லெய்டன் செப்பேட்டில் கோட்டையூர் பிராமணன் அனந்த நாராயணன் (Post.11,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,193

Date uploaded in London – 14 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கல்வெட்டுகளில் உள்ள 800 சம்ஸ்க்ருத, பிராகிருத மொழிப் புலவர்களின் பட்டியலை வெளியிட்ட புனே நகர திஸ்கால்கர்  அளிக்கும் மேலும் சுவையான செய்திகள் இதோ :-

கோட்டையூர் அனந்த நாராயணன்  , வசிஷ்ட கோத்ரம் 

லெய்டன் செப்பேடுகள் சோழர் காலத்தியவை. அதில் பெரிய லெய்டன் செப்பேடுகள், சிறிய லெய்டன் செப்பேடுகள் என்று இரண்டு உண்டு. அவை தற்போது ஹாலந்து நாட்டின் லெய்டன் நகரில் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிய செப்பேடுகள் ஆயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தன. அவை ராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. ராஜராஜனின் 21ம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டவை அதாவது கி.பி. அல்லது பொது ஆண்டு 1044.

எல்லா செப்பேடுகளிலும் முதலில் ஸம்ஸ்க்ருத மொழி வாசககங்கள் வரும். பின்னர் தமிழ் மொழி வரும். பெரிய செப்பேடுகளில் 21 தாமிரத் தகடுகள்/ ஓலைகள் இருக்கின்றன.மொத்தமுள்ள 332 வரிகளில் 111 வரிகள் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.

இந்த செப்பேடு நாகப்பட்டினத்தில் புத்தவிஹாரம் கட்டுவதற்கு தென்கிழக்கு ஆசியாவில் ஆட்சிபுரிந்த சைலேந்திர வம்ச அரசின் உதவி பற்றிப் பேசுகிறது . கனக கிரியைத் (மகா மேரு) தோற்கடிக்கும் உயரத்துக்கு புத்த விஹாரம் அமைந்ததாம்! தமிழ் பகுதியில் புத்த விஹாரத்துக்கு கிராமம் தானம் அளிக்கப்பட்ட  செய்திகளும் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் சோழர் குலத்தின் பெருமையும் பேசப்படுகின்றன.கோட்டையூர் வசிஷ்ட கோத்திர பிராமணன் அனந்த நாராயணன் சம்ஸ்க்ருத செய்யுளை இயற்றியதாகவும் செப்பேடு குறிப்பிடுகிறது. செப்பேட்டை எழுத்து வடிவில் தந்த சித்ரகாரர்கள் 5 பேர் ஆவர்.

இதை ராஜராஜன் காலத்திய திருவாலங்காட்டு செப்பேடுகளுடன் ஒப்பிடலாம். அதை 4 சித்ரகாரர்கள் தாமிரத் தகடுகளில் பொறித்தனர். அதில் சங்கரன் மகன் நாராயணன் எழுதியதாகக் குறிப்பிடுவதால் அது இந்த அனந்த நாராயணனாக இருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. மேலும் இது ராஜராஜனின் 6ஆவது அல்லது ஏழாவது ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது.

XXX

அபிராம சபாபதி காமாக்ஷி

புதுக்கொல்லம் கல்வெட்டில் அந்தச் செய்யுளை  இயற்றிய அபிராம சபாபதி காமாக்ஷி  என்பவரின் பெயர் காணப்படுகிறது .1583-ம் ஆண்டு ஸ்ரீ வல்லப, வரதுங்கராம பாண்டியர் கால கல்வெட்டு இது.

வீர பூபாலனின் வலது காரமான திருமலை ராயனின் வேண்டுகோளின் பேரில் பல பிராமணர்களுக்கு புதுக்கொல்லம் கிராமத்தை தானமாகக் கொடுத்த செய்தி இதில் காணப்படுகிறது.

XXX

அப்பையன் எழுதிய 70 செய்யுட்கள்

ஒரிஸ்ஸாவில் புரி அருகில் தசகோபா கல்வெட்டு உளது. இதில் கங்க வம்ச அரசர் மூன்றாம் ராஜராஜன் போற்றப்படுகிறார். 1199-ம் ஆண்டில் எழுதப்பட்ட இதில் உரைநடைப் பகுதியுடன் அப்பையன் எழுதிய 70 செய்யுட்கள் இருக்கின்றன.. கங்க வம்ச அரசர்களின் குலப் பெருமையுடன் தானம் பெற்ற 75 பிராமணர்களின் கோத்திரங்களும் அவர்கள் தானமாகப் பெற்ற நில விவரங்களும் காணக்கிடக்கின்றன.

எல்லா பிராமணர்களின் சார்பில் யார் கையில் நீர் வார்த்து அவைகள் கொடுக்கப்படுகின்றனவோ, அந்தப் பிராமணருக்கு கூடுதல் நிலம் அளிக்கப்படும். அவரைப் பாணியாகிராஹின் என்று அழைப்பார்கள் .

அரசனின் மகனான மூன்றாம் அநங்க அபிராம சார்பில்  1229-ல் கொடுக்கப்பட்ட தானத்துக்கு இதே புலவர் கவிகள் புனைந்துதுள்ளார். இதில் 89 செய்யுட்கள் வெவ்வேறு யாப்பு அணிகளில் அமைந்துள்ளன இதிலும் பிரம்மதேயம் பெற்ற பிராமணர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.

என் கருத்து

இந்தக் கல்வெட்டுகள் அந்தக் காலத்தில் , அதாவது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர், நிலவிய பெயர்களையும், பிராமணர்களின் கோத்திரங்களையும், ஊர்ப் பெயர்களையும் சொல்வதால் பல்வகை ஆராய்ச்சியாளருக்கு அவை பயன்தரும் . இது தவிர மன்னர்களின் வரலாறும் பரம்பரையும் கிடைக்கும். வட இமயம் முதல் தென் குமரி வரை கல்வெட்டுகளில் சம்ஸ்க்ருத மொழியும், மக்களின் பெயர்களில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் இருப்பது ஆராய்ச்சிக்குரியது. புற நானூற்றிலேயே தாமோதரன், கபிலன், பரணன் , வால்மீகி , காமாக்ஷி (காமக்கண்ணி), பிரமன், மஹாமூலன்/மாமூலர் , விஷ்ணுதாசன் (விண்ணந்தாயன்), கண்ணதாசன் (கண்ணந்தாயன் ) பல நாகன் பெயர்கள் இருப்பது ஆராய்ச்சிக்குரியன..

70 முதல் 90 பாடல்கள் உள்ள இந்தக் கல்வெட்டுக் கவிதைகள் அச்சிடப்பட்டால் பலருக்கும் பயன்தரும்.

–சுபம்—

Tags– லெய்டன், செப்பேடு, பிராமணன், செய்யுட்கள், கல்வெட்டு

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1 (Post.11192)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,192

Date uploaded in London – –    14 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முதல் ஓசை நாளிதழில் வெளி வந்த எனது பழைய கட்டுரை இது.

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 1

ச.நாகராஜன்

விண்யுகத்தின் பொன்னான காலம்!

சென்ற நூற்றாண்டில் ஆரம்பித்த விண்யுகம் ஆயிரமாயிரம் அதிசயங்களை விளைவித்து வருகிறது. நாளுக்கு நாள் முன்னேறி வரும் விண்ணியல் பல்வேறு விண்வெளிச் சங்கங்களைத் தோற்றுவித்து வருகிறது. செவ்வாய்க்கு உடனடியாகப் பயணப்பட வேண்டும் என விரும்பும் செவ்வாய் கிரக ரசிகர்கள் செவ்வாய் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். சந்திரனுக்குச் செல்ல விரும்புவோர் சந்திர சங்கத்தை – தி மூன் சொஸைடியை (The Moon Society) ஆரம்பித்துள்ளனர்.

சந்திர சங்கத்தின் தலைவர் கென் மர்பி

கென் மர்பி (Ken Murphy) என்பவர் பன்னாட்டு வங்கித் துறையில் 20 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். சந்திரன் மீது அடங்காத காதல் கொண்டவர். 2011ஆம் ஆண்டு மூன் சொஸைடி – சந்திர சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

சந்திரனைப் பற்றிய அனைத்தையும் ஆராய்வது, சந்திரனுக்கு பூமியிலிருந்து அன்றாட விமானப் பயணம் போன்ற விண்கலப் பயணத்தை மேற்கொள்வது, சந்திரனில் ஒரு மனித காலனியை  (குடியிருப்பை) அமைப்பது உள்ளிட்ட பல ஆர்வமூட்டும் விஷயங்களைக் குறிக்கோளாக்க் கொண்டது சந்திர சங்கம்.

சந்திரன் பற்றிய திரைப்படங்களைத் தொகுக்கும் பணியில் அதிக ஆர்வம் காட்டிய கென் மர்பி 87 படங்களைத் தொகுத்துள்ளார்.

ரசிகர்களை ஈர்த்த முதல் ஐந்து படங்கள்

நூற்றுக் கணக்கான தொலைக்காட்சித் தொடர்களும் ஏராளமான திரைப்படங்களும் விண்வெளியை மையமாக வைத்து கடந்த பல ஆண்டுகளில் வெளியாகி உள்ளன. அவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிகர்கள் மனம் மகிழ்கின்றனர். இவற்றில் தலை சிறந்த திரைப்படங்களாக உலகளாவிய அளவில் தேர்ந்தெடுத்த படங்கள் ஐந்து. அவை:-

  1. 2001: A Space Odyssey (2001:எ ஸ்பேஸ் ஒடிஸி)
  2. Planets (ப்ளனெடெஸ்)
  3. Gravity (க்ராவிடி)
  4. Voyage Dans La Lune (வாயேஜ் டான்ஸ் லா ல்யூன்)
  5. Star Caps (ஸ்டார் கேப்ஸ்)

இந்த ஐந்து படங்களையும் உலக ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்கின்றனர்.

விண்வெளிச்சாலை வழியே விண்கலங்கள் பறந்து பூமியைச் சுற்றும் போதும் சந்திரனை நோக்கிப் பயணப்படும் போதும் சந்திரனை அடையும் போதும் ஏற்படும் உணர்ச்சிகரமான சம்பவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட திரைப்படங்கள் பல ரகமானவை. ஆரம்ப காலத் திரைப்படங்கள் கற்பனையை அடிப்படையாக்க் கொண்டவை. ஆனால் அறிவியல் முன்னேற முன்னேற, விண்கலங்கள் விண்வெளிச் சாலையில் சீறிப் பாய்ந்து வெற்றி முழக்கம் கொட்டக் கொட்ட வெளியாகிய திரைப்படங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தம்முள்ளே கிரகித்துக் கொண்டன!

எத்தனை எத்தனை திரைப்படங்கள்!

வேகமான ஒரு பருந்துப் பார்வையை இந்தத் திரைப்படங்களின் மீது வீசுவோமா!

வாயேஜ் டான்ஸ் லா ல்யூன் (Voyage Dans La Lune):- 1902ஆம் ஆண்டு வெளியான அற்புதமான படம் இது. பிரபல அறிவியல் புனைகதை நாவலாசிரியரான ஜூல்ஸ் வெர்ன் எழுதிய டீ லா டெரி அ லா ல்யூன்” என்ற கதையையும்  பிரபல ஆங்கில நாவலாசிரியரான ஹெச்.ஜி.வெல்ஸின் ஃபர்ஸ்ட் மென் இன் தி மூன் என்ற நாவலையும் பின்பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒரு விஞ்ஞானிகளின் குழு சந்திரனுக்கு ஒரு கலத்தை அனுப்ப முனைவதையும் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களையும் சித்தரிக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட் நிறைந்த படம் என்று சொன்னால் நூறு வருடங்களுக்கு முன்பேயா ஸ்பெஷல் எபெக்ட் என நமது விழிகள் பிதுங்கும். திரைப்படத் துறையின் ஆரம்ப காலப் படம் என்பதால் இதற்கு வரலாற்றில் தனி மகிமை உண்டு!

உமன் இன் தி மூன் (Woman in the Moon):- 1929ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. சந்திரனில் தங்கம் தேடி அலையும் ஒரு விஞ்ஞானி பற்றிய கதை இது. பிரபல வானியல் விஞ்ஞானியான ஹெர்மன் ஓபர்த் என்பவரை ஆலோசகராகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். அந்தக் காலத்திலேயே அறிவியல் புனைகதை – ஸயிண்டிபிக் ஃபிக் ஷன் –ஆரம்பமாகி விட்டதைப் பறை சாற்றும் திரைப்படம்.

டெஸ்டினேஷன் மூன் (Destination Moon):- 1950இல் வெளியான படம் இது. சந்திரனில் இருக்கும் ஆதார வளங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பயணப்படும் கதை என்பதால் பொதுமக்கள் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட படம் இது. பிரபல எழுத்தாளர் ராபர்ட்                  ஏ. ஹெய்ன்லெய்ன் என்பவர் இதன் ஆலோசகர்.

ப்ராஜெக்ட் மூன்பேஸ் (Project Moonbase) :-1953இல் வெளியான படம் இது. சந்திரனில் முதல் தளம் அமைக்கப்படுவது தான் கதை. ராணுவ நோக்கிலான படம் இது. சிறப்பான காட்சிகள் ஏராளம் உண்டு.

ஸ்பேஸ்வேஸ் (Spaceways):- 1953ஆம் ஆண்டு வெளியான படம் இது. டிவி தொடர்களில் வரும் திகில் கதையின் அடிப்படையில் ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. ஹை-டெக் செட்டுகளுடன் அமர்க்களமாக வெளிவந்த படம்.

கேட் உமன் ஆஃப் தி மூன் (Cat-Women of the Moon):- 1953 ஆம் ஆண்டில் வெளியான படம் இது.அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சந்திரனுக்குச் செல்கின்றனர். அங்கு பெண்கள் மட்டுமே உள்ள ஒரு சந்திர நாகரிகத்தைக் கண்டு திடுக்கிடுகின்றனர்.

டிஸ்னி டுமாரோலேண்ட்: மேன் அண்ட் தி மூன் (Disney Tomorrowland: Man and the Moon):- 1955ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனை ஆய்வு செய்யும் போது என்ன நிகழும் என்பதை க்ரியேடிவாகக் கூறும் படம். இதில் வரும் அனிமேஷனைப் பார்த்தே பின்னால் வந்தவர்கள் அனிமேஷனைத் தங்கள் திரைப்படங்களில் புகுத்த ஆரம்பித்தனர்.

*********************   (தொடரும்)

புத்தக அறிமுகம் – 28

மாக்ஸ்முல்லர் மர்மம்!

பொருளடக்கம்

என்னுரை

1. இருவேறு கருத்துக்கள்

2. மாக்ஸ்முல்லரின் புகழுரை

3. மாக்ஸ்முல்லர் – ஒரு கால அட்டவணை

4. மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ்?

5. லார்ட் மெக்காலேயின் திட்டம்

6. மெக்காலே கொள்கை

7. மிஷனரிகளின் நோக்கம்

8. ஒரு கப் சாக்லட்

9. மாக்ஸ்முல்லரின் கடிதங்கள்

10. அன்புள்ள அம்மா!

11. மாக்ஸ்முல்லர் சம்ஸ்கிருதம் கற்றாரா?

12. 25 ஆண்டுகள் செய்த பணி

13. மாக்ஸ்முல்லர் மீதான குற்றச்சாட்டு

14. பணியில் திருப்தி இல்லை

15. பிரம்ம சமாஜத்தின் தோற்றம்

16. தேர்தலில் தோல்வி

17. பேராசிரியர் பதவி

18. இந்தியாவிற்குப் புகழாரம்

19. ஸ்வாமி விவேகானந்தருடன் சந்திப்பு

20. சாயணரே மாக்ஸ்முல்லராகப் பிறந்திருக்கிறார்!

21. மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர்

22. மாக்ஸ்முல்லர் மர்மம்

23. ஆராய்ச்சி விளைவித்த சேதம்

24. தள்ளுவன தள்ளி கொள்வன கொள்வோம்

*

நூலில்  நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி:-

என்னுரை

மாக்ஸ்முல்லர் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் புகழ்ந்து கூறுவதைப் படித்து வந்த போது அவர் இந்தியாவிற்குப் புகழாரம் சூட்டியதைப் பார்த்து மகிழ முடிந்தது.

ஆனால் அதே சமயம் ஆரியர் பற்றிய ஒரு கொள்கையை உருவாக்கி அது இந்தியாவின் பாரம்பரியப் பின்னணியையே தாக்கியதைக் கண்ட போது திகைக்க வேண்டி இருந்தது.

ஆகவே முழுமையான ஆய்வில் இறங்க மனம் துடித்தது. ஆராய ஆரம்பித்தேன்.

அந்த ஆய்வில் கண்ட உண்மைகளே இவை.

அன்பர்கள் அவரது ஆரியர் சம்பந்தமான கொள்கைகளைத் தள்ளி அவர் இந்தியாவைப் புகழாரம் சூட்டிப் போற்றுவதை மனதில் கொள்ள வேண்டும்.

மாக்ஸ்முல்லர் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்த திருப்தியில் என்னுடன் இணைய உங்களை இந்த நூல் வாயிலாக அழைக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளை இணையதளத்தில் ஒரு தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

பங்களூர்
ச. நாகராஜன்
மார்ச் 2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

KINGS WHO WROTE BEAUTIFUL POEMS ON STONE INSCRIPTIONS (Post No.11191)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,191

Date uploaded in London – 13 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Hindu kings were great poets,  and they were well versed in Sanskrit. Professor D B Diskalkar of Pune identified 800 Sanskrit and Prakrit poets of India on inscriptions. His family published it in a book in 1992, thirty years after Diskalkar’s death.

Though we don’t get all the poems written by those poets, there are a few sample poems in the book. It is high time someone publish all the poems on inscriptions with English and vernacular language translations.

Kamala laanchana was a poet and guru of king Nagapala (Naagapaala  of Chamba. He wrote Devi -ri- Kothi fountain inscription. It was dated 1159-1161 CE, in the seventeenth regnal year of king Lalitvarman. Out of the 17 verses in praise of Nagapala, the last part only was in good, readable condition. The description of the pious work done by queen Balhaa after the death of her husband is described in good poetry. She was about to do SATI (dying with husband in funeral pyre) but was held back by her people.

The poet indulges in the use of rhyming words with great melodious effect to emphasize the instability of life. (It is a topic widely used in Tamil and Sanskrit. It is in all the 18 minor works in Tamil including Tirukkural written by Tiruvalluvar. Greatest Hindu philosopher Aadi Shankara sings about it in Bhaja Govindam and Viveka Chudamani).

Here is what Kamalalanchana wrote on the inscription,

Javanapavana vellaloola kallola maalaa

Pratimithasasi lekhaachanchalam jeevalokam

Pratipadamava bhuddayaacheekaratsaatha balhaa

Nijapathi sukruthaartham pushkaraadhaarametham

Xxx

SIVA STUTI BY KING OF NEPAL

BHUPALENDRA MALLA (bhuupaalendra malla) , a king of Nepal, who ruled around 1690 CE, composed a hymn on Lord Shiva and inscribed it on stone.  Pasupathinath temple of Lord Shiva in Kathmandu, capital of Nepal, is very famous and lakhs of Hindu devotees visit the holy temple every year.

Here is what the king wrote on Lord Pasupathinath (naath)

Srimath Pasupathi kamala charana kamala dhuuli dhuusaritha siroruha-

sreemaaneeswarishta devataa

varalabdha prasaada – dedheepyamaana maanonnata sreeraghuvamsaavataara

–ravikulatilaka hanumat dwaja janepaaleswara mahaa rajaadhi raja

 sakala raja chakraatheeswara

xxxx

VERSE OF RAJASTHAN KING

Kakkuka , son of  Kakka, a Pratihaara king, composed a verse in the type of a Sanskrit Subhaashita which is inscribed at the end of  Ghatiyaala stone pillar inscription Jodhpur dated  862 CE.

Sanskrit Subhaashitas are two or four line verses covering all the subjects from A to Z, but mostly didactical.

There over 20,000 Subhaashitas available in books.

Kakkuka was a scholar in Sanskrit. His verse deals with the subjects he liked,

Yauvanam vividhairbhogair madhyamam cha vayah sriyaa

Vrddhabhaavascha  dharmena yasya yaati sa punyavaan.

–subham—-

 tags- poems, on inscriptions, Ghatiyala, Rajasthan, Siva Stuti, King of Nepal, Kamalalanchana, Nagapala

மேலும் சில சுவையான கல்வெட்டுக் கவிதைகள் (Post No.11190)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,190

Date uploaded in London – 13 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

800 கல்வெட்டுக் கவிஞர்கள் பற்றிய புஸ்தகத்தில் இருந்து மேலும் சில சுவையான, வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்களைக் காண்போம்.

அசலத

அசலத என்னும் கவிஞர் புனைந்த இரண்டு ஸம்ஸ்க்ருதக் கவிதைகள்

பட்டடக்கல் லோகேஸ்வர கோவில் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்ரமாதித்யன் காலக் கல்வெட்டு இது (733-747CE).

தென்னிந்தியாவில்  1300 ஆண்டுகளுக்கு முன்னரே பரதக் கலை எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் இது.

நாட்டிய சாஸ்திரத்தை சம்ஸ்க்ருத மொழியில் நமக்களித்த பரத முனிவரை அசலத எழுதிய இரண்டு செய்யுட்களும் குறிப்பிடுகின்றன.

பரமத , குடிலோன்னதநட என்னும் இரண்டு வகை  நாட்டிய நாடகங்களை கவிஞர் குறிப்பிடுகிறார் என்பது நாட்டிய அறிஞர்கள் கருத்து. இது அக்காலத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்துக்குப் போட்டியாக மற்றொன்று  தோன்றியதாகவும் ஆனால் பரத சாஸ்திரம் வெற்றிக்கொடி நாட்டியது என்றும் விளம்புகிறது.

பரதனுத வசனரசனா விரசித நரஸேவ்ய  ஸிம்ஹ நாதேந

பரநட மதாந்த  ஹஸ்தி  பரிஹீனமதோ பவத் யேவ

நட  ஸேவ்ய பரதமதன்யுதபடுதர  வசனா சனி ப்ரபாதேன

குடிலோன்னதநட சைலஹ ஸ்புடிதாநத மஸ்தகஹ  பததி

பரத நாட்டிய சாஸ்திரத்தின் பெருமையை விதந்து ஓதும்  கவிதை  இது.

xxxx

அமர கவி

சண்டேல அரசன் போஜ வர்மன் (Bhojavarman),  வீர வர்மன், கல்யாண தேவி ஆகியோரின் புதல்வன் ஆவார் . அவர் 1288-ல் ஆட்சி புரிந்தபோது அமர என்ற பெயர்படை த்த அமைச்சர் ஒரு கவி இயற்றினார். அது பண்டேல்கண்ட் பகுதியில்  நானாவில் உள்ளது . அஜயகத  கல்வெட்டு எனப்படும். எண்களை திறமையாக சொல்லிலும் எண்களிலும் பயன்படுத்தும் கவிதை இது. கணட , இசேக்ஷண , சுருதி, பூத  என்ற சொற்கள் இவ்வாறு கையாளப்படுகிறது ஜெயா துர்க் என்னும் இடத்தில் கோவில் கட்டப்பட்டதைக் கூறும் சாசனம் இது. முதலில் கவிதை சிறப்பாக அமைய விஷ்ணுவை வேண்டுகிறார் . 39 செய்யுட்களில் வெவ்வேறு யாப்பு அணிகளில் அமைந்த கவிதை ஆகும்.

சித்ரவர்ணம் மிக்க ஒரு கம்பளம் அல்லது துணியைப் போன்றது என் செய்யுள் என்று புகழ்ந்து கொள்கிறார். அறிஞர் உலகத்தை மகிழ்விக்க, திருப்திப்படுத்த இந்த பல வண்ண துணியை தாம் நெய்ததாக — அதாவது பல அணிகளைக் கொண்ட  கவிதையை இயற்றியதாக — புகழ்பாடுகிறார்.

இதோ அமர கவியின் செய்யுள்,

அமர கவிரனர்த்யாம்  குர்வலங்கார ஸாராம்  படு பதல

பனீயாமேஷா சிஷ்டஸ்தவிஷ்டஹ

அசயதுரு குணார்க்கஹ ஸம்ருதா பிக்ஞ ஸம்க்ஞஹ  

க்ருதி குதுக மபீப்ஸுர் வாக்பதீம்  சித்ர வர்ணாம்

xxx

 பிராமணப் புலவர்கள்

விஜயநகர சாம்ராஜ்யப் பேரரசர் கிருஷ்ண  தேவராயர் அரசைவயில் எட்டு பிராமண அறிஞர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களுக்கு அஷ்ட திக் பாலகர்கள் என்று பெயர். அனைவரும் புலவர்கள். அவர்களுக்கு திப்புலேரு கிராமத்தை அக்ரஹாரமாக மன்னர் பரிசளித்தார் இது கி .பி. அல்லது பொது ஆண்டு 1440-ல் நடந்தது. எட்டு புலவர்களின் தலைவர் அல்லாசானி பெத்தண்ணா . அவர்தான் ஆந்திர கவிகளின் பிதாமகர்.

இது புதிதல்ல. சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து பாடிய பிராமணப் புலவர்கள் அனைவருக்கும் சேர மன்னர்கள் பொற்காசுகளையும் கிராமங்களையும் பரிசளித்த செய்தி உளது.

பல்லவ மன்னன் நந்திவர்மனின்  உதயேந்திரம் சாசனத்தை எழுதிய புலவன் பரமேஸ்வரனுக்கு பிரம்மதேயம் கிடைத்தது.

வேள்விக்குடி சாசனம் எழுதிய யுத்தகேசரிக்கு நில புலன்களும் வீடும் தானமாக அளிக்கப்பட்டது

உச்சலகல்ப  குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஜயநாத , கி.பி. 496-ல்  சவபாவ என்ற பிராமணப் புலவருக்கு அக்ரஹாரம் அளித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

ஒரிஸ்ஸா மன்னன் இரண்டாம் கங்கவர்மனின் சாசன அதிகாரி காமதேவ ஸ ர்மனுக்கு கிடைத்த நில தானமும் கல்வெட்டில் உளது.  (கி.பி.1304)

கங்க வம்ச அரசன் இரண்டாம் பானு,  ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி நகரில் ரங்கதாச சர்மனுக்கு 1304ம் ஆண்டில் கொடுத்த அக்ரஹாரம் பற்றிய செய்தியும் கல்வெட்டிலிருந்து கிடைக்கிறது .

கங்க வம்ச அரசன் இரண்டாம் நரசிம்மன் அளித்த கொடையையும் ஆலல்பூர் சாசனம் அறிவிக்கிறது

Xxx subham xxxx

tags- பிராமணப் புலவர்கள், அமர கவி, அசலத, பரமத , குடிலோன்னதநட   நாட்டிய நாடகம்

இனிக்கும் இத்தாலி! (Post No.11189)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,189

Date uploaded in London – –    13 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

4-8-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இனிக்கும் இத்தாலி!

ச.நாகராஜன்

பயணிகளைக் கவரும் இத்தாலி

தென் ஐரோப்பாவில் உள்ள இத்தாலி உலகின் ஐந்தாவது பெரிய சுற்றுலா இடமாக, வருடத்திற்கு ஐந்து கோடி பயணிகளைக் கவர்ந்து ஈர்க்கும் இடமாக உள்ளது.

இது, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எல்லை நாடுகளாகக் கொண்டுள்ளது. சான் மரினோ மற்றும் வடிகன் இந்த நாட்டின் உள்ளே அமைந்துள்ள இரு குட்டி நாடுகள்.

இத்தாலியின் மொத்த ஜனத்தொகை சுமார் ஆறு கோடி.

பரப்பளவு 1,16,340 சதுர மைல்கள்.

இனிக்கும் இத்தாலி

இத்தாலி என்று சொல்லும் போதே மனமெல்லாம் இனிக்கும் என்கின்றனர் உலக அறிஞர்கள். ஆம் இத்தாலிய மொழி அன்பினுக்குரிய – காதலுக்குரிய ஒரு மொழியாம்!

தமிழ் அறிஞர் போப், வணிகத்திற்கு ஒரு மொழி ஆங்கிலம் என்றால். ராஜதந்திரத்திற்கு ஒரு மொழி பிரெஞ்சு என்றால், காதலுக்கு ஒரு மொழி இத்தாலி என்றால், தத்துவத்திற்கு ஒரு மொழி ஜெர்மன் என்றால் தெய்வீகத்திற்கு ஒரு மொழி தமிழாகும் என்றார்.

(If English be the language of commerce, French the language of diplomacy, Italian the language of love, and German the language of philosophy, then Tamil is the language of devotion.)

லயத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி என்றும் உயிர் எழுத்துக்களை சொற்களின் இறுதியில் ஓசை நயத்துடன் கொண்ட மொழி என்றும் காதல் மொழியான இத்தாலிய மொழியை மொழி அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

பெல்லோ என்ற ஒரு வார்த்தையே அழகு, அருமை, சூபர் போன்ற அர்த்தங்களை சந்தர்ப்பத்திற்குத் தக தரும். அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை பெல்லோ!

இத்தாலியின் தலை நகர் ரோம். ரோம் என்ற ஒரு வார்த்தையைச் சொன்னவுடனேயே இத்தாலியின் பிரமிக்க வைக்கும் பாரம்பரியம் அனைவருக்கும் புரிந்து விடும்.  இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உண்டு.

வடிகன் மியூஸியம்

அத்துடன் மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடம் இங்குள்ள வடிகனில் தான் அமைந்துள்ளது. போப்பாண்டவர் இங்கிருந்தே அருளாட்சி செய்கிறார். 121 ஏக்கர் பரப்பளவையும் 453 பேரை ஜனத்தொகையாகவும் கொண்டுள்ள வடிகன் உலகின் குட்டி நாடாகும். வடிகன் மலையையொட்டி இந்தப் பெயர் எழுந்துள்ளது.

வடிகன் நகரில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடம் சிஸ்டின் சேப்பல்.  வடிகன் அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சமாக விளங்கும் இதில் தான் மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற பலிபீடம் உள்ளிட்ட புகழ் மிகு ஓவியங்களைப் பார்க்கலாம்

ரோம் நகரம்

டைபர் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ரோம் நகரம். ‘எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன’ என்ற புகழ் பெற்ற பண்டைய வாக்கியம் உலகின் மிகப் பெரும் நகரமாக இது இருந்ததைக் குறிக்கிறது. இங்கு வழக்கு மொழியாக இருந்தது உலகின் மிகப் பழம் பெரும் மொழியான இலத்தீன்.

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கலாச்சாரத்தைத் தந்தது ரோம் தான்.

கிறிஸ்துவுக்கு முன் 753ஆம் ஆண்டில் ரோமுலஸ் மற்றும் ரேமஸ் ஆகியோர் இணைந்து அமைத்த நகரம் ரோம்.

இத்தாலியில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ரோம்.

கராகல்லா பாத்

பழைய கால ரோமப் பெரும் மன்னனான கராகல்லாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கராகல்லா குளியல் இடங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ரோமானிய கட்டிடக் கலையின் விரிவு இங்கிருந்தே ஆரம்பித்தது. ‘தி பாத் ஆஃப் கராகல்லா’ (கராகல்லா குளியல் இடங்கள்)  இன்று பார்வையாளர்கள் பார்வையிடும் ஒரு நினைவுச் சின்னமாக ஆகி விட்டது.

கொலோசியம்

ரோமானிய நாகரிகம் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. ரோம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கொலோசியம் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ள கட்டிடம். பண்டைய காலத்தில் அதிக பட்சமாக 80000 பேர் இந்த அரங்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்களாம். நன்கு தேர்ச்சி பெற்ற போர்வீரர்கள் தங்களுக்குள்ளும் இதர கைதிகளுடனும் மற்றும் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டை இடுவர்.

சண்டையிடும் இருவரில் ஒருவர் இறக்கும் வரை இந்தச் சண்டை நீடிக்கும். இங்கு சண்டையிடுபவர்களுக்கு க்ளேடியேட்டர் என்று பெயர். ‘க்ளாடி’ என்றால் ஸ்பானிய மொழியில் கத்தி என்று அர்த்தம். முதலில் கத்திச் சண்டையாக இருந்த இது நாளடைவில் இரும்புத் தடி, கோடாலி உள்ளிட்ட அனைத்து கொடிய் ஆயுதங்களாலும் போடப்பட்டது.

கைதிகளை, பட்டினி போடப்பட்ட பல சிங்கங்களுடன் மைதானத்தில் விட்டு விடுவர். அவற்றால் அவன் கடிபட்டுச் சாக வேண்டும். திறமையுள்ள அபூர்வமான ஒருவன் விலங்குகளை ஜெயிக்கவும் கூடும். கூடியிருக்கும் மக்கள் கை தட்டி ஆரவாரித்து மகிழ்வர்!

இந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் சக்கை போடு போட்டு வெற்றி பெறுவது நாம் அனைவரும் அறிந்ததே. 2000ஆம் ஆண்டு வெளியான ரஸ்ஸல் க்ரோவ் நடித்த க்ளாடியேட்டர் படத்தைப் பாராட்டாதவர் இல்லை. ஆறு ஆஸ்கார் விருதுகளை இது பெற்றது.

காலப்போக்கில் கொலோசியத்தில் இருந்த சலவைக் கற்கள் அகற்றப்பட்டன. பழைய நாகரிகத்தை நினைவுறுத்தும் இது இன்று சிதிலமடைந்து உல்லாசப் பயணிகளின் கவர்ச்சிக் கேந்திரமாகத் திகழ்கிறது!

இங்குள்ள சுரங்க அறை உள்ளிட்டவற்றைப் பார்க்க ஏராளமான டூர் திட்டங்கள் உள்ளன. இரவு நேரத்திலும் இதைச் சென்று விளக்கொளியில் பார்க்கலாம்.

வெனிஸ் நகரம்

ரோம் நகரிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெனிஸை ஆறரை மணி நேரத்தில் அடைந்து விட முடியும். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நகரமான இது, இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது.

மிதக்கும் நகரம், நீர் நகரம், பாலங்கள் உடைய பால நகரம், அட்ரியாடிக் ராணி என்றெல்லாம பல செல்லப்பெயர்கள் வெனிஸுக்கு உண்டு.

ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெரு என தமிழ் இலக்கியம் நமது தென் தமிழக நகர் வீதிகளை ஆறுடன் ஒப்பிட்டுக் கூறும். வெனிஸ் நகரிலோ’ அகல் நெடும் ஆறே வீதி. அகல் நெடுந் தெருவே ஆறு.

118 தீவுகளைக் கொண்டுள்ள வெனிஸ் 150 கால்வாய்களைக் கொண்டுள்ளது. ஆங்காங்கே பாலங்கள் உண்டு. தோணி மூலம் தான் போக்குவரத்து. வேகமாகச் செல்லும் தண்ணீர் பஸ்களும் (வாட்டர் பஸ் என்று பெயர்) உண்டு.

இரண்டு மணி நேர நடைப் பயணம், பலூன் பயணம், ஹெலிகாப்டர் பயணம், சொகுசுக் கப்பல் பயணம் என ஏராளமான விதங்களில் வெனிஸைப் பார்த்து மகிழலாம். பெரிய கால்வாயான ‘க்ராண்ட் கானல் பயணம்’ அனைவரும் விரும்பும் ஒன்று.

செயிண்ட் மார்க் பஸிலிகா தேவாலயம் உலகின் ஆகப் பெரிய அழகிய சர்ச் ஆகும். செயிண்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள இதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடும். பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று  தான் பார்க்க முடியும். அழகிய பாரம்பரியமிக்க வியக்க வைக்கும் தேவாலயம் இது.

பஸிலிகா

இத்தாலி முழுவதும் அமைந்துள்ள பஸிலிகாக்களை ஆங்காங்கே காணலாம். நீண்ட அரை வட்ட வடிவிலான அரங்கங்கள் பழைய ரோமானியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இதுவே பஸிலிகா என அழைக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடமாகவும் நீதி வழங்கும் நியாய மன்றமாகவும் அந்தக் காலத்தில் இருந்தது. காலப்போக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன.

கண்ணாடி அருங்காட்சியகம்

வெனிஸில் உள்ள கண்ணாடி அருங்காட்சியகம் வியக்க வைக்கும் கண்ணாடிப் படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

இத்தாலி சென்றதன் அடையாளமாக நினைவுப் பரிசு வாங்க உகந்த இடம் இது.

ப்ரிட்ஜ் ஆஃப் சை

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கடைசியாக வந்து பெருமூச்சு விடும் ப்ரிட்ஜ் ஆஃப் சை எனப்படும் பெருமூச்சு பாலம், ரியால்டோ பாலம், டோகே அரண்மனை, வெனிஸுக்கு அருகிலுள்ள முரானோ மற்றும் புரானோ தீவுகள் ஆகியவற்றை வழிகாட்டிகள் காட்டி, பழைய காலக் கதைகளைச் சொல்லி கொண்டே வருவர்.

நமது நேரத்தைப் பொறுத்து, இங்கு பார்க்க உள்ள இடங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகும்

வெரோனா

வெனிஸ் நகரிலிருந்து 121 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெரோனா.

வெனிஸ் மற்றும் மிலான் நகர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இது.

காதல் காவியங்களில் ரோமியோ-ஜூலியட் காவியத்தை அறியாதவர் இருக்கவே முடியாது. ஷேக்ஸ்பியரின் படைப்பில் மயங்கும் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு டூர் ரோமியோ-ஜூலியட் டூர்.

இங்குள்ள ஜூலியட் சிலை மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் ஜூலியட்டின் மார்பகத்தைத் தொட்டால் நல்ல அதிர்ஷ்டம் வரும் என்பது இங்கு வருவோரின் நம்பிக்கை.

இங்குள்ள ஆம்பி தியேட்டர் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அரங்கம். 22000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கம் அபாரமான கட்டிட வடிவமைப்பைக் கொண்ட ஒன்றாகும். வெரோனா ஒபேரா விழா இங்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது.

அடிகே நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்கேலிகிரி ஒரு தற்காப்பு கோட்டையாகும்.

சான் ஜீனோ மக்கியோர் பஸிலிகா உள்ளிட்ட பல இடங்கள் வெரோனாவின் கவர்ச்சி மிகு கட்டிடக்கலை அற்புதங்கள்!

பல்வேறு அருளாளர்களின் நினைவாக அவர்கள் பெயரைச் சூட்டி அமைக்கப்பட்டுள்ள சர்ச்சுகள் பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான கலைப் படைப்புகளாக மிளிர்கின்றன.

வெரோனாவில் உள்ள கடைவீதி உள்ள இடம் வியா மாஜினி. இங்குள்ள பெரிய கடையான பெனிடன் ஸ்டோரின் தரை கண்ணாடியால் ஆனது. இதன் வழியாக, கீழே உள்ள முதலாம் நூற்றாண்டு ரோமானிய வீடுகளின் – அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட – இடிபாடுகளைப் பார்க்க முடியும்.

உணவு வகைகள்

இத்தாலியின் உ.ணவு வகைகள் பிரத்தியேகமானவை. இத்தாலி பாஸ்தா, பிஸ்ஸா, சீஸ் என்றால் அதற்குத் தனி மகிமை தான். சீஸ் உள்ள எந்த உணவு வகையானாலும் அது அனைவரையும் கவரும். இத்தாலி எங்கும் பரவி இருக்கும் உணவு விடுதிகளில் இவை கிடைக்கும்.

நேபிள்ஸ்

மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் தங்க திட்டமிடும் பயணிகள் ரோமிலிருந்து 139 மைல் தொலைவில் தெற்கு இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரைப் பார்க்கச் செல்லலாம். நேபிள்ஸை சாகு முன் பார்த்து விடு (See Naples and die) என்ற பழமொழி நேபிள்ஸ் நகரம் எவ்வளவு கலையழகுடன் காட்சி தரும் ஒரு நகரம் என்பதைப் புலப்படுத்தும்

பைசாவின் சாய்ந்த கோபுரம்

55 மீட்டர் உயரமுள்ள சாய்ந்த கோபுரம் பைஸா நகரில் உள்ளது. 1173இல் கட்டப்பட்ட இது இப்போது பத்து டிகிரி சாய்ந்துள்ளது. இதன் எடை மலைக்க வைக்கும் 14453 டன்!

297 படிகளைக் கொண்டுள்ள இந்த கோபுரமும் பார்வையாளர்கள் ஈர்க்கும் ஒன்று!

இத்தாலிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு

இத்தாலிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முக்கிய தொடர்பு உண்டு.

இத்தாலியின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் வீரர் மாஜினியை (தோற்றம் : 22-6-1805 மறைவு: 10-3-1872) மஹாகவி பாரதியார் போற்றிப் பாராட்டியுள்ளார்.

21-11-1908 இந்தியா இதழில் மாஜினியைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து அவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அத்துடன் “மாஜினி என்ற  இத்தாலி தேசத்து தேசாபிமானி தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட்ட ‘யௌவன இத்தாலி’ என்ற சங்கத்திலே செய்து கொண்ட பிரதிக்கினை” என்ற தலைப்பில் அழகிய ஒரு கவிதையையும் இயற்றியுள்ளார். (இது இப்போது மாஜினியின் சபதம் என்ற தலைப்பில் வெளியாகி வருகிறது.)

இத்தாலியைப் பற்றி இரு வார்த்தைகள்

ஒரு பிரம்மாண்டமான புகழோங்கிய கால கட்டத்தில் உள்ள சரித்திரம், இலக்கியம், கட்டிடக் கலை, போர் வீரம், காதல், பண்பாடு ஆகியவற்றின் பின்னணியில் இத்தாலியைச் சுற்றிப் பார்ப்பதென்றால் அதற்குப் பல மாதங்கள் தேவை.

இத்தாலி செல்வதற்கு முன் நமது பயணத்தின் அடிப்படையைத் திட்டமிட்டுக் கொண்டால் அதற்கேற்ப நாம் பார்க்க வேண்டிய இடங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

ஏனெனில் பல்துறை ஆர்வலருக்கும் கண்கவர் காட்சிகளைத் தரும் நாடு இத்தாலி.

இத்தாலியைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன் என்றால் உடனே சொல்லலாம் : சியோ பெல்லோ! (அடடா, அழகோ அழகு)

**

புத்தக அறிமுகம் – 27

வைணவ அமுதத் துளிகள்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

1. உண்மை தெரிந்தவுடன் சண்டை இல்லை; சந்தோஷம் தான்!

2. நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று உகும் இறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் என்ன?

3. இறைவனை எப்படி விளக்குவது?

4. கூரத்தாழ்வானின் பண்பு நலம்!

5. கடவுளின் கருணை!

6. எல்லாப் பழியும் சமணன் தலையிலே!

7. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 1

8. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 2

9. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 3

10. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4

11. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 5

12. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 6

13. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 7

14. கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்! ராமானுஜரின் முடிவு!

15. இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

16.பாகவத அபசாரம் கூடாது!

17.உண்மை வைஷ்ணவன் யார்?

18. நின்ற மால் மலரடி மறவேனே!

19. திருக்குறுங்குடி பற்றிய வல்லோசை மிகுந்த இரு பாடல்கள்!

20. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?

21. கண்ணன்! எத்தனை கண்ணனடி!

22. கீதை தரும் ஏழு கட்டளைகள்!

23. கீதை : மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! – முதலாவது கட்டளை!!

24. கீதையின் இரண்டாவது கட்டளை!

25.கீதையின் மூன்றாவது கட்டளை!

26.கீதையின் நான்காவது கட்டளை!

27. கீதையின் ஐந்தாவது கட்டளை!

28.கீதையின் ஆறாவது கட்டளை!

29.கீதையின் ஏழாவது கட்டளை!

30. அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

31. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

***

அணிந்துரை

விண்ணெறி அல்லது திருமாலியம் என்பது சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணில் பயிலப்படும் சமய ஒழுங்கு ஆகும். தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நான்காகப் பிரித்துக் காண்கிறது. காடும் காடு சார்ந்த நிலப்பரப்பை முல்லை என்றும், மலையும் மலை சார்ந்த நிலப்பரப்பை குறிஞ்சி என்றும், நிலமும் நிலம் சார்ந்த கழனிப் பரப்பை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பை நெய்தல் என்றும் காண்கிறது. இதில் ‘சிறப்புடைப் பொருளை முதற்படக் கிளர்த்தல்’ எனும் பண்டைய முறையால் முல்லையை முதன்மைப் படுத்திப் பேசும் தொல்காப்பியம், அதற்குக் காரணமான திருமால் வழிபாட்டை முன்னிருத்தி, ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொல்காப்பியம் செப்புகிறது.

இதன் வழி பின் வரும் காப்பியமான சிலப்பதிகாரம், “பெரியவனை மாயவனை” என்று தெளிவாக திருமால் எல்லாத் தெய்வங்களுக்கும் பெரியவன், தொன்மையானவன் என்று செப்புகிறது. திருக்குறளைச் சிறப்பித்துப் பேசும் திருவள்ளவ மாலையில் சங்கப் புலவரான பரணர், “தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண்பா” என்கிறார். ஆக, பெரியவனை, மாயவனை தொன்று தொட்டு தமிழர்கள் போற்றி வழிபட்டு வருவது தெரிகிறது.

நமது ஊரில் புழங்கும் கருப்பன், கருப்பணசாமி, மாயாண்டி, பரமன் போன்ற பெயர்கள் அனைத்தும் கண்ணன் எனும் கருந்தெய்வத்தையே குறிக்கும். கண்ணனின் உடன் பிறப்பான பலராமன் பெயரை முன் வைத்து, வெள்ளையன், வெள்ளைச்சாமி, அண்ணாகண்ணன் போன்ற பெயர்களை வைக்கும் பழக்கமும் தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உண்டு. தமிழின் ஆகப் பழமையான பானை ஓட்டுப் பெயர்களில் கண்ணன், சாத்தான், ஆதன் போன்ற பெயர்கள் இருப்பதை தொல்லியல் கூறும்.

இத்தகைய பழமையான தெய்வ நெறியின் சம்பிரதாயக் கூறுகளை விளக்கும் முகமாக திரு. ச. நாகராஜன் அவர்கள், “வைணவ அமுதத் துளிகள்” எனும் நூலை எழுதியுள்ளார். சங்கம் மருவிய காலத்தில் தமிழ் நெறிகள் வடமொழியை அரவணைக்கத் தொடங்கின. இது பெரும்பாலும் அரசின் ஆணையின் பேரில் நடந்திருப்பதாகவே சரித்திரம் கூறுகிறது. மௌரியர் காலத்திலிருந்து வடபுலத்தில் வாழும் அரசர்கள் தென்னகத்தோடு வர்த்தக, அரசியல் தொடர்புடன் இருந்ததைச் சங்கம் பகரும். வேளிர் எனும் 18 குடிகள் வடக்கிருந்து தெற்கே வந்து கலந்ததை கபிலர் சொல்லுவார். கிபி 7-8ம் நூற்றாண்டில் அரச குடும்பங்களில் சாளுக்கியரோடும், தெலுங்கர்களோடும், களப்பிரரோடும், சௌராஷ்ஷியரோடும் திருமண உறவுகள் ஏற்பட்டதின் காரணமாக வடமொழி ஆதிக்கம் தமிழ் மண்ணில் அதிகமாகவே இருந்திருக்கிறது. இவ்வரசர்கள் சதுர்வேதி மங்கலங்கலை உருவாக்கி, பிரம்மதேயம் எனும் பெயரில் பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினர். தமிழ்ப் பிராமணர்கள் வேதம் ஓதி, வடமறைகளை பாதுகாக்கும் பொறுப்பை அளித்தனர். இதன் பயனாய் தமிழ்ச் சமய ஒழுங்கு மெல்ல, மெல்ல ஆரியக் கலப்பை ஏற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. வடமொழி கலந்து தமிழை எழுதும் “மணிப்பிரவாளம்” எனும் புலவர் நடை பிரபலமாகத் தொடங்குகிறது. தமிழ்ப் பிராமணர்கள் அரசு ஆதரவு பெற்று வடமொழியிலும், தெலுங்கிலும் இலக்கியம் படைக்கத் தொடங்கினர். இதன் தாக்கம் விண்ணெறியிலும் தெரிவதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது. வேதாந்த தேசிகர் எனும் காஞ்சிபுரத்து பன்மொழிப் புலவர் இயற்றிய பல்வேறு சமிஸ்கிருத நூல்கள் பற்றிய விவரணை இந்த நூலில் கிடைக்கிறது.

இதே காலக் கட்டத்தில் ஒரு தமிழ் மறுமலர்ச்சியும் காணக்கிடைக்கிறது. மதுரகவி எனும் பிராமணர், காரிமாறன் எனும் நான்காம் வருணத்தைச் சேர்ந்த அருளாளர் சொல்லிய திருவாய்மொழியைத் தமிழ் வேதம் என பிரகடணப்படுத்த. நம்மாழ்வாரை குலகுருவாகக் கொண்டு ஒரு புதிய புரட்சி சம்பிரதாயத்தை நாதமுனிகள் எனும் தமிழ் பிராமணர் தொடங்குகிறார். பெண்ணிய கருத்தாக்கம் கொண்ட இப்புதிய வழியை “ஸ்ரீ சம்பிரதாயம்” என அழைத்தனர். அகமரபிற்கு வடமொழி ஆதரவைத் தேட உருவாக்கிய நெறிதான், “ஸ்ரீவைஷ்ணவம்” என்பது. திருமால் எனும் பதத்தில் முதலில் “திரு” வருவதைக் கொண்டு “ஸ்ரீ வைஷ்ணவம்” முன் வைக்கப்படுகிறது. அரசு ஆதரவு கொண்ட வடமொழியுடன் உறவு வைத்துக் கொண்டு தமிழ் மரபு முன்வைக்கப்படுகிறது. அரங்கநாதன் வடமொழிக்கு பின்புறம் காட்டி, தென்மொழிக்கு முகம் காட்டுகிறான் எனும் புரட்சிப்போக்குத் தொடர்ந்ததை கம்பன் தனது சடகோபரந்தாதியில் பதிவு செய்கிறான். அதன் பிரகாரம் தென் தமிழ் நாட்டில் தமிழ் கோயில் மொழியானதையும், பெருமாள் புறப்பாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் முன் செல்ல, இறைவன் தமிழ் நோக்கி ஓட, வேதம் பெருமாளுக்குப் பின்னால் தொடர்வதாக சரித்திரம் மாறிப் போகிறது. இப்பெரும் புரட்சி காலப்போக்கில் மக்கள் மனதிலிருந்து விலக வடமொழி கலந்த வியாக்கியானங்கள் வழி வகுக்கின்றன. வடமொழி அறிந்த பிராமணர்களுக்கு அகமரபை விளக்க உருவாக்கிய இந்த இலக்கிய வகை விண்ணெறி என்பதே ஆரிய நெறி என்பது போன்ற மாயத் தோற்றத்தை காலப்போக்கில் உருவாக்கிவிட்டது.

இவ்வகை சம்பிரதாயத்திலிருந்து எடுத்த துளிகள்தான் இந்த நூல். முப்பத்தோரு அரிய கட்டுரைகள் மூலம் விண்ணெறியின் சில முகங்களை ச. நாகராஜன் காட்ட முற்படுகிறார். பின்னால் பகவத் கீதையின் பெருமையை ஏழு கட்டுரைகளில் விளக்குகிறார். தேன் கூட்டில் இருக்கும் தேன் பல்வேறு மலர்களின் தேன் சுவை கொண்டிருப்பது போல் இந்த நூல் பல்வேறு நூல்களின் சாரமாக நமக்குக் கிடைக்கிறது. எளிய தமிழ் நடையில் அமைந்திருக்கிறது. அரிய கருத்துக்களை முன் வைக்கிறது. விண்ணெறி முன் வைக்கும் முக்கிய கருதுகோள், இறைவனை அடைய பக்தி முக்கியம். பக்தி செய்ய சாதி வித்தியாசம் கிடையாது, ஆண் பெண் வேறுபாடு கிடையாது என்பது. அதை சில கட்டுரைகள் விளக்குகின்றன. அடுத்தது, இறைவனை விட அடியார் செய்யும் பக்திக்கே சிறப்பு என்பது. அடியார்தம் பெருமையை இறைவனும் விரும்புகிறான் என்பது. எனவே “பாகவத அபச்சாரம்” என்பது இறைவனிடம் படும் குற்றங்களை விடக் கொடியது என்றும் எச்சாதியில் இருந்தாலும் பாகவதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே எனும் சமதர்மக் கருத்து இந்நூலில் வலிந்து சொல்லப்படுகிறது.

இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகிற்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. தேனீ போல் தான் ச. நாகராஜனும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இது அவரது 100 நூலாக அமைகிறது. இதற்கு நான் சிறப்புரை வழங்குவது என் பாக்கியம்.

ஜனவரி 15, 2022                                                            முனைவர் நா. கண்ணன்
                     மேனாள் பேராசிரியர் கீல் பல்கலைக் கழகம்
                                                 கீல், ஜெர்மனி

###

நூலில்  நான் வழங்கிய என்னுரையில் ஒரு பகுதி:-

என்னுரை

தெய்வத் தமிழின் முக்கிய அங்கம் பக்திப் பாடல்கள், பாசுரங்கள்!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இல்லாத விஷயமே இல்லை.

இந்த வைணவப் பெருங்கடல் அமிர்தக் கடல். அதன் ஒரு துளி சுவையைப் பருகினால் கூட அமர நிலையை அது தரும்.

வைணவ அமுதத்தின் ஒரு சில துளிகளைக் கட்டுரைகளாக வடித்து வந்தேன்.

இதை www.tamilandvedas.com இல் வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலுக்கு அழகிய பொருள் பொதிந்த ஒரு அணிந்துரையை ஆய்வுரையாகத் தந்திருப்பவர் வைணவ இலக்கியத்தைக் கரை கண்ட பண்பாளர் பேராசிரியர் முனைவர் திரு நா. கண்ணன் அவர்கள். வைணவ இலக்கியத்தில் ஆழ்ந்திருக்கும் அறிவியல் புதையலைத் தன் ஆய்வின் மூலம் கண்டு அதை ஆன்மீகத்துடன் குழைத்து இவர் மக்களுக்குச் சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள் வாயிலாகத் தந்து வருகிறார். இவரது சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவம்.

மதுரையில் முனைவர் பட்டத்தைப் பெற்றுப் பின் மேல் படிப்பை ஜப்பானில் முடித்த இவர் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று ஜெர்மன் குடிமகனாக ஆகி வேதிமக் கடலாய்வு ஒன்றைச் செய்து உலகின் ஒட்டு மொத்தக் கவனத்தையும் ஈர்த்தார். 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனியிலிருந்து தென் கொரியா சென்று அங்கு 8 ஆண்டுகளும் பின்னர் மலேசியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் பணியாற்றச் சென்றார். கோலாலம்பூரில் விவேகப் பசுமை முனையம் ஒன்றை நிறுவி அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். உலகளாவிய விதத்தில் பல மொழிகளில் வெளி வரும் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வரும் இவருக்குத் தமிழ் என்றால் உயிர்.

காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு அவர்கள் முதல் பல்நாட்டு அறிஞர்கள் முடிய பலரிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்தவர், இந்த நூலுக்கு அணிந்துரை நல்கி என்னைக் கௌரவித்தமைக்காக இவருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

நன்றி.

பங்களூர் ச.நாகராஜன்
15-1-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

ராஜஸ்தான் கல்வெட்டில் மன்னர் எழுதிய பாட்டு (Post No.11188)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,188

Date uploaded in London – 12 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தமிழில் தனிப்பாடல்கள் இருப்பதுபோல சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதங்கள் என்ற கவிதைகள் இருக்கின்றன. இவைகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா. 20,000 சுபாஷிதங்களுக்கு மேல் புஸ்தக வடிவில் கிடைக்கின்றன. இவைகள் பொன்மொழிகள் போன்றவை. பெரும்பாலும் நீதிகளை போதிக்கும். ஆயினும் இவை தொடாத விஷயங்களே இல்லை. மருத்துவம், செக்ஸ், ஜோதிடம் முதலிய பல்வேறு விஷயங்கள் பற்றியன அவை.

ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகில் உள்ள கல்வெட்டில் கக்குக என்னும் பிரதிகார வம்ச மன்னனின் சுபாஷித பாடல் உள்ளது. இது கிபி. அல்லது பொது ஆண்டு 862-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. காக்க என்ற மன்னனின் மகன் கக்குக. அவன் சம்ஸ்க்ருத மொழியில் வல்லவன். கல்வெட்டும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது. கல்வெட்டைக் கவிதை வடிவில் பாடியவர் கவிஞர் மைத்ரி ரவி.

இந்தக் கல்வெட்டு இருக்கும் இடம் கண்டியால. இது ஜோத்பூர் அருகிலுள்ள கிராமம். கல்வெட்டு விநாயகர் துதியுடன் துவங்குகிறது. கக்குக என்ற மன்னனே எழுதிய பாடல் இது என்று கல்வெட்டு குறிப்பிடும் பாடல் வரிகளில் மன்னனுக்குப் பிடித்த விஷயங் கள் கல்வி, தர்மம், செல்வம், என்று சொல்லப்பட்டுள்ளது.

இதோ சுபாஷித வரிகள்

யெளவனம் விவிதைர் போகைர் மத்யமம் ச வயஹ ஸ்ரியா

வ்ருத்த பாவச்ச தர்மேண யஸ்ய யாதி ஸ புண்யவான்

கல்வெட்டை எழுதிய மைத்ரி ரவி ஒரு ‘மக’ பிராமணன். இவர்கள் சக த்வீப பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுவர்.இந்தியாவுக்கு வெளியே வசித்தவர்கள் என்றும் அங்கு படை எடுப்புகள் நடந்ததால் இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.

கக்குக என்னும் மன்னன், அருகிலுள்ள ஆபீரர் தாக்கு தலில் இருந்து  அந்த இடத்தைக் காப்பாற்றியதாக கல்வெட்டு கூறுகிறது.

XXX

நேபாள மன்னரின் சிவ ஸ்துதி

நேபாள நாட்டின் மன்னர் பூபால சந்திர , சம்ஸ்க்ருத மொழியில் புலமை வாய்ந்தவர். அவர் சிவபெருமான் மீது இயற்றிய துதி 1690ம் ஆண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது

நேபாள நாட்டின் தலை நகரமான காத்மாண்டுவில் புகழ்பெற்ற சிவன் கோவில் பசுபதிநாதர் கோவில் இருக்கிறது. அவரைப் போற்றும் பாடல் இது:

ஸ்ரீமத் பசுபதி சரண கமல தூளி தூஸ ரித சிரோருஹ ஸ்ரீமானேச்வரிஷ்ட தேவதா

வர லப்த ப்ரஸாத தே தீப்ய மான மானோ ன்னத ஸ்ரீ ரகு  வம்சாவதார  ரவிகுல திலக

ஹநுமத்வஜ ஜனேபாலேஸ்வர மஹா ராஜாதி ராஜ ஸகல ராஜசக்ராதீச்வர  

XXX

கவிஞர் கமல லாஞ்சன கவிதை

உலக நிலையாமை குறித்த ஒரு பாடல் ஹிமாச்சல பிரதேஷின் சம்பா பகுதியில் கிடைத்திருக்கிறது சம்பா அரசன் நாக பாலனின் புகழைப் பாடும் இக்கவியை அவரது குருவான  கமலா லா ஞ்சன இயற்றியுள்ளார். லலித வர்மனின்  17-ம் ஆட்சி ஆண்டில் இது எழுதப்பட்டது  லலிதா வர்மனின் ஆட்சியின் கீழ் குறு நிலா மன்னராக இருந்தவர் நாக பால..

மன்னன் லலித வர்மன் 1159ம் ஆண்டில் ஆட்சி புரிந்தார் . அவர்தான் குறுநில மன்னருக்கு ராஜநா க பட்டத் தை  அளித்தார் நாக பால இறந்தவுடன் அவருடைய மனைவி  தீப்பாய்ந்து உயித்துறக்கத் துணிந்தார். ஆயினும் அமைச்சர்கள் அவரைத்த தடுத்து நிறுத்தினர். அவளும் ஒரு குளம் வெட்டி சமூக சேவை செய்ததைக் கல்வெட்டு குறிப்பிட்டிடுகிறது 17 கவிதைகள் கொண்ட கல்வெட்டில் கடைசி பகுதி மட்டும் தான் மிஞ்சியுள்ளது. அதிலுள்ள கவிதை இதோ:-

ஜவ நப வெல்லோல்ல  கல்லோல்ல  மாலா

ப்ரதிமித சசிலேகா சஞ்சலம்  ஜீவலோகம்

ப்ரதிபதமவபுத்தயோ சீகரத்ஸாத  பல்ஹா

நிஜபதி ஸு க்ருதார்தம்  புஷ்கரா தாரஸேதம்

சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களும் கூட இதிலுள்ள எதுகை மோனைகளை ரசிக்கலாம்..

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

–subham—

Tags- கவிஞர், கமலலாஞ்சன, கல்வெட்டு, கவிதை , ராஜஸ்தான் மன்னர், சதி , நாகபால, நிலையாமை, சிவ ஸ்துதி

பால் எர்டோஸின் தனி அகராதி! (Post No.11,187)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,187

Date uploaded in London – –    12 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் – 2

பால் எர்டோஸின் தனி அகராதி!

ச.நாகராஜ

ஹங்கேரிய கணித மேதையான பால் எர்டோஸ் ஒரு நகைச்சுவை  விஞ்ஞானி. (தோற்றம் 26-3-1913- மறைவு : 20-9-1996)

அவர் தனக்கென ஒரு விசேஷ அகராதியைக் கொண்டிருந்தார்.

அது இது தான்:

மிகப்பெரிய பாஸிஸவாதி என்றால் கடவுள் என்று பொருள்!

Supreme Fascist = God (Also abbreviated as SF)

‘நேரடியாகப் புத்தகத்திலிருந்து’ என்று சொன்னால் அழகான அற்புதமான நிரூபணம் என்று பொருள்!

straight from the book = beautiful, elegant proof

பாஸ் என்றால் பெண்மணி என்று பொருள்

 boss            = woman

அடிமை என்றால் ஆண் என்று பொருள்

slave           = man

‘அவன் பிடிபட்டு விட்டான்’ என்றால் அவன் திருமணம் செய்து கொண்டவன் என்று பொருள்.

 captured        = married

‘அவன் விடுதலையானவன்’ என்றால் அவன் டைவர்ஸ் செய்தவன் என்று பொருள்

 liberated       = divorced

‘அவன் மறுபடியும் பிடிபட்டவன்’ என்றால் அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டவன் என்று பொருள்

recaptured      = remarried

எப்ஸிலான் (கணித குறியேடுகளில் ஒன்று) என்றால் குழந்தை என்று பொருள்

epsilon         = child (for the mathematical symbol)

                  = a little

உபதேசிப்பது என்றால் கணிதம் பற்றிய சொற்பொழிவு ஆற்றுவது என்று பொருள்

to preach       = to give a math lecture

உயிருடன் இருப்பது என்றால் கணிதம் போடுவது என்று பொருள்

to exist        = to do math

இறப்பது என்றால் கணிதம் போடுவதை நிறுத்துவது என்று பொருள்

to die          = to stop doing math

சின்னப் பயல் என்றால் கணிதம் போடாதவன் என்று பொருள்

 trivial being   = Someone who does not do math

போவது என்றால் இறப்பது என்று அர்த்தம்

 to leave        = to die

வருவது என்றால் பிறப்பது என்று அர்த்தம்

 to arrive       = to be born

ஜோ என்றால் ரஷிய ஜோஸப் ஸ்டாலின் என்று அர்த்தம்

Joe             = USSR (for Joseph Stalin)

சாம் என்றால் அமெரிக்காவில் குறிப்பிடப்படும் அங்கிள் சாம் என்று பொருள்

Sam             = USA (for Uncle Sam)

சாம் அண்ட் ஜோ என்றால் உலக செய்திகள் என்று பொருள்

Sam and Joe show= International news

நெட் என்றால் ஆஸ்திரேலியா என்று அர்த்தம். (நெட் கெல்லி 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரன்)

Ned             = Australia (for Ned Kelly, a famous Australian

                    bandit from the 19th century)

நீண்ட அலைவரிசை என்றால் சிவப்பு கம்யூனிஸ்ட் என்று பொருள்

On the long wavelength = communist (for red)

குறுகிய அலை வரிசை என்றால் பாஸிஸவாதி – கம்யூனிஸ்டுக்கு எதிராளி என்று பொருள்

 On the short wavelength = fascist (opposite of red)

சத்தம் என்றால் இசை என்று அர்த்தம்

noise          = music

விஷம் என்றால் மது என்று அர்த்தம்

 poison         = alcohol

எனது மூளை திறந்த ஒன்று என்றால் நான் கணிதம் போடத் தயார் என்று பொருள்

my brain is open = I am ready to do mathematics

அவருடன் பழகிய அனைவருக்கும் இந்த அகராதி வார்த்தைகள் அத்துபடி!

இவரது நகைச்சுவை தனி ரகம்; அதை அனைவரும் வெகுவாக ரசித்தனர்!

இவரைப் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு.

அதில் ஒன்று : இவரிடம் ஒருவரின் வயதைச் சொன்னால் அதில் உள்ள விநாடிகள் எத்தனை என்பதை கன கச்சிதமாக சொல்லி விடுவாராம்.

இந்தத் திறமை இளவயது முதலே அவரிடம் இருந்தது!

***

புத்தக அறிமுகம் – 26

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

பொருளடக்கம்

என்னுரை

1. அதிசய புருஷர் ஸ்வாமி விவேகானந்தர்!

2. கிருஷ்ணார்ஜுனர்: பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார ரகசியம்!

3. பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது: ஸ்வாமிஜி!

4. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

5. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (2)

6. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

7. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

8. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)

9. ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)

10. பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1

11. பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2

12. ஸ்வாமி விவேகானந்தர்: ‘நான் இந்தியாவின் திரண்ட வடிவமே’!

13. ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும்!

14. ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

15. ஸ்வாமி விவேகானந்தர் யார்?

16. ஹிந்து விவேகானந்தர்!

17. பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

18. எங்கும் நிறைகின்ற பொருளே!

19. உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்!

20. என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!

21. கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!

22. ஸ்வாமி விவேகானந்தரின் ஹிருதயமும் ராதாவின் ஹிருதயமும்!

23. ராமகிருஷ்ண மிஷனின் வியாஸர்!

24. கத்தி முனை உன் பக்கமும், கைப்பிடி எதிரிலிருப்பவரிடமும் இருக்க வேண்டும்!

25. ஸ்வாமி விவேகானந்தர்: அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்!

26. சிவபிரானின் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்!

27. மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

பிற்சேர்க்கை – 1

பிற்சேர்க்கை – 2

பிற்சேர்க்கை – 3

*

இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரை :

என்னுரை

ஸ்வாமி விவேகானந்தர்!

ஹிந்து மதத்தின் உயர்வை உலகிற்குக் காட்ட என உதித்த மஹான்!

ஹிந்துக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி உத்வேகம் ஊட்டி உயரச் செய்த அவதார புருஷர்!

சுதந்திரக் கனலை இந்தியாவில் ஊட்டக் காரணமாக அமைந்த தேசபக்தர்!

ஹிந்து வேத, உபநிடத, சாஸ்திரங்களின் ரகசியத்தை விண்டுரைத்த பேரறிஞர்!

அற்புதங்களை நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்த அற்புத சித்தர்!

முக்திக்கு வழி சொன்ன முக்தர்!

இந்தியாவின் திரண்ட வடிவமாகத் திகழ்ந்து இந்தியாவின் உண்மை சொரூபத்தை உலகிற்குக் காட்டிய உன்னத தெய்வீகப் பேரருளாளர்!

வெளிநாட்டு அறிஞர்களையும், மேதைகளையும் இந்தியாவை நோக்கிக் கவர்ந்த யோகி!

அமெரிக்காவை ஆன்மீகத்தால் வென்றதோடு உலகெங்கும் பயணித்து அனைவரின் உயர்வுக்காகவும் பாடுபட்ட உத்தமர்!

ஏழைகளின் துயர் தீர்க்கவும், அவர்களை உயர்த்தவும் வானிலிருந்து உலகிற்கு இறங்கி வந்த ராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர்!

இந்தியாவை அறிய வேண்டுமெனில் முதலில் அறிய வேண்டிய மஹா புருஷராக வாழ்ந்து காட்டிய வித்தகர்!

இப்படி ஸ்வாமி விவேகானந்தரின் அருமை பெருமைகளை முடிவற்று முழங்கிக் கொண்டே இருக்கலாம்!

குறுகிய காலமே வாழ்ந்த அவரது வாழ்வில் தான் எத்தனை நிகழ்வுகள். அனைத்தும் அருமையானவை; சத்தியத்தோடு பரிமளிப்பவை.

அந்த நிகழ்வுகளின் சிறு துளிகளே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளைப் படித்து உத்வேகம் பெற்று ஸ்வாமி விவேகானந்தரின் அனைத்து உரைகளையும் படித்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பி உயர்வோமாக!

ஞான ஆலயம், பாக்யா, முதல் ஓசை உள்ளிட்ட பத்திரிகைகளிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூலாக மிளிர்கிறது.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ், பாக்யா ஆசிரியர் திரு கே.பாக்யராஜ், லண்டன் திரு சுவாமிநாதன், திரு தென்னவன் பாலு ஆகியோருக்கு எனது நன்றி.

இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

சான்பிரான்ஸிஸ்கோ
21-7-2022

ச.நாகராஜன்

ஸ்ரீரங்கம், திருவண்ணாமலையில் ஸம்ஸ்க்ருதக் கவிதைக் கல்வெட்டுகள் (Post.11186)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,186

Date uploaded in London – 11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

புனே நகரைச் சேர்ந்த பேராசிரியர் திஸ்கல்கர்  1962ல் இறந்ததற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பத்தினர் அரசாங்க உதவியுடன் கல்வெட்டுகளில் உள்ள 800 சம்ஸ்க்ருத, பிராக்ருதக் கவிஞர்களின் விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை 1992ல் வெளியிட்டனர்.

அதிலுள்ள மேலும் சில சுவையான விஷயங்கள்:-

ஸ்ரீனிவாச தீக்ஷித

சக்திமங்கலத்தைச் சேர்ந்தவர் ; பெற்றோர்கள்-அண்டம்பிள்ளை , லட்சுமி ;மகன்கள் – கேசவ தீக்ஷித , அர்த்தநாரீஸ்வர தீக்ஷித , ராஜ சூடாமணி தீக்ஷித  .

திவாபிரதீப விருது பெற்றவர்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் 11 நிலைக் கோபுரத்தைபி போற்றி நான்கு ஸம்ஸ்க்ருத கவிதைகளை இயற்றியுள்ளார்.

இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.

XXX

வேதாந்த தேசிக

புகழ்பெற்ற வைஷ்ணவ ஆசார்யர் , அறிஞர் ; மாதவரின் மகன்; ரங்கநாதரின் விக்ரஹத்தை 1370ம் ஆண்டில் கோபனார்ய என்பவர் மீண்டும் ஸ்தாபித்ததைப் பாராட்டி இ யற்றிய  ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் அடங்கிய கல்வெட்டு . தெலுங்கு சோழ மன்னன் சிங்க காலத்தில் இது நிகழ்ந்தது .

இதிலும் கல்வெட்டு இருக்கும் இடம் குறிப்பிடப்படவில்லை. நிகமாந்த வேதாந்த தேசிகர் 1369ல் இறந்ததாக விக்கிபீடியா முதலிய க்ளிக் களஞ்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுவாமி தேசிகரின் தந்தை பெயரும் கலைக்களஞ்சிய குறியிலிருந்து மாறுபட்டுள்ளது. ஆக இரண்டு வட்டாரத்து தகவலில் எதோ ஒன்றில் பிழை உளது.

இந்தக் கல்வெட்டு கோவிலுக்குள் இருக்கிறதா என்பதை புஸ்தகம் வெளியிடவில்லை.

XXX

என்னுடைய கருத்து

800 ஸம்ஸ்க்ருத , ப்ராக்ருத கவிஞர்களின் பெயர்களைத் தொகுத்தது மகத்தான சாதனை. இது போல தமிழ்க் கல்வெட்டுகளில் மேக் கீர்த்திகள் முதலிய கவிதைகளை இயற்றியோரின் பெயர்களைத் தொகுக்க வேண்டும். 800 கவிஞ ர்கள் தொகுத்த கவிதைகளை வெளியிட வேண்டும். அது பல தொகுதிகளாக வருகையில் மொழி பெயர்ப்புடன் வரவேண்டும் .

XXX

வைகுண்டன் உதயணன்

இவரது கல்வெட்டு தமிழ் மொழியில் வட்டெழுத்தில் உள்ளது. இந்தப் புஸ்தகத்தில் அவர் பெயர் வருவதால் கவிதைகள் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது என்று ஊகிக்கலாம்.

கொல்லம் ஆண்டு 371ல் அதாவது 1169ல் இயற்றப்பட்டது வெள்ளாணி கல்வெட்டு என்று தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு சொல்கிறது வேணாட்டு அரசர் வீர ராம வர்மா நிலத்தையும், அதில் வேலை செய்ய பணியாட்களையும் தானம் செய்தது பற்றி கல்வெட்டு குறிப்பிடுகிறது.

XXX

எனது கருத்து

கல்வெட்டுக் கவிதைகளை தொகுதி தொகுதியாக வெளியிடுவதோடு , அவைகளில் வரும் பெயர்கள், கோத்திரங்கள், கோவில்கள், அரசர்கள் போன்றோரின் விவரங்களையும் தொகுத்து ஆராய வேண்டும். இந்தியாவில் தமிழ் நாட்டில்தான் கல்வெட்டுகள், தாமிர சாசனங்கள் அதிகம். உலகப் புகழ்பெற்ற தொல்பொருத்தி துறை அறிஞர், காலம் சென்ற டாக்டர் இரா. நாகசாமி, யாவரும் கேளிர் என்ற அவருடைய நூலில் கல்வெட்டுகள் தரும் அரிய விஷயங் களை , இலக்கிய தகவல்களோடு இணைத்து வெளியிட்டுள்ளார். அது போன்ற புஸ்தகங்களை  , நிறைய  வெளியிட வேண்டும்.

XXX subham xxxx

tags-  ஸம்ஸ்க்ருத, கவிதைக் கல்வெட்டுகள, 

யார் இந்த மர்ம தூதர்கள்? (Post No.11,185)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,185

Date uploaded in London – 11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகிலுள்ள மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் கண்டுபிடிக்க சில மர்ம தூதர்கள் உதவினார்கள் . கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் உலகப் புகழ்பெற்ற இந்துக் கோவில் ஆகும். இதைக் கண்டுபிடிக்க உதவியது ஒரு பட்டுப் பூச்சி (Butterfly). ஹென்றி முகோட் என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் பட்டுப் பூச்சிகளைச் சேகரித்து வந்தார். அவர் ஒரு அபூர்வ பட்டுப் பூச்சியைப் பார்த்தவுடன் அதைப் பிடிப்பதற்காக கையில் (net) வலையைத் தூக்கிக்கொண்டு அதன் பின்னால் சென்றார். நீண்ட தூரம் அடர்ந்த காட்டுக்குள் சென்ற போது பிரம்மாண்டமான ஆல மரங்களுக்கு இடையே மாபெரும் கட்டிடங்கள் இருப்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். அதுதான் தென் கிழக்கு ஆசியாவை 1500 ஆண்டுகளுக்கு ஆண்ட இந்து சாம்ராஜ்யத்தின் சிதைவுகளின் ஒரு பகுதி என்று தெரிந்தது. அதன் மூலம் அங்கோர்வாட் கண்டுபிடிக்கப்பட்டது.

பூர்வ ஜென்மத்தில் இந்து சிற்பியாக இருந்த ஒருவன் பட்டுப் பூச்சி வடிவத்தில் வந்து ஹென்றியை காட்டுக்குள் வரும்படி செய்தானா?

xxx

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் அஜந்தா பகுதியிலுள்ள காடுகளில் புலி வேட்டை ஆடுவது வழக்கம். ஜான் ஸ்மித் என்பவர் புலி வேட்டை ஆடிய போது , ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் வந்து அவர்களை ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று பிரமாண்டமான அஜந்தா குகைகளைக் காட்டிவிட்டு போய்விட்டான். அவற்றை ஆராய்ந்ததில் புராதன ஓவியங்களும் சிற்பங்களும் வெளிப்பட்டன..

பூர்வ ஜென்மத்தில் புத்த பிட்சுவாக இருந்த ஒருவர் ஆட்டு இடையனாக வந்தானா ?

Xxx

எகிப்திய பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் மர்மமான முறையில்தான். ஒரு அராபியன் திடீரென்று தோன்றிய ஒரு நரியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது பிரமிடைச் (Pyramids) சுற்றி இருந்த மணலுக்குள் இருந்த ஒரு குழியில்  விழுந்து மறைந்தது. மணலுக்குள் எப்படி அப்படி ஒரு சுரங்கம் என்று அராபியன் ஆராய்ந்தபோது பிரம்மாண்டமான எகிப்திய பிரமிடுகளுக்குள் சித்திர எழுத்துக்களும் ரத்தினம் பதித்த சித்திரங்களும், மம்மி (Mummy) களும் மறைந்து இருந்ததை உலகிற்கு அறிவித்தான்.

எகிப்திய மன்னனே  நரியாக வடிவெடுத்து வந்தானோ!

xxx

இஸ்ரேலில் சாக்கடல் (Dead Sea) பகுதியில் குகைகளுக்குள் 2200 ஆண்டுப் பழமையான பைபிள் சுவடிகள் (Dead Sea Scrolls) கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு ஆட்டினால்தான். ஒரு ஆட்டிடையன் காணாமற்போன ஒரு ஆட்டைத்தேடி ஒரு குகைக்குள் நுழைந்தான் . அப்போது அவன் கண்டுபிடித்த சுருள்கள் (Scrolls) பைபிள் வரலாற்றையே மாற்றியது

யார் அந்த ஆட்டு இடையன்? கிறிஸ்துவா? அவர்க்கு முந்திய மோஸஸின் மறுபிறவியா?

xxx

ஆதி சங்கரர், காட்டின் வழியே செல்லுகையில்,  கர்ப்பம் அடைந்த ஒரு தவளைக்குப் பாதுகாப்பாக ஒரு பாம்பு மழை நீர் விழாமல்  தன் படத்தைக் குடை போல விரித்து நிற்பதைக் கண்டு அதிசயித்தார் . அந்த இடத்தின் அபூர்வ தன்மையை அறிந்து அங்கே சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார்.

xxx

வீர பாண்டிய கட்டபொம்மன், காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது அவனது நாய்கள் ஒரு முயலை விரட்டிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் முயல், திடீரென்று வீரத்துடன் நாய்களை விர ட்டத் துணிந்தது. அந்த இடத்தின் வீரத் தன்மையை அறிந்து அங்கே கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினான்.

xxx

மதுரை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கலைப் பொக்கிஷம் ஆகும். அது தோன்றிய, வரலாறும் ஒரு மர்மமான சூழ்நிலையில்தான். தனஞ்சயன் என்ற வணிகன், வியாபாரத்தை முடித்துக் கொண்டு மதுரைக்கு வரும்போது , கடம்பவனக் காட்டின் வழியாக வந்தான். அங்கே ஒரு அதிசய ஜோதியை- ஒளியைக் கண்டான். அதைக் கவனித்தபோது தேவ லோகத்தில் இருந்து இந்திரன் முதலானோர் வந்து ஒரு லிங்கத்துக்குப் பூஜை செய்வதைக் கண்டான். மறுநாள் பகற்பொழுதில் அதை பாண்டிய மன்னனுக்குத் தெரிவிக்கவே புதிய மதுரை நகரமும் அதன் மத்தியில் மீனாட்சி கோவிலும் கட்டப்பட்டன.

யார் அந்த தனஞ்சயன்? இறைவன் அனுப்பிய மர்ம தூதனோ !!

இப்படி வரலாறு நெடுகிலும் சில மர்ம தூதர்கள்  வந்து,  மறைந்து போன செல்வங்களை, மர்மங்களை வெளிப்படுத்துகின்றனர்.

இது Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri என்ற தலைப்பில் 2011ல் வெளியிட்ட என்னுடைய கட்டுரையின் சுருக்கம் .

Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

https://tamilandvedas.com › 2011/11/14 › mysterious-…

14 Nov 2011 — There he was trapped amidst some ruins. He was surprised to see vast ruins in a thick forest. Now his interest moved slowly from the butterflies …

Tags- மர்ம தூதர்கள்,  அஜந்தா, அங்கோர்வாட், சிருங்கேரி, மதுரை , பாஞ்சாலங்குறிச்சி

அறிவியல் அறிஞர் வாழ்வில்..-(1) கணித மேதை யூலர்(Post.11184

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,184

Date uploaded in London – –    11 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில்..  – (1)

ச.நாகராஜன்

யூலரின் பதில்!

(1707 – 1783)

பிரபல கணித மேதையான யூலர் (LEONHARD EULER) 1766ஆம் ஆண்டு தனது 59வது வயதில் நோய்வாய்ப்பட்டார். அவரது கண்பார்வை மங்கிப் போய், பார்வையை இழந்து விட்டார். ஆனால் மனதிலேயே எந்தக் கணிதத்தையும் போட்டு விடும் ஆற்றல் அவருக்கு இருந்ததால் தனது கண் பார்வை போனது பற்றி அவர் சற்றும் கவலைப்படவில்லை.

அடுத்த 17 ஆண்டுகளில் அவர் தனது நூல்களைத் தொடர்ந்து படைத்து வந்தார். பாதிக்குப் பாதியான அவரது நூல்கள் இந்த 17 ஆண்டுகளில் இயற்றப்பட்டவை தான்!

அவருக்கு கண்ணில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது தோல்வியில் முடிந்தது. பார்வை வரவில்லை. எப்படி இனி நீங்கள் உங்கள் வேலையைத் தொடரப் போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது யூலர் கூறினார் : இனி மேலாவது எதுவும் எனது கவனத்தைக் குலைக்காமல் இருக்கும். (Atleast now, nothing will distract my attention).

அவர் போட்ட கணிதப் புதிர்களில் இதுவும் ஒன்று:-

ஒரு வியாபாரி சில குதிரைகளையும் காளைகளையும் வாங்கினான். அவன் கொடுத்த தொகை 1770 டேலர். ஒவ்வொரு காளைக்கும் அவன் கொடுத்த பணம் 31 டேலர். ஒவ்வொரு குதிரைக்கும் அவன் கொடுத்த பணம் 21 டேலர். அவன் எத்தனை காளைகள் வாங்கினான்? எத்தனை குதிரைகள் வாங்கினான்? (Taler – எகிப்திய நாணயம்)

தீர்வு:

இதை 31x + 21y = 1770 என்ற சமன்பாட்டால் தீர்க்க வேண்டும்.

வரும் விடைகள் மூன்று.

காளைகள் 9 ; குதிரைகள் 71

காளைகள் 30 ; குதிரைகள் 40

காளைகள் 51 ;  குதிரைகள் 9

மூன்று விடைகளும் சரி தான்!

*

பைத்தியமாக நடித்த கணித மேதை அல்ஹாஸன்

(965-1039)

இராக்கில் பஸ்ரா என்ற நகரில் பிறந்தவர் இபுன் அல்-ஹய்தம்.

பெரிய இயற்பியல் மற்றும் கணித மேதை. அவர் அல்ஹாஸன் என்ற பெயரால் நாடு முழுவதும் பிரபலமானார்.

எகிப்தில் தான் அவரது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி கழிந்தது.

நைல் நதியில் வருடந்தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதனால் ஏற்படும் சேதமும் அதிகம்.

அல்ஹாஸன் தன்னால் நைல் நதி வெள்ளத்தைத் தடுக்கும்படியான ஒரு மெஷினை செய்ய முடியும் என்று கூறி வரவே இது எகிப்தை ஆண்ட  அல்-ஹகீம் காதிற்கு எட்டியது.

உடனே அவரை கெய்ரோவிற்கு வருமாறு அல்-ஹகீம் அழைப்பு விடுத்தான்.

மன்னரின் அழைப்பு ஆயிற்றே. உடனே அல்ஹாஸன் கெய்ரோவிற்குக் கிளம்பினார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, சொன்னபடி தான் ஒரு மெஷினைச் செய்யவில்லை என்றால் மன்னனின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும், தனது உயிர் நிலைக்காது என்று!

நன்கு யோசித்தார். எகிப்தில் பைத்தியங்களுக்குத் தனி சலுகை கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆகவே அவர் பைத்தியமானது போல நடிக்க ஆரம்பித்தார்.

அவரது நடிப்பு அசல் பைத்தியங்களையே தோற்க அடிக்கும் படி இருந்ததால் அவர் மன்னனின் கோபத்திற்கு ஆளாகவில்லை.

இந்த நடிப்பை 1021ஆம் ஆண்டு அல்-ஹகீம் இறக்கும் வரை அவர் தொடர்ந்தார்.

பின்னர் அவர் ‘பைத்தியம் தெளிந்து விட்டது’!

பெரும் கணீத மேதைகளே வியக்கும் படி அவர் ஏராளமான கணிதப் புதிர்களைப் படைத்திருக்கிறார்!

***

புத்தக அறிமுகம் – 25

கீதை வழி!

பொருளடக்கம்

முன்னுரை

1. பகவத்கீதையின் ஒரு பதம்!

2. கீதையின் முதல் நான்கு வார்த்தைகளில் முழு அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மஹாராணி!

3. கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

4. கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

5. நோய்களைக் குணமாக்கும் பகவத் கீதை ஸ்லோகங்கள்!

6. எளிமை, பிரஸ்னம், சேவை: கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

7. மஹாத்மா போற்றிய பகவத் கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்!

8. காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி!

9. கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்!!

10. கீதை: மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! – கீதையின் முதல் கட்டளை!

11. கீதையின் இரண்டாவது கட்டளை!

12. கீதையின் மூன்றாவது கட்டளை!

13. கீதையின் நான்காவது கட்டளை!

14. கீதையின் ஐந்தாவது கட்டளை!

15. கீதையின் ஆறாவது கட்டளை!

17. கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை!

18. ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

19. கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!

20. ஏற்றம் தரும் எண்ணற்ற கீதைகள்!

21. உத்தர கீதை – 1

22. உத்தர கீதை – 2

23. பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத் கீதை!

24. கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!

*

புத்தகத்தில் நான் வழங்கியுள்ள முன்னுரை இது:

முன்னுரை

மனித குலம் வாழ்வாங்கு வாழ்ந்து உய்யும் பொருட்டு பகவான் கிருஷ்ண பரமாத்மாவே அருளிய நூல் பகவத் கீதை.

இதைப் பற்றிய ஏராளமான அற்புதமான உண்மைகளை இந்த நூலில் காணலாம்.

கீதை வழியை உணரலாம்; காணலாம்; அதன் வழி செல்லலாம்!

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஞான ஆலயம் மாத இதழிலும், www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கிலும் அவ்வப்பொழுது வெளி வந்தவை.

இவற்றை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் www.tamilandvedas.com ப்ளாக் திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ
30-7-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**