கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****

 

 

 

மஹாத்மாவின் மரணம்: நான்காவது குண்டு! (Post No.4287)

Written by S.NAGARAJAN

 

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 6-47 am

 

 

Post No. 4287

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான்காவது குண்டு!

 

ச.நாகராஜன்

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை மஹாத்மா காந்திஜி கோட்ஸேயினால் சுடப்பட்டார்.

ஹே ராம் என்று ராம நாமத்தை உச்சரித்த அவரை மரணம் தழுவியது.

 

வரலாறு நமக்குத் தரும் இந்தச் செய்தியைத் “தட்டிக்” கேட்கிறார் நவீன அபிநவ் பாரத்தின் தலைவ்ரான டாக்டர் பங்கஜ் பட்னிஸ்.

கோர்ட்டின் வாசலைத் “தட்டி”  நீதி கேட்ட அவரை ஹை கோர்ட் நிராகரித்து விட்டது – அவரது கேஸை டிஸ்மிஸ் செய்து.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு 8-10-2017 அன்று அவர் அளித்த பேட்டியில் பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

 

அவர் தந்த விவரங்களின் அடிப்படையிலான ஒரு சுருக்கம் இதோ:

 • காந்திஜி கோட்ஸேயின் குண்டுகளால் சுடப்பட்டு இறக்கவில்லை.
 • நான்கு குண்டுகள் சுடப்பட்டன. கோட்ஸே சுட்டது மூன்று குண்டுகளே.
 • நான்காவது குண்டு தான் அவர் மரணத்திற்குக் காரணம்.
 • இரண்டாம் உலகப் போரில் இயங்கிய பிரிட்டிஷாரின் சதிகார கவிழ்க்கும் பிரிவான ஃபோர்ஸ் 136 க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று ஆராய வேண்டும்.
 • ம்ஹாத்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
 • சம்பவத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவரான மனுபென் காந்தியை பிராஸிக்யூஷன் தரப்பு விசாரணையின் போது அழைக்கவே இல்லை.
 • ஜனவரி 30ஆம் தேதியன்று மதியம் மூன்று மணிக்கு அயல்நாட்டு சாது ஒருவர் மஹாத்மா கொலை செய்யப்பட்டது பற்றிய துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்.

(மஹாத்மாஜி மரணம் அடைந்ததோ மாலை 5.12க்கு!)

 • மஹாத்மா பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் மரணம அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜின்னாவும் அவர் வருவதை ஏற்றுக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்குப் பிடிக்கவில்லை.
 • நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது. பிரிட்டிஷாரின் சதி வேலையினால் தானா என்பதை ஆராய வேண்டும்.
 • கோட்ஸே சுட்ட மூன்று குண்டுகள் காந்திஜியின் உடலில் இருந்தன. துப்பாக்கியில் மொத்தம் ஏழு குண்டுகள்.

நான்கு குண்டுகள் துப்பாக்கியிலிருந்து கைப்பற்றப்பட்டன.

கணக்கு சரியாகி விட்டது. ஆதலால் நான்காவது குண்டைச் சுட்டவன் யார் என்பதை ஆராய வேண்டும்.

 

 • இது தவிர இந்த சதியின் அம்சமாக வேறு பல விஷயங்களும் அரங்கேற்றப்பட இருந்தது. ஆகவே விஜயலக்ஷ்மி பண்டிட், மற்றும் புனே கலெக்டரின் மனைவியான சரளா பாவே ஆகியோர் கூறியதைப் பற்றியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இப்படி வாதங்களை அடுக்குகிறார் பங்கஜ். ஆனால் அவரது கேஸ் தள்ளுபடியாகி விட்டது.

 

நமது கேள்வி: தேசத்தையே எழுப்பி, விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசத்தின் மாபெரும் மஹாத்மாவின் மரணம் குறித்து ஒரு அறிக்கை மூலம் பரபரப்பான வாதங்களுக்கு  முற்றுப்புள்ளியை நமது அரசு வைக்கலாமே என்பது தான்!

எதிர்காலத்திலும் வேறு யாரும் வேண்டுமென்றே பரபரப்பான செய்திகளை பரப்பாமல் இருக்கவும் இது துணை புரியுமே!

நான்காவது குண்டு புரளிக் குண்டா, பிரிட்டிஷ் குண்டா, தெரியவில்லை!

***

 

 

 

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை- Part 2 (Post No.4284)

Written by S.NAGARAJAN

 

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 5-42 am

 

 

Post No. 4284

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாப ராட்ஸசர்கள் பட்டியல் – 2

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள் -2

 

by ச.நாகராஜன்

 

 

ஒரே கட்டுரையில் முழுப் பட்டியலையும் தந்திருக்கலாமே என்றால் முடியவில்லை!!

 

15 பாப ராட்ஸசர்களின் பெயரை அடிக்கும் போதே உள்ளம் நொந்து விட்டது.

 

அதனால் மீதி ராட்ஸசர்களின் பட்டியலை இப்போது தருகிறோம்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.

 

16) இடி அமீன் Idi Amin (1971-1979)

உகாண்டா

தனிநபர் சர்வாதிகாரம்

3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை பலி. ( தன்னை எதிர்த்தோர், அரசியல் எதிரிகள்)

17) ஜெனரல் யாஹ்யா கான் General Yahya Khan (1970-1971)

பாகிஸ்தான் சர்வாதிகாரி

ராணுவ சர்வாதிகாரம்

3 லட்சம் கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகளைப் படுகொலை செய்தார்.

18) பெனிடோ முஸோலினி Benito Mussolini (1922-1945)

இத்தாலி – பாஸிஸ சர்வாதிகாரி

2,50,000 பேர் பலி.

எதியோப்பியர்கள், லிபிய மக்கள், யூதர்கள்,அரசியல் எதிரிகள் ஆகியோர் படுகொலை.

19) ஜெனரல் மொபுடு செசெ செகோ General Mobutu Sese Seko (1965-1997)

ஜைரே, காங்கோ

தனிநபர் சர்வாதிகாரம் 2,30,000 பேர் பலி.

அரசியல் எதிரிகள்

20) சார்லஸ் டெய்லர் Charles Taylor (1989-1996)

லைபீரியா

தனிநபர் சர்வாதிகாரம்

2,20,000 பேர் பலி

அரசியல் எதிரிகள், ராணுவ எதிர்ப்பாளர்கள், சாதாரண பொது மக்கள்

 

21) ஃபோடே சாங்கோ Foday Sankoh (1991-2000)

சியார்ரா லியோன் Sierra Leone

தனி நபர் சர்வாதிகாரம்

2,10,000 பேர் பலி

(அரசியல் எதிரிகள்)

22) ஹோ சி மின் Ho Chi Minh (1945-1969)

வடக்கு வியட்நாம்

கம்யூனிஸ ஆட்சி

இரண்டு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள், தெற்கு வியட்நாமியர்

23) மைக்கேல் மொகாம்பரோ Michel Micombero  (1966-1976)

புருண்டி Burundi

தனிநபர் சர்வாதிகாரம்

24) ஹாஸன் அல்டுராபி Hassan Alturabi (1989-1999)

இஸ்லாமிய சர்வாதிகாரம்

ஒரு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள் – மதத்தை எதிர்த்தோ படுகொலை

 

25) ஜீன் – பெடல் – பொகாஸா Jean – Bedel Bokassa (1966-1979)

மத்திய ஆப்பிரிக்க குடியரசு / எம்பயர் Central African Republic / Empire

தனிநபர் சர்வாதிகாரம்

90,000 பேர் பலி

 

26) எஃப்ரெய்ன் ரியாஸ் மாண்ட் Efrain Rios Montt  (1982-1983)

குவாதமாலா Guatemala

ராணுவ சர்வாதிகாரம்

70000 குடியானவர்கள, அரசியல் எதிரிகள் பலி

27) ஃப்ராங்கோய்ஸ்/ ஜீன் க்ளாட் டுவாலியர் Francois/ Jean  Claude Duvalier ( ‘papa Doc’ பாபா -டாக் 1957-1971) பேபி டாக் ‘Baby Doc’ 1971-1986)

ஹைதி Haiti

தனிநபர் சர்வாதிகாரம்

60000 அரசியல் எதிரிகள் பலி

28) ராஃபேல் ட்ருஜில்லோன் Rafael Trujillo (1930-1961)

டொமினிகன் குடியரசு Dominican Republic

தனிநபர் சர்வாதிகாரம்

50000 அரசியல் எதிரிகள் பலி

29) ஹிசானே ஹாப்ரே  Hissane Habre (1982-1990)

சாட் Chad

ராணுவ சர்வாதிகாரம்

40000 அரசியல் எதிரிகள் பலி

30) ஜென்ரல் ஃப்ரான்சிஸ்கோ ஃப்ராங்கோ General Francisco Franco (1939-1975)

ஸ்பெயின்

பாஸிஸ ராணுவ சர்வாதிகாரம்

35000 அரசியல் எதிரிகள் பலி

31) ஃபிடல் காஸ்ட்ரோ Fidel Castro (1959-2006)

க்யூபா Cuba

கம்யூனிஸ ஆட்சி

30000 அரசியல் எதிரிகள் பலி

 

32) ஹபீஸ்/ பாஷா அலாஸாட் Hafez/ Bashar Alassad (1970-2000)

சிரியா

(ஹபீஸ் -1970-2000; பாஷர் – 2000–)

பலாத் கட்சியின் சார்வாதிகாரம் (Balath party dictatorship

25000 முதல் 30000 பேர் பலி (அரசியல் எதிரிகள் – உட்பிரிவு எதிரிகள்)

33) ஆயதுல்லா ருஹொல்லா கொமெய்னி Ayatollah Ruhollah Khokeini (1979-1989)

இரான்

இஸ்லாமிய சர்வாதிகாரம்

20000 அரசியல் எதிரிகள்/ மதத்திற்கு எதிரானவர்கள் பலி

34) ராபர்ட் முகாபே Robert Mugabe (1982)

ஜிம்பாப்வே

தனிநபர் சர்வாதிகாரம்

15000 அரசியல் எதிரிகள், ஆதிவாசி எதிரிகள் பலி

35) ஜெனரல் ஜார்ஜ் விடேலா General Jorge Videla (1976-1983)

அர்ஜெண்டினா

ராணுவ சர்வாதிகாரம்

13000 பேர் பலி

இடதுசாரி அரசியல் எதிரிகள்

36)ஜென்ரல் அகஸ்டோ பினோசெட் General Augusto Pinochet (1973-1990)

சிலி Chile

ராணுவ சர்வாதிகாரம்

30000 அரசியல் எதிரிகள் பலி

 

இந்தப் பட்டியலில் இன்னும் கொஞ்சம் பேரைச் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது சரி தான்! இதில் விட்டுப் போனவர்களை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனித குலத்தின் சாபக்கேடு இந்த் பாப ராட்ஸசர்க்ள்.

இஸ்லாமிய மதத்தின் பெயராலும், கம்யூனிஸத்தின் பெயராலும், தனிநபர் அதிகார ஆசையாலும் எத்தனை லட்சம் பேர் பலியானார்கள், பார்த்தீர்களா?

நமக்குத் தெரிந்த யாரேனும் இந்த கம்யூனிஸ கொள்கைக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கோ துணை போனால் அவர்களை நல்வழிப் படுத்துங்கள்.

பாப ராட்ஸசர்க்ள் இல்லையேல் –

உலகம் சற்று நிம்மதி அடையும்.

அதற்கு சேது பந்தனத்தில் அணில் போல நாமும் சற்று உதவுவோம்!

***

இந்தத் தொடர் முற்றும்

 

 

 

கம்யூனிஸம்= ஜிஹாதி= வன்முறை (Post No.4281)

Written by S.NAGARAJAN

 

 

Date:8 October 2017

 

Time uploaded in London- 5-52 am

 

 

Post No. 4281

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாப ராட்ஸசர்கள்

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்

 

by ச.நாகராஜன்

ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.

வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.

கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.

 

அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.

 

ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.

தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.

 

கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.

 

கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.

 

இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.

இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;

நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத்  தொகுக்கலாம்.

சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.

1.மாசே துங்

சீனா 91949-1976)

பலியானோர் 600 லட்சம் பேர்

 1. ஜோஸப் ஸ்டாலின்

ரஷியா (1929-1953)

பலியானோர் 400 லட்சம் பேர்

 1. அடால்ஃப் ஹிட்லர்

ஜெர்மனி (1933-1945)

நாஜி சர்வாதிகாரம்

பலியானோர் 300 லட்சம் பேர்

 

 1. மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)

பெல்ஜியம்

காங்கோ காலனி ஆதிக்கம்

பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்

 1. ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)

ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்

இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்

 1. இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)

ஒட்டாமன் துருக்கி

ராணுவ சர்வாதிகாரம்

20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி

 1. போல் பாட் (1975-1979) (Pol Pot)

க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)

170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி

 1. கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)

கம்யூனிஸ ஆட்சி

160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு

9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)

எதியோப்பியா

கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி

150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி

 1. யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)

ராணுவ சர்வாதிகார ஆட்சி

நைஜீரியா

10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு

 1. ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)

ருவாண்டா

ஆதிவாசி சர்வாதிகாரம்

ஹூடு

எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி

 1. சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)

இராக்

சர்வாதிகார ஆட்சி

ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )

 1. ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)

யுகோஸ்லேவியா

கம்யூனிஸ ஆட்சி

5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்

 

 1. சுகர்ணோ (1945-1966) (Sukarno)

இந்தோனேஷியா

தேசிய சர்வாதிகாரி

ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி

 1. முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)

ஆப்கனிஸ்தான்

இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்

 

நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்

 

இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

அதை அடுத்துக் காண்போம்.

 

இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.

ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..

 

நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!

 

– தொடரும்

 

 

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 2 (Post No.4275)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 7–25 am

 

 

Post No. 4275

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

 ச.நாகராஜன்

 

“அழுத்தம் இல்லையேல் வைரம் இல்லை – தாமஸ் கார்லைல் (No Pressure, No Diamond   – Thomas Carlyle)

 

 

கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் . இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன. ஒவ்வொஇருந்ததுரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் இரண்டு அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில் ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

 

 

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர். இருபது லட்சம் பேர் அப்போது டில்லியில் வசித்தனர். இது லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களையும் சேர்த்துப் பார்த்தால் ஜனத்தொகையில் அதை விட அதிகம்!

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

1739ஆம் ஆண்டு டில்லியின் மீது நாதிர் ஷா படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ரத்த ஆறு ஓடியது. கஜானா காலியானது. டில்லி அழுதது.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? கணக்கிலடங்காதது. அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இன்றைய நவீன யுக கம்ப்யூட்டர்கள் காட்டும் படங்களில் வரும் செல்வத்தை விட இது அதிகம்.

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்க்லாக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

 

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

இந்த சண்டைகளுக்கு இடையில் அவுரங்கசீப் ஆட்சி கவிழவே, அதிகார மையம் இல்லாமல் போய் இந்தியாவில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன் காலனி ஆசையைத் தீர்த்துக் கொள்ள இதுவே சமயம் என்று எண்ணி யது

ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தது; இந்திய சுதந்திரம் பறி போனது; பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது.

முகலாயர்களின் கொள்ளை ஒரு புறம், பெர்சியா, ஆப்கன் கொள்ளை மறு புறம் என்று தன் செல்வத்தை இழந்திருந்த இந்தியா மீதி இருந்த அரிய செல்வத்தை பிரிட்டிஷாரிடம் இழக்க ஆரம்பித்தது. கூடவே தன் திறமையையும் அன்னிய ஆட்சியால் பல்வேறு துறைகளில் இழந்தது.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1761இல் டில்லி கொள்ளையடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்த சம்பவமாக ரஞ்சித் சிங் கருதியதோடு ஆப்கனை ஆண்ட துரானி வமிசத்திடமிருந்து இந்தியாவிலிருந்து அவர்கள் அபகரித்த ஏராளமான விளைநிலங்களையும் மீட்டார்.

 

வைரம் வந்த போது நிலங்களும் மீண்டன; கௌரவமும் திரும்பியது. என்று அவர் எண்ணியதில் தவறே இல்லை

பஞ்சாபின் சிங்கம் என்று புகழப்பட்ட சீக்கிய மன்னரான ரஞ்சித் சிங்கின் வரலாறு சுவையான ஒன்று.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

அம்மையால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தார். அசகாய சூரரான ரஞ்சித் சிங் பத்தாம வயதிலேயே தன் தந்தையுடன் முதல் போர்க்களத்தைக் கண்டார்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக அவர் விளங்கினார்.

ஆனால் அவரது காலமும் ஒரு முடிவுக்கு வந்தது.பஞ்சாபின் துயரமான நாளாகக் கருதப்படும் 1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி வந்தது.

பஞ்சாபின் தலை நகரான லாகூரே அழுதது – தன் மன்னனை இழந்து. அன்று –

Mahatma Gandhi in London.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

அறிவியல் வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் கிராமபோன் ரிகார்டுகள் பரவத் தொடங்கிய பழைய காலம்.

மஹாத்மா காந்திஜி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார்.

கொலம்பியா கிராமபோன் கம்பெனிக்கு ஒரு ஆசை.எப்படியாவது காந்திஜியின் குரலை கிராமபோனில் பிடித்துவிட வேண்டும் என்று.

தனது தொழில்நுட்ப டெக்னீஷியனை அவர் பேச்சை ரிகார்ட் செய்ய அனுப்பி வைத்தது.

ஆனால் காந்திஜி அரசியல் பேச்சை ரிகார்ட் செய்வதைத் தான் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறி விட்டா. ஆறுதலாக, ‘வேண்டுமானால் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்’, என்றார்.

முன்னதாகவே தயார் செய்த தனது பேச்சை ஆறு நிமிடம் பேச அதை சந்தோஷத்துடன் பதிவு செய்தது கொலம்பியா கம்பெனி.

உலகெங்கும்  பரவலாக விரும்பிக் கேட்கப்படும் ரிகார்டாக அது ஆனது.

 

Gandhiji going to Round Table Conference in London.

 

விரும்புவோர் இன்றும் கூகிளில் அதைக் கேட்டு மகிழலாம்.

அறிவியல் செய்த பல நல்ல காரியங்களுள் ஒன்றாக மஹாத்மாவின் கடவுள் பற்றிய உரை நமக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது!

***

ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர் மீட்கப்படுமா? – 1 (Post No.4254)

Written by S.NAGARAJAN

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Post No. 4254

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை)  வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

 

 

 ச.நாகராஜன்

 

 

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் – அறிவியல் தகவல்

      இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

      வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

   வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

     இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

     உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

    ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.

                        (கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles)  358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

1637ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர்  சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.

இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.

தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்

***

விதுரர் கூறும் விதுர நீதி – 3 (Post No.4236)

Written by S.NAGARAJAN

 

Date: 23 September 2017

 

Time uploaded in London- 4-24 am

 

Post No. 4236

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

by ச.நாகராஜன்

 

3

அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

 

4

வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

 

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

 

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

 

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

 

PICTURE FROM WIKIPEDIA

5

எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

 

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

 

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

 

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

விதுர நீதி தொடரும்

***

 

 

 

 

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே! (Post No.4189)

Written  by S.NAGARAJAN

 

Date: 7 September 2017

 

Time uploaded in London-11-57 am

 

Post No. 4189

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாட்டு நடப்பு

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!

 

ச.நாகராஜன்

 

இறப்பு என்பது துயரமானது.

யாராக இருந்தாலும் சரி.

ஆனால் ஒரு இறப்பை ஆதாயமாக வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி கிளர்ச்சிகளுக்கு வித்திட்டு தனது சுயலாபங்களை அடைய நினைப்போரை எப்படி விவரிப்பது?

கீழே ஒரு கோடிட்ட வரியைத் தருகிறேன்.

நீங்களே அவர்களுக்கான அடைமொழியைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

——————–

தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள்  சுய லாபத்தின் அடிப்படையில் அதிகாரத்தையும் பணத்தையும் “பிடிக்க நினைக்கும்” பூதங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.

நீட் தேர்வு இந்தியா முழுவதற்குமான ஒரு தேர்வு.

அதில் எப்படித் தேர்ச்சி பெறுவது என்பதற்கான வழியை சிந்திக்க வேண்டும். அதற்கான கால அவகாசம் தேவையெனில் உரிய முறையில் காரணங்களைச் சுட்டிக் காட்டி அதைப் பெற வழி வகை செய்ய வேண்டும்.

 

மாறாக கிளர்ச்சிகள், வன்முறைகள் உள்ளிட்டவை நீட் தேர்வை நீக்குவதற்காக இல்லை என்பது மட்டும் நிச்சயம் என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் உணர்கின்றனர்.

ஒரே ஒரு வாதத்தை மட்டும் முன் வைப்போம்:

திருநெல்வேலியில் அரசினர் பள்ளியில் நீட் தேர்வுக்கான ஆயத்தங்களை நன்கு செய்ததால் எட்டு பேர் மருத்துவ படிப்பிற்கான அனுமதி பெற்றுள்ளனர்.

 

ஆனால் யாரை வைத்து சுய லாபம் அடைய நினைக்கிறார்களோ அந்தப் பெண் தனியார் பள்ளியில் படித்தவர். 1176 பெற்றாலும் அனைத்திந்தியாவிற்கும் பொதுவான தேர்வில் அவர் திறமையைக் காட்டி எழுதவில்லை.

 

தனியார் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெறாதவர் ஒரு பக்கம்.

 

எப்போதுமே ஏளனம் செய்யப்படும் அரசினர் பள்ளியில் எட்டுப் பேர் உன்னத மார்க்குகளைப் பெற்றது ஒரு புறம்.

சிந்திக்க வேண்டும்.

ஏழைகளை உயர்த்துவது சரி தான். அதற்காக பணக்காரர்களை அடித்து அவர்கள் பணத்தைப் பிடுங்குவது சரியல்ல. இது கம்யூனிஸ தோழர்களின் வழி.

இழிவான வ்ழி.

 

சொந்த சோவியத் யூனியன் தொழிலாளர்களையே ஒன்று படுத்த முடியாமல் அதை சிதற விட்டவர்கள் உலகத் தொழிலாளர்களை எந்தக் காலத்தில் ஒன்று சேர்க்க முடியும்!

சிரிப்புத் தான் வருகிறது.

 

அதே போல படிக்காத மாணவர்களை விசேஷ வகுப்புகளை நடத்தி அவர்களுக்கு அறிவூட்டி நல்ல முறையில் தேர்வுக்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும்.

அதை விட்டு விட்டு தேர்வே வேண்டாம் என்பது நியாயமில்லை, அல்லவா!

 

அல்லது 99.99 மார்க்குகள் வாங்கியவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது அதையும் கூட சமுக நீதி அடிப்படையில் எந்த மார்க் எடுத்தவர்களுக்கும் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?

சரி,ஒரு வாதத்திற்காகப் பேசுவோம். மூன்று நாட்களுக்கு  முன்னர் (3-9-2017) வந்த செய்தியை அகில இந்திய அளவில் அமுல் படுத்தினால் நன்றாக இருக்குமே!

செய்தி இது தான்:

 

நீதி மன்றம் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீட்டுக் குழந்தைகள் அரசினர் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

 

சம் நீதி கேட்பவர்கள் இதை ஆதரிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளை அரசினர் பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும்.

முன் வருவார்களா? இதை இன்னும் சற்று விரிவு படுத்திப் பார்ப்போம்:

 

சமூக நீதி கேட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவர்களானவர்களிடம் மட்டுமே இப்படிப் போராடி அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு சென்ற காரணத்தால் – தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவரையும்

அவர்களிடம் மட்டுமே வைத்தியம் பார்க்க போராட்டம் நடத்துவோர் அனுப்ப வேண்டும்.

 

சமூக நீதி கேட்டு வக்கீல் படிப்பு படித்து உயர்நிலை அடைந்தோரிடம் மட்டுமே தங்கள் வழக்குகளுக்கு ஆஜராக வழக்குகளைத் தர வேண்டும்.

கிண்டலுக்காக அல்ல, சிந்த்னையைக் கிளறி விடும் உண்மையின் அடிப்படையில் இதை அமுல் படுத்தலாம்.

 

அருமையான இளம் தலைவரான ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததைப் பற்றிச் சற்றும் கவலைப்படாதவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நாட்டினரின் இழப்பைப் பற்றிக் க்வலை படாதவர்கள் அவரைக் கொலை செய்தவர்களை விடுவிக்க எவ்வளவு அரும்பாடு படுகிறார்கள். அட, கலி காலமே!!

இவர்கள் ஆக்டிவிஸ்டாம். இதற்கு பல செய்தித் தாள்களும் தொலைக்காட்சிகளும் துணை.

ஒரே ஒரு கேள்வி தான் தோன்றுகிறது. அதற்கு பழைய சினிமா பாடல் துணைக்கு வருகிறது.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே?

சொந்த நாட்டிலே?!!!

 

****                               பின் குறிப்பு: புதிய யோசனையைத் தந்த நீதி மன்றத்திற்கு எதிராக சமூக நீதி கேட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படுமா அத்துடன் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட அதைத் தகுதியாகக் கொண்டு அட்மிஷன் தர முடியாது என்று சொல்லும் வேலூர் கிறிஸ்தவ மெடிகல் காலேஜை எதிர்த்து ஒரு சமூக நீதி போராட்டம் ஆரம்பிக்கப்படுமா?

ஆக்டிவிஸ்டுகள் பதில் சொல்வார்களா?!!!நண்பர்கள் ﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்! (Post No.4171)

Written by S.NAGARAJAN

 

Date: 29 August 2017

 

Time uploaded in London- 5-40 am

 

Post No. 4171

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சிந்திக்க வேண்டும் தோழர்களே!

கார்ல் மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

 

ச.நாகராஜன்

 

கார்ல்மார்க்ஸ் ஒரு புது வித தத்துவத்தைத் தந்து விட்டார் எனவும் அது உலகத்தையே உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் கம்யூனிஸ்டுகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

 

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.

உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு

என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  நினதருட்புகழை

இயம்பியிடல் வேண்டும்”

 

 

என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.

கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

 

கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.

எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!

 

 

அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு;  அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.

 

“யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I

அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II

 

ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.

 

மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.

 

ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:

 

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”

ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!

ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்

என்கிறார் மனு.இது தான் மனு நீதி!

மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்

உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.

 

 

ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!

வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.

 

 

ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் – உள்ளனர்.

 

அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் – க்ஷத்ரியர் – உள்ளனர்.

அங்கும் வணிகம் புரியும் வணிகர் – வைசியர் – உள்ளனர்.

அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் – சூத்ரர் – உள்ளனர்.

 

 

இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.

ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.

 

வேதமறிந்தவன் பார்ப்பான், பல

  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல்  – தண்ட

   நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

 

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த

      நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?

 

பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் – வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!

 

ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்

 

கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை விட பாரத மகான்கள் வலியுறுத்தும் தத்துவம் மிக மேலானதா, இல்லையா?

தோழர்கள் சிந்திக்க வேண்டும்!

***