WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,011
Date uploaded in London – 18 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 59
சிங்களரை எதிர்த்து ஓடவிட்ட கோப்பணனின் வீரம்!
ச.நாகராஜன்
ஒரு முறை பாண்டிய நாட்டை யார் ஆள்வது என்ற அரசுரிமை பற்றி பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் சண்டை வந்தது.
குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனின் மனைவி மக்களைக் கொன்று அவனை நாசம் செய்து விட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட சிங்கள தேசத்து அரசனான பராக்கிரம பாகு என்பவன் தனது தண்டநாயகனான இலங்காபுரி என்பவனை அழைத்தான்.
அவனை ஒரு பெரும் படையுடன் அனுப்பினான். இலங்காபுரி இராமேஸ்வரத்தை முதலில் பிடித்தான். பின்னர் அங்குள்ள சில பாகங்களையும் அழித்தான்.
குந்துகாலம் என்னும் ஒரு இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டி அதற்குப் பராக்கிரம புரம் என்ற பெயரை இட்டான்.
இவனை எதிர்த்த பாண்டியராஜன் மற்றும் சுந்தரபாண்டியன் என்ற இரு பாண்டியர்கள் இறந்தனர்.
அந்தச் சமயம் ராஜகேசரி இராஜாதி ராஜன் என்பவன் கொங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.
அவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன் முறை ஆக வேண்டும்.
ஆகவே அவனிடம் குலசேகர பாண்டியன் உதவி கேட்க உடனே ராஜாதி ராஜன் ஒரு பெரும் படையை அனுப்பினான்.
அந்தப் படை திருக்கானப்பேர், தொண்டி, பாசி, பொன்னமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடை ஆகிய இடங்களில் சிங்களைப் படையை எதிர்த்துப் போரிட்டு வென்று சிங்களைப் படையைப் பாண்டிய நாட்டை விட்டுத் துரத்தி அடித்தது.
இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாக இருந்தவர்களுள் ஒருவன் கோப்பணன் என்பவன்.
அவனது வீரத்தைப் புகழ்ந்து கொங்குமண்டல சதகம் பாடல் 59இல் புகழ்ந்து கூறுகிறத்.
பாடல் இதோ:
தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தில் மொய்ம்பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் ;
தென் பாண்டிய மண்டலத்தில் சிங்களவர் புகுந்து தீமை செய்வதைத் தடுக்க பாண்டியனுக்கு முடியாத காலத்தில், பெரும் சேனையைத் திரட்டி அவர்களை திருப்பி ஓடச் செய்தவன் களந்தை என்னும் பதிக்குத் தலைவனும் ஆகிய பூவலன் என்னும் குடியில் பிறந்தவனுமாகிய கோப்பணன் என்பான். அவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.
இந்தச் சண்டை கி.பி. 1190இல் நடந்தது என சாசனத்தை ஆராய்ந்தவர்கள் கூறி நிர்ணயித்திருக்கிறார்கள்.
1898 சென்னை ஆர்க்கலாஜிகள் வருடாந்தர அறிக்கையில், காஞ்சிபுரத்திற்கு அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கோவில் சாசனத்திலும் இந்தப் படை எடுப்பு குறிப்பிடப்பட்டிப்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
இவனது மரபினர் பேரூர் மற்றும் அவிநாசியில் திருப்பணி செய்திருக்கின்றனர்.
.
இந்த மரபினர் இன்றும் கோவை மாவட்டதில் புரவிபாளையம் (பாளையபட்டு) ஜமீன் பரம்பரையாக இருந்து வருகின்றனர். இவர்கள் பாண்டிய வம்சத்தார் என பல விசேஷ உரிமைகளைப் பெற்று வந்தனர்.
விஜய நகரம், மைசூர்,மதுரை நாயக்கர் சமஸ்தானம் மலையாள சமஸ்தானம் உள்ளிட்ட சமஸ்தானங்களில் இவர்கள் சிறப்பு கௌரவம் பெற்றிருந்தனர்.
கள்ளிக்கோட்டை அமீன் சாயபுக்கும் ஶ்ரீரங்கப்பட்டணம் நவாபுக்கும் வாளையாற்றில் நடந்த ஒரு சண்டையின் போது வழி ஒன்று மறிக்கப்பட்டது. உடனேயே புதிய வழி ஒன்று உருவாக்கப்பட்டது.
இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நவாபு சில உதவிகளை இவர்களுக்குச் செய்தான்.
இம்முடி மன்றாடி என்பன போன்ற பல பழைய காலப் பட்டங்களை இவர்கள் பெற்றிருந்தனர்.
‘இம்முடி’ ஜக மண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் என்பதை இந்த வமிச வழி வந்தவர்கள் சென்ற நூற்றாண்டில் கொண்டிருந்தனர்.
பாடலில் குறிப்பிடப்படும் களந்தை என்பது வாரக்க நாட்டில் உள்ள ஒரு ஊர்.
பூவலன் என்று பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது பூவலியர் என்னும் ஒரு ஜாதியைக் குறிப்பிடுகிறது. இதை பூலுவர் என்றும் கூறுவர்.
பூவலியர், மாவலியர், காவலியர், வேட்டுவர், வேடர் என ஐந்து வகுப்பினரை பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்று கூறுவர்.
ஒரு கோவையில், நாணிக்கண் புதைத்தல் துறையில் வரும் பாடல் இது.
பம்பிடச் சிங்களர் தென்னர் களிக்கப் பணுங் களந்தைக்
கம்பக் கரிக்கோப் பணன் வரை யீர் வேள் கலாபத்திலே
செம்பொற் குடத்தைப் பவளத்தை முத்தைத் தெரியவிட்டு
அம்பைப் புதைந்த்து வைத் தீரிந்த வெண்ண மறிந்திலனே
பழம்பெரும் சரித்திரத்தைக் கொண்ட கொங்கு மண்டல வீரர் பலர் இருந்தனர் என்பது கொங்குமண்டல சதகத்தால் நன்கு விளங்குகிறது.
***