
Post No. 11,993
Date uploaded in London – – 12 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பகுதி 13
50.வேல்னேஸ்வரர் சிவன் கோவில், ரத்ன கிரி
அருமையான மணலுள்ள கடற்கரை, தென்னந்தோப்புகள் புடை சூழ அமைந்த கோவில் வேல்னேஸ்வரர் கோவில் ஆகும். ரத்ன கிரி மாவட்டத்தில் கணபதி புலே என்னும் ஊரிலிருந்து 72 கிலோ மீட்டர் . காட்கில், கோகலே குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்ட பழைய கோவில். பழைய பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் சிவன் சந்நிதியுடன் விஷ்ணு, கணபதி, காலபைரவன் சந்நிதிகளையம் காணலாம் கர்ப்ப கிரஹ த்தில் வண்ண ஓவியங்களும், சிற்பங்களும் புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன . மகா சிவராத்திரி காலத்தில் பக்தர்கள் கூட்டம் பெரிதாகும் .
XXX
51. பாணேச்வரர் சிவன் கோவில் , நரசபூர்
புனே நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் நரசபூரில் அமைந்த சிவன் கோவில் இது. காடுகளுக்கிடையில் அமைந்த இந்தக் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லப்பட்ட போர்ச்சுகீசிய மணி கட்டப்பட்டு இருக்கிறது. போர்ச்சிகீசிய கடற்படையை வென்ற மஹாராஷ்டிர தளபதி , 4 பெரிய மணிகளைக் கொண்டுவந்து 4 கோவில்களில் கட்டினார் அவருடைய பெயர் சிமாஜி அப்பா . இது நடந்த ஆண்டு 1739..

XXX
52.ஜோதிபா கோவில், வாடி ரத்னகிரி , கோலாப்பூர் மாவட்டம்
ரத்னாசுரன் என்ற அசுரனை சிவன் மாய்த்த குன்றில் அமைந்த (ज्योतिबा) கோவில் இது. சித்திரை, வைகாசி மாத முழு நிலவு நாட்களில் விழாக்கள் நடைபெறும். சிவன், கால பைரவன் கோலம் கொண்டதாகவும் , அவரது வடிவம் கண்டோபா எனப்படும் என்றும் பக்தர்கள் கூறுவார்கள் 100 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். பிரதான சந்நிதியில் கேதாரேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் இருக்கிறது. இது தவிர ஜோதிபாவின் உருவம் குதிரை மீது காணப்படுகிறது . கோவில் அமைந்த குன்றின் உயரம் 3124 அடி. சாங்கிலி என்னும் ஊரிலிருந்து 55 கி.மீ ., கோலாப்பூர் என்னும் ஊரிலிருந்து 18 கி.மீ. இப்போதுள்ள கட்டடங்களை குவாலியர் சிந்தியா குடும்பத்தினர் கட்டினர் .
XXX
53. மார்லேஸ்வரர் குகைக் கோவில்
சிறிய கோவில்தான். குகைக்குள் இருக்கிறது .ரத்ன கிரி மாவட்டத்தில், தேவ் ருக் என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் . மலை மேல் 500 படிகள் வரை ஏறினால் இறைவனைத் தரிசிக்கலாம்.காடுகளின் வழியே நடந்தும் செல்லலாம். அந்தப் பாதையில் சென்றால் 3 நாட்கள் ஆகும். கோவில் அருகிலுள்ள ‘பார்வை மேடை’யில் ஏறி நின்றால் தாரேஷ்வர் நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம் . இங்கு கோவிலுக்குள் விஷப்பாம்புகள் நெளிந்து செல்லும். பக்தர்களை கடிப்பதில்லை. துணிச்சல்மிக்கவர்கள் அவைகளை கைகளில் எடுத்தும் மகிழ்கிறார்கள் . பாம்பு கடித்து இறந்ததாக செய்திகள் இல்லை. அருகிலுள்ள பாவ் நதியில் புனித நீராடுவதும் பக்தர்கள் விரும்பும் ஒரு சடங்கு . மகா சிவராத்திரி காலத்திலும் பெளர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் குமியும். 200, 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
XXXX
54.சங்கமேஸ்வரர் சிவன் கோவில் , ஹரிபூர்
ஸ்ராவண (ஆவணி) மாதத்திலும், திங்கட் கிழமைகளிலும் (சோமவாரம்) பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும் சங்கமேஸ்வரர் கோவில் சாங்கிலி வட்டாரத்தில் உளது; ஹரிப்பூரில் கிருஷ்ணா நதியும் வர்ணா நதியும் சங்கமம் ஆகின்றன மார்க்கண்டேயன் என்ற பெயரில் சிவன் வழிபாடு நடைபெறுகிறது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவில் இது. 1768-ம் ஆண்டில் கோவிந்த ஹரி பட்டவர்த்தன் என்பவர் இந்த ஊரை பிரா மணர்களுக்குத் தானம் (பிரம்மதேயம்) செய்ததால் அவர் நினைவாக ஹரி புரம் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
Xxx

55. குங்கேஸ்வர் சிவன் கோவில், தேவகாட்
தேவ் காட் என்னும் ஊரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இடம். வெண் மணல் நிறைந்த அழகான, நீண்ட கடற்கரை , இந்தக் கோவிலுக்கு அழகு சேர்க்கிறது . தென்னிந்திய பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில், சுமார் 1000 ஆண்டு பழமையானது ;யாதவ அரசர்கள் கட்டிய கோவில். சத்ரபதி சிவாஜி மஹராஜ் அடிக்கடி வந்து வழிபட்ட சிவ ஸ்தலம் . தென் கொங்கணத்தின் காசி நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
ஒரு ஈரானிய வியாபாரி , இந்தக் கடற்கரையை அடையும் தருணத்தில் பிரச்சனை ஏற்படவே கோவில் கட்டுவதாக நேர்ந்தவுடன், பிரச்சனை தீர்ந்து போனதாம். அவர் கட்டிய கோவில் கட்டிடங்களும் இருக்கின்றன.
கோவிலின் கிழக்குப் பக்கத்திலுள்ள குகைகள் பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படுகின்றன . அங்கே சுவரில் வீரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவிலில் இருந்து நந்தகான் ரயில் நிலையம் 42 கி.மீ. கங்கவலி ரயில் நிலையம் 60 கிலோமீட்டர்.
xxx
56.ஷிகார் ஷிங்னாபூர் சிவன் மந்திர்
இங்குள்ள சிவன் கோவிலும் சனைச்சர (சனி) பகவான் கோவிலும் மிகவும் பிரசித்த மானவை . இங்குள்ள சிவன் கோவில் பழமையானது சாதாரா மாவட்டத்தில் இருக்கிறது கோவிலில் எட்டு சிவலிங்கங்கள், 5 நந்திகள் இருக்கின்றன இதை தட்சிண கைலாசம் என்றும் அழைப்பர் .கர்ப்பக்கிரகத்தில் இரண்டு லிங்கங்களைத் தரிசிக்கலாம். வசந்த காலத்தில் விழா நடைபெறும்.பக்தர்கள் காவடிகளில் நீரைக் கொணர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள் சிவன்-பார்வதி கல்யாணம் நடந்த இடம் இது என்பது ஐதீகம்
Xxxx

ஜோதிர்லிங்க ஸ்லோகம்
सौराष्ट्रे सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम्।
उज्जयिन्यां महाकालम्ॐकारममलेश्वरम्॥१॥
परल्यां वैद्यनाथं च डाकिन्यां भीमाशंकरम्।
सेतुबंधे तु रामेशं नागेशं दारुकावने॥२॥
वाराणस्यां तु विश्वेशं त्र्यंबकं गौतमीतटे।
हिमालये तु केदारम् घुश्मेशं च शिवालये॥३॥
एतानि ज्योतिर्लिङ्गानि सायं प्रातः पठेन्नरः।
सप्तजन्मकृतं पापं स्मरणेन विनश्यति॥४॥
To be continued…………………………………………
tags- குங்கேஸ்வர் ,சிவன் கோவில்,சங்கமேஸ்வரர், மார்லேஸ்வரர், குகைக் கோவில், பாணேச்வரர், வேல்னேஸ்வரர்