கண்டோபா, மசோபா கோவில்: மஹாராஷ்டிர புனித தலங்கள்-பகுதி18 (Post No.12,030)


Masobha Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,030

Date uploaded in London – –  22 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART 18

79. கண்டோபா கோவில்,ஜெஜூரி

புனே நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஜெஜூ ரி கண்டோபா கோவில் இருக்கிறது. ஒரு குன்றின் மீது இரண்டு கோவில்களாக அமைந்துள்ளன. சிவனின் மற்றொரு வடிவம் கண்டோபா;  பலருக்கு குலதெய்வம் ஆவார். மஹாராஷ்டிரத்தில் பா என்னும் முடியும் சொல், தந்தை போன்ற இறைவன் என்பதாகும். தமிழில் அப்பா என்பது போல. இந்தக் கடவுளுக்கு மார்த்தாண்ட பைரவர், மல் ஹாரி என்ற பெயர்களும் உண்டு

ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்கள் விஜயம்  செய்கிறார்கள் . யாத்திரை (ஜாத்ரா) பக்தர்கள் வருகையில், 2 லட்சம் பேர் வருவார்கள்

குன்றின் மேல் அமைந்த காட் கோட் கோவிலுக்குள் செல்ல 400 படிகள் ஏற வேண்டும் . எங்கு நோக்கினும் மஞ்சள் காணப்படும். இதனால் இவரை சோன்யாசி கண்டோபா (ஸ்வர்ண = தங்க நிற ) என்று அழைப்பர்.

போர்க்கோலம் பூண்ட இறைவன் கையில் வாள் இருக்கும் ; பூஜை அங்குள்ள 2 சிவலிங்கங்களுக்கே செய்யப்படுகிறது ; கல்லிலான இரண்டு பெரிய குதிரைகளையும் கோவில் வளாகத்தில் காணலாம்.

கோவிலுக்குச் செல்லும்போது 18 அலங்கார வளைவுகளையும் 350 தீபமாலாக்களையும் (விளக்குத் தூண்கள்) கடந்து சென்றால் பெரிய கண்டோபா உருவம் கையில் கண்ட (வாள் ) தாங்கி நிற்பார். கர்ப்பக்கிரகத்தில் 2 சின்ன லிங்கங்கள் இருக்கும்  நவம்பரில், ஐயப்பன் யாத்திரை போல, இங்கும் பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக வருவர் . ஒவ்வொரு நாளும் 40,000 பேர் வீதம் வருகிறார்கள். சோமவதி  அமாவாசை என்று பல்லக்கு விழா  நடைபெறுகிறது.

இதே வளாகத்திலுள்ள இரண்டாவது கோவில் கடிபதார கோவில் ஆகும். இது மிகவும் உயரத்தில் இருப்பதால் ஏறிச் செல்வது கடினம். இரண்டு கோவில்களில் இதுதான் பமையானது 11 ஏக்கர் பரப்பில் பசுமை சூழ பரந்து விரிந்தது இந்த இடம்.

XXXX

80.கர்மாலா பவானி கோவில்

துல்ஜா பவானியின் மறு அவதாரமாகக் கருதப்படுபவர் கர்மாலா என்னும் இடத்திலுள்ள கமல பவானி கோவில் ஆகும் . அஹமது நகரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவிலும் , புனே நகரிலிருந்து 140 கி.மீ  தொலைவிலும் இருக்கிறது . சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் , ராவ் ராஜ் நிம்பல்கர் இதைக் கட்டினார் கோவிலைச் சுற்றி பெரிய கோட்டை கொத்தளம் உண்டு; ஹோம குண்டம் , தீப மாலாக்களும் இருக்கின்றன .

அற்புத எண் 96

இந்தக் கோவில் பற்றிய அதிசயம் எண் 96 ஆகும்.மூன்று திசைகளில் கோபுரங்களுடன் வாசல்கள் இருக்கின்றன மேலைக் கோபுரம் கலை வேலைப்பாடு மிக்கது . சக ஆண்டு 1740 முதல் தொங்கும் பெரிய மணி , சபா மண்டப த்தில் இருக்கிறது விஷ்ணு, சிவன், கணபதி, லட்சுமி சிலைகளும் நிற்கின்றன

கமலா பவானி கோவிலில் தூண்களின் எண்ணிக்கை 96.அதே போல ஜன்னல்களின் எண்ணிக்கை 96. கோவிலுக்குச் செல்லும்  படிகளின் எண்ணிக்கையும்  96. கோவிலில் 96 படங்கள் காணப்படுகின்றன . பெரிய கிணறும் காண வேண்டிய இடமாகும்.

XXX

81.ஆர்ய துர்கா கோவில்

தேவி ஹசொல் கிராமத்தில் ஆர்ய துர்கா கோவில் இருக்கிறது. ரத்ன கிரியிலிருந்து 52 கிலோமீட்டர் ; நவராத்ரி விழாக்காலத்தில் அஷ்டமி திதியன்று இங்கும் பலாவிலி நவதுர்கா கோவிலிலும் பெரிய விழாக்கள் நடைபெறும் பல பிராமண குடும்பங்களுக்கு குல தெய்வம் இவள் . இங்கு செல்வோர், பார்க்க வேண்டியவை – அருகருகே அமைந்த மஹா காளி , கணபதி, மார்லேஸ்வர் கோவில்களும் முக்கியமாகும் . வ்ரத்ச்சாரு என்ற அசுரனை இந்த தேவி அழித்ததாக தல புராணம் சொல்லும் .

XXX

82.சீதள தேவி கோவில்

கேள்வே என்னும் இடத்தில் சீதள தேவி கோவில் அமைந்துள்ளது மும்பை நகரிலிருந்து 75 கிலோ மீட்டர்;

பால் கர் நகரிலிருந்து 12 கிலோ மீட்டர்.மிகப்பழமையான கோவில்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தூர் மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் திருப்பணி செய்தார் .சீதள என்றால் குளிர்ச்சி.

1986ம் ஆண்டில் சீதள தேவி கோவில், அருகிலுள்ள ஹனுமான் மற்றும் வாலகேஸ்வர் கோவில்களும் ராமகுண்டமும் புதுப்பிக்கப்பட்டன.

சித்தி விநாயகர் கோவிலும் அருகில் இருக்கிறது ராமர் வழிபட்ட வாலகேஸ்வர் சிவன் கோவில் அருகில் இருக்கிறது ராமர் காலத்திலிருந்து சிவன் தலையிலிருந்து நீர் ஊற்றுப்பெருக்கெடுத்து வருகிறது. எப்போதும் குளிர்ச்சி.

எப்போதாவது வறட்சி ஏற்பட்டு, மழை வர ஏங்கினால், அப்போது வா லகேஸ்வர் உருவத்தை சீதள கோவிலுக்கு எதிர்ப்புறமுள்ள ராமகுண்ட குளத்தின் நீரில் மூழ்கடித்து விடுவர்  ; கைமேல் பலன் தரும் கடவுள், இரண்டு மூன்று நாட்களுக்குள் கொட்டித்தீர்த்து விடுவாராம்.

வால்கேஸ்வரின் வடபுறத்தில் பார்வதி தரிசனம் தருகிறாள்

கோவலன் கோவில்

சீதள தேவிக்கு ஆறு சகோதரிகளும் ஒரே சகோதரனும் உண்டு.சகோதரன் பெயர் கோவல . அவன் பால்காரன் . (கோவலன் = கோபால ). இந்தக் கோவில் சீதள தேவி சந்நிதிக்கு வெளியே இருக்கிறது . முதலில் அங்கே தேங்காய் உடைத்த பின்னரே சந்நிதிக்குள் செல்வர்.

XXX

மசோபா கோவில்கள்

கிராம மக்கள் வழிபடும் கடவுள் மஸோபா.எருமைகளின் தலைவன்என்பது இதன் பொருள்.. இவை மிகவும் சின்னக் கோவில்கள். மரத்துக்கடியில் இருக்கும். இன்ன வடிவம் என்ற இலக்கணம் எதுவுமில்லை. உருவமற்ற கல்லைப்  போன்ற கடவுள் என்று சொல்லலாம். உருவம் இருந்தால், வட்ட வடிவில் இருக்கும்  தமிழ் நாட்டில் வேப்ப மரத்துக்கு அடியில் அமைந்த கோவில்களை ஒப்பிடலாம். இங்கு ஆடு, கோழி முதலியவற்றை வெட்டி காணிக்கை செலுத்துவர். பல இடங்களில்  வெள்ளி முகம் இருக்கும் பிராமணரல்லாத பூசாரிகள் நிர்வகிக்கும் கோவில்கள் இவை .

மஸோபா என்பவர் சிவன் என்றும், அவருடைய மனைவியான ஜோகுப்பாய் , துர்க்கையின் வடிவம் என்றும்,மஹாராஷ்ட்ர கிராம மக்கள் நம்புகின்றனர் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் தெய்வம் என்று கருதும் மக்கள், மதுபானம் முதலியவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர் மஸோபா முகத்தில் சிவப்பு வர்ணம் பூசப்படுகிறது  .

XXXX

83. கரவதே மஸோபா கோவில்

புனே மாவட்டம் கரவதேயில் இக்கோவில் இருக்கிறது பேய் விரட்டல் பில்லி சூனியம் வினை தீர்த்தல் முதலியன இக்கோவிலில் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் அவைகளைத் தடை செய்தபோதும் மக்கள் தொடர்ந்து , செய்வினைகளை அகற்ற பல வழிபாடுகளை செய்கின்றனர் .

XXX

84.ஸ்ரீநாத் மஸோபா கோவில்

புரந்தர் அருகில் வீர் என்னும் கிராமத்தில் இக்கோவில் உளது; மாசி மாத பெளர்ணமியில் பெரிய விழா நடக்கிறது

XXX

85.தானே வட்டார மாஸே கோவில்

XXX

86.கோல்வாடி  மஸோபா கோவில்

புனே வட்டார ஹவேலி தாலுகாவில் கோல்வாடி  கிராமம் இருக்கிறது

மஸோபா என்னும் கடவுள் இந்து மத புராணங்களில் எங்கும் இல்லை. இந்த வழிபாட்டின் தோற்றம் பற்றி வெறும் ஊகங்களே பேசப்படுகின்றன . கிராம மக்களின் பழைய நம்பிக்கைகள், அப்படியே தொடர்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்  .

பிராமண மஹான் ஆன ஞானேஷ்வரின் போதனைகளுக்கு சில பிராமண ர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர் எருமை மாட்டுக்கு வேதம் சொல்லிக்கொடுத்து அதை வேத முழக்கம் செய்ய வைத்தார் என்பது அந்த மகானின் அற்புதங்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது

XXX

87. அமந்த்ராதேவி கலுபாய் கோவில்

சாதாரா மாவட்டத்தில் அமந்தர் தேவ்  கிராமம் இருக்கிறது வை என்னும் ஊரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவு.; கடல் மட்டத்துக்கு 4650 அடி உயரத்தில் மலை மீதமைந்த கோவில் இது.

பாண்டவ் காட் கோட்டை, புரந்தர் கோட்டைகளின் பின்னணியில் அருமையான இயற்கைக் சூழ்நிலையில் உள்ள கோவில் . 400 ஆண்டுப் பழமையானது என்பதும், சிவாஜி மஹராஜ் காலத்தில் கட்டப்பட்டது என்பதும் செவி வழிச் செய்தி . கோவிலுக்கும் அதைச் சூழ்ந்த சோலைக்கும் அற்புத சக்திகள் உண்டு என்பது மக்களின் நம்பிக்கை. கலுபாய்க்கு இரண்டு வெள்ளி முகக்கவசங்கள் இருக்கின்றன. அவற்றை பூசாரிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள்

ஜனவரியில் ஆண்டுதோறும் 10 நாள் ஜாத்ரா (யாத்திரை) நடக்கையில் பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர் ; பெளர்ணமி நாளன்று 24 மணி நேரக் கொண்டாட்டம் நடைபெறும் ஆடு, கோழி, கிடா வெட்டி சாமி கும்பிடுவர் . காளீஸ்வரி தேவி என்பதை கலுபாய் என்பர்; போலியும் தயிர் சாதமும் சிறப்பு பிரசாதங்கள்

Xxxxx

88.மடோபா மந்திர் , நைதலே

மடோபா என்பதும் மஸோபா போல கிராம தெய்வம்தான். புனேயில் ராஜிவ் காந்தி ஐ.டி . பார்க்கில் ஒரு கோவில் இருக்கிறது அருகிலுள்ள கிராமங்களுக்கும்  அவரே தெய்வம். பெளஸ சுக்ல சதுர்த்தியில் பெரிய விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

தொடரும் …….

TAGS- கோவில் , மடோபா, மஸோபா , கண்டோபா ஜெஜூரி, கலுபாய்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: