பாரத ஸ்தலங்கள் – 5 – முருகன் ஸ்தலங்கள் 200! (Post No.8246)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8246

Date uploaded in London – – –27 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இதுவரை 1363 தலங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஒரே தலமே இரு சிறப்புகள் கொண்டு இரு இடங்களிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களிலோ குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில் உள்ள 200 தலங்களையும் சேர்த்தால் நமது பட்டியலில் இடம் பெறும் தலங்கள் 1563!

பாரத ஸ்தலங்கள் – 5 – திருப்புகழ் பாடப்பட்ட முருகன் ஸ்தலங்கள் 200!

ச.நாகராஜன்

19. திருப்புகழ் பாடப்பட்ட முருகன் ஸ்தலங்கள் !

     அருணகிரிநாதர் முருகனை வழிபட்டுத் திருப்புகழ் பாடிய தலங்கள் சுமார் 200 ஆகும். அவரது சஞ்சாரம், ஆங்காங்கே நடந்த நிகழ்வுகள் பற்றி வ.சு.செங்கல்வராய பிள்ளை, ‘அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலில் விவரமாகத் தந்துள்ளார் (இந்த நூலை www.projectmadurai.org தளத்தில் காணலாம்)

கீழே உள்ள பட்டியல் அவர் சென்ற தலங்களையும் அங்கு பாடப்பட்ட திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கையையும் தருகிறது. அன்பர்கள் தலங்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் அறிய இது உதவும்.

 1. திருப்பரங்குன்றம் (முதல் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 14
 2. திருச்செந்தூர் (இரண்டாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 83
 3. பழநி (மூன்றாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 95
 4. சுவாமிமலை (நான்காம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 49
 5. திருத்தணிகை (ஐந்தாம் படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 64
 6. வள்ளிமலை திருப்புகழ் பாடல்கள் 11
 7. திருக்கழுக்குன்றம் திருப்புகழ் பாடல்கள் 4
 8. மயிலம் திருப்புகழ் பாடல் 1
 9. திரிசிராப்பள்ளி திருப்புகழ் பாடல்கள் 16
 10. திருக்கற்குடி திருப்புகழ் பாடல்கள் 2
 11. ரத்னகிரி திருப்புகழ் பாடல்கள் 3
 12. விராலிமலை திருப்புகழ் பாடல்கள் 16
 13. விநாயக மலை திருப்புகழ் பாடல் 1
 14. கொடுங்குன்றம் திருப்புகழ் பாடல்கள் 2
 15. குன்றக்குடி திருப்புகழ் பாடல்கள் 7
 16. திருச்செங்கோடு திருப்புகழ் பாடல்கள் 21
 17. கொல்லிமலை திருப்புகழ் பாடல்கள் 2
 18. ராஜகெம்பீர வளநாட்டு மலை திருப்புகழ் பாடல் 1
 19. ஞானமலை திருப்புகழ் பாடல்கள் 2
 20. ஊதிமலை திருப்புகழ் பாடல்கள் 2
 21. குருகுமலை திருப்புகழ் பாடல் 1
 22. தென்சேரி கிரி திருப்புகழ் பாடல்கள் 2
 23. கொங்கண கிரி திருப்புகழ் பாடல் 1
 24. தீர்த்தமலை திருப்புகழ் பாடல் 1
 25. கனகமலை திருப்புகழ் பாடல் 1
 26. புகழிமலை திருப்புகழ் பாடல் 1
 27. பூம்பறை திருப்புகழ் பாடல் 1
 28. பொதியமலை திருப்புகழ் பாடல்கள் 2
 29. கழுகுமலை திருப்புகழ் பாடல்கள் 3
 30.  வள்ளியூர் திருப்புகழ் பாடல் 1
 31. கதிர்காமம் திருப்புகழ் பாடல்கள் 13
 32. அருக்கொணாமலை திருப்புகழ் பாடல் 1
 33. திருக்கோணமலை திருப்புகழ் பாடல் 1
 34. வடமலை திருப்புகழ் பாடல்கள் 2
 35. பழமுதிர்சோலை  (ஆறாவது படை வீடு) திருப்புகழ் பாடல்கள் 16
 36. காஞ்சிபுரம் (பிருதிவி தலம்) திருப்புகழ் பாடல்கள் 44
 37. திருவானைக்கா (அப்பு தலம்) திருப்புகழ் பாடல்கள் 14
 38. திருவருணை (தேயு தலம்) திருப்புகழ் பாடல்கள் 78
 39. திருக்காளத்தி (வாயு தலம்) திருப்புகழ் பாடல்கள் 3
 40. சிதம்பரம் (ஆகாய தலம்) திருப்புகழ் பாடல்கள் 65
 41. காசி திருப்புகழ் பாடல்கள் 3
 42. மாயாபுரி திருப்புகழ் பாடல் 1
 43. வயிரவி வனம் திருப்புகழ் பாடல் 1
 44. வெண்ணிகரம் திருப்புகழ் பாடல்கள் 9
 45. திருவலம் திருப்புகழ் பாடல் 1
 46. வேலூர் திருப்புகழ் பாடல்கள் 2
 47. விரிஞ்சிபுரம் திருப்புகழ் பாடல்கள் 5
 48. திருவாலங்காடு திருப்புகழ் பாடல்கள் 4
 49. திருவோத்தூர் திருப்புகழ் பாடல் 1
 50. பாக்கம் திருப்புகழ் பாடல்கள் 2
 • திருவேற்காடு திருப்புகழ் பாடல்கள் 2
 • வட திருமுல்லைவாயில் திருப்புகழ் பாடல்கள் 3
 • திருவலிதாயம் திருப்புகழ் பாடல் 1
 • திரு மயிலை திருப்புகழ் பாடல்கள் 12
 • திருவான்மியூர் திருப்புகழ் பாடல் 1
 • திருவொற்றியூர் திருப்புகழ் பாடல்கள் 2
 • கோசைநகர் திருப்புகழ் பாடல் 1
 • பெருங்குடி திருப்புகழ் பாடல் 1
 • மாடம்பாக்கம் திருப்புகழ் பாடல்கள் 2
 • கோடைநகர் திருப்புகழ் பாடல்கள் 7
 • திருப் போரூர் திருப்புகழ் பாடல்கள் 4
 • உத்தரமேரூர் திருப்புகழ் பாடல்கள் 4
 • மதுராந்தகம் திருப்புகழ் பாடல்கள் 3
 • சேயூர் திருப்புகழ் பாடல் 1
 • பேறை நகர் திருப்புகழ் பாடல் 1
 • திருவக்கரை திருப்புகழ் பாடல்கள் 2
 • சிறுவை திருப்புகழ் பாடல்கள் 4
 • திருவாமாத்தூர் திருப்புகழ் பாடல்கள் 4
 • தச்சூர் திருப்புகழ் பாடல்கள் 1
 • திருக்கோவலூர் திருப்புகழ் பாடல் 1
 • தேவனூர் திருப்புகழ் பாடல்கள் 3
 • திருவதிகை திருப்புகழ் பாடல்கள் 2
 • திருவாமூர் திருப்புகழ் பாடல் 1
 • வடுகூர் திருப்புகழ் பாடல் 1
 • திருத் துறையூர் திருப்புகழ் பாடல் 1
 • திரு நாவலூர் திருப்புகழ் பாடல் 1
 • திரு வெண்ணெய்நல்லூர் திருப்புகழ் பாடல் 1
 • திருப் பாதிரிப்புலியூர் திருப்புகழ் பாடல் 1
 • திருமாணிகுழி திருப்புகழ் பாடல் 1
 • திருவேட்களம் திருப்புகழ் பாடல்கள் 2
 • திரு நெல்வாயில் திருப்புகழ் பாடல் 1
 •  விருத்தாசலம் திருப்புகழ் பாடல்கள் 3
 • வேப்பூர் திருப்புகழ் பாடல் 1
 • நிம்பபுரம் திருப்புகழ் பாடல் 1
 • வேப்பஞ்சந்தி திருப்புகழ் பாடல் 1
 • திருக்கூடலையாற்றூர் திருப்புகழ் பாடல் 1
 • கடம்பூர் திருப்புகழ் பாடல் 1
 • திருவாத்துறை திருப்புகழ் பாடல் 1
 • யாழ்ப்பாணாயன் பட்டினம் திருப்புகழ் பாடல் 1
 • ஸ்ரீ முஷ்டம் திருப்புகழ் பாடல்கள் 2
 • திருநல்லூர் திருப்புகழ் பாடல் 1
 • திருமயேந்திரம் திருப்புகழ் பாடல் 1
 • சீகாழி திருப்புகழ் பாடல்கள்4 1
 • கரியவனகர் திருப்புகழ் பாடல் 1
 • வைத்தீஸ்வரன் கோயில் திருப்புகழ் பாடல்கள் 6
 • திருக்கடம்பூர் திருப்புகழ் பாடல்கள் 2
 • திருக்கடவூர் திருப்புகழ் பாடல்கள் 2
 • மாயூரம் திருப்புகழ் பாடல் 1
 •  திருவிடைக்கழி திருப்புகழ் பாடல்கள் 8
 • பாகை திருப்புகழ் பாடல்கள் 3
 picture posted by Lalgudi Veda

   101. தான் தோன்றி திருப்புகழ் பாடல் 1

   102. கந்தன் குடி திருப்புகழ் பாடல் 1

   103. திலதைப்பதி திருப்புகழ் பாடல்கள் 3

   104. திருவம்பர் திருப்புகழ் பாடல் 1

   105. திரு மாகாளம் திருப்புகழ் பாடல் 1

   106. இஞ்சிகுடி திருப்புகழ் பாடல் 1

   107. திரு நள்ளாறு திருப்புகழ் பாடல் 1

   108. வழுவூர் திருப்புகழ் பாடல்கள் 2

109. கன்னபுரம் திருப்புகழ் பாடல் 1

110. திருவாஞ்சியம் திருப்புகழ் பாடல் 1

   111. திருச் செங்காட்டங்குடி திருப்புகழ் பாடல் 1

   112. திருவிற்குடி திருப்புகழ் பாடல் 1

   113. விஜயபுரம் திருப்புகழ் பாடல் 1

   114. திருவாரூர் திருப்புகழ் பாடல்கள் 7

   115. பெரிய மடம் திருப்புகழ் பாடல் 1

   116. சோமநாதன் மடம் திருப்புகழ் பாடல் 1

   117. த்ரியம்பகபுரம் திருப்புகழ் பாடல் 1

   118. சிக்கல் திருப்புகழ் பாடல்கள் 2

   119.  நாகப்பட்டினம் திருப்புகழ் பாடல்கள் 3

   120. எட்டிகுடி திருப்புகழ் பாடல்கள் 4

   121. எண்கண் திருப்புகழ் பாடல் 1

   122. திருக்குடவாயில் திருப்புகழ் பாடல்கள் 2

   123. வலிவலம் திருப்புகழ் பாடல் 1

124. வேதாரணியம் திருப்புகழ் பாடல்கள் 3

125. கோடி (குழகர் கோயில்) திருப்புகழ் பாடல் 1

   126. திருப்பெருந்துறை திருப்புகழ் பாடல்கள் 3

   127. திருத்துருத்தி திருப்புகழ் பாடல் 1

   128. திருவீழிமலை திருப்புகழ் பாடல் 1

   129. திருவாவடுதுறை திருப்புகழ் பாடல் 1

   130. மருத்துவக் குடி திருப்புகழ் பாடல் 1

   131. திருப் பந்தணைநல்லூர் திருப்புகழ் பாடல்கள் 7

   132. திருப்பனந்தாள் திருப்புகழ் பாடல் 1

   133. திருவிடைமருதூர் திருப்புகழ் பாடல்கள் 4

   134. திரிபுவனம் திருப்புகழ் பாடல் 1

   135. சோமீச்சுரம் திருப்புகழ் பாடல் 1

   136. கும்பகோணம் திருப்புகழ் பாடல்கள் 7

   137. கொட்டையூர் திருப்புகழ் பாடல் 1

   138. சிவபுரம் திருப்புகழ் பாடல் 1

   139. திருநாகேச்சுரம் திருப்புகழ் பாடல் 1

   140. கூந்தலூர் திருப்புகழ் பாடல் 1

   141. திருச்சத்திமுத்தம் திருப்புகழ் பாடல் 1

   142. திருவலஞ்சுழி திருப்புகழ் பாடல் 1

   143. திருப்பழையாறை திருப்புகழ் பாடல் 1

   144. திருச்சக்கரப்பள்ளி திருப்புகழ் பாடல் 1

   145. திருக்குரங்காடுதுறை திருப்புகழ் பாடல்கள் 3

   146. காவளூர் திருப்புகழ் பாடல் 1

   147. தஞ்சாவூர் திருப்புகழ் பாடல்கள் 3

   148. சப்தஸ்தானம் திருப்புகழ் பாடல் 1

   149. திருவையாறு திருப்புகழ் பாடல் 1

   150. திருப்பூந்துருத்தி திருப்புகழ் பாடல் 1

   151. திருநெய்த்தானம் திருப்புகழ் பாடல் 1

   152. திருப்பழுவூர் திருப்புகழ் பாடல் 1

   153. பெரும்புலியூர் திருப்புகழ் பாடல் 1

   154. நெடுங்களம் திருப்புகழ் பாடல் 1

   155. குறட்டி திருப்புகழ் பாடல் 1

   156. அத்திப்பட்டி திருப்புகழ் பாடல் 1

   157. அத்திக்கரை திருப்புகழ் பாடல் 1

   158. கந்தனூர் திருப்புகழ் பாடல் 1

   159. வாலிகொண்டபுரம் திருப்புகழ் பாடல் 1

   160. திருமாந்துறை திருப்புகழ் பாடல் 1

   161. வயலூர் திருப்புகழ் பாடல்கள் 28

   162. திருத்தவத்துறை திருப்புகழ் பாடல்கள் 2

   163. பூவாளூர் திருப்புகழ் பாடல் 1

   164. திருப்பராய்த்துறை திருப்புகழ் பாடல் 1

   165. தென்கடம்பந்துறை திருப்புகழ் பாடல் 1

   166. கருவூர் திருப்புகழ் பாடல்கள் 7

   167. நெருவூர் திருப்புகழ் பாடல் 1

   168. திருவெஞ்சமாக்கூடல் திருப்புகழ் பாடல் 1

   169. திருப் பாண்டிக்கொடுமுடி திருப்புகழ் பாடல்கள் 2

   170. சேலம் திருப்புகழ் பாடல் 1

   171. ராஜபுரம் திருப்புகழ் பாடல் 1

   172. விஜயமங்கலம் திருப்புகழ் பாடல் 1

   173. சிங்கை (காங்கேயம்) திருப்புகழ் பாடல்கள் 2

   174. பட்டாபியூர் திருப்புகழ் பாடல்கள் 3

   175. திருமுருகன்பூண்டி திருப்புகழ் பாடல் 1

   176. அவிநாசி திருப்புகழ் பாடல்கள் 3

   177. திருப்புக்கொளியூர் திருப்புகழ் பாடல்கள் 3

   178. பேரூர் திருப்புகழ் பாடல்கள் 2

   179. கொடும்பாளூர் திருப்புகழ் பாடல் 1

   180. கீரனூர் திருப்புகழ் பாடல் 1

   181. குளந்தை நகர் திருப்புகழ் பாடல் 1

   182. தளிச்சயம் திருப்புகழ் பாடல்கள் 2

   183. மதுரை திருப்புகழ் பாடல்கள் 12

   184. ஸ்ரீ புருஷமங்கை திருப்புகழ் பாடல்கள் 3

   185. இலஞ்சி திருப்புகழ் பாடல்கள் 4

   186. திருக்குற்றாலம் திருப்புகழ் பாடல்கள் 3

   187. ஆய்க்குடி திருப்புகழ் பாடல் 1

   188. திருப்புத்தூர் திருப்புகழ் பாடல்கள் 2

   189. திருவாடானை திருப்புகழ் பாடல் 1

   190. உத்தரகோசமங்கை திருப்புகழ் பாடல் 1

   191. இராமேஸ்வரம் திருப்புகழ் பாடல்கள் 2

   192. இந்தம்பலம் திருப்புகழ் பாடல் 1

   193. எழுகரைநாடு திருப்புகழ் பாடல் 1

   194. ஒடுக்கத்துச் செறிவாய் திருப்புகழ் பாடல் 1

   195. காமத்தூர் திருப்புகழ் பாடல் 1

   196. முள்வாய் திருப்புகழ் பாடல் 1

   197. வாகை மாநகர் திருப்புகழ் பாடல் 1

   198. விசுவை திருப்புகழ் பாடல் 1

   199. செம்பேடு, தென்றலை, சிவதைப்பதி, சிறுகூர் ஆகிய தலங்கள் இடம்   

                  விளங்காதன.

   200. அமராவதி எனப்படும் கற்பகவூர் – (கிளியானபின் இருப்பது)

இவற்றுடன் திருப்புகழ் ஆர்வலர்களுக்கென கீழேயுள்ள குறிப்பு தரப்படுகிறது:

பொதுப்பாடல்கள் 309; க்ஷேத்திரக் கோவை பாடல் 1; விநாயகர் துதி பாடல்கள் 6; குன்றுதோறாடல் பாடல்கள் 5; ஆறு திருப்பதி பாடல்கள் 2

ஆக, திருப்புகழ் பாடல்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளபடி மொத்தம் : 1311

tags–பாரத ஸ்தலங்கள் – 5 -, முருகன் ஸ்தலங்கள்

***

4 சித்திரை மாதப் பழமொழிகள் – கட்டத்துக்குள் கண்டுபிடியுங்கள் (Post No.8245)


 Chitra Festival held in Madurai is world famous; Saivism meets Vaishnavism here.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8245

Date uploaded in London – 26 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.சித்திரைக்குச் சித்தப்பா, பெரியப்பா; வைகாசிக்கு வாங்காணும் , போங்காணும்

2.சித்திரை மாதப் புழுதி பத்தரை மாத்துத் தங்கம்

3.சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை, பங்குனி என்று பருக்கிறதுமில்லை

4.சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கே டனும் இல்லை ,ஐப்பசி மாதத்தில் பிறந்த அதிட்டவா னும் இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags — சித்திரை ,மாத, பழமொழி,

–subham–

‘இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்’ (Post No.8244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8244

Date uploaded in London – 26 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘இனியவை பெறினே தனி தனி நுகர்கேம்’

‘எவ்வளவு இன்பம் தரும் பொருள் கிடைத்தாலும் அதைத் தனியாக பயன்படுத்த மாட்டோம். எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம்’.

இந்த அருமையான கருத்து ரிக் வேதம், பகவத் கீதை, தமிழ் வேதமாகிய திருக்குறள் , சங்க நூலான புறநாநூறு முதலிய பல இடங்களில் வருவதால் படித்தும் ஒப்பிட்டும் மகிழக் கூடிய வரிகளாகும்

முதலில் தலைப்பில் சொன்ன வரியைக் காண்போம். இது 18 சங்க கால நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் வருகிறது; அதாவது பத்துப்பாட்டு, எட்  டுத் தொகை என்ற இரு பெரும் தொகுப்பில் எட்டுத் தொகையில் வருகிறது; பதிற்றுப் பத்தில் நாலாவது பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். புலவர் பெயரே மிகவும் சுவையானது லண்டனில் காஸ்ட்டா (COSTA) காப்பிக் கடைகளையும், பாரிஸில் 18 டிகிரி காப்பிக் கடைகளையும் தமிழ்நாட்டில் கும்பகோணம் டிகிரிக் காப்பிக் கடைகளையும் நினைவு படுத்தும் பெயர். ஆனால் இவருக்கும் நாம் இன்று அருந்தும் ‘காப்பி’க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை

இவர் காப்பியக்குடியில் பிறந்த பிராமணப் புலவர்;காப்பியாறு என்னும் ஊர் ஒன்று இருந்திருக்கலாம்  . இவர் பாடிய பாடலுக்காக 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சேர மன்னன் இவருக்கு 40 நூறாயிரம் பொன் (gold) னும் ஆட்சியில் ஒரு பகுதியும் கொடுத்தான் .

நாலாவது பத்தில் பரிசிலர் வெறுக்கை என்ற தலைப்பில், “உலகத்தோரே பலர்மன் செல்வர்” என்று துவங்கும் பாடலில் மூன்று  வரிகள் அருமையான வரிகள்

இனியவை பெறினே தனி தனி நுகர்கேம் ;

பகுத் தூண்  தொகுத்த ஆன்மைப்

பிறர்க்கென வாழ்தி நீ யார் மாறே

பாடலின் சுருக்கப் பொருள் –

“களங்காய் கண்ணி நார்முடிச் சேரல் ! நீ பகைவர் மதிலை அழிக்கும் குதிரைப் படையையும் யானைப் படையும் உடையவன் . நாட்டைத் திருத்தி செம்மைப் படுத்தியவன். ஒளி பொருந்திய நெற்றியுடைய ராணியின் கணவன் ; ஆண் சிங்கம்; பரிசு பெற வருவோரின் பொக்கிஷம் (வெறுக்கை) நீ; வான வரம்பன் என்ற பட்டம் உடையோன்;

“இனிய  பொருள்கள் பலவற்றைப் பெற்றால் அவற்றைத் தனியாக அனுபவிப்போம் ; ஆகையால் அவற்றை என்னிடம் கொடு என்று கேட்கமாட்டாய்; குற்றமற்ற உள்ளம் உடையவன் ; பல்லோர்க்கும் பகுத்தளித்து உண்பதற்காக உணவினைச் சேர்க்கிறாய் ; தன்னலமின்றி பிறர் நலத்துக்காகவே வாழ்கின்றாய் ; ஆகையால்தான் உன்புகழ் எல்லோரையும் விட மேம்பட்டு விளங்குகிறது” .

இதை வள்ளுவனும் இரண்டே வரிகளில் அழகாக மனதில் பதியுமாறு சொல்லிவிட்டான்:–

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள்  322

புறநாநூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ,

“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்

இனிது எனத் தமியர் உண்டலும் இலரே” – பாடல் 182

என்று பாடுகிறார். இந்திரன் அமிழ்தம் என்பதெல்லாம் அக்காலத்தில் சர்வ சாதாரமாகப் பயன்படுத்தப்பட்டது . வள்ளுவரும் அதை உறுதி செய்கிறார்.

மொத்தத்தில் எவ்வளவு சிறந்த உணவு கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ணக் கூடாது என்று இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடினார்கள்.

விருந்தோம்பும் பண்பு, பகுத்துண்ணும் பண்பு இவைகளை பாராட்டும் பழங்கால ப் பாட்டுக்கள் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு.

எல்லாவற்றுக்கும்  முன்பாகவே கீதையிலும் ரிக் வேதத்திலும் இக்கருத்து உள்ளது.

“புஞ்ஜதே தே த்வகம் பாபாயே பசந்தி ஆத்ம காரணாத்”–

எவர்கள்  தமக்கெனவே சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தையே உண்கிறார்கள்

-பகவத் கீதை 3-13

“தேவர்கள் உங்களுக்கு , வேள்வியின் முடிவில், இனிய பொருட்களைத் தருவார்கள் ; அதை மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் இருப்பவன் திருடன்” —பகவத் கீதை 3-12

இறைவன் கொடுத்ததை  மீண்டும் இறைவனுக்குப் படைத்து, பல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே வேள்வியின் தத்துவம்.

இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது ரிக் வேத மந்திரம் 10-117-6

“நான் ஒரு உண்மையை சொல்கிறேன்; உழைக்காமலேயே உணவைப் பெறுகிறார்கள் முட்டாள்கள்;  இது அவனுக்குத் தாழ்வையே தரும்;  அவன் நண்பர்களுக்கும் தருவதில்லை; இதனால் அவனை நேசிப்போரும் இல்லை. பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன் குற்றம் புறிந்தவனே – ரிக் வேதம் 10-117-6

“கொடுப்பார் ஏத்தி , கொடார்ப் பழிப்பர்”—‘பகிர்ந்து கொடுப்போரை உலகம் வாழ்த்தும்; பகிராதோரை உலகம் தாழ்த்தும்’ என்று தொல்காப்பியமும் செப்பும்.

tags – இனியவை பெறினே, இந்திரர் அமிழ்தம்,பகுத்துண்டு

–சுபம்—

MARCH OF HISTORY – 1 (Post No.8243)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8243

Date uploaded in London – – – 26 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

MARCH OF HISTORY – 1

R. Nanjappa

The age of the Universe is beyond human conception. It has been totally beyond the comprehension of scientists. They go on propounding theories, but with each new theory, the past recedes till farther back. Great scientists do realise their limitations. For instance, the astrophysicists speak of “the observable universe”. They know that the real universe, the whole universe goes far beyond what is observed, what can be observed. And it keeps expanding every few years. They keep  discovering  other planets like the earth. One they discovered in July 2015 they  named  Kepler-452b. They hope to find alien life there!

The Christians believed that the world  (earth) was created in 4004 BC! When scientists started applying their mind, they started with calculating the ‘geological’ age and the initial estimates in the 18th century set the age at about 96 million years.  


The Earth seen from Apollo 17.

In the next century, they believed that the earth as we know it was a product of accretion of several layers, and put the age between 20 million and 400 million years. Later with radiometric-carbon dating, they went farther back and now consider the earth to be 4.543 billion years old, take or leave 1%. Now the belief is that the earth and the solar system evolved around 4.58 billion years ago!

But when did “Life” start on earth? This is put at 3.5 billion years ago. Can we really comprehend what these figures mean? But let us remember that all these are “hypotheses”. There are as many hypothesis as there are disputes and disputants. The hypothesis accepted by the more powerful elements in the community pass for science, as in the case of the theory of evolution. 

The stance of the scientists is matched by the steps of the historians. They take an arbitrary date and say anything before that date is legendary, not historical. They dig up something, don’t understand it fully, but go on theorising about it nevertheless. Their power in academia confers on their guesses the status of “history”!


During the last two thousand years, Christianity destroyed every previous religion or cult deliberately, systematically, as it believed them to be false, and wanted to ‘save’ the people.

Ruins of a classical Roman temple complex in Tunisia, North Africa.

.
  For the last 1400 years they were joined by the Mohammedans . Wherever they ruled, they destroyed the old religions and societies.             Bamiyan Buddha destroyed by the Muslim Taliban in 2001

Even so, they could not extinguish the old cultural vestiges fully. In every Muslim society, there are remnants of old ethnic and cultural groups. For instance, in Pakistan, which is one of the recently created Muslim countries, there are 6  or 7 major ethnic groups, and many sects within Islam. The conflict in the Muslim world today is as much between Muslims and non-Muslims as among the Muslims themselves, who come from different ethnic backgrounds.
So called religious brotherhood has not destroyed ancient ethnic bonds.

In the Christian nations, Christian faith is thinning. Not that there are no ‘good, practising’ Christians. Nearly one third of the people there describe themselves as non-religious. But they do believe in ‘spirituality’.- not in mere dogma, or church-going. More and more, churches are getting deserted. 

A pre-Christian revival! 

At the same time, more and more people are taking up non-Christian  and pre-Christian beliefs and methods of worship. Belief in mother -goddess, regarding the world as a manifestation of divinity, etc  are aspects of universal  pre-Christian beliefs and practices which are being revived spontaneously. The main point is that they are pantheistic and polytheistic, as against the concocted and forced Christian belief in monotheism.These were labelled ‘Pagan’ by the Christians, but it seems the old Pagan deities are waking up from their long dormancy and putting organised Christianity in its place. 

TO BE CONTINUED ………………………

tags- March of History-1

***

அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்! (Post No.8242)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8242

Date uploaded in London – – –26 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!

ச.நாகராஜன்

கங்கையிற் புனிதமாய காவேரியின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.

கொங்கு மண்டலத்தில் மேல்கரை அரைய நாட்டில் உள்ள தலம் கறையூர்.  திருப்பாண்டிக் கொடுமுடி என்ற தலப் பெயரைக் கொண்ட இது இந்நாட்களில் கொடுமுடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சி –ஈரோடு இருப்புப் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது.

அங்குள்ள கோவிலில் எழுந்தருளியிருப்பவர் மகுடேசர்.

இறைவியின் திருநாமம்:  மதுரபாஷிணி,திரிபுரசுந்தரி, பண்மொழிநாயகி, வடிவுடைநாயகி.

மகுடேஸ்வரரைப் பற்றிய வரலாறு சுவையானது.

பூச்சாத்த முடியாத படி மிக உயர்ந்த சிவலிங்கமாக விளங்கினார் மகுடேசர். அவரை அகத்தியர் தன் கைப்பிடியில் அடங்கச் செய்ய பூமியில் தாழ்ந்தார் மகுடேசர்.

அகத்தியர் தன் கமண்டலத்துள் அடக்கிக் கொண்டு வந்த காவேரி ஆறானது கீழே தரையில் படிந்து ஓடுமாறு விநாயகர் காக்கை வடிவம் எடுத்துக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். பெருகி ஓடும் காவேரி மீது முனிவர் கோபப்பட்டார்.

உடனே பெண் வடிவாக அகத்தியர் முன் தோன்றிய காவேரி, “ஐயனே! சிவபிரானின் கட்டளையால் விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்தது தெரிந்தும் கூட என் மீது கோபப்படுதல் தகுமோ என்று கூற முனிவர் சாந்தமடைந்து ஆலயத்தினுள் நுழைந்தார்.

மகுடேசர் ஒரு திருவிளையாடலை நடத்தக் கருதி பாதாளத்தில் அழுந்தினார்.

பிராட்டியார் திருமணச் சேவையைக் காணாது (இறைவன் – இறைவியின் திருமணக் காட்சியைக் காணாமல் அகத்தியர் தெற்கு நோக்கி வந்த கதை நமக்குத் தெரியும்) என்னை அகற்றி விட்டதுமன்றி, இப்போது தரிசிக்கவும் வகையின்றிப் பாதாளத்தில் செல்கின்றாரே என்று எண்ணிய அகத்தியர் ஓடிச் சென்று அவரைக் கையால் பிடித்தார். அந்தக் கைப்பிடிக்குள் அப்படியே சிவபிரான் நின்றருளினார். அப்படியே நாளும் மகுடேசர் அங்கு விளங்குகின்றார்.

இதை கொங்கு மண்டல சதகம் 12ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது :-

நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப் பூத்

தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்

முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்

வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே

கொடுமுடிப் புராணம் இந்தத் திருவிளையாடலைக் கூறும் பாடல் இது:-

விரிதிரைப் பொன்னி போக வினையமுற் றினமென் றின்னோன்

பரிவுறப் போது நின்றான் பாதலத் தடைது மென்றே

இருநிலத் திழிதல் காணா முனிவர னேங்கி மாழ்கி

பிரிவுறா வகைசெங் கையாற் பிடித்தனன் பிடிக்குள் நின்றான்

                                    (கொடுமுடிப் புராணம்)

திருப்பாண்டிக்கொடுமுடி தேவார குரவர் மூவரின் பாடல் பெற்ற தலமாகும். கொங்குநாட்டில் மூவர் தேவாரம் பெற்ற தலம் இது ஒன்றேயாகும்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நமசிவாயத் திருப்பதிகம் பாடி அருளிய திருத்தலமும் இதுவே தான்!

tags — திருப்பாண்டிக் கொடுமுடி, அகத்தியன்,

***

SWAMI CROSSWORD 2562020 (Post No.8241)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8241

Date uploaded in London – 25 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – 6 letters- god of creation; if you continue with No 4 (down) you will get the name of a river in Assam

5. – 6– Telegu speaking area in South India mentioned in Vedic literature

8. – lake; holy lakes have this suffix

9. –  5—books detailing temple rituals; Saivites has 28 of them

10.– 7— gem; always go with Nava/9

11. – 5—depth, chasm, abyss; usually around fort

DOWN

1. – -8 letters- name of a great mathematician and a satellite is named after him; not Aryabhatta

2. – 6–egg in Sanskrit

3.– 8– devotional music by a great woman of Rajasthan

4.– 5—means son; joined with No.1 (across) It means a big river coming via china into India

6. – 4– A Bhija mantra with H as the first letter

7.  – 5- mystical weapon in Hindu epics; With Brahma as suffix it is the most dangerous weapon equal to nuclear bomb

–subham–

4 சந்திரன் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No. 8240)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8240

Date uploaded in London – 25 June 2020        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com and swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.சந்திரன் குளிர்ச்சியாய் காய்ந்தாலும் சூரியனையே உலகத்தார் நாடுவார்கள் .

2.சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்

3.சந்திரன் சூரியன் தெற்கு வடக்கானாலும் பிசகான்

4.சந்திரனின் பின்பக்கத்தைக் கொண்டவர்களும் இல்லை;

பெண்களின் உள்ளத்தை அறிந்தவர்களும் இல்லை.

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

சந்திரன் ,பழமொழி

–subham–

‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya (Post No.8239)

Ka= Brahma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8239

Date uploaded in London – 25 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya

Eight years ago, I wrote about the God ‘Ka’  (Prajapati, Brahma) in this blog. All Sanskrit scholars raised their brows without understanding or pretending not to understand the word ‘Ka’ in the Rig Veda (RV 10-121). The hymn itself ends with praising Prajapati (Brahma). Ka means ‘who’ as well in Sanskrit. In Sanskrit there is no interrogation mark. These half -baked scholars put interrogation mark at the end of each mantra in the hymn and started wondering or misinterpreting. But in Hindus mind, Ka is Prajapati/Brahma. If you remove the interrogation marks and read the poem/hymn it coincides with the last word Prajapati.

I have also shown that Egyptians borrowed it from us and made a hieroglyph out of it. Ka symbol means God and he is shown as the son of Pita (Ptah in Egypt).

Tamil and Sanskrit dictionaries give the meaning Prajapati. Probably Indian Rishi Mahadeva ( in Egypt he is Imhotep-Imho=Maha; tep=Dev )taught them about Vedic Mudras and Vedic Gods (Please see my 20+ articles on Egypt)

Interesting information from Panini

Kautilya who came a few centuries after Panini, proposed to Maurya Chandra Gupta a few interesting ideas.

Use religion to make money.

First, celebrate religious festivals ; second, make Gods’ dolls, idols and statues for sale, out of which government can make money.

Kautilya’s wonderful ideas work until today. We Hindus buy dolls of Krishna, Ganesh and Devi until this day to do Pujas on respective festival days. Religious tourism is not only popular in India, but also in other parts of the world. Mecca, Vatican City, Jerusalem and Lourdes are big businesses for Air lines, Hotels and Tourist Industry. The mementos , books and pictures they sell in these places mean huge money.

Let me come back to Panini.

Panini wrote only a grammar book with 4000 couplets in Ashtadhyayi. That and the complimentary works that came after it give encyclopaedic information about Hindu life 2700 years ago.

Panini mentions the following Vedic deities –

Agni, Indra, Bhava, Varuna, Sarva, Rudra, Mrida,

Vrishakapi, Pusha, Aryama, Twashta, Nasatya.

Mostly in 4th and 6th chapters .

I will touch only the controversial gods.

1.Vrishakapi is one of the names of lord Vishnu in Vishnu Sahasranama. When it came in humorous dialogue poem in the Rig Veda, foreigners deliberately translated it as ‘sexy monkey’ but Panini mentioned it as a god (4-1-37) along with other Gods; no fuss is made.

Second interesting thing is about

Nasatya (6-3-75); Two Ashwini Devas are known as Nasatya. The name is derived by Panini from Na Asatyaah- who are the opposite of non-truth. The other interpretation mentioned in Mahabharata and Nirukta is one who are born out of Nasa (nose) of Samnjaa, wife of Surya. Panini rejected this and went for the first one which is originally given by Aurnavabha. He lived before Yaska of Nirukta.

Third interesting thig is about ‘Ka’.

Panini refers to Prajapati under the symbolical name of Ka. Patanjali says Ka is not a pronoun (who), but the proper name of a deity.

Panini mentioned female deities as well –

Indraanii, Varunaanii ,Agnaayii , Vrishaakapaayii (4-1-37)

POST VEDIC DEITIES

Goddess Parvati’s four names are mentioned-

Bhavaanii

Sarvaanii

Rudraanii

Mridaanii (4-1-49)

Mridaani is not found later. This shows Panini lived nearer to Vedic times.

He also gives information about the worship of Month, Year, Season and Stars/Nakshatras.

He shows that Bhakti movement was there 2700 years ago. Particularly Vasudeva bhakti (Krishna Bhakti).

Temples were also there for public worship. There were temples for Kesava, Rama and Kubera (1-43-6)

Kubera worship makes interesting reading.

The reference to the bhakti of Maharaja or Kubera proves on the other hand  that Panini surely had religious bhakti in mind (4-3-97).

An important sutra 5-3-99 ‘jiivikaarthe chaapanye’ proves Panini knows images of deities in his time .

There may be images installed in temples which are not of individual ownership, and hence not for anyone’s livelihood/jiivika, or for sale/panya, but for worship/puujaartha.

If it is for sale ‘kan’ suffix is added

Siva becomes sivaka

Skanda becomes skandaka .

Both ‘chala’ and achala images with the devalakas/owners of shrines would serve for worship/puujaartha, be a source of livelihood to their care takers/owners , but not for sale/apanya.

All these are the object of Panini ‘s rule , and they would be named as siva, skanda without ‘ka’ suffix.

Greedy Maurya kings

Patanjali adds more interesting information.

Mauryan kings , ‘greedy of gold’ /hiranyaathibhih, had ordered to set up , and most probably , to sell images . it served three purposes- jiivika, panya and puujaa .

Kautilya supplies the much needed commentary on this extraordinary Mauryan measure to replenish their exchequer.

The Devtaadhyaksha , officer for religious worship, is directed to raise money  by manipulating the worship of divine images and exploiting the credulousness of the people, such as organising fairs and festivals in the holy shrines of deities – daivata chaitya- , improvising shows of miraculous Naga images with changing number of hoods, and spreading the news of other miracles etc

—Arthashastra 5-2

Kautilya got three birds in one stone – Jiivika/livelihood, Panya/sales and Puuja/divine worship. He is indeed a clever Brahmin!

–Source book – India as known to Panini, VS Agrawala, University  of Lucknow, 1953 (with my inputs )

Vedas and Egyptian Pyramid Texts – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com › 2012/08 › vedas-and-e…

 1.  

28 Aug 2012 – People of different races were living and ruling Egypt for 3000 years. It has a … Actually ‘Ka‘ means God or Brahma in Sanskrit and Egyptian …


Ka | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ka

 1.  

Translate this page

Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading …

tags – Ka, Brahma, Kubera, Deities in Panini, Kautilya ideas

Chandikeswara

–subham–

SAINTS AND SAGES: THE JOY AND THE PAIN-2 (Post No.8238)

     


SAINTS AND SAGES: THE JOY AND THE PAIN-2 (Post No.8238)     WRITTEN BY R. NANJAPPA                          

Post No. 8238 Date uploaded in London – – – 25 June 2020   
Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.              

SAINTS AND SAGES: THE JOY AND THE PAIN-2                                        R. Nanjappa

  Bhagavan Sri Ramana MaharshiOn his arrival in Tiruvannamalai on 1 September 1896, Bhagavan Ramana
first moved around various spots within the Big temple. Then he moved on the Eastern slope of the hill, sitting in various temples. In 1899, he came to Virupakshi cave, where he remained for 17 years. But during those days, he used to roam about extensively on the hills, in those valleys and forests. He would say that there was not an inch that he had not seen there. He had many extraordinary experiences those days. But one of them stopped his roaming on the hills. One day, an elderly woman looking like a villager, ostensibly collecting firewood  or something saw him and boldly unleashed her typical village tongue: ‘May you be carried to the burning ghat! Why can you not sit quietly in one place, in the name of God?’ (Vunnai paadaiyilae vaikka! Sivanaennu orae idattulae okkaara koodadha?) Bhagavan thought that it could be no ordinary village woman who would have addressed “swami” like that! Thereafter Bhagavan reduced and stopped his roaming!
 

Next he moved to Skandasramam in 1917, after the permanent arrival of Mother. This continued till 1922, when they shifted to the site of the  present Asramam, after the Mahasamadhi of Mother.   Bhagavan continued here for 28 years. As we saw in a previous post, each place marked a distinct stage in his ministry, and in a sense could be considered improvement on each earlier stage. (This is from our point of view- for Bhagavan, change in external surroundings did not make any difference- except that as he came to be widely known, and crowds started coming, his schedules had to change!)  

Thus we see that unlike in the case of Sri Ramakrishna or Vallimalai Swami, Bhagavan Ramana did not have to leave a place under some compulsion, and for a worse situation. But he has said that he tried thrice to get away from all the crowd and live independently, but every time something prevented him from going away!  However, Bhagavan Ramana too suffered in the last year due to sarcoma. Some people say that he was a Jnani, above all these things. But it is a fact that there was intense pain, and he suffered. He would never complain or talk of the pain, but in the night, he would moan. He himself did not deny the pain; he would say, “yes, there is pain” but he never said He had pain!  

Jnanis live in a different state of consciousness- we cannot even begin to understand. The two distinct stages could be seen in Sri Ramakrishna- when he was in samadhi, he had no consciousness of the external world at all; once he came down to normal consciousness, he was like us. He could traverse the two at will. But even in the normal state the awareness of Mother would not leave him: as he would speak, he would suddenly say that he could not reveal more as Mother was holding his tongue. To Michael Madhusudan Dutt, a Hindu convert to Christianity, he said he could not give any instruction as he felt Mother was pressing his tongue! So, the pain he felt due to his illness was real, and he spoke about it. Once, as he was walking, he entered into samadhi,  fell down and broke his arm. He felt the pain, and in the normal state, would innocently ask the followers around: why had Mother done this to him?  

With Bhagavan Ramana, we are in a different dimension. Bhagavan was always in a state of samadhi- he didn’t have to “enter” it! But he was also aware of things around him- but we do not know how! Close devotees like Devaraja Mudaliar who were with him and observed him closely said that Bhagavan had no sense of time!  He would not know what time of day it was! Yet to us, it appeared that he was particular about the schedules that were followed, that he was punctual! Mudaliar records Bhagavan saying about some events: ‘It is as if it is happening in a dream’. When he made a translation of Atma Bodha of Sankara, he felt that he had seen or read the verses somewhere, and that no one else should claim them as theirs!  But the pain he experienced was real!   

Whenever there was some talk about the illness, he would try to dismiss it, saying “you attach too much importance to the body”. Once, he translated a verse from Bhagavatam about the state of the Jnani with regard to the body:

  Whether the impermanent body is at rest or moves about, or whether by reason of prarabdha it clings to him or falls away from him, the Self-realised siddha is not aware of it, even as the drunken man blinded by intoxication is unaware   whether his clothes are on his body or not. But we are devotees, and this causes us pain. We wonder why Jnanis should undergo suffering at all. One stock answer is that Jnana burns away sanchita and agami karmas, but that prarabdha will have to be experienced. Bhagavan would counter such people: when a man having three wives dies, how many of the wives will become widows? Will not all? Bhagavan would say that in reality the Jnani has no prarabdha too, but it appears so to the onlookers!  

The most probable answer is that the Jnanis suffer on account of the sins of their followers! Sri Ramakrishna used to say this openly. He said that so many impure people came and touched his feet that he had to assume their sins and suffer. It was seen that when someone with some body ailment or wound touched Ramakrishna, he would squirm in pain! We can now understand the orthodox rule that no one with a body injury or wound should perform puja   to the Murtis in temples! Holy Mother Sarada Devi used to say that Thakur came to the earth to absorb the sins of the people. She would ask: Do you think he came to eat sweets all the time? And she would do the Japa for all the people she had initiated, because they did not always do it! She was thus Guru and Mother rolled into one!


Holy Mother Sarada Devi


In the case of Ramana, no one was allowed to touch his feet. But the case of Jnani is different. One doesn’t have to touch him! Just as he need not touch any one to initiate, but can do it by drishti or even icha or sankalpa, people too need not touch him! By just being in his presence, his beneficial rays come to us. He has no sankalpa or icha. The mere presence of the Jnani / his very nature is such that such absorption takes place! It seems the Jnani has no choice. If this is the case with ordinary people, what about those who call themselves disciples? (See note below).  

A disciple without discipline is not disciple, but devil. All of us who regard someone as our Guru should realise what a great responsibility it is to be a disciple, and what a great burden we impose on the Guru by our impurity! (I am talking of real spiritual guru, not vidya guru or diksha guru) It is here that not only the spiritual instructions, even the worldly lessons become important.  

We often complain that we have not received the Grace. But do we examine whether we deserve it? What has been our preparation? Sri Ramana used to say ‘grace is always there’. Sri Ramakrishna would say that the wind (of grace) is blowing, but we have to open our sails! It is a pity that in spite of such clear instructions, we do not make the effort!

Sarada Devi with Sister Nivedita

  # NOTE: This is illustrated in the case of Bhagavan by a remarkable incident. One day while at Skandasramam, he had an upset stomach. He decided to fast that day and thought he could do it better if he went round the Hill. So he started on giripradakshina. He used to take the inner forest route. When he had gone some distance, he met a group of 5/6  women who looked like villagers gathering firewood- each had a bag. They asked for a source of water. It was some distance away and he led them there. As he was about to go his way, they said that he should not go without taking the food  they had brought. Bhagavan was always kind to such people and he agreed. Each one of them served him something from her bundle and insisted that he should take all! He ate all, as he would never waste food and resumed his walk, with a heavy stomach. After he had walked quite a bit for a few hours, he again met them all in a  new location! Again they insisted that he should take lunch with them and again each one served him her share! Somehow Bhagavan finished it all and resumed his walk.

Around 2 pm, he found another old devotee coming to him. He too carried some food, with some special item prepared for him! It seems with that he had gone to Skandasramam and learning that Bhagavan was on a pradakshina, he started circling the Hill in the opposite direction, so that he would not miss Bhagavan!  So, again Bhagavan could not refuse the food of a devotee! Bhagavan said how his resolution to skip food that day ended in this manner! The point is that the Jnani had no choice in the matter of extending his Grace. It was Automatic Divine Activity!               tags – Saints and Sages- Part 2
                                  


***      

ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய அன்பு! (Post No.8237)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8237

Date uploaded in London – – –25 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய அன்பு!

ச.நாகராஜன்

ஒரு ஹிந்து எப்போதுமே எந்த மதத்தினரைச் சேர்ந்தவராக இருந்தாலும் மதிப்புக் கொடுப்பான்; மரியாதை செலுத்துவான்.

தன் மதத்திற்கு மாற வேண்டுமென்றோ அல்லது மற்ற மதத்தினரை காபிர் என்றோ கூற மாட்டான்.

ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி ஒரு ஹிந்து மன்னன் எப்படி இருப்பான் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

எப்பொழுதெல்லாம் குர் ஆன் அவர் கையில் கிடைத்ததோ அப்போதெல்லாம் அவர் அதை மரியாதையுடன் கையில் எடுத்துக் கொள்வார். அதை இஸ்லாமைப் பின்பற்றும் ஒருவருக்குக் கொடுத்து விடுவார்.

இதே போல, ரதோர் வீரனான துர்காதாஸ் சிறந்த ஹிந்து வீரனுக்கு ஒரு எடுத்துக் காட்டு.

அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் ….

ஔரங்கசீப்பின் நான்காவது மகனான முகம்மது அக்பர் தன் தந்தைக்கு எதிராக பெரும் கிளர்ச்சியைச் செய்து எதிர்த்தான். இந்தக் கிளர்ச்சியின் காரணமாக அவன் பெர்சியாவுக்குத் தப்பி ஓடினான். அப்படி ஓடும் போது தனது இளைய மகளை ராஜபுதனத்து வீரர்கள் கையில் ஒப்படைத்தான்.

துர்காதாஸ் அந்த இளம் பெண்ணை மிக அன்புடன் நடத்தி வந்தார்.

பல வருடங்கள் துர்காதாஸின் பாதுகாப்பில் இருந்த அந்த இளம் பெண் ஔரங்கசீப்பிடம் திரும்பிச் சென்றாள்.

அப்போது தனது தாத்தாவான அவரிடம் துர்காதாஸின் அன்பையும் அவர் தன்னை எப்படி நடத்தினார் என்பதையும் விவரித்துக் கூறினாள்.

துர்காதாஸ் அவளுக்குக் கல்வி கற்பிக்க ஆஜ்மீரிலிருந்து ஒரு இஸ்லாமியப் பெண்ணை அழைத்து வரச் செய்தார்.

அந்தப் பெண்ணின் மூலமாக் குர் ஆன் முழுவதையும் அவள் கற்றாள்; அதை மனப்பாடமும் செய்தாள்!

தனது பரம வைரியான துர்காதாஸின் இந்த செய்கையைப் பற்றி பேத்தி சொன்னதை ஔரங்கசீப் கூர்ந்து கவனித்துக் கேட்டான்.

இதை ஹிந்துக்களைப் பற்றி ஒருதலைப்பட்சமாகவே எழுதும் வரலாற்று ஆசிரியனான காஃபி கானே (Khafi Khan) விவரமாக எழுதி வைத்துள்ளான்.

இதே காஃபி கான் சிவாஜியைப் பற்றி எழுதுகையில் எந்த ஒரு மசூதிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை சிவாஜி  மஹாராஜ் ஒரு விதியாகவே பின்பற்றி வந்ததைக் குறிப்பிடுவதோடு குர் ஆனை மதித்ததோடு, இஸ்லாமியப் பெண்களையும் அவர் மிக்க மரியாதையோடு நடத்தியதையும் கூறுகிறான்.

முகலாய ஆட்சியில் அக்பரைத் தவிர மற்ற எந்த மன்னனும் மற்ற மதத்தினரை சகிப்புத்தன்மையுடன் நடத்தவில்லை என்பது வரலாறு கூறும் உண்மை!

ஜிஹாங்கீர் அரசாண்ட காலத்தில் அக்ஷய பட் மரத்தை வேரோடு பிடுங்கி அழித்தான். அந்த மரம் ஒரு நாளும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்பது ஹிந்துக்களின் தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

அதைப் பொய்ப்பிக்கவே அவன் இப்படிச் செய்தான்.

மரம் வேருடன் பிடுங்கப்பட்ட நிலையில் வேர் இருந்த மரத்தின் அடிப்பகுதியில் ஈயத்தையும் காய்ச்சி ஊற்றினான், மரம் தழைத்து விடக்கூடாது என்று!

என்ன ஆச்சரியம்! ஒரு வருடத்திற்குள்ளாகவே அக்ஷய மரம் துளிர்த்தது; வளர்ந்தது!

ஹிந்து மதம் ஒரு நாளும் அழிக்கப்பட முடியாது என்பதை முகலாயர் மற்றும் பிரிட்டிஷாரின் கொடுமைக்குப் பின்னரும் வளர்ந்து உலகையே அணைக்கும் ஹிந்து மதம் ஒரு சான்று அல்லவா!

tags – துர்காதாஸ், Durgadas

#***