ஓம் நமோ பகவதே வாசுதேவாய – மந்திரத்தின் அபூர்வ சக்தி! (Post No.11,999)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,999

Date uploaded in London –   14 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஓம் நமோ பகவதே வாசுதேவாய – மந்திரத்தின் அபூர்வ சக்தி! 

ச.நாகராஜன் 

விஞ்ஞானம் வளர வளர ஹிந்து மதத்தின் பெருமை கூடிக் கொண்டே போகிறது.

நமது ரிஷிகளின் உபதேசங்களும், வேத, இதிஹாஸ போதனைகளும் புதிய அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்ட வடிவில் உலகை வலம் வரத் தொடங்கியுள்ளது.

 தாய்லாந்தில்  அகில உலக மாநாடு ஒன்றில் மஹரிஷி அத்யாத்ம விஸ்வவித்யாலயம் தனது 101வது ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்துள்ளது. (Maharshi Adhyatma Vishwavidyalay presents its 101st Research paper at an International Conference in Thailand)

அந்த ஆய்வுப் பேப்பர் தரும் சுவையான விவரங்கள் இவை:

 மிக அதிக ஆன்மீக சக்தியுள்ள ஒரு தலைவர், சுயநலம் இன்றி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடுபவர் தனது அகங்காரத்தை அகற்றிப் பணி செய்யும் போது, அவரால் மக்களும் சமூகமும் அதிக நலனைப் பெறும் என்கிறது இந்த ஆய்வு,

இப்படி அதிக ஆன்மீக சக்தி உள்ள ஆண்களும் பெண்களூம் பரஸ்பரம் தங்களது குறைகளைக் களைந்து கொள்ளலாம் என்கிறது இந்த ஆய்வு.

இதை திருமதி ஸ்வேதா க்ளார்க் (Mrs Shweta Clarke) எப்படி ஆன்மீகம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம்/உரிமை அளிக்கிறது?  Research Papter – “How Sprituality empowers women Leaders) என்ற ஆய்வுப் பேப்பரில் தெரிவித்திருக்கிறார்.

2023 மார்ச் 2ஆம் தேதி நடந்த ‘பெண்களின் தலைமை மற்றும் அதிகாரம் அளித்தல் மாநாடு’ (Women’s Leadership and Empowerment Conference) என்ற மாநாட்டில் அவர் பேசினார்.

இந்த மாநாடு டுமாரோ பீபிள் ஆர்கனைசேஷன் (Tomorrow People Organisation) என்ற நிறுவனத்தால் பாங்காக்கில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுப் பேப்பரை சச்சிதானந்த பரப்ரஹ்மன் டாக்டர் அதவலே மற்றும் திரு சீன் க்ளார்க், திருமதி ஸ்வேதா க்ளார்க் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டது. (Sachchidananda Parabrhamam Dr Sthavale and co authored by Mr Sean Clarke and Mrs Shweta Clarke).

ஒருவருக்கு ஆன்மீகம் குறையக் குறைய அவர் அதிக சுயநலத்துடன் செயல்படுகிறார் என்றும் அப்படிப்பட்டவர்கள் தலைவராக வந்தால் எதிர்மறை உணர்வினால் செயல்படுவர் என்றும் ஸ்வேதா தெரிவித்தார்.

இந்த மஹரிஷி அத்யாத்ம விஸ்வவித்யாலயம் உலகெங்குமுள்ள 27 செல்வாக்குள்ள பெண்மணிகளை ஆய்வுக்கு உதவி புரியுமாறு அழைப்பு விடுத்தது.

யுனிவர்ஸ அவ்ரா ஸ்கானர் (Universal Aura Scanner – UAS)  என்ற அதி நவீன கருவியைக் கொண்டு அவர்களை ஆராய்ந்ததில் அவர்கள் மகான்களாக இருக்கட்டும், ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்கட்டும் எதிர்மறை ஒளிவட்டம் – அதாவது அவ்ராவை- கொண்டிருக்கின்றனர் என்பது அறியப்பட்டது.  ஒரே ஒரு பெண்மணி மட்டுமே பாஸிடிவ் அவ்ராவைக் கொண்டிருந்தாராம்!

இது தான் உலகின் இன்றைய நிலை.

இந்த வித்யாலயம் இன்னொரு சோதனையையும் செய்தது. இதன்படி ஆண், பெண்கள் அடங்கிய இரு குழுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மெஷினில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அளக்கப்பட்டனர்.

UAS Readings  யுஏஎஸ் மெஷினில் வந்த அளவுகள் யாருக்கு ஆன்மீக அளவு அதிகம், யாருக்குக் குறைவு என்று காட்டியது.

யாரெல்லாம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு பாஸிடிவ் அவுரா அளவுகளும் யாருக்கு ஆன்மீக ஈடுபாடு இல்லையோ அவர்களுக்கு நெகடிவ் அவுரா அளவுகளும் இருந்தது தெரிய வந்தது.

இன்னொரு சோதனையையும் இந்த வித்யாலயம் நடத்தியது.

இதன் படி ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்ற மந்திரத்தை யார் ஒருவர் 30 நிமிடங்கள் சொல்கிறார்களோ, அவர்களது நெகடிவ் அவுரா மிகவும் வியக்கத்தக்க வகையில் குறைவதும் கண்டுபிடிக்கப்படது.

ஆகவே ஒருவர் தன் சுயநலத்தை விட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டு மந்திர சக்தி மூலம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் தலைவர் ஆகலாம் என்று தங்கள் ஆய்வு முடிவை ஆய்வுக் குழு தெரிவித்தது.

 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!

*** 

நன்றி & ஆதாரம் – கல்கத்தாவிலிருந்து வாரம் தோறும் வரும் ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் – Volume 91 Issue no 2 dated 28-4-2023

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: