அறிவியல் நிரூபிக்கும் ஒளிவட்ட ஆற்றல்! (Post No.12,002)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,002

Date uploaded in London –   15 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

அறிவியல் நிரூபிக்கும் ஒளிவட்ட ஆற்றல்!

ச.நாகராஜன் 

தாய்லாந்தில்  பாங்காக்கில் அகில உலக மாநாடு ஒன்றில் மஹரிஷி அத்யாத்ம விஸ்வவித்யாலயம் 101வது ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்துள்ளதில்  (Maharshi Adhyatma Vishwavidyalay presents its 101st Research paper at an International Conference in Thailand) யுனிவர்ஸல் அவ்ரா ஸ்கேனர் (UAS – Universal Aura Scanner) மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இதை சனாதன் ப்ரபாத் (Sanatan Prabhat 1-15 April 2023) வெளியிட்டது. இந்தக் கட்டுரையை கல்கத்தாவிலிருந்து வாரம் தோறும் வெளி வரும் ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் பதிவு செய்ததோடு பின் குறிப்பாக சென்னையில் ஒளிவட்டம் சம்பந்தமாக நடந்த பழைய ஆராய்ச்சிகளைப் பற்றிய விவரங்களையும் தந்துள்ளது.

அதைக் கீழே பார்ப்போம்.

AURA AROUND BEINGS என்ற தலைப்பில் Hindustan Times தனது 20-2-1984 இதழில் வெளியிட்ட கட்டுரையின் சில பகுதிகளை ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் Volume 54 Issue no 45 இல் பிரசுரம் செய்துள்ளது.

புவியில் இருக்கின்ற அனைத்துப் பொருள்களுக்கும், உயிர் வாழ் ஜீவன்களுக்கும் – அது இலையாக இருந்தாலும் சரி, கல்லாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி – ஒரு ஒளிவட்டம் – அவ்ரா உண்டு.

இந்த மர்மமான ஒளிவட்டம் உயிர் வாழ்கின்ற ஜீவன்களிடத்தில் பிரகாசமாக உள்ளது.  உயிரற்ற பொருள்களில் சற்று மந்த ஒளியுடன் இது இருக்கின்றது.

உயிர் வாழ்  மனிதர்களிடத்தில் அவர்களது ஆன்மீக, மன, உளவியல் ரீதியான முன்னேற்றத்திற்குத் தக்கபடி இந்த பயோ – எனர்ஜி – உயிரியல் ஆற்றல் அல்லது ஒளிவட்டம் அமைந்துள்ளது.

ஒரு யோகியின் ஒளிவட்டம் மிக பிரகாசமாக இருக்கும். இறக்கப் போகின்ற ஒரு மனிதனிடத்தில் இது மிகவும் மங்கலாக ஒளி மங்கி இருக்கும்.

சென்னை அரசு மருத்தவமனை (The Government General Hospital , Madras GH) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை இப்போது கண்டுபிடித்துள்ளது.

இந்த மருத்துவமனை அவ்ரா எனப்படும் ஒளிவட்டத்தை போட்டோவாக எடுக்கவும் அதை ஆய்வு செய்யவும்  ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது பற்றி மூளையியல் பிரிவின் தலைவரான டாக்டர் பி. நரேந்திரன் (Dr P. Narendran, Head of the Institute of Neurology, GH) குறிப்பிடுகையில், இதற்கான விசேஷ வடிவமைப்புடன் கூடிய ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரம் பேர்களது ஒளிவட்டத்தை போட்டோ எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பல லட்சம் ரூபாய் செலவில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டதாக டாக்டர் நரேந்திரன் தெரிவித்தார்.

இதன் முடிவு என்னவெனில் எவர்களெல்லாம் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களோ அவர்களது ஒளிவட்டமானது ஆரோக்கியமற்ற நோயாளிகளின் ஒளிவட்டத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காண்பிக்கிறது என்றார்.

ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு குறிப்பிட்ட ஒளிவட்டம் உருவாகிறது.

இந்த இயந்திரம் ஒரு மனிதனின் கை விரல்களிலிருந்து வெளிப்படும் ஒளிவட்டத்தையும் எடுக்கும் ஆற்றல் பெற்றது.

ஒரு டாக்டரின் ஒளிவட்டம் சற்று மங்கலாக இருந்தது. ஆனால் அவரோ ஆரோக்கியமாகவே மனதளவிலும் உடலளவிலும் இருந்தார். ஆனால் ஒரே வாரத்தில் அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளானார்.

இதுவும் இன்னும் சில இது போன்ற கேஸ்களும் வரப்போகும் வியாதியை முன்கூட்டியே ஒளிவட்டம் தெரிவிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றார் டாக்டர் நரேந்திரன்.

இறந்த ஒருவரின் உடலை போட்டோ எடுக்கும்போது ஆறு  மணி நேரத்திற்குப் பிறகு அந்த உடலிலிருந்து ஒளிவட்டம் நீங்குகிறது.

சம்பிரதாயமான பாரம்பரிய மகான்களின் படங்களும் தெய்வீக வடிவங்களின் படங்களும் அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தோடு காணப்படும்.

ஹ்ருஷிகேசத்திலிருந்த் வந்த ஒரு பெரிய யோகி தன்னைப் போட்டோ எடுக்க சம்மதித்தார். அவரும் போட்டோ எடுக்கப்பட்டார்.

“அவரது ஒளிவட்டம் எவ்வளவு பிரகாசமாக இருந்ததென்றால், அந்த இயந்திரமே ஆட ஆரம்பித்தது!” என்றார் டாக்டர் நரேந்திரன்.

ஆக அறிவியலே நிரூபிக்கும் ஒரு அம்சமாக காலம் காலமாக ஹிந்து மதம் கூறிவரும் ஒளிவட்டம் திகழ்கிறது என்பது ஒரு சுவையான செய்தி தானே!

 *** 

நன்றி & ஆதாரம் – கல்கத்தாவிலிருந்து வாரம் தோறும் வரும் ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் – Volume 91 Issue no 2 dated 28-4-2023

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: