சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? (Post No.11,992)

Tibetan Painting of human beings, Wellcome collection, London

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,992

Date uploaded in London –   12 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

சுபாஷித செல்வம்

சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி நீங்கள் எப்படி இருக்க வேண்டும்?

ச.நாகராஜன் 

தீர்க்கமாக இருக்க வேண்டிய ஐந்து அங்கங்கள்!

சாமுத்ரிகா லக்ஷணம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம்.

மனிதனின் அங்க அமைப்பு எப்படி இருக்க வேண்டும், ஆணோ பெண்ணோ எப்படிப்பட்ட அங்க அமைப்புகள் இருந்தால் அவர்கள் எப்படிப்பட்ட குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பன போன்ற உண்மைகளை விளக்கும் சாஸ்திரம் அது.

அதன் படி ஒருவருக்கு தீர்க்கமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஐந்து.

1) தோள் – பாஹு 2) இரண்டு கண்கள் – நேத்ர த்வயம் 3) வயிறு – குக்ஷி 4) மூக்கு- நாஸா 5) மார்பு – ஸ்தனயோரந்தரா

இந்த ஐந்தும் தீர்க்கமாக (நீளமாக) இருக்க வேண்டும்.

பாஹு நேத்ர த்வயம் குக்ஷிர்யே நாஸே ச |

ஸ்தனயோரந்தரச்சைவ பஞ்சதீர்க ப்ரசஸ்யதே ||

–    சப்தகல்பத்ருமம் III -8

தானம் செய்யும் போது செய்யக்கூடாதவை

தானமானது தக்கவருக்கே செய்யப்பட வேண்டும். அப்படி தக்கவருக்குச் செய்யப்படும் தானமும் தக்கபடி செய்யப்பட வேண்டும்.

தானத்தைச் செய்யும் போது கீழ்க்கண்ட ஐந்து தவறுகள் (தான தூஷணம்) இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

1) அனாதரா – அவமரியாதையுடன் தரப்படக்கூடாது.

2) விலம்பா – தாமதித்துத் தரக் கூடாது. (தானம் பெறுபவரை அலக்ஷியப்படுத்தும் விதமாகக் காக்க வைத்திருந்து தாமதமாக தானத்தைத் தரக் கூடாது,)

3) வைமுகா – முக்கியத்துவம் இல்லாத வகையில் அவரை அலக்ஷியப்படுத்தும் விதமாகத் தரக் கூடாது.

4) அப்ரியவாச – கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் தானம் தரக் கூடாது.

5) பஸ்சாத் சந்தாப – கொடுத்தபின் வேதனைப் படக் கூடாது. கொடுத்த பின் ஏன் கொடுத்தோம் என்று துயரப்படக் கூடாது.

அனாதரோ விலம்பஸ்ச வைமுக்யம் சாப்ரியம் வச: |

பஸ்சாத் பவதி சந்தாபோ தானதூஷணபஞ்சகம் ||

நல்ல காரியத்திலும் கெட்ட காரியத்திலும் சம பங்கு கொள்வோர்!

ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் சம பங்கு கொள்வோராகத் திகழ்பவர் நால்வர். (சுக்ருத துஷ்க்ருத சம பாகினஹ)

1) கர்த்தா – ஒரு காரியத்தைச் செய்பவர்

2) காரயிதா – அந்த காரியத்திற்குப் பின்னால் இருப்பவர்

3) ப்ரேஷகா – அதைச் செய்ய அனுப்புபவர்

4) அனுமோதகா – அதை ஆமோதித்து அங்கீகரிப்பவர்

கர்தா காரயிதா சைவ ப்ரேஷகோஹ்ரானுமோதக: |

சுக்ருதம் துஷ்க்ருதம் சைவ சத்வார: சமபாகின: ||

சரிசமமான அந்தஸ்து இருந்தாலேயே சோபிக்கும் நான்கு விஷயங்கள்

சரி சமமான அந்தஸ்து இருந்தால் மட்டுமே சோபிக்கும்

விஷயங்கள் நான்கு.

1) வித்யா பாஷ்யா – வித்தையைக் கற்றல் (சரிசமமாக ஒத்த அறிவுள்ளவர்கள், ஒத்த படிப்புள்ளவர்கள் இடையே மட்டுமே நட்பும் மரியாதையும் அழகுபடும்.)

2) விசாரம் (Deliberation) – விசாரம் எனப்படும் ஆழ்ந்த ஆய்வு அல்லது கருத்துரையாடல் என்பதும் சம அந்தஸ்து உள்ளவர்களிடையே சோபிக்கும்.

3) விவாஹம் – திருமணம் என்பது சம அந்தஸ்து உள்ள குடும்பங்களிடையே நடந்தால் மட்டுமே அழகு பெறும்.

4) விவாதம் (Debate) – ஒரு விவாதம் என்பதும் சமமானவர்களிடையே நடந்தால் மட்டுமே சோபிக்கும்.

சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் வரும் சுபாஷிதம் இதை இப்படி விளக்குகிறது:

வித்யாப்யாஸோ விசாரஸ்ச சமயோரேவ ஷோபதே |

விவாஹஸ்ச விவாதஸ்ச சமயோரேவ ஷோபதே ||

–    சுபாஷித ரத்ன பாண்டாகாரம் -155/86

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: