நம் தாயை விடச் சிறந்தவள் கோ மாதா – மஹாத்மா காந்தி (Post No.12,025)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,025

Date uploaded in London – –  21 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆந்திரப் பிரதேசத்தத்தைச் சேர்ந்த ஹரிஜன பையன் பிரபாகர் காந்திஜியிடம் சொன்னான்- பாபுஜி, நம்முடைய தாயாரைவிட பசு என்னும் கோ மாதா சிறந்தவள் என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் தாயார் ஆனவள் குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பால் தருகிறாள்; ஆனால் பசு மாடோ நமக்கு வாழ்நாள் முழுதும் பால் தருகிறது அல்லவா?

இதைக் கேட்டவுடன் காந்திஜி சொன்னார்:

டேய் பையா! நான் உன்னைவிட கூடவே சொல்லுவேன் டா !

நம்மைப் பெற்ற தாயை விட , பலஅம்சங்களில் சிறந்தவள் கோ மாதா.

நம் தாயார் நமக்குச் சில ஆண்டுகளுக்குப் பால் கொடுத்துவிட்டு, நாம் வளர்ந்த பின்னால் , நம்முடைய உதவியை வாழ்நாள் முழுதும் எதிர்பார்க்கிறாள் .ஆனால் பசு என்னும் தாயோ அப்படி எதிர் பார்க்கவில்லை. புல்லும் தானியமும் அதற்குப் போட்டால் போதும்.

நம்ம தாயார் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறார்.அப்போது நம் சேவையை எதிர்பார்க்கிறாள் பசு என்னும் தாயோ அபூர்வமாகத்தான் நோய்வாய்ப்படுகிறாள் .

அதுமட்டுமல்ல இறந்த பின்னரும் நமக்கு உதவுவது பசு என்பதால்  இடைவிடாத, தொய்வில்லாத உதவியைப் பெறு கறோம். நம் தாயார் இறந்தால் அவளை எரிக்கவோ, புதைக்கவோ காசு வேண்டும். ஆனால் பசு மாடு இறந்தாலோ இறந்தாலும் ஆயிரம் பொன் ; இருந்தாலும் ஆயிரம் பொன். அந்த மாட்டின் ஒவ்வொரு பகுதியையும்  , நாம் பயன் படுத்துகிறோம். அதனுடைய மாமிசம், எலும்பு, குடல், கொம்புகள், தோல் ஆகிய அனைத்தும் பயன்படுகின்றன இதை நான் சொல்லும்பபோது , பெற்று எடுத்த தாயாரை தாழ்த்துவதாக எண்ணி விடாதே. . நான் ஏன் கோ மாதாவை வழிப்படுறேன் என்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொன்னேன் .

ஹரிஜன் பத்திரிகை, 15-9-1940

XXXX

என் கருத்து

கடந்த சில தினங்களில் நான் எழுதிய கட்டுரைகளில் காந்திஜியின் முரண் பாடுகளை எடுத்துக் காட்டினேன். முஸ்லீம்கள் பசுக்களை வெட்டிச் சாப்பிடுவதை தடுக்காதீர்கள் என்று அவர் எழுதிய கட்டுரைகளைக் காட்டினேன். மேற்கூறிய எழுத்திலும் பசு மாமிசம் பயன்படுவதைக்  குறிப்பிடுகிறார். நாம் வணங்கும் தாயை பிறர் வெட்டிச் சாப்பிடுவதை அனுமதிக்க வேண்டும் என்று அவர் சொல்லுவது புரியாத புதிராக உள்ளது; காந்திஜியே புகழ்ந்த மனுவோ ,

மனு நீதி நூலில் ஒரு தாய் ஆயிரம் தந்தைகளுக்கும் மேலானவர் என்று புகழ்கிறார்

இதோ மனுவின் ஸ்லோகம்

उपाध्यायान् दशाचार्य आचार्याणां शतं पिता ।

सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते ॥ Manu 2-१४५ ॥

upādhyāyān daśācārya ācāryāṇāṃ śataṃ pitā |

sahasraṃ tu pitṝn mātā gauraveṇātiricyate || Manu 2- 145 ||

உபாத்யாயான் தசாசார்ய ஆசார்யாணாம் சதம் பிதா

ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கெளரவேணாதி ரிச்யதே 2-145 மநு

பொருள்

உப ஆசார்யார் /ஆசிரியர் என்பவரை விட பத்து மடங்கு பெரியவர் பேராசிரியர் ; அந்தப் பேராசிரியரைவிட நூறு மடங்கு வணங்கப்பட வேண்டியவர் நம்முடைய தந்தை ; ஆனால்  தாயாரோ ஆயிரம் தந்தைகளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டியவர்.– 2-145 மநு

–SUBHAM—

TAGS- கோ மாதா , தாய், மனு, ஆயிரம் தந்தை , மேலானவள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: