சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து! (Post No.12,008)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,008

Date uploaded in London –   17 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சுபாஷித செல்வம்

சந்த்யா காலத்தில் செய்யக் கூடாதவை ஐந்து!

ச.நாகராஜன்

கிடைக்க அரிதான ஐந்து!

கீழ்க்கண்டவை கிடைக்க அரிதானவை.

1) வித்யா – கல்வி

2) துங்கா – உயர்ந்த மாளிகைகள்

3) குங்குமம் – குங்குமம்

4) சஹிமம் பய: – குளிர்ந்த நீர்

5) த்ராக்ஷை – திராக்ஷைப் பழம்

வித்யா வேஷ்மானி துங்கானி குங்குமம் சஹிமம் பய: |

த்ராக்ஷாதி யத்ர சாமான்யமஸ்தி த்ரிதிவதுர்லபம் ||

துன்பங்கள் ஐந்து

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் துன்பங்கள் ஐந்து.

அவையாவன

1) கர்பம் – கர்ப்பத்தில் ஏற்படும் துன்பம்

2) ஜனனம் – பிறவி என்னும் துன்பம்

3) ஜரா – மூப்பு – வயதானதால் ஏற்படும் துன்பம்

4) வ்யாதி – நோய் – நோய்களால் ஏற்படும் துன்பம்

5) மரணம் – மரணம் – மரணத்தினால் ஏற்படும் துன்பம்

பஞ்ச: – கர்பதுக்க – ஜன்மதுக்க – ஜரா துக்க – வ்யாதிதுக்க – மரணதுக்கானி !

      சங்கரரின் விளக்கவுரை – ஸ்வேதாஸ்வதரோபநிஷத்

பெண்ணுக்கு கௌரவம் தரும் ஐந்து காரங்கள்

‘ப’ எழுத்து வரிசையில் ஆரம்பிக்கும் ஐந்து விஷயங்கள் ஒரு பெண்ணுக்குக் கௌரவம் தருபவையாக அமைகின்றன.

அவை யாவை?

1) புத்ரஸு – நல்ல மகனுக்குத் தாயாக இருப்பது

2) பாககுஷாலா – சமைப்பதில் நிபுணியாக இருப்பது

3) பவித்ரா – தூய்மையாக இருப்பது

4) பதிவ்ரதா – கற்புடன் இருப்பது

5) பத்மாக்ஷி – தாமரை போன்ற கண்களுடன் இருப்பது

நாரி கௌரவம் இவையே.

புத்ரஸு: பாககுஷாலா பவித்ரா ச பதிவ்ரதா |

பத்மாக்ஷி பஞ்சபைர்நாரி ப்ருவி சம்யாதி கௌரவம் ||

                      சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 157 / 194

ஐந்து காரங்கள்!

ஐந்து  முக்கிய விஷயங்கள் ‘ம’ என்ற எழுத்து வரிசையில் வைத்து ஆரம்பிக்கின்றன.

1) மத்ய – சாராயம் (குடி)

2) மாம்ஸம் – மாமிசம்

3) மத்ஸ்யம் – மீன்

4) முத்ரா – சமிக்ஞை

5) மைதுனம் – பாலியல் உறவு

மத்யமாம்ஸமத்ஸ்யமுத்ராமைதுனரூபம் |

–    சப்தகல்பத்ருமம்

உலகம் முன்னேறத் தேவையான ஐந்து விஷயங்கள்!

உலகம் முன்னேறுவதற்காக ஐந்து விஷயங்கள் இன்றியமையாதவை.

அவையாவன:

1) ரக்ஷாதிகரணம் – நீதி காக்கப்பட வேண்டும்

2) யுத்தம் – போர் (தர்மம் காப்பதற்காக நடப்பது)

3) தர்மானுசாஸனம் – தர்மத்துடன் கூடிய அரசாட்சி

4) மந்த்ர சிந்தா – மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தல்

5) காலே சுகம் – தகுந்த காலத்தில் சுகத்தை அனுபவிப்பது

ரக்ஷாதிகரணம் யுத்தம் தர்மானுசாஸனம் |

மந்த்ர சிந்தா சுகம் காலே பஞ்சபிர்வர்ததே மஹி ||

       மஹா பாரதம் – சாந்தி பர்வம் 93-24

சந்த்யா காலத்தில் செய்யக்கூடாதவை ஐந்து!

சந்த்யா காலத்தில் ஐந்து விஷயங்களைச் செய்யக் கூடாது.

அவையாவன:

1) ஆஹாரம் – உணவு உண்பது

2) மைதுனம் – பாலியல் உறவு

3) நித்ரா – உறக்கம் – தூங்குவது

4) சம்பாதம் – சாஸ்திரங்களைப் படிப்பது

5) அத்வானி கதி – பயணப்படுதல்

ஆஹாரம் மைதுனம் நித்ராம் சம்பாடம் கதிமத்வநி |

ஏதானி பஞ்ச கர்மாணி சந்த்யாயாம் வர்ஜயேத புத: |

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: