காந்திஜிக்கு பிடிக்காத கிருஷ்ண பரமாத்மா! (Post No.12,009)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,009

Date uploaded in London – –  17 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வெளிநாட்டில் கல்வி கற்ற மஹாத்மா காந்திஜிக்கு இந்து மதம் பற்றியோ, இந்திய வரலாறு பற்றியோ ஆழமான அறிவு கிடையாது என்பதை கீழ்க்கண்ட அவரது எழுத்து காட்டும் .

மஹாத்மா காந்தி 1-10-1925ம் ஆண்டு யங் இந்தியா (Young India) பத்திரிகையில் எழுதுகிறார் :

” நான் இந்தியாவில் வாழ்ந்த ‘குரு’ – க்கள் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள் ; அவர்கள் வரலாற்று நாயகர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று எழுதினேன். ஆனால் மஹாபாரதம் சொல்லும் கிருஷ்ணன் வாழ்ந்தானா என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் வணங்கும் கிருஷ்ணன் வரலாற்றில் வாழ்ந்தவன் அல்ல. தன்னுடைய கெளரவம்  பாதிக்கப்பட்டதால் மற்றவர்களைக் கொல்லும் கிருஷ்ணனை நான் வணங்க மாட்டேன் .காமலீலைகளில் ஈடுபட்டதாக பிற மதத்தினர் குற்றம்சாட்டும் இளம் வயது .கிருஷ்ணனை நான் வணங்க மாட்டேன் .பரிபூரணம் வாய்ந்த அவதாரம், மாசுமருவற்ற ஒருவன், கீதையை போதித்தவன், பல லட்சம் மனிதர்களுக்கு ஊற்றுணர்ச்சி தரும் கிருஷ்ணனை நான்மனதில்  வைத்துள்ளேன். மஹாபாரதம் வரலாற்று குறிப்புதான் என்றோ, அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு சொல்லும் உண்மைதான் என்றோ, அந்த மஹாபாரதத்தில் கிருஷ்ணன் செய்ததாக சொல்லப்படும் செயல்கள் அப்படித்தான் செய்தார் என்றோ,  எவராவது என்னிடம் நிரூபித்தால் அந்த கிருஷ்ணனை நான் அவதார புருஷனாக ஏற்கமாட்டேன். இதற்காக என்னை இந்துமதத்திலிருந்து வெளீயே ற்றினாலும் அந்தக் கிருஷ்ணனை ஒதுக்கித் தள்ளுவேன் .

என்னைப்  பொருத்த மட்டில் மஹாபாரதம் அடையாளபூர்வமாக கதை சொல்லும் (Allegorical) ஒரு சமய புஸ்தகம்தான்; அது வரலாற்றுக் குறிப்பு அல்ல .நம்முடைய மனதிற்குள் நடைபெறும் முடிவில்லாத மனப்போராட்டங்களை அடையாளபூர்வ கதைகள்  ரூபமாக சொல்கிறது. அதிலுள்ள சம்பவங்கள், நமக்குள் நடைபெறுவதை மனிதர்கள் மீது ஏற்றிச் சொல்கிறது இப்போதுள்ள மஹாபாரதத்தை, குற்றம் குறைகளற்ற  ஒரிஜினல் மஹாபாரதம் என்றும் நான் கருதவில்லை. அது பலவித திருத்தங்கள், மாற்றங்களுக்கு உள்ளாகியது என்றே கருதுகிறேன்

யங் இந்தியா, 1-10-1925

XXX

என் கருத்து

காந்திஜி வெளிநாட்டில் கல்வி கற்றவர்;  இந்துப் பாவிகளே! என்று கூச்சலிட கிறிஸ்தவ மத பிரசாரங்களை அதிகம் கேட்டவர். அதனால் மேற்கூறிய கட்டுரையில் சிசுபால வாதத்தையும், கோபிகள் சம்பவத்தையும் குறைகூறி அது உண்மையாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்தக் கிருஷ்ணன் எனக்கு வேண்டாம் என்கிறார். அவர் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் பல சாது சந்யாசிகள் மஹான்கள் எழுதிய விஷயங்களைப் படிக்காதவர் என்பதும் இந்து மதம் பற்றி நுனிப்புல் மேய்ந்தவர் என்பதும் ஆனால் ராமபிரான் மீதும் பகவத் கீதை மீதும் அபாரமான , குருட்டுத்தனமான நம்பிக்கை உடையவர் என்பதும் அவரது பிற கட்டுரைகளில் தெளிவாகத் தெரிகிறது .

மஹா பாரதம் வரலாறு பூர்வமானது என்பதை நூற்றுக்கணக்கான பல்துறை வித்தகர்கள் நிரூபித்துள்ளனர். அதுமட்டுமல்ல துவாரகா (Marine Archaeologist Excavations) கடலடி ஆராய்ச்சிகள் அது மிகவும் பழைய இடம் என்பதை தொல்பொருட் துறை சான்றுகள், விஞ்ஞான சோதனைகள் மூலம் நிரூபித்து விட்டன.. இவை எல்லாம் காந்திஜி எழுத்துக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவை என்றாலும் நம்முடைய முன்னோர்கள் சொன்னது உண்மை என்பதைக் காட்டிவிட்டன .

முஸ்லீகள் மாட்டு மாமிசம் சாப்பிடுவதையும் அவர் ஆதரிக்கிறார் . அதை அடுத்த கட்டுரையில் காண்போம் .

–subham—

Tags – மஹா பாரதம், வரலாறு, தொல்பொருட் துறை, சான்று, காந்திஜி, பிடிக்காத, கிருஷ்ணன், பரமாத்மா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: