Post No. 12,034
Date uploaded in London – – 23 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
காந்திஜி 20-2-1930 ல் யங் இந்தியா பத்திரிகையில் எழுதியது :-
“ஆங்கிலப் பத்திரிகைகளில் சில சுவையான செய்திகள் வந்த்துள்ளன. ஆசிரமத்தில் மீராபாய் என்ற பெயருடைய மிஸ். ஸ்லேட் Miss Slade இந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்ற செய்திகள் அவை. அவள் அப்படி மதம் மாறவில்லை என்று நான் சொல்கிறேன்.அவள் இந்த ஆஸ்ரமத்துக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தாள் . இப்பொழுது நல்ல/சிறந்த கிறிஸ்தவர் ஆகிவிட்டார் என்றே நினைக்கிறேன்.. அவள் விஷயம் தெரியாத இளம் பெண் இல்லை .அவளுக்கு வயது முப்பதைத் தாண்டிவிட்டது. மேலும் அவள் எகிப்து, பாரசீகம் (ஈரான் ), ஐரோப்பிய நாடுகளில் தனி ஒருத்தியாக சுற்றுப்பயணம் செய்து மரங்களையும் பிராணிகளையும் நண் பர்கள் ஆக ஆக்கிக்கொண்டிருக்கிறார் . என்னிடம் முஸல்மான் (முஸ்லீம்), பார்ஸி , கிறிஸ்தவ இளம் வயதினர் இருக்கிறார்கள் .இந்து மதத்தைத் தழுவுங்கள் என்ற கோரிக்கை அவர்களுக்கு முன்னால் எப்போதும் வைக்கப்பட்டதில்லை அவர்களுடைய சொந்த மதப் புஸ்தகங்களை படிக்க வேண்டும் என்பதைச் சொல்லி ஊக்குவித்து வருகிறோம் . அவர்களுடய மதப் புஸ்தகங்களைப் படித்து , முன்னைவிட அதிக மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் சிறுமிகளையும் ஊக்குவிப்பதோடு மாற்று மதப் புஸ்தகங்களை மரியாதையுடனும் அனுதாபத்தோடும் படிக்க வேண்டும் என்றும் ஊக்குவிக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவுகூறுகிறேன்..
இப்போது எங்கள் ஆஸ்ரமத்தில் பல்வேறு மதத்தினர் இருக்கிறார்கள்; மதமாற்றம் அனுமதிக்கப்படுவதில்லை ; பின்பற்றப்படுவதும் இல்லை , எல்லா மதங்களும் உண்மையானவை தெய்வீகமானவை ;அவை அனைத்தும் குறையுள்ள மனிதர்களை நிறைவான மனிதர்களாக மாற்றும்போது கஷ்டப்பட்டிருக்கின்றன.என்பதையும் அறிவோம். மிஸ் ஸ்லேடின் பெயர் இந்துப் பெயரல்ல; அது இந்தியப் பெயர். அவரே விரும்பியதாலும் வசதியின் பொருட்டும் அந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது” .
யங் இந்தியா 20-2- 1930
Xxx
என் கருத்து ; எனது நினைவலைகள்
காந்திஜி இதை எழுதி 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருடைய கொள்கை படுதோல்வி அடைந்தது என்பதை இன்றைய உலகம் காட்டுகிறது. அவருடைய படம் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள மனிதர்கள், இன்று இதை அப்படியே பின்பற்றுகிறோம் என்று சொல்லவும் முடியாது. மத மற்ற வேகத்தையும் மத ஊர்வலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பார்க்கும்போது காந்திஜியின் கொள்கைகள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியை நினைவுபடுத்தும். எல்லா மதங்களும் உண்மையானவை ; தெய்வீக மானவை என்பதை இந்து மதக்கூட்டங்களில் கேட்கலாம். மசூதியிலோ சர்ச்சிலோ கேட்க முடியாது. படு தோல்வி அடைந்த காந்திஜியின் படத்தை இனியும் அலுவலங்களில் வைப்பதும், மேலும் மேலும் சிலைகளைத் திறப்பதும் ஏமாற்று வேலை மட்டுமல்ல; காசுக்குப் பிடித்த கேடும் தான் ; டேய், பையா! காசைக் கரியாக்காதே ; பட்டாசு வாங்கிக் கொளுத்து என்பது போலத்தான் .!
(இளம் வயதில் என் தந்தையுடன் மதுரையில் அர்பன் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அலுவலத்துக்குச் சென்று , கொடியும் பிடித்து, மஹாத்மா காந்திக்கு ஜே என்று கோஷமும் போட்டு, அவர்கள் கொடுத்த மிட்டா யையும் வாங்கிச் சாப்பிட்டதையும் நினைத்து, சிரித்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.).
-subham–tags- எனது நினைவலைகள், மிஸ். ஸ்லேட், மீராபாய், ஏட்டுச் சுரைக்காய் ,காசைக் கரியாக்காதே