ஷீரடியும் பஞ்சவடியும்; 108 மஹாராஷ்டிர புனித தலங்கள் -பகுதி 17 (Post No.12,020)



Panchavati, Sita Cave

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,020

Date uploaded in London – –  20 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART 17

71.ஷீரடி சாய் பாபா சமாதி

கடந்த 100 ஆண்டுகளுக்குள் உருவான புதிய தலம் ஷீரடி என்னும் கிராமம் ஆகும். இங்கு 60 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் சாய் பாபா சமாதி ஆனார். இன்று ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோர்  சமாதியை தரிசிக்க வருகின்ரனர். விழா நாட்கள், விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் கியூவில்  நின்றால்தான் தரிசனம்.

மஹாராஷ்டிரா மாநில அஹமதுநகர் மாவட்டத்தில் நாசிக் என்னும் நகரிலிருந்து 122 கிலோமீட்டர் தொலைவில் ஷீரடி இருக்கிறது . 1858-ம் ஆண்டில் இங்கு பாபா வந்தார். 1918ல் சமாதி ஆனார் . அவருடைய சமாதி மீந்து 36 ஆண்டுகளுக்கு வெறும் புகைப்படம் மட்டுமே இருந்தது. கோபால் ராவ் பூட்டி என்பவர் கனவில் பாபா வந்து சொன்னதால் அவரும் ஷாமா என்னும் நண்பரும் கட்டிடம் கட்டினார்கள் . வசிப்பதற்கான இடமும் கோவிலும் கட்டத் துவங்கி, பாபா இறந்ததால் பின்னர் சமாதி ஆனது . புதிய சமாதி 1954-ல் எழுந்தது. இப்போது தங்கத்தால் வார்க்கப்பட்டு ஜொலிக்கிறது. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, பல ஆ ரத்திகள் (தீபாராதனை) நடைபெறுகிறது . உலகிலேயே பெரிய ஸூரிய அடுப்பு மூலம் சமைத்த பிரசாதம் காலை 10 மணி முதல் விநியோகிக்க ப்படுகிறது.

பாபாவின் சமாதியுடன் சாவடி என்னும் பழைய கிராம அலுவலகம், பாபாவின் வெள்ளிப் பல்லக்கு , பாதுகைகள், சமையயல் பாத்திரங்கள், பழைய புகைப்படங்கள் அடங்கிய மியூசியமும் சமாதி வளாகத்தில் இருக்கின்றன. சாவடியில் பாபவின் நல்ல வரைபடம் இருக்கிறது .பாபாவின் அருமையான பளிங்குச் சிலை அமைந்ததும் ஒரு கனவின் மூலம்தான் நடந்தது . பம்பாய் துறைமுகத்தில் அருமையான இதாலி நாட்டு சலவைக்கற்கள் வந்து இறங்கின. யார் அனுப்பினார், யாருக்காக அனுப்பினார் என்னு தெரியாததால் துறைமுக அதிகாரிகள் அதை

ஏலம் .விட்டனர். அதை வாங்கிய பணக்கார கனவான், அவற்றை பாபா கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார் . பாபா சிலையை வடிக்கும் பணியை புகழ்பெற்ற மும்பை கலைஞர் பாலாஜி வசந்த தலீம் என்பவரிடம் ஒப்படைத்தனர் . அவர் பழையகால கருப்பு- வெள்ளை படம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு எப்படியடா சிலை செதுக்குவது என்று மலைத்து நின்றார். பாபாவே கனவில் வந்து பலவித கோணங்களில் நின்று போஸ் POSE  கொடுத்த பின்னர், பல்லோர் புகழும் சிலை உருவானது

நான் இறந்த பின்னரும் சமாதியிலிருந்து அருள் மழை பொழிவேன் என்று பாபா சொன்னதால் இன்றும் பக்தர் கூட்டம் பெருகி வருகிறது..

(இந்தக் கட்டுரை எழுதும் லண்டன் சுவாமிநாதன், ஷீரடி , த்ரயம்பகேஸ்வரம் , பஞ்சவடி, காலா ராம் கோவில், சீதா தீவி குகை, முக்திதாம் , கோதாவரி நதி தோற்றுவாய், நாசிக் நகர், சிங் சிங்னாபூர் சனைச்சரன் கோவில் ஆகிய அனைத்தையும் மும்பை நகர முக்கியக் கோவில்களையும் 2015ம் ஆண்டில் தரிசித்தார்).

ஷீரடி   முதலிய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் .

XXX

72. பஞ்சவடி

நாசிக் நகரின் அருகில் கோதாவரி நதியின் இடது புறம் உள்ளது பஞ்சவடி. இதன் அர்த்தம் ஐந்து ஆல மரம். இப்போதும் அவைகளைக் காணலாம். நாசிக் என்றால் லெட்சுமணன் சூர்ப்பனகையின் நாசியை/ மூக்கை வெட்டிய இடம் என்று பொருள். தண்டகாரண்யம் என்னும் அடர்ந்த, கொடிய வனவிலங்கு நிறைந்த காடு இது. இப்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் மாறி வருகிறது. ராம், லட்சுமண, சீதா தேவி மூவரும் 14 ஆண்டு வனவாச காலத்தில் பெரும்பகுதியை இங்குதான் கழித்தனர் . ராவணன் வந்து சீதையை தூக்கிக்கொண்டு போன இடமும் இதுதான். லெட்சுமணன் போட்ட லக்ஷ்மண் ரேகா ( எல்லைக் கோடும்) அருகில்தான் இருக்கிறது.

இந்தப் புனித பூமியில் ஏராளமான கோவில்கள் இருப்பதால் இதை மேற்கு இந்தியக் காசி நகரம் என்றும் அழைப்பர். கபாலீஸ்வர் , கங்கா- கோதாவரி , சுந்தர் நாராயண் , திலபந்தேஸ்வர் , தாகூஸ்டேவர் , நீல கண்டேஸ்வர, பாலாஜி, விட்டல் , பஞ்சமுகி ஹனுமான், பத்திரகாளி கோவில்கள் என்று நிறைய கோவில்கள் வந்துவிட்டன .

XXX

73.காலா ராம் கோவில்

கருப்பு ராமன் என்பதை காலா ராமன் என்பர். ராமபிரானே ஒரு கருப்பன் தான் . அவனுக்கும், அவன் தம்பி, லெட்சுமணனுக்கும் , சீதா தேவிக்கும் இரண்டு அடி உயரச் சிலைகள் நிற்கும் இடம் காலா ராமன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சர்தார் ரங்காராவ் என்பவர் 2000 ஆட்களைப் பணியில் அமர்த்தி, அரும்பாடு பட்டுக் கட்டிய கோவில் . 70 அடி கோபுரம் உடையது இது,  தற்காலக் கோவில்களில் முக்கியமானது.

XXX

74. சீதா குகை

சீதையை ராவணன் கடத்திய இடம். ராம, லட்சுமணர்கள் வெளியே சென்றால் , இங்குதான் சீதை பாதுகாப்பாக ஒளிந்து கொள்வாள். அப்படியும் ராவணன் சன்யாசி வேடத்தில் வந்து பிச்சை கேட்டபோது ஏமாந்து போனாள் ; குகைக்குள் நுழைய தலை குனிந்து பணிவாகச் செல்ல வேண்டும் . நாசிக் பஸ் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருக்கிறது. .பஞ்சவடி , காலாராம் கோவில் எல்லாம் அடுத்தடுத்து இருக்கும் இடங்கள்தான் . குகையின் முதல் அடுக்கில் ராமர் , லெட்சுமணர், சீதா தேவி சிலைகள் உள்ளன. அடுத்த அடுக்கினுள்ளே சிவலிங்கமும் இருக்கிறது. அன்றாடம் சிவனை வழிபட்ட பின்னரே ராம லெட்சுமணர், சீதா தேவி சாப்பிட்டனர் . குகைக்கு எதிரே ராமாயணக் காட்சிகளைக் காட்டும் ஓவியங்கள், சிற்பங்கள் இருக்கின்றன.

Ravana in Panchavati

XXX

75.கோதாவரி நதி உற்பத்தி

நான்கு ஆண்டுச் சுழர்ச்சியில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் MINI மினி கும்ப மேளா கோதாவரி நதி தோன்றும் இடத்தில் நடைபெறும் . நாசிக் நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து செல்லுவதற்கு வசதிகள் உண்டு

XXX

76. கண்டோபா கோவில்

தேவ லாலி கண்டோன்மென்ட் பகுதில் இந்தக் கோவில் அமைந்துள்ளது . சிவனின் மற்றோர் வடிவமாகக்  கருதப்படுபவர் கண்டோபா. இது இரண்டு .அரக்கர்களைக் கொல்ல சிவன் எடுத்த வடிவம். கோவில்  500 ஆண்டுப் பழமையானது.. அரக்கர்களை மாய்த்த பின்னர்  சிவன் ஓய்வெடுத்த இடம் என்பதால் இதை விஸ்ராம் காட் என்பர்.

XXXX

77.முக்திதாம் கோவில்

நாசிக் பஸ் நிலையத்திலுந்து 9 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது முக்திதாம் கோவில். இது 1971ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது . இங்கு 12 ஜோதிர் லிங்கத் தலங்களையும் சிற்ப வடிவில் தரிசிக்கலாம். உள்ளே கிருஷ்ணர் சந்நிதியும் இருக்கிறது. அங்கே கிருஷ்ண லீலைகள் வரையப்பட்டுள்ளன . பிரபல ஓவியர் ரகுவீரா மல்காவ்ங்கர் வரைந்த ஓவியங்கள் அவை.

பல இந்தக் கடவுளரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. 200 பேர் தாங்கக்கூடிய தர்ம சாலையும், உணவு விடுதியும் உளது.

XXXX

78.தபோவனக் காடுகள்

கோதாவரி நதி இறங்கும் இடத்தில், பஞ்சவடியிலிருந்து 1. 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

இந்த தண்டகாரண்ய புண்ய பூமி ராமனின் காலடி ச் சுவடுகள் பட்ட இடம் ஆகும். ராம, லட்சுமணர்கள் அன்றாடம் பழங்களைப் பறிக்க வரும் இடம் இதுவே.. இங்கும் ராம லெட்சுமணருக்குக் கோவில் வைத்துள்ளார்கள் . ராம் பர்ண குடில் இருக்கும் இந்த இடத்தில்தான்  , மினி கும்ப மேளா காலத்தில், சாது சந்யாசிகள் முகாமிடுவர் .

இந்த வட்டாரத்தில் கபில தீர்த்தம், குஷாவர்த் தீர்த்தம், புத்தர் சிலைகள் உள்ள  பாண்டவர் குகைகள், சமண மத கோவில், மங்கி துங்கி கோவில் முதலி யனவும் அமைந்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி நாசிக் வட்டாரக் கோவில்களை முடிக்கலாம். ஏனெனில் அருகிலேயே த்ரயம்பகேஸ்வர சிவன் கோயிலும் இருக்கிறது. ஒரே நாளில் தரிசிக்கவும் முடியும்.

TO BE CONTINUED……………………………. tags- ஷீரடி ,சாய் பாபா, சமாதி, .காலா ராம், கோவில்,சீதா குகை, பஞ்சவடி, முக்திதாம் ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: