ப்ரொமீதியம் – அக்னீ பகவான் பெயர் கொண்ட மூலகம் (Post No.11,997)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,997

Date uploaded in London – –  13 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இதுவரை 48 மூலகங்களின் சுவையான கதைகளைக் கண்டோம். அவை அனைத்தும் இரண்டு நூல்களாக ஏற்கனவே வெளிவந்துவிட்டன.. இன்று 49-ஆவது தனிமத்தின் (ELEMENT) சுவையான கதைகளைக்  காண்போம் .

கிரேக்க நாட்டு புராணக் கதைகளில் தீ என்னும் நெருப்பு எப்படி மனிதனுக்குக் கிடைத்தது என்ற கதை காணப்படுகிறது. ப்ரொமீதியஸ் (PROMETHEUS) என்பவன்தான் கடவுளிடமிருந்து அக்கினியைத் திருடி வந்து மனிதர்களுக்கு அளித்தான் என்பது அக்கதை . ப்ரொமீதியம் (PROMETHIUM) என்னும் மூலகத்தை (தனிமத்தை)க்  கண்டுபிடித்தவர்களில் ஒருவர் சார்ல்ஸ் . அவருடைய மனைவியான கிரேஸ் மேரி கோர்யேல்  இந்தத் தனிமத்துக்கு ப்ரொமீதியஸ்  என்ற புராண கதாபாத்திரத்தின் பெயரைச் சூட்டினார். உலக விஞ்ஞானிகள் அதை  ஏற்றனர். ஆயினும் ஏனைய 118 தனிமங்களை உள்ளதை போல உச்சரிப்பு இருக்கவேண்டும் என்று கருதி ப்ரொமீதியம் என்று மாற்றினார்கள் .

தனிம அட்டவணை (PERIODIC TABLE) எனப்படும் பிரியாடிக் டேபிளில் காணப்படும் 118 மூலகங்களின் 15 தனிமங்களை அபூர்வ தாதுக்கள் (RARE EARTH ELEMENTS) என்பர். அதில் ஒன்று இந்தப் ப்ரொமீதியம்  ..அவைகளுக்கு லாந்தனைட்ஸ் (LANTHANIDES) எனற பெயரும் உண்டு.. ஆயினும் ப்ரொமீ தியம்  .பல விஷயங்களில் மாறுபடுகிறது. இதன் ஐசடோப்புகள் ISOTOPES  (அதாவது தனிம அவதாரங்கள்) கதிரியக்கம் (RADIO ACTIVE) உடையவை. அதுவும் மிக மிகக் குறுகிய கால அரை வாழ்வு (HALF LIFE) உடையவை

கதிரியக்கம் , மனித உடலுக்குத் தீங்கு விளைவிப்பது ஆகும். ஆகையால் மனிதனிடத்தில் ப்ரொமீதியம் இருக்கமுடியாது. முதலில் இதைப் பற்றிய இரண்டு சுவையான விஷயங்களைக் கேளுங்கள். இதற்கு 35 ஐசடோப்புகள் இருக்கின்றன . அதில் குறைந்த பட்ச அரை வாழ்வு பத்தே நிமிஷம் உடையது. அதிக ஆண்டு அரை வாழ்வு உடைய ப்ரொமீதியம்  .-145 பாதியாகக் குறைய 17.7ஆண்டுகள் ஆகும்

xxx

அரை வாழ்வு HALF LIFE என்றால் என்ன ?

பத்து லட்சம் டன் ப்ரொமீதியம்-145  .ஓரிடத்தில் இருந்தால் அது 17-7 ஆண்டுகளில் 5 லட்சம் டன்களாகக் குறைந்துவிடும்; .35.4 ஆண்டுகளில் அது 25,000  டன்களாகக் குறைந்துவிடும். 53.1 ஆண்டுகளில் அது 12,500 டன்களாகக் குறைந்துவிடும். 350 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு டன் ஆகிவிடும்.

மில்லியன் மில்லியன் டன்கள் கூட  700 ஆண்டுகளில்  ஒரு டன் ஆகி, 1000 ஆண்டுகளில் ஒரு கிராம் ஆகிவிடும். இப்படிப் பாதிபாதியாகக் குறைவதை அரை வாழ்வு என்பர். அப்படி அவை குறைகையில் கதிரியக்கத்தை (RADIATION) வெளிவிடும்.

இதன் கடுமையான, விரைவான கதிரியக்கம் காரணமாக அதிகம் ஆராய்ச்சி செய்ய இயலவில்லை. 1963ம் ஆண்டில் ஜெர்மனியின் மூநிக் நகர விஞ்ஞானி வேய்கல் , ஒரு மைக்ரோ கிராம் ப்ரொமீதியத்தை  உற்பத்தி செய்தார் . பூமியில் யுரேனியம் என்னும் உலோகத்துடன் இது மிகக் குறைவாகக் காணப்படும். அதுவும் கதிரியக்கம் காரணமாக மறைந்துவிடுகிறது

xxx

ரசாயன தகவல்

தனிமத்தின் குறியீடு Pm  ( பி எம் )

அணு எண் -61

உருகு நிலை – 1168 டிகிரி C

கொதி  நிலை -2700 டிகிரி C

 ப்ரொமீதியம் கதிரியக்க வீச்சு உடைய ஒரு உலோகம் . இதன் உப்புகள் இளம் சிவப்பு அல்லது  சிவப்பு நிறத்தில் இருக்கும். . அதைச் சுற்றி வெளிர் நீல அல்லது பச்சை நிற ஒளி காணப்படும் .

xxxx

பொருளாதாரப்  பயன்கள்

அணுசக்தி உலைகளில் கதிரியக்க மூலகங்கள் பிளவுபடுகையில் மைக்ரோ கிராம் அளவில் ப்ரொமீதியம்  கிடைக்கிறது .

ப்ரொமீதியம் 145-ன் அரை வாழ்வு – 17.7 ஆண்டுகள் ;

ப்ரொமீதியம் 146-ன் அரை வாழ்வு – 5.4  ஆண்டுகள் ;

ப்ரொமீதியம் 147-ன் அரை வாழ்வு – 2.6 ஆண்டுகள்

பெரும்பாலான ப்ரொமீதியம் ஐசடோப்புகள் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆயினும் ப்ரொமீதியம் -147 பெயிண்டுகளில் பயன்படுகிறது. ஒளியை உமிழும் (luminous Paints)  சாயங்களில் இதைக் கலக்கிறார்கள் அப்போது அந்த பெயிண்ட் வெளிர் நீலம் அல்லது பச்சை நிறத்தில் ஒளி வீசும் . ஒரு ஊசி அளவே இருக்கும் அணுசக்தி பாட்டரிகளிலும் (Atomic Batteries)  இதை உபயோகிக்கிறார்கள்.. அவைகளை கடிகாரங்கள், செயற்கை இருதயக் கருவிகள், ஏவுகணைகள் முதலியவற்றில் பயன்படுத்துகிறார்கள். அவற்றின் வாழ்வு 5 ஆண்டுகள். பின்னர் சக்தி போய்விடும்.

ப்ரொமீதியம் -147 சக்தி குறைந்த கதிர்வீச்சு உடையது. ஆகையால் இதை காகிதம் , எஃகுத் தகடுகளின் கனத்தை அறியும் மீட்டர்களில் உபயோகிக்கிறார்கள்.

Xxx

ஸர்ப்ரைஸ் ஸர்ப்ரைஸ் Surprise , Surprise!

சூரிய மண்டலத்தில் (Solar System) ப்ரொமீதியம் எங்கும் இல்லையே என்று  எண்ணிய விஞ்ஞானிகளுக்கு  விண்வெளியிலிருந்து ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.. ஆண்ட்ரோமீடா நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள HR 465 (HR 465 in Andromeda  Galaxy) என்ற நட்சத்திரத்தின்  நிறமாலையை ஆராய்ந்ததில் அங்கு ப்ரொமீதியம் இருப்பதும், அந்த நட்சத்திரம் அதிக அளவில் இதை உற்பத்தி செய்வதும் தெரிந்தது. பல்லாயிரம்  கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள ஓரிடத்தில் எப்படி இவ்வாறு ப்ரொமீதியம் உற்பத்தியாகிறது? நமது சூரிய மண்டல கிரகங்களில் ஏன் இல்லை என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக நீடிக்கிறது!

–subham—

Tags ப்ரொமீதியம் , அரை வாழ்வு, மூலகம், தனிமம், கதிரியக்கம் , ஆண்ட்ரோமீடா  , Promethium

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: