இடையர்கள் கொண்டாடும் வினோத மஞ்சள் திருவிழா (Post No.12,049)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,049

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிர மாநிலத்தில் இடைக்குல மக்கள் ஒரு விநோதத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ; அப்போது ஊரே மஞ்சள் வர்ணமாகி விடுகிறது ; இடைக்குல பாபா /சுவாமிகள் ஒருவர், இனி என்ன நடக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவார். இதோ சுவையான  விவரம் :-

கோலாப்பூர் மாவட்டத்தில் பட்டண கோடொலி என்ற கிராமம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் விட்டல் வீரதேவ மஹாராஜின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பது இடைக்குல மக்களின் நம்பிக்கை.

மஹாராஷ்டிரா , கோவா, கர்நாடகா , ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு இடையர்கள் ஜாதிக்கு வீரதேவ் குல தெய்வம் ஆகும் .விழா நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்த பட்டண கோடொலி கிராமத்துக்கு நடந்து வருகிறார்கள் அவர்கள் ஒரு விஷேச அலங்காரக்கு டையையும் எடுத்து வருவார்கள். கிராமீய பாடகர்கள் இசைக்கருவிகள், கொட்டு மேளங்களுடன் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள். கழைக் கூத்தாடிகள் சர்க்கஸ் வித்தைகளைக் காட்டுவார்கள். பண்டார என்னும் விசேஷ மஞ்சள் தூளை நினைத்த இடமெல்லாம் அள்ளி வீசுவார்கள். வியாபாரிகள் தெருவெங்கும் கடை விரிப்பர்..

சோலாப்பூர் அஞ்சன் கோவ்  கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கேலோபா ராஜபாவ் வாக்மோடே ( Sri Keloba Rajabau Waghmode) என்பவர் அபூர்வ சக்தி கொண்ட சாமியார் என்று கருதப்படுகிறார். அவர் 17 நாட்களுக்கு நடையாக நடந்து, இந்த பட்டன் கோடொலி கிராமத்துக்கு வருகிறார். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அவர் அமர்கிறார் .விழாக்காலம் முழுதும் அவர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து ஆசி வழங்குவார். மக்கள் அவர் மீதும் மஞ்ச ள் பொடியைத் தூவுவர். முக்கிய நாளன்று அவர் திடீரென சாமி வந்தவர் போல ஆடுவார். துள்ளிக் குதிப்பார். பத்து நிமிட நேரத்துக்கு அவர் பல ஆரூடங்களைச் சொல்லுவார். பெரும்பாலும் கன்னட  சொற்கள் கலந்த இந்த மொழி யாருக்கும் புரியாது. அருகிலுள்ள பூஜாரி,  புரியும் மொழியில் வியாக்கியானம் செய்வார். அதில் வருமாண்டில் பெய்யக்கூடிய மழை விவரம், விளைச்சல் விவரம், வியாபார நடப்புகள்  போன்றவை இருக்கும். அவர் சொல்லும் விஷயங்கள் 90 சதவிகிதம் சரியாக இருக்கிறது என்று இடையர்கள் கூறுகின்றனர்.

பாபாவிடம் ஒரு புனித வாளைக் கோவில் பூஜாரி  கொடுப்பார். அப்போது அவருக்கு சாமி வரும். உடனேயே அவர் சொல்லுவது எல்லாம் பலிக்கும் என்று பக்தர்கள் நம்புவர். இது போல தமிழ் நாட்டுக்கு கிராமீய கோவில்களிலும் சாமி வந்து ஆடுவோர், கிராமத்துக்கு வரும் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதை காணலாம் 

கிட்டத்தட்ட தமிழ் பஞ்சாங்கங்கள் சொல்லுவது போல இவரும் பல விஷயங்களை பேசுகிறார். இந்த ஆரூட, சாமி ஆடும் வேலை முடிந்தவுடன் அவர் சொந்த கிராமத்துக்கு நடந்து செல்லுவார்.

அருகிலுள்ள மண்டபத்தில், பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள் ;ஆங்காங்கே சமைத்துச் சாப்பிடுவர். விழாவின் போது பயன்படுத்தும் பொடி  வெறும் மஞ்சள் கிழங்குப் பொடி மட்டுமன்று . அதில் தேங்காய்த் தூளும் இருக்கும். இதை பிரசாதமாகப் பயன்படுத்துவோர் ஆட்டு ரோமத்துடனும் சாமிக்குப் படைப்பர். இந்த வட்டாரம் ஆட்டுரோம கம்பளத்துக்கும் பெயர் பெற்ற இடம். மஞ்சள் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

விழா நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலிருந்தே மக்கள் யாத்திரையைத் துவக்கி விடுவார்கள் .

மண்டபத்தில்  உள்ள கடவுள் சிலை மீது பொடியைத்தூவி, இறைவன் பாதத்திலிருந்து பிரசாதம் எடுத்துச் செல்லுவார்கள் .

–subham—

Tags – மஞ்சள் பொடி , திருவிழா , இடையர் , பாபா, ஆரூடம், ஆட்டு ரோமம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: