முஸ்லீம்கள் மாட்டு மாமிசம் சாப்பிடலாம்: காந்திஜி (Post.12,016)

MAHATAMA GANDHI AND NETAJI SUBHASH CHANDRA BOSE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,016

Date uploaded in London – –  19 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வாழ்க்கை முழுதும் முன்னுக்குப்பின் முரணான கொள்கையுடன் வாழ்ந்தவர் மஹாத்மா காந்தி; ஜனநாயக முறையில் காங்கிரஸ் கட்சி வோட்டெடுப்பில் வென்ற நேதாஜி சுபா ஷ சந்திர போஸை நாட்டிலிருந்து வெளியே ஓடச் செய்தார். பாகிஸ்தான் கொடுத்தால்  செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் ,முஸ்லீம் கலகத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் கொடுக்காவிட்டால்   செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார். தெரு நாய்களைக் கொல்லலாம், வயலுக்குள் புகும் குரங்குகளைக் கொல்லலாம், மனிதர்களைக் கொல்லும் துஷ்டர்களைக் கொல்லலாம், ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்லலாம் என்று சொல்லி தினமும் நூற்றுக்கணக்கான எதிர்ப்புக்  கடிதங்களை பெற்றார் .

பல்லாயிரக்கணக்கான ஹிந்து சீக்கிய பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த அரக்கர்கள் கற்பழித்த கர்ப்பிணிப் பெண்களை இந்துக்கள் ஏற்க வேண்டும் என்று கட்டுரை எழுதினார். இதே போல பசு மாடு என் தாய்க்கும் மேலானவள்; நான் வணங்கும் தெய்வம்; ஆனால் முஸ்லீம்கள் பசு மாட்டை வெட்டிச் சாப்பிடுவதைத் தடுக்காதீர்கள்; அது சரி தான் என்று கட்டுரை எழுதினார். இவை எல்லாம் பிராணி நல ஆர்வலர்களையும் சனாதன இந்துக்களையும் கொதித்து எழச் செய்தன . காந்திஜியே தனக்கு வெள்ளம் போல எதிர்ப்புக் கடிதங்கள் வருகின்றன. அது பிரிட்டிஷ் தபால் இலாகாவின் வருமானத்தைப் பெருக்குகிறது என்று எழுதிவிட்டு  “டேய் கிழவா உன்னை விஷ ஊசி வைத்துக் கொல்லாமல் எப்படிடா டாக்டர்கள் வெளியே விட்டனர்?” என்பன போன்ற கடிதங்கள் குவிகின்றன என்றும் எழுதினார் ..

இதோ காந்திஜியின் மாட்டுக் கறி கட்டுரை

கேள்வி

காந்திஜி அவர்களே ! ஒரு முக்கியமான கேள்வி பற்றி நீங்கள் தெளிவாக்குவதை முஸ்லீம்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இந்து மெஜாரிட்டி அரசாங்கத்தில், முஸ்லீம்களின் தேசீய உணவான மாட்டு மாமிசத்தை சாப்பிட அனுமதி தருவார்களா? இந்த விஷயத்தில் நீங்கள் முஸ்லீம்களுக்கு திருப்தி தரும் முடிவைச் சொன்னால், பல பிரச்சனைகள் தீர்ந்து போகும் . நீங்கள் நடத்தும் ஹரிஜன் பத்திரிகையில் ‘பொட்டில் அடித்தாற்போல’ இந்தக் கேள்விக்கு பதில்  தாருங்கள்

காந்திஜியின்  பதில்

இந்தக்கேள்வி ஏன் வந்தது என்பதே எனக்கு விளங்கவில்லை.  காங்கிரஸ் கட்சியினர் பதவி வகித்த இடங்களில் முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்னும் விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. மேலும் உங்கள் கேள்வி கொஞ்சம் நெருடலாக உள்ளது . ஹிந்து மெஜாரிட்டி (பெரும்பான்மை) அரசு என்பதற்கே இடமில்லை.. இந்தியா சுதந்திரம் அடைந்து, அமைதியான முறையில் வாழ வேண்டுமானால் மத விஷயங்களின் அடிப்படையில் இல்லாமல் அரசியல் அடிப்படையில்தான்  அது வாழ  வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் மத வேற்றுமைகள் பூதாகரமாக உருவெடுத்தபோதிலும் பெரும்பாலான  அரசியல் கட்சிகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள் . மேலும் முஸ்லீம்களின் தேசீய உணவு மாட்டு மாமிசம் என்பதும் தவறு . முதலாவதாக, இந்திய முஸ்லீம்கள் இன்னும் தனி நாடு பெறவில்லை இரண்டாவததாக, மாட்டுக்கறி அவர் களின் சாதாரண உணவும் இல்லை.. பல லட்சம் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் அவர்களும் சாப்பிடுகின்றனர் .

. முஸ்லீம்களில் மரக்கறி உணவு மட்டும் சாப்பிடுவோர் மிகக் குறைவு என்பது உண்மையே.. ஆகையால் கிடைக்கும் இடங்களில் அவர்கள் மற்ற மாமிச உணவுடன் மாட்டுக்கறியையும் சாப்பிடுவார்கள்; ஆயினும் வறுமை காரணமாக ஆண்டின் பெரும்பகுதியில் அவர்கள் மாமிசமே சாப்பிடாமலும் இருக்கிறார்கள்.. இவைதான் சரியான தகவல்கள் .

நீங்கள் கேட்ட கொள்கை ரீதியிலான கேள்விக்கு பதில் சொல்லுவது அவசியம்.. நான் ஹிந்து; மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுபவன்; என் தாயைப் போல (அடக்கடவுளே;  இன்று அவள் என்னுடன் இல்லையே) பசுவையும் வணங்குபவன்  முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் பசுக்களை வெட்டிச் சாப்பிட பரிபூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதே என் நிலை. சுகாதார முறையில், அருகில் வசிக்கும் இந்து மக்களுக்கு கஷ்டம் ஏற்படாமல் அவர்கள் இதைச் செய்யலாம்.வகுப்பு நல்லிணக்கம் நிலவுவதற்காக முஸ்லீம்களுக்கு பசுக்களை வெட்டிக் கொன்று சாப்பிடும் பரிபூரண சுதந்திரம் இன்றியமையாதது ; இது பசுக்களை பாதுக்காக்க உதவும் 1921ம் ஆண்டில் முஸ்லிம்களே முன்வந்து ஆயிரக் கணக்கான பசுக்களைக் காத்தார்கள்

இப்போது இருண்ட மேகங்கள் தலைக்கு மேலே காணப்படுகின்றன அவை விலகி நாம் இந்த துரதிருஷ்டமான பூமியில் வகுப்பு நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்ற நமிப்பிக்கையைக் கைவிட நான் தயாராக இல்லை. என்னுடைய நம்பிக்கைக்கு (Hope) ஆதாரம் என்ன? என்று கேட்டால் , அது எனது சமய நம்பிக்கையின் (Faith) அடிப்படையில் வந்தது. சமய நம்பிக்கைக்கு ஆதாரம் தேவை இல்லை..”

ஹரிஜன் 27-4-1940

xxxx

எனது கருத்து

காந்திஜி அரசியலுக்குத் தகுதியற்றவர். ஒரு சந்நியாசி போல மடம் கட்டி வாழ்ந்திருக்க வேண்டியவர். கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிடும் இருண்ட  மேகம் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை  ஆகும் . மயிலே மயிலே இறகு போடு என்னும் பாலிஸியைப் பின்பற்றி, முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்ன உதவினால், பாகிஸ்தான் வராது என்ற அவரது நம்பிக்கை பொய்யாய் பழங்கதையாய் போனதை நம் அறிவோம். மாட்டுக்கறி கேள்வியை ஒரு சங்கராசார்யார்  அல்லது நல்ல இந்துவின் முன் வைத்திருந்தால், இந்த நாட்டில் முஸ்லீம்கள் அதைச் செய்யக்கூடாது. எப்படி பன்றிக்கறியை முசுலீம் நாடுகள் விரும்பவில்லையா அப்படி நாங்கள் மாட்டுக்கறியை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி இருப்பார்கள். வேறு ஒரு கட்டுரையில் தாயைவிட மேலானவள் கோ மாதா என்று ஆறு காரணங்களை வேறு முன் வைத்துள்ளார்; ஆனால் அதே தாயை   மற்றவர்கள் வெட்டினால் எனக்கு ஒன்றுமில்லை என்று எழுதுகிறார் . இப்படி அவர் எழுதியதும், எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவிட்டு முஸ்லீம்களைக் கண்டிக்காமல் இருந்ததும் இந்துக்களை ஆத்திரம் அடையச் செய்தன. .

மாட்டு மாமிசம் பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகளுக்கு அக்காலத்தில் கடுமையான எதிர்ப்புக் கடிதங்கள் வந்திருக்கும்.அது 1940ம் ஆண்டுப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் தெரியும் .

–subham—

Tags- மாட்டுக்கறி , பசு மாமிசம், முஸ்லீகள், காந்திஜி, கோ மாதா , என் கருத்து, மரக்கறி உணவு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: