வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –11-40 am (British Summer Time)

 

Post No. 5324

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்

 

அவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள்!! எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே! அப்பா பசிக்குதே! என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்!

வறிஞர்=ஏழைகள்

குசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.

என்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க! சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா? அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா?

‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.

 

ஆனால் குசேல ஐயர்  மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது? யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா? ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்? என்றார்.

அவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்

 

வறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.

 

இந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.

 

குசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா? என்றார்.

இந்தாங்க! ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.

அவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.

 

எதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.

 

குசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.

கண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள்? வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா? ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே? 16 பெற்றாயா? என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.

 

உள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா! ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.

ருக்மினி தடுத்தாள்! ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி,  குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி-  மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.

அன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்!.

 

 

ஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே! இது என்ன ஆட்சி? யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா! என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.

‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.

கதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?என்று வியந்தார்.

 

-சுபம்–

 

பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

COMPILED by London SWAMINATHAN

Date: 11 August 2018

 

Time uploaded in London – 14-23 (British Summer Time)

 

Post No. 5310

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற விரும்பிய பெரியோர்களில் ஒருவர் பத்மலோசன். அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி வந்தார். அது எப்படி என்பது அவருடைய மனைவிக்கும் தெரியாது. அதை ராமகிருஷ்ணர் கண்டுபிடித்தவுடன் ராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்று அறிவிக்கத் துவங்கினார்.

 

இதோ அந்தக் கதை

பர்த்துவான் அரசரின் அவைப் புலவர் பத்மலோசன். அவர் மஹா மேதாவி. சாஸ்திரங்களின் கரை கண்டவர். அவரைச் சந்திக்க ராமகிருஷ்ணர் ஆசைப்பட்டார். அதன்படி அவரும் கல்கத்தா வந்தார். ஏனெனில் அவருக்கு ராமகிருஷ்ணரின் மீது அளவற்ற மரியாதை.

 

தாந்த்ரீக சாதனைகளைப் பழகியதன் விளைவாக பத்மலோசனர் சில அற்புதமான சக்திகளைப் பெற்றிருந்தார். அவர் எபோதும் தன் பக்கத்தில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரும் கைக் குட்டை (HAND KERCHIEF)யும்  வைத்திருப்பார்.ஏதாவது கடினமான பிர்ச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அவர் அழைக்கப்பட்டால், சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு , திரும்பிவருவார். பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் முகத்தைக் கழுவுவார். பின்னர் அந்தக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தீர்ப்பு கூறுவார். அவருடைய இஷ்ட தெய்வத்தின் அருளினால் அவர் இப்படிச் செய்துவந்தார். இப்படிச் செய்யும் அவரை யாரும் வாதத்தில் மிஞ்ச முடியாது. அவர் சொல்லும் தீர்ப்பும் கனகச்சிதமாக இருக்கும். யாரும் அதை மறுக்க முடியாது.

ஏதோ சிந்தனை செய்வது போல நடந்து சென்று வீட்டுத் தண்ணீரில் முகம் கழுவுவார். பின்னர் தீர்ப்புக் கூறுவார். எல்லோரும் ஏதோ வெளியே போய் வந்த களைப்பில் முகம் கழுவுவதாக நினைத்துக் கொள்ளுவர். அவருடைய மனைவிக்கும் இதன் ரஹஸியம் தெரியாது.

 

ராமாகிருஷ்ணருக்கு அன்னை காளியின் அருள் இருந்ததால் இதன் காரணம் புரிந்துவிட்டது. ஒருநாள் அவர் அந்தத் தண்ணீர் பாத்திரத்தையும், கைக்குட்டையையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அப்பொழுது பத்மலோசனருக்குக் கடினமான ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பண்டிதர் அதற்குப் பதில் சொல்லும் முன் கைக்குட்டையையும் தண்ணீர் பாத்திரத்தையும் தேடினார். அவை அங்கு இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவற்றை ராமகிருஷ்ணர்தான் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்த பின்னர் மேலும் வியப்படைந்தார். அதிலும் அவர் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.

 

தன் இஷ்ட தெய்வமான காளியைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாத இந்த ரஹஸியத்தை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் அவதாரமே என்று நினைத்து கண்ணீர் மல்கி, ராமகிருஷ்ணரையே வழிபடத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியால் அவர் தம்மை முழுதுமாக ராமகிருஷ்ணரிடம் அர்ப்பணித்தார்

இந்த நிகச்ழ்ச்சி பற்றி பண்டிதர் பத்மலோசனர் சொல்லும்போது, நான் நல்ல நிலையை அடைந்ததும், இந்த நாட்டிலுள்ள சமய அறிஞர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு பெரிய கூட்டம் நடத்தி, அவரை கடவுளின் அவதாரம் என்று மெய்ப்பிப்பேன். யாருக்குத் தைரியம் இருக்கிறதோ அவர்கள் வந்து எதிர்க்கட்டும் என்றார். (ஆனால் பத்மலோசனர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் விரைவில் காலமாகிவிட்டார்.)

 

ஆதாரம்- பக்கம் 181-182, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, மயிலாப்பூர், சென்னை.

 

–SUBHAM-

கோபம் வந்தால் பத்து அடி பின்னே நட! திருக்குறள் கதை!! (Post No.5302)

Written by London swaminathan

Date: 9 August 2018

 

Time uploaded in London – 8-05 AM (British Summer Time)

 

Post No. 5302

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் – குறள் 305

 

பொருள்

‘ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் பாதுகாக்கத் தவறினால் கோபமே அவனைக் கொன்றுவிடும்’.

 

ஒருவருக்கு அஸாத்திய கோபம் வந்தது. அதிக முன்கோபம். எவர் மீதும் எரிந்து விழுவார்- அதி பயங்கர சிடுமூஞ்சி. அந்த ஊருக்கு ஒரு குரு வந்தார்.

 

குருவே! என் கோபத்தை அடக்க என்னால் முடியவில்லையே! சிலர் கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணிவிட்டுச் செயல்படு அல்லது பேசத் துவங்கு என்றனர். அதையும் செய்து பார்த்தேன்; பலிக்கவில்லை; நூறு எண்ணிய பிறகும் கோபம் வருகிறது! என்ன செய்வேன்?

 

இன்னும் சிலர் கோபம் வந்தால் வரக்கூடிய வசவுகளை எல்லாம் ஒரு தாளில் எழுது; ஒரு மணிநேரத்துக்குப் பின் வாசி; பின்னர் அதை பேச முயற்சி செய்; நீயே பயந்து விட்டு விடுவாய் என்றனர். அதையும் செய்து பார்த்தேன். பலன்  இல்லை.

 

கோபம் வந்தால் கண்ணை மூடுகிறேன்; வாயைத் திறக்கிறேன்; என்ன பேசுகிறேன் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லையே; என்னைக் காப்பாற்றுங்கள் என்றான்.

குரு சொன்னார்:

இனிமேல் கோபம் வந்தால் மெதுவாக பத்து அடி பின்னே நடந்து போ; பின்னர் கோபம் அடங்கிய பின்னர் முன்னே வா என்றார்.

 

அவனும் குருவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினான். ஒரு முறை இரண்டு நாள் வெளி யூருக்குப் பயணம் செய்துவிட்டு அர்த்த ராத்ரியில் வீடு திரும்பினான். மனைவியருகே வேறு ஒருவர் படுத்திருந்து அசைவது தெரிந்தது. உடனே மனைவி மீது அதி பயங்கர சந்தேஹமும் கோபமும் பொங்கியது ஒரேயடியில் மனைவியையும் கள்ளக் காதலனையும் சத்தமில்லாமல் அடித்து நொறுக்க அடுப்படியில் இருந்து குழவியையும் இரும்பு உலக்கையையும் கொண்டு வந்தான்.

 

திடீரென்று குரு சொன்னது நினைவுக்கு வந்தது. எதையும் கோபத்தில் செய்து விடாதே ‘பத்து அடி பின்னோக்கி நடந்து போ’ என்று சொன்ன அறிவுரையை நினைத்தான். மெதுவாக இருட்டில் பின்னால் பத்து அடி நடந்தான். பத்து அடிகள் நடப்பதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தில் கால்பட்டு அது உருண்டு பெரிய சப்தத்தை எழுப்பியது.

 

அதைக்கேட்டு மனைவியின் பக்கத்தில் இருந்த உருவம் “அம்மா, அம்மா வீட்டில் யாரோ திருடன் வந்திருக்கிறான் போல இருக்கிறது” என்று கூச்சலிட்டாள். உண்மையில் அவனது மனைவி, அடுத்த தெருவில் (கணவனுடன்) வசிக்கும் மகளை அன்றிரவு துணைக்கு படுத்துக்கொள்ள அழைத்திருந்தாள். இவன் மட்டும் கோபத்தில் உலக்கை அடி கொடுத்திருந்தால் மனைவியும் மகளும்– ஒரு பாவமும் அறியாத இரண்டு உயிர்கள் மேலுலகம் சென்றிருக்கும்!

 

அவன் அதை எண்ணி எண்ணி வருதினான். குருவுக்கு மானஸீகமாக மேலும் ஒரு கும்பிடு போட்டான்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் -குறள் 303

 

பொருள்

கோபம், தீய விளைவுகளை உண்டாக்குவதால் யாரிடத்திலும் கோபப்படுவதை அறவே மறக்க வேண்டும்.

 

—SUBHAM–

குருவைப் பார்த்து சிரித்த சிஷ்யன்! (Post No.5278)

Written by London swaminathan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 9-24 am    (British Summer Time)

 

Post No. 5278

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒரு நாள் மாலை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் குரு தோதாபுரியோடு அமர்ந்து இருந்தார். அவர் வளர்த்து இருந்த நெருப்பின் அருகில் இருவரும் அமர்ந்து இருந்தனர். இரண்டுபேரும் தங்களை மறந்து வேதாந்தப் பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கோயில் தோட்டக்காரன் சுருட்டைப் பற்றவைக்க அந்த நெருப்பிலிருந்து எரியும் விறகு ஒன்றை எடுத்து வந்தான். முதலில் தோதாபுரி இதை கவனிக்கவில்லை. அவன் நெருப்பை எடுத்ததும் பார்த்துவிட்டார். அவருக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது.

 

பிரம்மமயமான நெருப்பிலிருந்து சுருட்டு பற்ற வைப்பதா? என்று  எண்ணிய அவர், அவனைக் கண்டபடி திட்டிவிட்டு, அடிப்பதற்கே போய்விட்டார். இதைக் கண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “என்ன இது? என்ன இது?” என்று  பரவச நிலையில் உரக்கக் கூவியபடி, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

தோதாபுரி, தனது சீடனின் விசித்திரமான நடவடிக்கையைக் கண்டு “ஏன் சிரிக்கிறாய்? அவன் செய்தது தவறான காரியம் இல்லையா?” என்றார்.

 

 

ஒருவாறு சிரிப்பை அடக்கிக்கொண்ட ராமகிருஷ்ணர் (பரமஹம்சர்), தோதாபுரியைப் பார்த்து,  “உங்களுடைய அத்வைத ஞானத்தின் ஆழம் என்னைச் சிரிக்க வைத்துவிட்டது. இவ்வளவு நேரம் என்னிடம், பிரம்மம் ஒன்றே உண்மை, உலகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு பொருளும் அந்தப் பிரம்மத்தின் தோற்றமே என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படி பார்த்தால் அந்த நெருப்பும் பிரம்மம்; அதை எடுத்துச் சுருட்டுப் பற்றவைத்த தோட்டக்காரனும் பிரம்மம்; சுருட்டைப் பற்ற வைக்கிற செயலும் பிரம்மம். பிரம்மம் பிரம்மத்தைப் பற்ற வைக்கிறது. அப்படியிருக்க தோட்டக்காரன் செய்தது அக்கிரமம் என்று நீங்கள் அவனை அடிக்க ஓடுகிறீர்களே! எல்லோரும் ஆட்டிப் படைக்கும் மாயையின் சக்திதான் எப்படிப்பட்டது என்று நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றார்.

 

அதைக்கேட்டதும் தோதாபுரி அசந்தே போய்விட்டார். நெடு நேரம் அவரால் ஒன்றுமே பேசமுடியவில்லை. பிறகு நிதானமாக, “ஆமாம் நீ சொல்வது சரிதான். கோபத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; எதனிடமும் பற்றுக்கொள்வதும் ஆபத்துதான். இனிமேல் கோபம் கொள்ள மாட்டேன்”  என்றார். அது போலவே அன்றிலிருந்து கோபப்படுவதை விட்டுவிட்டார்.

 

xxxx

 

யானைப் பாகன் பிரம்மம்!

 

(2014 பிப்ரவரியில் எழுதிய கதை)

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

“ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன், செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் ‘விலகிப் போ, விலகிப் போ’ என்று கத்தினான்.

 

அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும்? என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

 

–subham–

அழகு சிரிக்கின்றது! ஆசை துடிக்கின்றது!! (Post No.5274)

Written by LONDON SWAMINATHAN

Date: 31 JULY 2018

 

Time uploaded in London – 7-37 AM   (British Summer Time)

 

Post No. 5274

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அழகு சிரிக்கின்றது

ஆசை துடிக்கின்றது

பழக நினைக்கின்றது

பக்கம் வருகின்றது

 

என்று பாடிக்கொண்டே வந்தாள் பேரழகி!

யாரிடம்?

புத்தரின் முக்கிய சீடரான உபகுப்தாவிடம்!

அவரோ ஏகாந்த தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்.

உடனே இந்தப் பெண்

 

வாழ்க்கை வாழ்வதற்கே என்று பாடத் தொடங்கினாள்; அது மட்டுமல்ல;

சுவாமிஜி, என் தொழிலே வேறு! என்னிடம் புத்தர் சொன்ன நிர்வாணம் பற்றிப் பேசாதீர்கள்; எனக்கு வேறு நிர்வாணம் எல்லாம் நன்கு தெரியும் ; உமக்கும் கற்பிப்பேன் என்றாள்.

 

உப குப்தருக்கோ போதும் போதும் என்று ஆகிவிட்டது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடினார்.

 

அவளோ விடவில்லை; “சுவாமி? எப்போது வருவீர்கள் என்னிடம்?”  என்று கேட்டுக்கொண்டே பின்னே வந்தாள்

நங்காய்! பொறுத்திரு! ஒரு நாள் நான் வந்து உன்னைத் திருப்திப் படுத்துவேன் என்றார்.

அதைக்கேட்டவுடன் அவள் புளகாங்கிதம் அடைந்தாள்; ஏதோ உபகுப்தருடன் படுத்துப் புரண்டதாகக் கனவு கண்டாள்.

 

அட! பெரிய சந்யாசியையும் பிடித்துவிட்டேனே!!  என்று தன் உடலையே தான் புகழ்ந்து கொண்டாள்!

 

ஆண்டுகள் உருண்டோடின.

வசந்த கலாலங்கள் போய் குளிர் காலமே மிஞ்சியது அந்தப் பெண்ணுக்கு! காமக் கடலில் உழல்வோருக்கு வரும் அத்தனை வியாதிகளும் அவளைப் பீடித்தன. இப்பொழுது அவள் கையைப் பிடிக்கக்கூட ஆள் இல்லை. நா வறன்டது; தோலும் சுருண்டது; முடிகள் விழுந்தன; பிடிகள் தளர்ந்தன. உடல் முழுதும் துர் நாற்றம்.

போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றபடி அரசுக்கு எதிராகப் பெரும் துரோகம் செய்தாள். அவள் கை, கால்களை வெட்டும் படி அரசன் கட்டளையிட்டான். அதுவும் போயிற்று.

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று வாடி வதங்கினாள். திடீரென்று முன்னொரு காலத்தில் உபகுபதர் சொன்னது நினைவுக்கு வந்தது சந்யாஸிகள் பொய் சொல்ல மாட்டார்களே என்று நினைத்த தருணத்தில் யாரோ தலையை வருடினார்.

 

உப குப்தர் அங்கே நின்றார்!!

கனவா நனவா என்று வியந்தாள்.

சுவாமி! தொடாதீர்கள், தொடாதீர்கள்.

உடல் முழுதும் வியாதி. துர் நாற்றம்.

அன்றோரு நாள் ஆடை அலங்காரங்களுடன். அணிகலன்களோடு உம்மை வருந்தி வருந்தி அழைத்தேனே! அப்போதெல்லாம் வராதபடி இப்போது வந்தீர்களே! என்ன பயன் உங்களுக்கு? என்றாள்.

 

உபகுப்தரின் கருணைப் பார்வை அவள் மீது விழுந்தது.

அவளது காம வெப்பம் அடங்கி கருணை வெள்ளம் பாய்ந்தது.

 

உபகுப்தர் சொன்னார்:

நீ எது கவர்ச்சி என்று இப்போது வரை நினைத்தயோ அது கவர்ச்சி  அல்ல. உன் கண்களில் ஒளிவிடுகிறதே!—அதுதான் அந்தக் கருணைதான் கவர்ச்சி; வெளிக் கவர்ச்சியெல்லாம் கவர்ச்சி ஆகாது– என்றார்.

 

சுவாமி: இன்று முதல் நான் உங்கள் சிஷ்யை! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.

அதற்குத்தானே நான் முன்னர் வாக்குறுதி அளித்தபடி திரும்பி வந்தேன்”– என்றார்.

 

இனி பேசுவதற்கு ஒன்றுமிலையே!

சும்மா இரு! சொல் அற!

 

சுபம்–

பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ALL PROSTITUTES CAN WEAR JEWELS- ENGLISH KING’S ORDER (Post No.5249)

 

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 9-35 am  (British Summer Time)

 

Post No. 5249

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

VANITY ANECDOTES continued

 

MY DAD WANTS TO BE A BRIDEGROOM IN EVERY WEDDING!

It was one of his own sons who so aptly characterised Theodore Roosevelt, saying,
“Father always had to be the centre of attention. When he went to a wedding, he wanted to be the bride groom; and when he went to a funeral, he wanted to be the corpse”.

Xxxx

DISRAELI’S TRICK

There is a good story told of the way Disraeli got rid of an unfortunate applicant for a baronetcy (the rank of a baronet) upon whom, for many reasons, it was impossible to confer the honour.
“You know I cannot give you a baronetcy, said Disraeli, but you can tell your friends I offered you a baronetcy and that you refused it. That is far better.”

Xxxx

GENERAL WOULD HAVE DIED YEARS AGO!– LINCOLN

In an interview between President Lincoln and Petroleum V. Nasby, the name came up of a recently deceased politician of Illinois whose merit was blemished by great vanity. His funeral was very largely attended.
“If General……….
Had known how big a funeral he would have had, said Mr Lincoln, he would have died years ago”.

Xxx

YOU ARE WONDERFUL!

Oscar Levant was known for his self-esteem. Occasionally he would tell this story on himself. “Once I was saying to an old friend how remarkable was our congeniality since we had practically nothing in common.
Oh, but we have, replied the friend, I think you are wonderful and you agree with me.”

Xxx

HENRY IV EXEMPTED PROS.
Henry IV enacted some sumptuary laws, prohibiting the use of gold and jewels in dress; but they were for some time ineffectual. He passed a supplement to them which completely answered his purpose. In this last he exempted from the prohibitions of the former after one month, all prostitutes and pickpockets. Next day there was not a jewel nor golden ornament to be seen.

Xxx

I AM D’ANNUNZIO! DON’T YOU KNOW?

In London, D Annunzio, the Italian poet asked a policeman to direct him to his destination and remarked,
“I am D Annunzio! The bobby did not understand. Where upon the genius burst forth into oaths and commanded his secretary to present that ignorant lout with copies of all his works”.
Xxx SUBHAM XXX

மயங்குகிறாள் ஒரு மாது! (Post No.5232)

 WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 8-10 am (British Summer Time)

 

Post No. 5232

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பிரான்ஸிலும் நீலாம்பரிகள் உண்டு; சமயம் பார்த்து பழிவாங்கி  விடுவாள். வாட்களை  விட சொற்கள் வலிமையானவை — WORDS ARE SHARPER THAN SWORDS. இதோ பிரான்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்!

 

பாலின் போனபர்ட் (PAULINE BONAPARTE 1780-1825) என்பவள் இதாலிய பிரபுக்கள் குடும்பப் பெண்மணி; பிரெஞ்சு இளவரசியும் கூட. நெப்போலியனின் சகோதரி.

அவள் ஒரு முறை விருந்தில் கலந்து கொண்டாள். எப்படி?

 

ஒய்யாரி, சிங்காரி; அன்ன நடை, சின்ன இடை! கிளி மொழி! குயில்பாட்டு சகிதம்!

பாரிஸ் நகரில் விருந்து நடந்தது.

விருந்தில் எல்லோரையும் அசத்த வேண்டும் என்னும் அளவுக்கு ஆடை, அணிகலன்கள்!

 

தாமதமாகப் போனால்தானே அனைவரின் பார்வையும் அவள் மீது விழும் ஆகையால் அனைவரும் வந்த பின்னர் ஒய்யரமாக உள்ளே வந்தாள்; அவளைக் கண்டு அசந்து போன பாண்டு வாத்யக் கோஷ்டி அவளையே பார்த்துக் கொண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டனர். எல்லோரும் ஏன் என்று திரும்பிப் பார்த்தால், பேரழகி அங்கே நிற்கிறாள்.

 

அழகான மஸ்லின் துணியிலான கவுன்; தங்க நிற பார்டர். மார்பு வளையத்திலும் தங்க பார்டர். அதில் நடுவில் ரத்தினக் கல்; இவ்வளவு அலங்காரத்துக்கு அவள் சில மணி நேரமாவது கண்ணாடி முன் நின்றிருப்பாள்! ஆனால் அவளது முயற்சிகள் வீண் போகவில்லை. உண்மையிலேயே அசத்திவிட்டாள்.

 

பெண்கள் பொறாமைக்காரிகள் அல்லவா? எல்லோருக்கும் பற்றி எரிந்தது. அதில் ஒருவள் ஏற்கனவே இவள் காரணமாக பதவி பறிபோனவள். அவளும் பெரிய இடத்துப் பெண்மணி அவள் பெயர்Madame de Coutade sமேடம் தெ (ரு) கூத்தாடி! !

 

அவள் தன் தோழியுடன் இவளிடம் வந்து உற்று நோக்கினாள்; அடி முதல் முடி வரை நோட்டமிட்டாள்.

அடாடா! என்ன அழகு! என்ன அழகு!! என்று சொன்னாள்.

இவளது பார்வை பாலினுக்குப் பிடிக்கவில்லை; ஆயினும் அழகைப் புகழத்தானே செய்கிறாள் என்று வாளாவிருந்தாள்.

அழகுதான். ஆனால்…. அது மட்டும்……….. என்று இழுத்தாள் பொறாமைக்காரி.

எது மட்டும்!…. என்று வினவினாள் தோழி.

 

நன்றாகப் பார்! தெரியவில்லையா! எம்மாம் பெரிய காது! கழுதைக் காது!

 

எனக்கு மட்டும் இப்படிக் காது இருந்தால், அதை நான் வெட்டித் தூக்கி எறிவேன் என்றாள்.

‘தடால்’ என ஒரு பெரிய சப்தம்!

எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.

பேரழகி பாலின், அந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் தடால் என்று மயங்கி விழுந்தாள்.

 

அவளுக்கு இரண்டு கணவர்கள்! ஆயினும் அண்ணன் நெப்போலியன் மீது அளவு கடந்த பாசம்; பிரிட்டிஷாரிடம் நெப்போலியன் தோற்றபோது, அவனைத் தொலைதூர தீவில் சிறையில் அடைத்து அவனுக்கு விஷ உணவு கொடுத்து பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றனர். ஏனெனில் அவன் மாவீரன்; தப்பித்தால் பிரிட்டிஷார் கதி- சகதி!

 

அந்த சூழ்நிலையிலும் அவனை வந்து பார்த்த ஒரே ஒரு உறவினர் பாலின் போனபர்ட் என்னும் இந்தப் பேரழகிதான். பாசத்தின் சின்னம் அவள்!

 

சுபம்

 

பேயும் ஞாபக சக்தியும் (Post No.5227)

Written by London swaminathan

 

Date: 17 JULY 2018

 

Time uploaded in London – 8-27 AM (British Summer Time)

 

Post No. 5227

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தற்காலத்தில் கோர்ட்டுகளில் நடக்கும் விஷயங்களை எழுதவோ ரிகார்ட் செய்யவோ வசதிகள் உண்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், மனிதர்களின் ஞாபக சக்தி ஒன்றே துணை. ஒவ்வொரு வக்கீலும், சட்ட அறிஞரும் உதவிக்கு ஆட்களை வைத்திருப்பர்; அவர்கள் தக்க நேரத்தில் தகுந்த பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க, சட்டம் பேசும் அறிஞர்கள் சத்தமாகப் பேசி வெல்லுவர்.

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஒரு பிரபல வழக்கறிஞர் இருந்தார். அவரிடம் ஸாம் (SAM) எனப்படும் ஒரு கறுப்பின இளைஞன் வேலைக்கு இருந்தான்; அவன் மஹா மேதாவி; எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுவான். இதனால் அந்த வக்கீலின் க்யாதி (புகழ்) தென்பகுதி முழுதும் பரவி இருந்தது.

 

ஸாம் சொன்னால் நீதிபதியும் கூட அது சரியாகதான் இருக்கும் என்று ஒப்புக்கொள்வார். அவ்வளவு கீர்த்தி!

 

இது யம தர்ம ராஜாவுக்குப் பிடிக்கவில்லை அவர் சித்ர குப்தனை அனுப்பி ஸாமின் உயிரைப் பறித்து வா என்று அனுப்பினார்.

வழக்கறிஞர் அறையில் ஒரு நாள் ஸாம் வேலை செய்து கொண்டிருந்த போது சித்ரகுப்தன் இருவர் முன்னிலையிலும் தோன்றினான்.

ஏய் யார் நீ? ஏன் இங்கு வந்தாய்? என்று வக்கீல் கேட்டார்.

நான்தான் யம தூதன்; ஸாமின் காலம் முடிந்துவிட்டது; ஆகையால் அவனை அழைத்துச் செல்ல வந்தேன்

வக்கீல்: இதோ பார், ஸாம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது ஆகையால் போய்விடு.

சித்ரகுப்தன் போகவா? என் பாஸ்(BOSS) ஆர்டர் கொடுத்தால் அதை சிரமேல் கொண்டு முடிப்பது எங்கள் வேலை ஒப்பந்தத்திலேயே உளது; ஆகையால் ஒரு அங்குலமும் நகர மாட்டேன்.

 

வக்கீல்- அப்படியா? உங்கள் பாஸிடமும் சொல்; இந்த ஸாமுக்கு ஞாபக சக்தி கு

றைந்து போனால் எனக்கு அவனால் கிஞ்சித்தும் பிரயோஜனம் இல்லை; நீ கொண்டு செல்; ஆனால் ஞாபக சக்தி நன்றாக இருந்தால் அவனை நீ கொண்டு செல்லக் கூடாது. உங்கள் ‘ஐயா’விடமும் சொல்லி என் கட்டளையை ஏற்றுக் கொள். நீ அவனை எப்படி வேண்டுமானாலும் சோதித்துக் கொள்.

 

சித்ரகுப்தன் தன் மானஸீக மொபைல் போன் மூலம் யமதர்ம ராஜனைத் தொடர்பு கொண்டு கட்டளைக்கு ஒப்புக்கொண்டான்

 

 

ஸாம் வயலில் உழுது கொண்டிருந்தான். சித்ர குப்தன் ஒரு பேய் வடிவில் வந்து உனக்கு முட்டை பிடிக்குமா? என்றான்

ஸாம்- ஆமாம் பேயே! எனக்கு முட்டை பிடிக்கும்

பேய் வடிவில் வந்த சித்ர குபதன் மறைந்து விட்டான்.

 

காலம் உருண்டோடியது; அமெரிக்காவில் சுதந்திரப் போர் வெடித்தது; ஸாம் முதலில் சிறைப் பிடிக்கப்பட்டான். பின்னர் அவன் எதிர் தரப்பில் சேர்ந்தான். பின்னர் சுதந்திரம் வேண்டும் என்ற தரப்பில் சேர்ந்தான். இப்படிப் பல்லாண்டுகள் உருண்டோட அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.

வழக்கம் போல ஸாம் நிலத்தை உழுது கொண்டு இருந்தான்.

சித்ரகுப்தன் பேய் வடிவில் தோன்றினான்.

 

எப்படி வேண்டும்? என்று ஸாமிடம் கேட் டான்.

ஸாம்- பொறித்துக் கொண்டுவா (FRIED, PLEASE! என்றான்

பேய் பறந்தோடிப் போனது.

 

இந்தக் கதையில் வரும் ஸாம் அமெரிக்காவில் உண்மையில் இருந்தவன் ;அவனது பெருமையை விளக்க இப்படி பேய்க் கதை (DEVIL) ஒன்றை சொல்லுவர்

 

அக்காலத்தில் நினைவாற்றலுக்கு அவ்வளவு மதிப்பு; மொபைல் போன், ஐ பேட், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் வந்தவுடன் நமக்கு நினைவாற்றல் மழுங்கிப் போய்விட்டது!

 

-சுபம்-

 

அயோக்கியன் யார்? (Post No.5204)

Written by London swaminathan

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London – 8-41 am  (British Summer Time)

 

Post No. 5224

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்காவில் இரண்டு செனட்டர்களுக்கு (SENATE MEMBERS) இடையே கடும் விரோதம்; ஒருவர் பெயர் ஹென்றி க்ளே; மற்றொருவர் பெயர் ஜான் ராண்டால்ப் (HENRY CLAY AND JOHN RANDOLPH).

 

இருவரும் எலியும் பூனையும் போல; கீரியும் பாம்பும் போல! ஒருவரை ஒருவர் குதறி, கடித்துத் தின்ன தயாராக இருப்பர்; எங்கு சந்தித்தாலும் பேசுவதில்லை; முகத்தைத் திருப்பிக்கொள்வர்.

ஒரு நாள் ஓரிடத்தில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடந்தன. ஒத்தையடிப் பாதை. ஒருவர்தான் சகதி படாமல் நடக்க முடியும்.

 

கடவுளின் சித்தம்; அன்று இருவரும் எதிர் எதிர் திசையில் வர நேரிட்டது. ராண்டால்ப் நினைத்தார்–அருமையான வாய்ப்பு, நழுவவிடக்கூடாது என்று கொக்கரித்தார்.

“நான் அயோக்கியர்களுக்கு வழிவிடுவத்தில்லை!” என்றார்

 

க்ளே மஹா புத்திசாலி! அப்படியா!

“நான் (அயோக்கியர்களுக்கு) வழி விடுவதுண்டு” என்று சொல்லி சகதியில் இறங்கி நின்றார்.

 

ராண்டால்ப் பேசவா முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்!

XXXX

 

இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

 

ஜெர்மனியின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர் ஜொஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897). இவரையும் பாக் (JOHAN BACH) என்பவரையும் பீதோவனையும் (BEETHOVEN) சேர்த்து மும்மூர்த்திகள் என்று அழைப்பர்; மூன்று பெயர்களிலும் முதல் ஆங்கில எழுத்து பி B என்பதால் மூன்று பெரிய பி (THREE BIG ‘B’s ) என்று சங்கீத உலகில் பிரஸித்தமானவர்கள்.

 

ஒரு நாள் ப்ராஹ்ம்ஸ் குசும்பு எல்லை மீறிப்போனது; அவர், பீதோவன் விஷயத்தில் மிகப்பெரிய அறிஞரான குஸ்டாவ் நாட்டிபாமுடன் (GUSTAV NOTTEBHOM) நடந்து சென்றார்; குஸ்டாவோ மஹா ஏழை; ரோட்டில் வண்டி தள்ளூவோனிடம் தள்ளிப்போன, ஆறிப்போன ரொட்டித் துண்டுகளை சீஸ் CHEESE SANDWICH உடன் வாங்கிச் சாப்பிடுவார்.

 

ஒரு நாள் வண்டிக்காரனை ப்ராஹ்ம்ஸ் அணுகி ‘இந்தா, நான் கொடுக்கும் பேப்பரில் இந்த ரொட்டித் துண்டைப் பொட்டலம் கட்டி அந்த குஸ்டாவிடம் விற்க வேண்டும்’ என்றார். பாவம் குஸ்டாவ்; வழக்கம்போல ரொட்டித் துண்டை வாங்கிப் பிரித்தார்: ஒரே வியப்பு; முகம் எல்லாம் சஹஸ்ர கோடி சூர்யப் பிரகாசம்! ஏனெனில் அது பீதோவனின் பாடல்; அவர் கையெழுத்தில்! யாருக்கும் தெரியாமல் ரொட்டித் துண்டை பெரும் பசியுள்ளவன் போல அவசரம் அவரசமாகக் கடித்து குதறிவிட்டு பிரம்மானந்தத்தில் திளைத்தார்.

பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் சும்மா இருக்க முடியுமா? மெதுவாக ஸப்ஜெக்டுக்கு வந்தார்; ‘எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது’. பீதோவன் எழுதிய பாடல் கிடைத்து இருக்கிறது! என்று சொல்லி சட்டைப் பைக்குள் இருந்த சீஸ் CHEESE கறை படிந்த காகிதத்தைப் பிரித்தார். அது ப்ராஹ்ம்ஸ், பீதோவன் போல எழுதிய பாடல்! அவர் பலர் முன்னிலையில் குட்டைப் போட்டு உடைத்தார். பாவம் குஸ்டாவ்!

 

பெரியவர்களுக்கும் குசும்பு உண்டு! நெருங்கிய நண்பன் இளிச்சவாயனாக இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

 

பழமொழி- இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

 

XXX-சுபம்-XXXX