மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும் (Post No.6006)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London –7-05 am
Post No. 6006
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும் (Post No.6006)

தசரதன்பிரதர்தனன் என்ற வைஷ்ணவ பெயர்களுடன் கி.மு1400-ல் சிரியாவையும்,துருக்கியையும் ஆண்ட மன்னர்கள் பற்றி  இன்னும் பழைய தகவல்களே உள. ஏன்ஏன்?

அதிசயத்திலும் அதிசயம், சிரியா-துருக்கி பகுதியை 3600 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட மிட்டனி (Mitanni Civilization or Dynasty) நாகரீகம் பற்றி லண்டன் பல்கலைக் காக லைப்ரரியில் கூட ஓரிரு புத்தகங்கள் தான் கிடைத்தன. எந்த கலைக் களஞ்சியத்தை எடுத்தாலும் இரண்டு பக்க கட்டுரைதான் உளது! காரணம்   இந்து மன்னர்களின் பெயர்கள்! அதுவும் தூய ஸம்ஸ்க்ருதத்தில்! இது பற்றி 2014-ம் ஆண்டு  நான் எழுதிய கட்டுரைகளின் இணைப்பு முகவரிகளை  இறுதியில் சேர்த்துள்ளேன்.

முதலில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தேம்ஸ் & ஹட்ஸன் நிறுவனத்தின் இரண்டு பக்க மிட்டனி விஷயங்களை சுருக்கித் தருகிறேன். கட்டுரை இப்படி துவங்குகிறது:-

“மிட்டனி வரலாற்றை சரியாக வரிசைக் கிரமத்தில் அமைப்பது இன்னும் மிகவும் கடினமாகவே இருக்கிறது.”

அடுத்தாற் போல அதே பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியைக் (Box Item) கட்டம்போட்டு வெளியிட்டுள்ளனர். அதில் சொல்வதாவது:-

ஹுர்ரியன் மொழி இப்போது வழக்கொழிந்துபோன ஹுர்ரோ-உரர்தியன் (Hurro-Urartian) குடும்பத்தைச் சேர்ந்தது. பாபிலோனை கி.மு16ம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட காஸைட் (Kassites) பேசிய மொழியுள்ள கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. ஆயினும் அக்கடியந் காஸைட் அகராதி மூலம் 200 சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை வர்ணம், தேரின் பாககங்கள், சில தாவரங்கள், பாசனம், ஆட்களின் பெயர்கள் பற்றியவை. இப்போது நமக்குத் தெரிந்த எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.

மிடனியர்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை காகஸஸ் பகுத்திக்கு அப்பாலிலிருந்து வந்த ஹுரியன்களின் ஒரு பிரிவாக இருக்கலாம்; ஹுரியன்கள் பற்றி கி.மு-3000 முதல் குறிப்புகள் உள.

எனது கருத்துக்கள்

காஸைட்- ஹிட்டைட் ஆகியோருக்கும் சிந்து-ஸரஸ்வதி நாகரீக மொழிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஏனெனில் இருவரும் ஏறத்தாழ சம காலத்தவர்கள். காஸைட் பேசிய மொழியில் 200 சொற்கள் வரை கிடைத்துள்ளதால் இதை ஆராய்தல் அவசியம். இந்தத் துறையில் தமிழ் படித்தவர்களும், ஸம்ஸ்க்ருதம் கற்றவர்களும் ஆராய்ந்தால் பல புதிய உண்மைகள் கிடைக்கும். 60,000 க்கும் மேலான களிமண் கல்வெட்டுகள் முதலியன கியூனிபார்ம் லிபியில்  அக்கடியன், சுமேரியன் மொழிகளில் இருக்கின்றன.

இது வரை கிடைத்த சுவையான தகவல்களை மீண்டும் சொல்கிறேன். உலகம் முழுதுமுள்ள கலைகளஞ்சியங்களிலும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவிலும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயங்கள் நமது பாட திட்டத்திலேயே இல்லாதபோது மற்றவர்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.சுமேரிய- அஸீரிய பாடங்களைக் கற்கவும் ஒப்பிடவும் முறையான  நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்தல் நலம்பயக்கும்.

ஆர்ய தரங்கிணி என்ற பெயரில் இரண்டு வால்யூம்களில் ஆங்கிலத்தில் நூல் வெளியிட்டுள்ள கல்யாணராமன் போன்றோர்  இந்தத் துறையில் வழிகாட்ட முடியும்.

நான் முன்னர் எழுதிய விஷயங்களின் தொகுப்பு;

இவை உலகிலுள்ள எல்லோராலும்  100 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கப்பட்ட விஷயங்கள்:-

1.மிட்டனி நாகரீகப் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் (எ.கா. தசரத, பிரதர்தன); நாமும் ராமாயணம்,விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றில் காண்கிறோம்.

2. துருக்கியில் கிடைத்த குதிரை சாஸ்திர நூலில் ஸம்ஸ்க்ருத்க் கட்டளைகள் உள. இது கி.மு1300-க்கு முந்தையது.

3.தஸரதன் எழுதிய கடிதங்கள் அக்கடியன் மொழியில் கியூனிபார்ம் லிபியில் எகிப்திலுள்ள  அமர்ணா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது அமர்னா கடிதங்கள் உலக மியூஸியங்களை அலங்கரிக்கின்றன.

3. கிமு.1400 வாக்கில் துருக்கி-சிரியாவில் இரண்டு மன்னர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் வேத கால தெய்வங்கள் நால்வர் பெயரில் ஸத்தியப் பிரமாணம் எடுத்துள்ளனர். இதில் ரிக் வேதத்தில் கடவுளரின் உள்ள அதே வரிசையில் பெயர்கள் இருப்பதை சிந்து சமவெளி நிபுணர் அஸ்கோ பர்போலா சுட்டிக்காடியுள்ளார். இதனால் மாக்ஸ்முல்லர் முதலியோர் வேததுக்கு முதலில் சொன்ன காலம்  தவிடு பொடியாகிறது.

4.காஸைட்,ஹிட்டைட், மிட்டன்னியர் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர்கள் இந்தோ- ஐரோப்பிய (சம்ஸ்க்ருத) மொழித் தொடர்புடையோராக இருக்கலாம்.

உலகமே ஏற்றுக் கொண்ட இந்த விஷயங்கள்  பற்றி எனது கருத்துக்கள்

1.துரகம்/ குதிரை தொடர்பான மிகப் பழைய நூல் கிடைத்த நாட்டை இன்றும் நாம் துருக்கி என்று சம்ஸ்க்ருதத்திலேயே அழைக்கிறோம்.

சூரியனையே முதல் தெய்வமாகக் கொண்ட பாபிலோனியர் ஆண்ட சிரியா என்பது சூர்யா என்பதிலிருந்தே வந்தது.

அஸீரிய மன்னர்கள் அனைவரும் அசுர என்ற பெயர் வைத்திருப்பதால் அது அசுரர் நாடு.ரிக்வேதத்தின் பழைய பகுதிகளில்  அசுர என்றால் பலம் வாய்ந்தவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது .இந்திரன் அக்னி முதல்யோரும்  அசுரர்  எனப்பட்டனர். பின்னர் பாரஸீகத்துக்கு குடியேறின சொராஸ்டர் வருணனுக்கு மட்டும் அசுர என்ற அடை மொழி கொடுத்தார். ஆகவே இதில் இனப் பொருள் (No Racial connotation)  இல்லை

இரான் (பாரஸீகம்) என்பது ஆர்ய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே.

ஒருமொழி பேசுவோர்,  காலத்தாலும் தூரத்தாலும் எவ்வளவு தள்ளிப் போகிறார்களோ அந்த அளவுக்கு அந்த மொழிப் பெயர்கள் சிதைவுறும். மேலும் மாற்று மொழி பேசுவோர் அதை உச்சரிக்க முடியாமல் திருத்தியும் எழுதுவர். நம்மூர்ப் பெயர்களை  வெள்ளைக்கார்களும் கிரேக்கர்களும் வாய்க்கு வந்தபடி எழுதி புது ஸ்பெல்லிங் கொடுத்ததை நாம் இன்றும் படிக்கிறோம். இந்துப் பெயர்களும்  சடங்குகளும் இலங்கை,மலேசியா, பாலி/இந்தோநேஷியா,தென் ஆப்ரிக்கா, பிஜி, கயானா, மோரீஸ், ஷெஷல்ஸ் தீவுகளில் எந்த அளவுக்கு திரிந்து போயுள்ளன என்பதை நாம்  இப்போது அறிகிறோம்.

சங்க காலத்திலேயே காமாட்சி என்பதை காமக் கண்ணியார் என்றும் சுலோசனா என்பதை நக்கண்ணையார் என்றும், சிலப்பதிகாரத்தில் கோபாலன் என்பதை கோவலன் என்றும் எழுதுவதை நாம் கண்டோம். ஆக மொழி மாற்றத்தை மனதில் கொண்டு  ஆராய்ந்தால் தமிழ்-ஸம்ஸ்க்ருதம் கற்றோர்,  சுமேரியாவில் அரிய பெரிய உண்மைகளைக் காணலாம். லண்டன் போன்ற இடங்களில் வசிக்கும் என்னைப் போன்றோருக்கு பல்கலைக் கழக லைப்ரரிகளிலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும் மஹத்தான பொக்கிஷங்கள் வேறு கிடைக்கும். ஆக இந்து, இந்திய பாட திட்டத்தில் இதை உடனே சேர்க்க வேண்டும்.

 மிட்டன்னி என்பது மித்ர என்ற வேத கால தெய்வத்தின் பெயரில் இருந்தும், அவர்களுடைய தலைநகரான வசு கன்னி என்பது வசு, கன்யா என்ற வேத கால தெய்வத்தின் பெயர்களில் இருந்தும் தோன்றியிருக்கலாம்

காஸைட் என்பதை காசி ராஜா வம்சம், ஹிட்டைட் என்பது க்ஷத்ரிய வம்சம், ஹுர்ரியன் என்பது ஆர்ய என்று படிக்க முடியும். ஆயினும் ஊகத்தின் பேரில் அல்லாது முறையான ஆராய்ச்சி மூலம் இவற்றை நிரூபிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த மொழிகளைக் கற்க வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம்; பாபிலோனியா பகுதியில் 3000க்கும் மேலான தெய்வங்கள் இருந்தன. பல மொழிகள் பேசப்பட்டன;பல இன மக்கள் தொடர்ந்து குடியேறிப் போரிட்டனர்.ஆகையால் குழம்பாமலிருக்க அந்த வரளாறு பற்றி முழுதும் தெரிந்திருக்க வேண்டும்.

Tags — மிட்டன்னி, மர்மம், அக்கடியன், சுமேரியன்

–சுபம்–

மிட்டன்னி | Tamil and Vedas

 – 

Research paper written by London Swaminathan Research article No.1342; Dated 12th October 2014. சிரியாவும் துருக்கியும் இப்போது முஸ்லீம் நாடுகள். ஆனால் 4000 …

ஒரே நாளில் விவாகரத்து செய்த ராணி …2 Apr 2017 – இவள் ஒரு இந்து அரசனின் புதல்வி. தற்போது துருக்கி- சிரியா என்ற பெயரிலுள்ள துலுக்க நாடுகள் முன்னர் மிட்டன்னி (MITANNI) வம்ச …

சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி …12 Oct 2014 – மிகவும் அதிகம் அடிபடக்கூடியமிட்டன்னிய மன்னன் தசரதன் என்பவன் ஆவான். அவன் தனது மகள் ததுஹிபாவை (தத்த சிவா) எகிப்திய …

அனுமன் ராமனைக் கொன்றான் …swamiindology.blogspot.com/2014/05/blog-post.html

1 May 2014 – … இராக்-துருக்கி-சிரியா பகுதியை ஆண்ட மிட்டன்னி நாகரீக மன்னர்கள் பிரதர்தனன், தசரதன் ஆகியோர் பெயர்களும் மறுக்கமுடியாத …

சம்ஸ்கிருதம் | Tamil and Vedas1.      

 (for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com) …… 1400ல் மிட்டன்னிராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

******

விஷ முறிவுக்கு ரத்னங்கள், -மூலிகைகள் மநு நீதி நூல் தகவல் (Post No.5999)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 28 JANUARY 2019
GMT Time uploaded in London -9-45 am
Post No. 5999
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 38 (7-162 to 7-226)

இன்று ஏழாவது அத்தியாயத்தை முடித்து விடுவோம். மநு நீதி நூல் நிறைய, சட்டத் தொடர்பில்லாத விஷயங்களையும் தருகிறது. மேலும் பல உரைகாரர்கள், அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தரும் விளக்கங்கள், ஒரு கலைக்களஞ்சியத்துக்கும் மேலான தகவல்களை அளிக்கிறது. தமிழில் இது கிடைக்கதது நமது துரதிருஷ்டமே. இந்தியிலும், ஸம்ஸ்க்ருதத்திலும், ஓரளவுக்கு ஆங்கிலத்திலும் மட்டும் கிடைக்கிறது.

ஏழாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் போர் தொடுக்கும் முறை, நண்பர்கள், எதிரிகள் யார், மன்னரின் அன்றாடப் பணியில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, உளவாளிகள் ரிப்போர்ட் ஆகியன பற்றியதே. ஆயினும் அவர் சொல்லும் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன். முடிந்தால் இணைப் பையும் படியுங்கள். இன்னும் ஐந்து அத்தியாயங்கள் உள. அவைகளையும் வரிசையாகக் காண்போம்.

1.முதலில் பல ஸ்லோகங்களில், படையெடுக்க இரண்டு முறைகள், நண்பர்களை ஏற்படுத்த இரண்டு முறைகள், முகாமிட,அணி வகுத்துச் செல்ல இரண்டு முறைகள் என பல விஷயங்களை இரட்டை இரட்டையாகப் பிரித்து இருக்கிறார்.

2.ஸ்லோகம் 7-180 ல் அரசியலில் விவேகமான செயல் என்ன என்று விளம்புகிறார்.

3.ஸ்லோகம் 7-182ல் படை எடுக்க மார்கழி முதலிய மாதங்கள் உகந்தன என்று செப்புகிறார். இந்தியாவில் அந்த மாதங்களில் பருவநிலை சாதகமாக இருக்கும்; உணவு தான்யங்கள் அதிகம் கிடைக்கும் என்று இது பற்றி பாஷ்யக்காரர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

4.ஸ்லோகம் 7-185 ல்மூன்று வகை சாலைகள் பற்றிப் பேசுகிறார்.

5.ஸ்லோகம் 7-187 ல் படைகளை அணிவகுக்கும் வியூகங்கள் பற்றி அறிவுரை பகர்கிறார்; மஹா பாரத யுத்ததில் இதை அதிகம் காண்கிறோம். அபிமன்யு, சக்ர வியூகத்தில் இருந்து வெளியே வரக் கற்காத குற்றத்தையும் சிற்பங்களில் காண்கிறோம்.

6.ஸ்லோகம் 7-193 ல் எந்த நாட்டு சிப்பாய்களை முன்னனியில் நிறுத்த வேண்டும் என்றும் மொழிகிறார். அந்த தேச வீரர்கள் மற்றவர்களை விட உயரமானவர்கள் என்பது வியாக்கியானக் காரர்களின் விளக்கம்.

7.ஸ்லோகம் 7-210ல் பயங்கர எதிரி யார் என்று விளக்குகிறார். அறிவுள்ள எதிரியைக் கண்டு அஞ்ச வேண்டும் என்பார்.

8.ஸ்லோகம் 7-218 ல் உணவில் விஷம் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துவிட்டு மந்திரங்கள், ரத்தினங்கள், மூலிகைகள் மூலம் உணவை விஷமற்றதாக்க ஆக்கலாம் என்கிறார்.

9.ஸ்லோகம் 7-223 ல் தினமும் ரஹஸியமாக உளவு அறிக்கைகளைப் பெற வேண்டும் என்பார்.

10.இறுதிப் பகுதியில் ஒரு மன்னன் அன்றாடம் செய்ய வேண்டிய டைம் டேபிள் time table ,கால அட்டவணை- தருகிறார்.

11.ஸ்லோகம் 7-206 ல் ஒரு போரினால் கிடைக்கும் மூன்று ஆதாயங்கள் புது நண்பர்கள், தங்கம், நாடு என்று சொல்கிறார்.

இணைப்பில் மேல் விவரம் காண்க.

–subham–

புத்தர் பல் ரஹஸியங்கள் (Post No.5994)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 27 JANUARY 2019
GMT Time uploaded in London –10-47 am
Post No. 5994
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1612019 (Post No.5942)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 16 JANUARY 2019
GMT Time uploaded in London –7-59 AM
Post No. 5942
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 28 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

Tamil Cross word 1612019

குறுக்கே

1. – லென்ஸ், பூதக் கண்ணாடி

5. மச்சம் (வலமிருந்து இடம் செல்க)

5A. – குழந்தை உருவாக முதல் கட்டம்

5. -பூ

7. – வித்து

9.த — தமிழ் எழுத்தாளர்; தினமணி  கதிர் ஆசிரியராக இருந்தவர்

10. – மனிதர்

10A. – பாட்டு, பா

11. – ஏழு கீழ் உலகங்களில் ஒன்று

12. -கிண்டல், கேலி, பகடி (கீழிருந்து மேலே செல்க)

13. – முடி வெட்டல்

14. – கடவுளுக்கும் பிடிக்கும்; முடிந்தவுடன் திரை திறக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்; முடிந்தவுடன் அறை திறக்கும்

15. – வி.கோ.சூர்யநாராயண சா ஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் எழுதிய நாடகம்; இதே பெயரில் திரைப்படமும் உண்டு

17. = தேடுதல்; கூகிள் மூலம் தேடுதல் முதலியன

18. – கையுள்ள மிருகம், யானை

கீழே

1. = பிறருக்குத் தேவையானதைச் செய்யல்; உபகாரம்

2. -பெருமைப்படும் உணர்வு

3. –ஆசிரியர், ஆசார்யார்

4. – கோவில் பூஜை நெறிமுறை தகவல் வேண்டும் (3 சொற்கள்)

5. மச்சம் (கீழிருந்து மேலே செல்க)

6.–மடக்கு; பிராமண பாஷையில் தீட்டுப் படாத; (கீழிருந்து மேலே செல்க)

8.- பத்தாவது தமிழ் திங்கள் சந்திரன் (3 சொற்கள்)

10A–தமிழர்கள் தலையில் குடம் வைத்துக்கொண்டு ஆடும் கூத்து

14.-கூடுதல்

15.- வெற்றிலைக்கான எண்ணிக்கை

16.= விஜயம்

குறுக்கே

1.உருப்பெருக்கு ஆடி- லென்ஸ், பூதக் கண்ணாடி

5.மரு- மச்சம் (வலமிருந்து இடம் செல்க)

5A.கரு – குழந்தை உருவாக முதல் கட்டம்

5.மலர் -பூ

7.விதை- வித்து

9.துமிலன்  — தமிழ் எழுத்தாளர்; தினமணி  கதிர் ஆசிரியராக இருந்தவர்

10.மாந்தர்- மனிதர்

10A.கவிதை- பாட்டு, பா

11.அதலம்- ஏழு கீழ் உலகங்களில் ஒன்று

12.லந்து-கிண்டல், கேலி, பகடி (கீழிருந்து மேலே செல்க)

13.சவர- முடி வெட்டல்

14.அலங்காரம்- கடவுளுக்கும் பிடிக்கும்; முடிந்தவுடன் திரை திறக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்; முடிந்தவுடன் அறை திறக்கும்

15.கலாவதி- வி.கோ.சூர்யநாராயண சா ஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் எழுதிய நாடகம்; இதே பெயரில் திரைப்படமும் உண்டு

17.தேடல் = தேடுதல்; கூகிள் மூலம் தேடுதல் முதலியன

18.கைம்மா- கையுள்ள மிருகம், யானை

கீழே

1.உதவி= பிறருக்குத் தேவையானதைச் செய்யல்; உபகாரம்

2.பெருமிதம் -பெருமைப்படும் உணர்வு

3.குரு–ஆசிரியர், ஆசார்யார்

4.ஆகம விவரம் தேவை- கோவில் பூஜை நெறிமுறை தகவல் வேண்டும் (3 சொற்கள்)

5.மரு- மச்சம் (கீழிருந்து மேலே செல்க)

6.மடி –மடக்கு; பிராமண பாஷையில் தீட்டுப் படாத; (கீழிருந்து மேலே செல்க)

8.தை மாத நிலா- பத்தாவது தமிழ் திங்கள் சந்திரன் (3 சொற்கள்)

10A-கரகாட்டம்-தமிழர்கள் தலையில் குடம் வைத்துக்கொண்டு ஆடும் கூத்து

14.அதிகம்-கூடுதல்

15.கவுளி- வெற்றிலைக்கான எண்ணிக்கை

16.வருகை= விஜயம்

–SUBHAM–

லண்டனில் பீனிக்ஸ் பறவை ! (Post No.5938)

Research Article Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 15 JANUARY 2019
GMT Time uploaded in London –7-59 am
Post No. 5938
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

added later

எகிப்தியர்களுக்கு பேனு பறவை புனிதமானது.அதை ஹீலியோ போலிஸில் வழிபட்டனர். சூரியனின் அவதாரமாகக் கருதினர். ஹீலியோ போலிஸ் என்பது சூரிய புரி என்பதன் கிரேக்க வடிவமாகும்.

T ags -ஹோமா பறவை, பீனிக்ஸ், லண்டன் கதீட் ரல்

பேசினாலும் பிரச்சனை, பேசாட்டாலும் பிரச்சனை; என்னடா இது உலகம்! (Post No.5922)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:12  JANUARY 2019


GMT Time uploaded in London –9-25 am
Post No. 5922
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

By London swaminathan posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

जाड्यं ह्रीमति गण्यते व्रतरुचौ दम्भः शुचौ कैतवं
शूरे निर्घृणता मुनौ विमतिता दैन्यं प्रियालापिनि ।
तेजस्विन्यवलिप्तता मुखरता वक्तर्यशक्तिः स्थिरे
तत्को नाम गुणो भवेत्स गुणिनां यो दुर्जनैर्नाङ्कितः ॥ 1.47 

लोभश्चेदगुणेन किं पिशुनता यद्यस्ति किं पातकैः
सत्यं चेत्तपसा च किं शुचि मनो यद्यस्ति तीर्थेन किम् ।
सौजन्यं यदि किं गुणैः सुमहिमा यद्यस्ति किं मण्डनैः
सद्विद्या यदि किं धनैरपयशो यद्यस्ति किं मृत्युना ॥ 1.48 

xxxx

Part 2 Rare Pictures from Siva Purana சிவ புராணத்திலிருந்து அபூர்வ படங்கள்- 2 (Post.5921)

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date:12JANUARY 2019


GMT Time uploaded in London –6-39 am
Post No. 5921
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

I am publishing 45 pictures  from a 119 year old book in Parts . The book is Siva Maha Purana, available at the British library in London. I will give brief description in English along with the pictures of Lord Siva.

சைவ புராணம் என்னும் சிவ மஹா புராணம் 1900-ம் ஆண்டு வெளியானது. இதில் சுமார் 45 படங்கள் உள்ளன. அவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் இந்த புஸ்தகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது

This is part 2

Picture 6 (above)

When Uma is doing Puja to Shiva, Manmatha, God of Love, is firing his five Flower arrows. When Manmatha does it one willget amorous feelings

Picture 7

Shiva in disguise, is testing Uma’s devotion to him. This is beautifully described in Kalidasa’s Kumara Sambhava. When she passed his test, he appeared in his usual form.

Picture 8

According to Siva’s wish, the Seven Seers (Sapta Rishis) went to the King Parvatharajan (King of Himayan Region) and asked him Uma’s hand to Siva. Loot at the Seven Great Rishis Atri,Brhu, Kutsa, Vasistha, Gautama,Kasyapa and Angirasa. Vasistha’s wife Arundhati, embodiment of Chastity, according to Sangam Tamil Literature, is also present.

Picture 9

All the Devas (divine personalities) were invited to the wedding of Uma with Shiva. Look at the picture of guests! The artist has taken enough pain to show Ganesh, Skanda, Indra and all with their symbols or Vahanas. Good imagination. Try to identify as many devas as you can.

Picture 10

Wedding scene of Shiva and Uma. Look at the traditional South Indian decorations of Plantain Trees (Banana) and the Kanya Dhanam (donating by pouring water) . Hindus originated in India and so they use water from birth to death in all the SUBHA and ASUBHA  actions. They did not come from outside India is proved by their Mantas on the power of water in the Rig Veda, the oldest book in the world, dated 6000 BCE by BG Tilak and Herman Jacobi.

(subha and Asubha= auspicious and inauspicious)


to be continued with 35 more pictures

–subham–

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1 (Post No.5910)

Written by S Nagarajan


Date: 10 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-09 am


Post No. 5910

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி நான்காம் கட்டுரை) அத்தியாயம் 408

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

ச.நாகராஜன்

மரணமடைந்த பின்னர் மீண்டும் ஒரு ஆத்மா மறு பிறவி எடுக்கிறதா? அறிவியல் விஞ்ஞானிகளில் ஏராளமானோர் இது பற்றிய ஆய்வில் கடந்த நூறு ஆண்டுகளாகத் தீவிரமாக இறங்கி ஆராய்ந்துள்ளனர்.

இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அமெரிக்க உளவியலாளரான யன் ஸ்டீவன்ஸன்.(Ian Pretyman Stevenson பிறப்பு : 31-10-1918 மறைவு 8-2-2007) தன் நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய இவர் புனர் ஜென்மம் பற்றிய மலைக்க வைக்கும் எண்ணிக்கையான 3000 கேஸ்களை ஆராய்ந்தார். புனர் ஜென்மம் உண்டு என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்தார். இவரது புத்தகங்கள் பிரபலமானவை.

ந்தியா, ஸ்ரீ லங்கா, பர்மா, தாய்லாந்து,துருக்கி, லெபனான், சிரியா, வடமேற்கு பசிபிக்கில் உள்ள அமெரிக்க பூர்வகுடிகளின் வசிப்பிடம் உள்ளிட்டவை இவர் ஆய்வு நடத்திய நாடுகளாகும்.

இது தவிர பார்கர்ரும் பஸ்ரிசாவும் (Barker and Pasricha 1979) இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் 91 பேரின் புனர்ஜென்மம் பற்றி ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆய்வாகும்.

இந்த ஆய்வில் பெரும்பாலானோர் குழந்தைகளே! அவர்கள் ஒன்றுமறியா இளம் வயதில் தங்கள் பூர்வ ஜென்ம விவரங்களைக் குறிப்பிட்டது மாபெரும் அதிசயமே.

ஆனால் மேலை நாடுகளில் பல இடங்களில் இப்படிக் குழந்தைகள் தங்கள் முன் ஜென்ம விவரங்களைச் சொன்னபோது அவர்களின் பெற்றோர்கள் பயந்து போனார்கள். அவர்களைப் பேச விடாமல் தடுத்து விட்டனர்.

1956இல் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானி க்ளைன் (Kline 1956) இள வயதுக் குழந்தை அந்தப் பகுதியிலேயே யாருக்கும் புரியாத மொழியைப் பேசியதைக் குறிப்பிடுகிறார்.இது க்ரிப்டோம்னீஷியா (Cryptmnesia) என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.மேற்கு இத்தாலியில் லத்தீன் மொழி புழக்கத்திலிருந்து அகன்ற பின்னர் புழக்கத்திற்கு வந்த ஆஸ்கன் என்ற மொழியை ஒரு குழந்தை பேசிய போது அனைவரும் அயர்ந்து போனார்கள்.

இதே போல கம்ப்மேன் மற்றும் ஹிர்வெனோஜா (Kampman and Hirvenoja 1978) நடத்திய ஆய்வு ஒன்றில் 12 வயதான பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுமி ஹிப்நாடிஸம் செய்யப்பட்ட போது தனது முந்தைய எட்டுப் பிறவிகள் பற்றிக் கடகடவென்று கூறிக் கொண்டே போனாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் டோராதி என்ற பெயருடன் பிறந்திருந்ததாகக் கூறிய அவள் மிடில் ஏஜஸ் எனக் கூறப்படும் இடைக்காலத்தில் இருந்து வந்த ஒரு பாட்டையும் பாடி அனைவரையும் அயர வைத்தாள்.

பார்கர் (1979) தனது ஆய்வில் ஸ்டீவன்ஸன் சேகரித்த 113 கேஸ்களை மறு ஆய்வு செய்ததில் மூன்று வயதே ஆன இந்தியக் குழந்தைகள் துல்லியமான விவரங்களைக் கூறியதைக் கண்டார்.

நைஜீரியா துருக்கி ஆகிய நாடுகளில் இப்படி மறு ஜென்மம் பற்றிக் கூறியவர்கள் பலர். துருக்கியில் முந்தைய ஜென்மத்தில் வன்முறையாக மரணத்தை எய்தியோர் அந்த வன்முறைக்கான அடையாளத்தோடு மறு ஜென்மத்தில் உடலை அடைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.முந்தைய ஜென்மத்தில் காயப்பட்டு இறந்து போன அதே இடத்தில் மறு ஜென்மத்தில் ஒரு மச்சமோ வடுவோ இருந்ததைக் கண்ட ஸ்டீவன்ஸன் குழந்தையின் பெற்றோரைக் கேட்ட போது அது இந்த ஜென்மத்தில் ஏற்பட்டதில்லை என உறுதி படக் கூறினர்!

ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த 3000 கேஸ்களையும் பார்க்க இங்கு இட்டமில்லாவிட்டாலும் இரண்டு சுவையான அவரது அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1972ஆம் ஆண்டு பர்மாவில் மா டின் அங் ம்யோ என்ற 19 வயது இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.அவளைக் கர்ப்பத்தில் சுமந்த போது அவளது அம்மா ஒரு ஜப்பானிய போர்வீரனை அடிக்கடித் தன் கனவில் கண்டு வந்தார். மா டின் வளர்ந்து வந்த போது தான் ஒரு ஜப்பானிய போர் வீரன் என்றும் விமானத் தாக்குதலில் இன்னொரு விமானத்தால் தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி வந்தார். ஜப்பானின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த தனக்கு மணம் ஆகி குழந்தைகளும் இருந்ததாக அவள் கூறியதோடு விமானம் பறப்பதைக் கண்டாலே அஞ்சி அழ ஆரம்பிப்பாள். மேகமூட்டத்தைக் கண்டாலும் அவள் பயப்படுவாள். பர்மிய சீதோஷ்ண நிலை அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆண்கள் அணியும் உடையைத் தான் அவள் அணிவாள்.அவள் இந்த ஜென்மத்தில் தன்னால் ஒரு ஆணை மணம் புரிய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.

ஸ்டீவன்ஸனுக்கு அவள் கூறிய ஆதாரங்களை ஜப்பானுக்குச் சென்று எங்கு சரி பார்ப்பது என்பது புலப்படவில்லை. தான் சந்தித்த கேஸ்களில் புரியாத புதிராக இருந்த கேஸ்களில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ லங்காவில் 1988இல் அவர் ஆராய்ந்த 3 கேஸ்கள் அவருக்கு பிரமிப்பை ஊட்டின. அவற்றில் ஒன்று இரங்கா என்ற பெண்மணி பற்றியது. அவள் 15 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தான் முந்தைய ஜென்மத்தில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டாள். அவள் கூறிய நுணுக்கமான 43 விஷயங்களை ஸ்டீவன்ஸன் தானே அவள் வாழ்ந்த முந்தைய ஜென்ம இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அவற்றில் 38 விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன!

விஞ்ஞானிகள் தான் இப்படி பல சுவையான உண்மைச் சம்பவங்களைக் கூறி இருக்கிறார்கள் என்பதில்லை; பிரபல ஹாலிவுட் நடிகையான ஷர்லி மக்லீன் (பிறப்பு 24-4-1934 இப்போது வயது 84) தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி ஐ ஆம் ஓவர் ஆல் தட்  (I’m Over All That) என்ற நூலில் எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் புத்தகத்தில் அவர் மறுஜென்மம் உண்டு என்பதையும் தனது  முந்தைய ஜென்மங்களைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். பேரழகியும் பெரும் நடிகையுமான அவர், “இந்தியாவிற்கு நான் சென்ற போது பல கோவில்களை நான் முன்னரே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்படக் காரணம் என்ன, பிரேஜிலுக்கு நான் சென்ற போது போர்த்துக்கீசிய மொழியில் என்னால் எப்படிப்பேச முடிந்தது? என்று அவர் கேட்ட போது உலகமே வியந்தது.

84 வயதான அவர் 15க்கும் மேற்பட்ட சுவையான நூல்களை எழுதியுள்ளார். பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்ட நூல்கள் இவை!

எட்கர் கேஸ் ஆயிரக்கணக்கான கேஸ்களை ஆராய்ந்தவர்; நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது முந்தைய ஜென்மம் பற்றிக் கூறியவர். அவை வெவ்வேறு நாடுகளில் சரி பார்க்கப்பட்டவை. அவர் பற்றி ஏற்கனவே  பாக்யாவில் விந்தை மனிதர்கள் தொடரில் எழுதி இருப்பதால் அதை இங்கு திருப்பிக் கூறவில்லை.

இன்னும் சில விஷயங்களை அடுத்துப் பார்ப்போம்  

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷாரின் இன பேதக் கொள்கையால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி. கல்கத்தாவில் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்த போது மற்ற ஆங்கிலேயருக்கு இணையான சம்பளம் அவருக்குத் தரப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் கல்வி சம்பந்தமான அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு இனபேதக் கொள்கையால் அவரை மட்டம் தட்டவே முயற்சித்தது. அவரது ஆய்வுப் பேப்பர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்யப்பட்டது. 24 சதுர அடி கொண்ட ஒரு மிகச் சிறிய அறையே அவரது லாபரட்டரி! அதில் அவரது சாதனங்களை வைக்கவே அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதையும் மீறி ரேடியோ விஞ்ஞானத்தில் அவர் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடைந்தார். மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்கு முன்னரே அவர் அதைக் கண்டு பிடித்து விட்டாலும் தாவரம் பற்றிய ஆய்வையே அவர் முக்கியமானதாக எடுத்துக் கொண்டார். பின்னாளில் அவர் மார்கோனியை நேரில் சந்தித்தும் இருக்கிறார். வயர்லெஸ் தொடர்பில் ஆரம்ப காலக் கண்டுபிடிப்புகளையும் அவரே கண்டுபிடித்தார்.

1997இல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் எஞ்சினியர்ஸ் அவரை ரேடியோ ஸயின்ஸின் தந்தை என்று அறிவித்தது.

அவரைக் கௌரவிக்கும் விதமாக சந்திரனில் உள்ள பெரும் பள்ளம் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாபா பள்ளத்திற்கும் அட்லர் பள்ளத்திற்கும் அருகில் உள்ள போஸ் பள்ளத்தின் குறுக்களவு 91 கிலோமீட்டர். வயர்லெஸ் டெலிகம்யூனிகேஷனில் அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளே சாடலைட் தகவல் தொடர்புக்கு வழி வகுத்தது என்பதால் இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் ஜகதீஷ் சந்திர போஸ்!

****

புதிய சேனல் AsacredSecret :-

ariviyal aringar vazhvil ep 41

மதுவைத் தொடாத மாபெரும் விஞ்ஞானி

ஸ்டாக்ஹோம் சென்ற சர் சி.வி. ராமனுக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது.அவர் மதுவைத் தொடவில்லை. அவர் காலையில் ஆல்கஹாலை வைத்து ஒரு சோதனையைக் காண்பித்திருந்தார். அதை வைத்து ஒருவர் ஜோக் அடித்தார். அது என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 18 விநாடிகள்

***

அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல் தரும் குட்டிக் கதைகள் (Post No.5899)

Alexandra in her teen age (wikipedia picture)

Written by S Nagarajan


Date: 8 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-05 am


Post No. 5899

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.tags-குட்டிக் கதைகள், அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல் 

–subham–

OLD TAMIL FILM ADVERTISEMENTS 1943 to 1946- part 2 (Post No.5893)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 JANUARY 2019
GMT Time uploaded in London 17-41
Post No. 5893
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FOLLOWING ARE OLD TAMIL FILMS ADVERTISED IN SAKTI MAGAZINE BETWEEN 1943 AND 1946–subham–