாதை கரடுமுரடானது பண்டாரதராவையும் ரத்தன் வாடியையும் பிரிக்கும் ஆர்தர் ஏரியில் ஆறு கிலோமீட்டர் படகு  சவாரி செய்தால் பின்னர் 4 கி.மீ. நடந்து ரத்தன் வாடியை அடையலாம்.

ரத்தன்வாடி கிராமம்தான் கோட்டைக்கு செல்லும் வழி

To be continued…………………………………..

Tags- அம்ருதேஸ்வர் கோவில், வாகேஸ்வர், பாண கங்கா,  கோவில் , பன்னிரு, ஜோதிர்லிங்க, தலங்கள், ,ஸ்லோகம், பரலி வைத்தியநாதர் கோவில்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: