திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி- 2 (Post No.11,380)

 

WRITTEN BY B. KANNAN

Post No. 11,380

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXXXX

(First part of this article was posted here yesterday)

பாடல் 7-ஐப் பார்ப்போம்

சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்

சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா

சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே

பதம் பிரித்தால்,

சாரங்கம்(மான்) சங்கரி கட்கு(கண்) இச்சித்து ஏய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கம்(வில்) சங்கு அரிதாம் சக்கரம் கையில் தாங்கினன் சேய்(மன்மதன்)

சார் அங்கம் சங்கரியா நண்ணினர்க்கு அந்தத் தந்திரத்து ஆ

சாரம் கஞ்சம்(செந்தாமரை) கரிதே எனச்செய் நின சரண் தந்ததே

உமாதேவியின் கண்ணழகு காண அவரைப் பார்த்த கண் வாங்காது மான் இருந்தாற் போல் அந்த மான் ஏந்திய இடது கரத்தையுடைய ஈசனும், சார்ங்கம் எனும் வில், பாஞ்ச சன்யம் எனும் சங்கு, அருமையான ஆழி முதலியவற்றையும், திருக்கரத்தில் கொண்ட திருமாலின் மைந்தன் மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கிய யோக நிலையிலிருந்த மகேசனுக்கு, சிறந்த சிவாகம சீலத்தை, செந்தாமரை மலரையும் கருநிறமாக நாணச் செய்யும் உமது திருவடி மலர்கள் உதவின.

தெய்விகப் பார்வை மானின் நோக்கிற்கு இடம் செய்த மாதேவர், காம நோக்கில் அணுகிய மால் மகனின் உடலைப் பொசுக்கினார், பஞ்சாயுதபாணியாய் இருந்தும் திருமாலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. செந்தாமரையை நாண வைத்த செந்தி லாண்டவன் திருவடிகள் உரிய இப்பேற்றைச் சிவனாருக்கு உதவினதாம் “செந்தில் அத்தா! என்கதி என்னவாகும்? எனக்கு அப்பேறு எப்போது கிடைக்கும், என்று இறைஞ்சுகிறாராம் சிவப்பிரகாச சுவாமிகள்.

12-ம் செய்யுளில் கோவை அவிநாசியில் முதலை விழுங்கியச் சிறுவனை ஆளுடை நம்பிகள் ஈசனிடம் முறையிட்டு உயிர்ப்பித்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

“முப்புரமாவது மும்மல காரியம்” எனும் தத்துவக் குறிப்பு இழையோடும் 15-ம் பாடல் ஈசன் முப்புரம் எரித்தக் கதையைச் சொல்கிறது. சிவனின் நெற்றிக் கண்ணி லிருந்து வெளிப்பட்ட அருட்பொறிகள் ஆறையும் கங்கை தன் அலைக்கைகளால் தாங்கியதால் கங்கை தனயன் எனும் பொருளில் செவ்வேள் காங்கேயன் என அழைக்கப்படுகிறான் என்ற விளக்கத்தை 29-ம் பாடலில் தருகிறார்.

நாள்கள் கோள்கள் நலமில்லை என்று நையாதே;வாய்ப்பான செல்வம் இல்லை யென்று வருந்தாதே; மனை மக்கள் சுற்றம் சரியில்லை என்று மாழ்காதே; உடல் பிணி கண்டு உலையாதே தொல்லை அனைத்தும் தொலைய வேண்டுமேல், வா, செந்தூரான் திருவடிகளைத் தியானம் செய். கதிர்வேலா, ” நல்ல இடங்காண் இரங்காய் இனி” என்று இறைஞ்சு என்கிறார் வேறொரு பாடலில். சாக்கிய நாயனார் விருத்தாந்தமும் இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது.
தட்சனின் மனத்திமிரை அழித்து அவனைச் சிவகணத்தவருள் ஒருவனாக்கிக் கொண்ட சிவனாரின் அருமைப் புதல்வன் குமரன், ஐந்தாம் சங்கர சொரூபர் அகத்தியருக்குச் செந்தமிழும், சிவஞானமும் சித்திக்கச் செய்தான். செந்திலம்பதி யில் உறையும் அப்பெருமானை அடிபணிந்தால், உருத்திரப் பதவி, வைகுந்த மற்றும் பிரம்மப் பதவிகளை அவ்வள்ளல் வழங்குவான் என்கிறார் மற்றொரு இடத்தில்.

 28-ம்செய்யுளைப் பார்ப்போம்……

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன

கணக்காக நானலைந் தெய்த்தே நெழிற்செந்திற் கந்தநெற்றிக்

கணக்காக னார்தந்த நின்றனை யேயெனிக் காதலினாற்

கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.

பதப் பிரிவு: கண(கூட்டம்)க் காகம் நாய்கள் தின் காயம்(உடல்) நிலை எனக் கண்ணி(நினைத்து), என்ன கணக்கு ஆக நான் அலைந்து எய்த்தேன்? (சோர்வ டைந்தேன்) எழில் செந்தில் கந்த! நெற்றிக் கண் அக்குஆகனார்( எலும்பு மாலை அணிந்தவர்) தந்த நின்றனையே, இனிக் காதலினால் கண (நினைத்தபடி)க் கா(காப்பாற்றும்), கனா நிகர்த்தே அழி அங்கத்தின் காதல் அற்றே.

பொருள்: காக்கைக் கூட்டங்களும், நாய்களும் தின்னும் உடலை நிரந்தரம் என நம்பி, எந்த நோக்கத்துக்காக உழன்று இளைத்தேனோ தெரியவில்லையே! திருச்செநூரில் உறையும் கந்தவேளே, கனவைப் போல் அழியும் இவ்வுடல் மீதுள்ளப் பற்று ஒழிந்து,

நெற்றிக் கண்ணும், எலும்பு மாலையும் தரித்த சிவனார் அருளியு உம்மையே இனி ஆர்வமுடன் தியானிக்கச் செய்து கதியற்ற என்னைக் காப்பாயாக!

ஏன்றாவது ஒருநாள் அழியும் உடல் இது. அதை உணராமல் என்றும் நிலைத்திருக் கும் என எண்ணியிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்? அங்கங்களின் வளர்ச்சியும், தளர்ச்சியும் கனவு போல் தோன்றிக் கழியும் உடலல்லவோ இது?

“பாலனான பருவம்போம் பன்னுகுமாரப் பருவம்போம்

கோலமான தருணம்போம் கோலை யூன்றிக் குனிந்தெழுந்து

காலன் மாய்க்க அனைவர்களும் கல்லென்றழுது பேர்மாற்றி

ஏலப் பிணமென் றொருபெயரிட்(டு) இடுகாட் டிடுதல் ஒரு தலையே!

சூரிய உதயம், அதன் அஸ்தமனம் இரண்டையும் தினமும் கண்கொண்டுப் பார்த்தும், இளங்கன்று வளர்ந்து பசு,காளை,எருது எனவாகிப் பின் மரித்துவிடும் நிலையினைப் பார்த்தும் கூட,தோன்றியப் பொருளுக்கு ஒருநாள் அழிவு உண்டென்பதை அறியாதார் விழியிலா மாந்தர் என்கிறார் திருமூலர் .(திருமந்திரம் பாடல் 49)

ஆகவே உடல் பற்றை நீக்கி எப்போதும் உன்னையே நினைக்கும்படி செய்து என்னைத் தடுத்தாட்கொள்வாயாக! என்று வேண்டுகிறார்.

பற்றற்றான் தாளைப் பற்றினால் உள்ள பிறபற்று ஒழியும் என்பதற்கேற்ப, கந்தா, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். அநியாய எப்பிறப்பையும் எனக்கு அளித்திடாதே!

சிவனார் அருளியச் செல்வமே! ஆணவ இருளை அகற்றி, உத்தம உயிர்களை ஒளி மயமாக்கும் ஞானசக்தியாம் வேல் கரத்து விமலா, திருச்செந்திலில் எழுந்தருளியி ருக்கும் காங்கேயா, உன் பாதங்களில் சரணடைகிறேன் என்று உருகுகிறார்.

இது போன்று அருளாளர்கள் அருளிச் செய்த இத்தகு நிரோட்ட யமக அந்தாதிப் பாடல்களைப் படிக்கும் போது, நம் இதழ்கள் ஒட்டவில்லையாயினும், மனம் இறை வனோடு ஒட்டி-உறவாடி இரண்டறக் கலந்து விடுவதை, இச்செய்யுள்களை ஆழ்ந்து கற்போரால் நன்கு உணர முடியும்.

            செந்தில் வேல் முருகனுக்கு அரோஹரா!

 Tags- திருச்செந்தூர் ,நிரோஷ்ட யமக அந்தாதி, B Kannan

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67 (Post No.11379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,379

Date uploaded in London – –    21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் தொடரில் நாம் இங்கு பார்க்க இருப்பது ஒரு முக்கியமான கட்டுரை.

தமிழ்த் தாத்தா என்றும் உ.வே.சா என்றும் சிறப்பாக அழைக்கப்படும் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதன் அவர்களைத் தெரியாத தமிழர் இருக்க முடியாது. (தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942).

மஹாகவி பாரதியா அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ள கவிதை குறிப்பிடத் தகுந்த ஒன்று.

“பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்! அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்!
இறப்பின்றித் துலங்கு வாயே!”

என்று மஹாகவி பாரதியார் இறப்பின்றித் துலங்குவாயே என்று போற்றிப் புகழ்ந்த மேதை திரு உ.வே.சா அவர்கள்.

பாரதியாரைப் பற்றிய அவரது ஒரு முக்கியமான சொற்பொழிவு  உண்டு.

1936ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸின் பொன் விழாவில் சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டது.

அப்போது அந்த விழாவில் கலந்து கொண்டார் உ.வே.சா. அப்போது அவருக்கு வயது 81.

அதில் அவர் பேசிய பேச்சு அருமையான ஒன்றாகும்.

அதில் அவர் கூறுகின்ற சில கருத்துக்களை அவர் பேசியபடியே இங்கு பார்க்கலாம்.

“தெய்வத்தினிடத்திலும் தேசத்தினிடத்திலும் பாஷையினிடத்திலும்

அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாட வேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே இருந்தது….

சென்னையில் இவர் இருந்த காலத்தில் நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிசென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார். பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்….

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கம் உள்ளவர்….

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும் நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன…..

இவருடைய வசனத்தைப் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன்….

பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அருத்த புஷ்டியுடையது. வீர ரசம், சிருங்கார ரசம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன். பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்….

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிநாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்.

அற்புதமான உ.வே.சா அவர்களின் உரையில் ஒரு பகுதி மேலே தரப்பட்டுள்ளது.

முழுவதையும் பாரதி ஆர்வலர்கள் படிப்பது இன்றியமையாதது.

***

 புத்தக அறிமுகம் – 93

மாயாலோகம் (பாகம் 3)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. பார்வையற்றவர் மலையேறி உலக சாதனை படைக்கும் அதிசயம்! 

 2. அதிசய மாயாஜால நிபுணர் டேவிட் ப்ளெய்ன்!

 3. 65 வருடங்களாக உணவு உட்கொள்ளாத யோகி பற்றிய திரைப்படம்  

   கேன்ஸ் விழாவில்!    

 4. புலன் கடந்த பார்வையாளர் – குடா பக்ஸ்   

 5. மஹாவதாரம் பாபாஜி – 1   

 6. மஹாவதாரம் பாபாஜி – 2   

 7. மஹாவதாரம் பாபாஜி – 3   

 8. மஹாவதாரம் பாபாஜி – 4   

 9. உலகின் அதிர்ஷ்டக்கார பெண்மணி!   

10. சோகுஷின்புட்சு – மம்மி ஆவதற்காக புத்தபிட்சுக்கள் செய்து

   கொள்ளும் தற்கொலை!

11. மரணப் பள்ளத்தாக்கு – 1    

12. மரணப் பள்ளத்தாக்கு – 2    

13. கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலம் வருகிறது!  

14. இன்னொரு பூமி கண்டுபிடிப்பு!    

15. பெல்மெஸ் முகங்கள் 

16. கடலடியில் ஆறு ஓடுகிறதா? மெக்ஸிகோ அதிசயம்!    

17. அரசை எதிர்க்காதீர்கள், ஆபத்து! – (இந்தியாவில் அல்ல!!)

18. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 1

19. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 2

20. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 3

21. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 4

22. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 5

23. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 6

24. தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!!  

25. உலக மக்களை இணைக்கும் பேஸ்புக் 

26. செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை!    

27. முடிவுரை       

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book serves as a perfect gift for children at home. Originated from a series of articles in a tamil weekly called Bhagya, the last part of the collection is called Mayalogam. It talks about religious perspective, nature of human beings and amazing astronomical facts.

‘பாக்யா’ வார இதழின் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற ‘மாயாலோகம்’ தொடரின் கடைசிப் பாகம்! ஆன்மிக அவதாரங்கள், மனிதர்களின் விசித்திர குணாதிசயங்கள், அதிசயமான பிரதேசங்கள், விண்வெளியின் வியப்பூட்டும் விந்தைகள் எனப் பல சுவையான கட்டுரைகளைக் கொண்ட இந்நூலைப் படித்துப் பாருங்கள்! சிறுவர்களுக்கும் பரிசளியுங்கள்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

** 

Learn Tamil Verbs: Imperative -Positive ( Lesson 14)-Post No.11,378

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,378

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

What is Imperative?

It is a command or a request.

We always use it with a person or persons in front of us.

If it is a child or a servant or someone younger to you  in age or status, you just use the verb root.

Do செய், Come வா, Go போ, Sit உட்கார், Eat சாப்பிடு, Read படி.

If it is more than one person you use plural by adding Ungal /உங்கள் suffix.

Even if it is one person you are addressing, you may give respect by adding உங்கள்

Xxx

When you add , you have to follow morphophonemic rules.

What is it? You insert certain letter or you drop certain letter and then add உங்கள்/ungal

Come வா, Go போ are irregular verbs; that means they don’t follow the rues. You simply learn it from teacher or book

Vaarungal வா- வாருங்கள் – vaarungal  (spoke form வாங்க Vaanga)

Pongal போ – போங்கள் – Pongal (spoken form போங்க Ponga)

Seyyungal) செய்- செய்ய் + உங்கள் = செய்யுங்கள் (look at YYய்ய்)

Sollungal சொல்- சொல்ல் + உங்கள் = சொல்லுங்கள்  (look at LLல்ல்)

Padiyungal படி – படி ய் + உங்கள் = படியு ங்கள் (look at only one Y ய்)

Padungal படு +உங்கள் = படுங்கள் (look at Uஉ; it is dropped)

Saappitungal சாப்பிடு + உங்கள் = சாப்பிடுங்கள் (look at Uஉ; it is dropped)

There are certain rules for it and they are known as Morphophonemic rules.

I will give the rules in another lesson.

Tomorrow we will see Imperative Negative.

Xxx

Two more Tamil verbs are attached:

Podu- drop போடு

Thodu – touch தொடு

To be continued ………………………………………..Tags- Tamil lesson 14, Imperative, Positive, verbs Touch, Drop 

தீ எரிக்காது — இந்து மத அற்புதம் (Post No.11,377)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,377

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

தீ எரிக்காது — இந்து மத அற்புதம்

இந்துக்கள் கடும் தவத்தினால் பல அபூர்வ சக்திகளைப் பெறுகிறார்கள் ஆனால் அவற்றை அரிதே பயன்படுத்துவார்கள். பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. பஞ்ச பூதங்களாக மாறி விண்வெளியில் பயணம் செய்யும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. ஐன்ஸ்டீன் , நியூட்டன் போன்றோர் சொன்ன பெளதீக விதிகள் அங்கே செல்லுபடியாவது இல்லை.  ராமலிங்க சுவாமிகள், ஞான சம்பந்தர், ஆண்டாள்,ஆதி சங்கரர் முதலிய பல ஞானிகள்,  ஜோதி சொரூபமாக மாறி  இறைவனை அடைந்ததை நாம் அறிவோம். குமாரில பட்டர் என்னும் பெரிய அறிஞர் எரியும் உ மிக் குவியலுக்கு இடையே தன் உடலை வைத்துக் கொண்டு ஆனந்தமாக எரிந்ததையும் நாம் படித்திருக்கிறோம்.

கற்புள்ள பெண் ‘பெய்’ என்றால் மழை கொட்டித் தீர்க்கும் என்று வள்ளுவன் சொன்னதும் நாம் அறிந்ததே. சீதையை  அனுமன்  அசோக வனத்தில் சந்தித்து ராமன் பற்றிய இன்பச்  செய்தியைக் கொடுத்த பின்னர் , இறுதியாக புறப்படும் முன்பாக ஒரு வேண்டு கோள் விடுக்கிறான் . அன்னையே என் தோள் மீது ஏறி அமருங்கள் ; ஒரே  நொடிப்பொழுதில்  உங்களை ராமனிடம் அழைத்துச் செல்கிறேன் என்கிறான். அப்போது அவள் சொல்கிறாள்,

என்னை யார் என்று எண்ணி எண்ணி  நீ பார்க்கிறாய்? என்னுடைய சக்தியால் ஈரேழு புவனங்களையும் எரிக்க முடியும். ஒரு சொல் போதும் ஆயினும் என் சொல் பெரிதல்ல. ராமனின் வில்லுக்கு இழுக்கு வந்து விடக்கூடாது என்கிறாள். ராமாயணத்தின் கருத்தே அதுதானே. மக்கள் சக்தியை எழுப்பி தீமையை  மாய்க்க வேண்டும் என்பதே ராமாயண தாத்பர்யம் .

மேலும் இந்து சந்யாசிகள் எவ்வளவு சக்தி இருந்தாலும் அற்புதங்களை செய்வதில் அதை வீணடிக்க மாட்டார்கள்; கஷ்டப்பட்டு சம்பாதித்து பாங்கில் சேமித்து வைக்கும்  பணத்துக்கு ஈடானது , ஒருவர் தவத்தினால் சம்பாதித்த புண்யம் ஆகும். ஒருவருக்கு ஒருவர் வரம் கொடுத்தாலோ, சாபம் கொடுத்தாலோ அப்போது பாங்க் பாலன்ஸ் (BANK BALANCE) குறையும். அதாவது உங்கள் புண்யத்தைச் செலவழிக்கிறீர்கள்.

இதை விஸ்வாமித்திரர் கதையிலும் பார்க்கிறோம் . க்ஷத்ரியனாக பிறந்து மந்திரங்களைக் கற்ற அவருக்கு பிராமணன் ஆக வேண்டும் என்று ஆசை.அதற்காக அவருக்குப் போட்டி என்று கருதிய வசிஷ்டர் வாயினால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்க முயன்று மூன்று முறை தோற்கிறார் ; காமம், க்ரோதம், லோபம் மூலம் அவர் பாங்கு பாலன்ஸை /(BANK BALANCE OF PUNYA) சேமித்த புண்யத்தை வீணடி க்கிறார் . மேனகா மூலம் காம சுகம் அனுபவித்ததிலும்,திரிசங்கு என்ற மன்னரை உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்ப ஆசைப்பட்டதிலும், வசிஷ்டர் மகன மீதான கோபத்தாலும் அவர் சக்தி விரயமாகியது. இறுதியில்  காம,க்ரோத லோபத்தை விடுத்து வசிஷ்டர் வாயினாலேயே பிரம்மா ரிஷி பட்டம் பெறுகிறார். இது மனித குலத்துக்கு அவர் தந்த பாடம்.

சீதா தேவியும் தன ஆற்றலைப் பயன்படுத்தவில்லை; ஒரு சாதாரணப் பெண்மணி போலவே செயல்படுகிறாள் . ஆனால் தனக்கு நல்ல செய்தி கொண்டுவந்த அனுமன் வாலில் ராக்ஷசர்கள் தீயை மூட்டிவிட்டனர் என்று சொன்னவுடன் அக்கினி பகவானை  “ஏ , அக்கினியே , அனுமனைச் சுடாதே என்கிறாள்.அப்படியே அவனும் செய்கிறான். சுண்ணாம்புக் காளவாயில் மஹேந்திர வர்மனால் தூக்கி எறியப்பட்ட அப்பருக்கு எப்படி அது சுடவில்லையோ அப்படி அனுமனுக்கும் தீ சுடவில்லை. அவனுக்கும் ஆசர்யம் தாங்கவில்லை சிந்திக்கிறான். மூன்று காரணங்கள் மனதில் உதிக்கின்றன: 1.ராமனின் மகத்தான சக்தி, 2.சீதையின் கற்புக்கனல், 3.தனது தந்தையான வாயு பகவானுக்கும் அக்கினி பகவானுக்கும் உள்ள நட் புறவு ஆகிய இந்த மூன்றினால்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது என்று ஊகிக்கிறான் . இதோ வால்மீகியின்  சொற்களிலேயே அதைக் கேட்போம்.

यस्त्वया कृतसंवाद स्सीते ताम्रमुखः कपिः।।5.53.25।।

लाङ्गूलेन प्रदीप्तेन स एष परिणीयते।

யஸ்த்வயா  க்ருத ஸம்வாத  தாம்ர முகஹ கபிஹி

லாங்கூலேன  ப்ரதீப்தேன  ஸ ஏஷ பரிணீயதே 5-53-25

சுந்தர காண்டம், வால்மீகி ராமாயணம்

ஓ சீதா ! உன்னுடன் இப்போது கதைத்தே,  ஒரு செம்முகக் குரங்கு ; அதைத் தெருவில் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள்; அதன் வாலில் தீ வைத்துவிட்டார்கள் .

(லாங்கூலம் = வால் ; கபி = குரங்கு; தாம்ர முக = செம்முகம் ; ப்ரதீப் தேன – தீ மூட்டப்பட்ட)

தொடரும் ……………………….

PLEASE READ MY OLD ARTICLE, IF YOU HAVE NOT READ IT.

ராமரின் வில் பெரிதாசீதையின் சொல் பெரிதா?

Date: 15 May 2017 

Post No. 3910 

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

–சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்

 பொருள்:-

பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமாகணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் சுட்டெரிப்பேன் அவ்வாறு செய்வது ராமனின் வில்லாற்றலுக்கு இழிவு உண்டாக்கும் என்று உணர்ந்து அத்தொழிலைச் செய்யாது விட்டேன் – என்று அனுமனிடம் சீதை சொல்கிறாள்.

என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள்உடனே ராம பிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறியது இது.

நீ ஒரு ஆண்மகன்உன் தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது” என்றும் வாதிடுகிறாள்.

அதாவது ராமனின் வில் ஆற்றலுக்காவது அவர் தனது சொந்த சக்தியைச் செலவழிக்க வேண்டும். ஆனால் பத்தினிப் பெண்ணாகிய சீதைக்கோ அது கூடத் தேவை இல்லை. உடல் வலிமையின்றி மன வலிமையால் சாபம் போட முடியும்.

பெண்களுக்குள்ள இந்த அபார சக்தியை வள்ளுவனும் போற்றுவான்:

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

வேறு தெய்வத்தைக் கும்பிடாமல் கணவனையே தெய்வமாகக் கும்பிட்டுத் துயில் எழும் பெண்/ மனைவி ‘பெய்’ என்று சொன்னால்அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்” என்பான் வள்ளுவன்.

கண்ணகியும் தன் சொல்லால் மதுரையைச் சுட்டெரித்தாள்.

சாவித்ரி எமனுடன் வாதாடிகணவன் உயிரை மீட்டுக் கொண்டு வந்தாள். சந்திரமதிதமயந்தி போன்றோரும் துயரங்களைக் கடந்து வெற்றி பெற்றனர்.

திரவுபதியும் தான் எடுத்த சபதத்தை பாண்டவர்களின் மூலம் நிறைவேற்றிக் காட்டினாள்.

 ஆகையால் சொல்லால் சுடுவேன் என்று சூ ளுரைத்தது பொருத்தமே.

அமெரிக்க அதிபர்ரஷ்ய அதிபர்இந்தியப் பிரதமர் கைகளில் அணுகுண்டுகளை ஏவிவிடும் “பட்டன்” (switch or Button) இருக்கிறது. ஆயினும் அச்சக்தியைப் பிரயோகிக்காமலேயே பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அது போல பத்தினிப் பெண்களிடமும் அபார சக்தி இருக்கிறது அதை எவ்வளவு கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு கவனத்துடன் பயன்படுத்துவார்கள். அதை வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள்பெண்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள்.

ராமனின் வில்லாற்றலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாதுராவணன் என்ற அரக்கனை அகற்றும் பணியை அவதார புருஷனாகிய ராமனே செய்யட்டும் என்று சீதை பொறுமையாக இருக்கிறாள்.

வால்மீகி ராமாயணத்தில் இது போன்று உலகங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் வல்லமை பற்றிப் பேச்சு இல்லை.

வால்மீகி ராமாயணத்தையே கம்பன் பின்பற்றினாலும்பல இடங்களில் அவன் புதுக் கதைகளையும்புது வசனங்களையும் சொல்லுவது அவன் வேறு சில  ராமாயணங்களின் கதைகளையும் எடுத்தாண்டதைக் காட்டுகிறது. அவனே மூன்று ராமாயணங்கள் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட மூன்றில் இன்று நமக்குக் கிடைப்பது வால்மீகி ராமாயனம் ஒன்றே.

கம்பனைப் பயில்வோம்கவின்சுவை பெறுவோம்.

-Subham–

 Tags தீ எரிக்காது, இந்து மதம்,  அற்புதம், 

Fire won’t Burn You- Miracle in Hinduism (Post No.11,376)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,376

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Fire won’t Burn You- Miracle in Hinduism

Hindus believe that they can control five elements through penance. But they don’t use it very often. Seldom they use it. For instance, when you give some one a boon or when you curse some one , you are using your bank balance of Punya (merits earned with hard work or penance). Vishvamitra, a born Kshatriya,  lost his bank balance three times when he wanted to become a Brahma Rishi (brahmana Rishi) by  hook or by crook. He lost his energy through sex with Menaka once. Then he lost his earned money/merits through ego. When the king of Ayodhya Tri Shanku wanted to go to heaven with human body, Vishvamitra,  used his energy but failed because he had not enough bank balance of Punya. His anger towards Vasistha also wasted his bank balance of merits/Punya. At the end when he gave up Kama, Krodha and Lobha, he was declared a Brahmana by Vasistha.

Tamil poet Tiru Valluvar says that a chaste woman can bring down rain at her command. But they don’t waste their energy that way. A scene that was not in Valmiki Ramayana is portrayed by Kamban in his Ramayana in Tamil. When he met Sitadevi in Asoka Vana of Sri Lanka , he prayed to her to sit on his shoulders so that he can carry her straight to Rama like direct flight. But she refused saying to Hanuman, “What do you think about me? With my power I can burn not only this earth but all the earths beyond (solar system). But that would bring bad name to my Hero Rama”. In fact she says that her chastity is more powerful than Rama’s bow (heroism). Then Hanuman went away. He was caught by the demons and his tail was set on fire by the order of Ravana, the king of the demons. But it did not cause Hanuman any discomfort. He set fire to Sri Lanka.

Xxx

Sita was praying to Fire God Agni that it should not burn Hanuman. The miracle happened. Hanuman was thinking how come it did not burn him. He logically arrived at three reasons: 1.Rama’s power, 2.Sita’s chastity and 3. His dad’s friendship with Fire. Wind and fire work together is a known fact. Hanuman was the son of God of Wind (Vaayu Bhagawaan)

Let us look at what ran through Sita’s mind.

Valmiki described the scene beautifully in the following slokas in Sundara Kanda (kaanda= canto).

यस्त्वया कृतसंवाद स्सीते ताम्रमुखः कपिः।।5.53.25।।

लाङ्गूलेन प्रदीप्तेन स एष परिणीयते।


“O Sita the red faced monkey who conversed with you is being paraded in the streets with his tail set on fire”.

श्रुत्वा तद्वचनं क्रूरमात्मापहरणोपमम्।।5.53.26।।

वैदेही शोकसन्तप्ता हुताशनमुपागमत्।


Distressed on hearing the news which was as cruel as her own abduction Sita started burning with grief and invoked the FIRE GOD.

मङ्गलाभिमुखी तस्य सा तदाऽसीन्महाकपेः।।5.53.27।।

उपतस्थे विशालाक्षी प्रयता हव्यवाहनम्।


Wishing the great monkey well, the large eyed Sita invoked the Fire god in her heart.

यद्यस्ति पतिशुश्रूषा यद्यस्ति चरितं तपः।

यदि चास्त्येकपत्नीत्वं शीतो भव हनूमतः।।5.53.28।।


“O Fire god if I have served my husband, if I have practised austerities, and if I am loyal to my husband, be cool to Hanuman.

यदि किञ्चिदनुक्रोशस्तस्य मय्यस्ति धीमतः।।5.53.29।।

यदि वा भाग्यशेषो मे शीतो भव हनूमतः।


“If wise Rama has some compassion for me, if there is any residue of good luck for me, to Hanuman be cool O Fire god.

यदि मां वृत्तसम्पन्नां तत्समागमलालसाम्।।5.53.30।।

स विजानाति धर्मात्मा शीतो भव हनूमतः।

“O Fire god if Rama is righteous, if I am pure in mind, and if I am longing to unite with him, be cool to Hanuman.

यदि मां तारयेदार्यस्सुग्रीवः सत्यसङ्गरः।।5.53.31।।

अस्माद्धुःखाम्बुसंरोधाच्छीतो भव हनूमतः।
“If Sugriva is true to his promise to fight (for me), if he should be able to rescue me from this ocean of agony let Hanuman be cool (not consumed by fire.)”

ततस्तीक्ष्णार्चिरव्यग्रः प्रदक्षिणशिखोऽनलः।।5.53.32।।

जज्वाल मृगशाबाक्ष्या श्शंसन्निव शिवं कपेः।

Then the tips of the intense flame appeared steadily moving to the fawn eyed Sita indicating the fire god’s auspiciousness and safety to Hanuman.

हनुमज्जनकश्चापि पुच्छानलयुतोऽनिलः।।5.53.33।।

ववौ स्वास्थ्यकरो देव्याः प्रालेयानिलशीतलः।

“The Wind god accompanying Hanuman’s firelit tail also blew cool like the wind from snow, to calm the mind of the divine lady.

दह्यमाने च लाङ्गूले चिन्तयामास वानरः।।5.53.34।।

प्रदीप्तोऽग्निरयं कस्मान्न मां दहति सर्वतः।

When the tail was burning, the vanara (vaanara= Vana Nara= Forest Man) wondered how the fire ablaze on every side was not burning him:

दृश्यते च महाज्वालः करोति न च मे रुजम्।।5.53.35।।

शिशिरस्येव सङ्घातो लाङ्गूलाग्रे प्रतिष्ठितः।


‘This huge flame is not hurting me. It is as though a mass of ice is placed at the end of my tail. (The fire did not torture nor extend beyond the tip of my tail.)

अथवा तदिदं व्यक्तं यद्दृष्टं प्लवता मया।।5.53.36।।

रामप्रभावादाश्चर्यं पर्वत स्सरितां पतौ।

‘It must be due to the power of Rama, by which I found a wonderful mountain emerging from the sea to give me protection while I was crossing the ocean. Now evidently this is due to Rama’s power (that my tail is not burning me).

यदि तावत्समुद्रस्य मैनाकस्य च धीमतः।।5.53.37।।

रामार्थं सम्भ्रमस्तादृक्किमग्निर्न करिष्यति।


‘If the anxiety of the ocean and the wise Mainaka mountain is to serve Rama what is it that the fire cannot do?

सीतायाश्चानृशंस्येन तेजसा राघवस्य च।।5.53.38।।

पितुश्च मम सख्येन न मां दहति पावकः।

‘Because of Sita’s steadfast loyalty, Rama’s power and my father’s friendship with the Fire god, the fire is not burning me.’

Xxx

More Fire Miracles

Adi Shankara, Tamil poetess Andal, Tamil saint Gnana Sambandar, Tamil saint Vallalar and many more became flames and merged with the God. Great scholar Kumarila Bhatta sat in the middle of a big hill of burning paddy husk and burnt his body slowly . Great Tamil saint Appar alias Tiru Navukarasu was thrown into hot Lime Kiln by the great Pallava King Mahendra Varman (600 CE) but Appar came out without any harm by saying Om Nama Sivaya.

We read  more about snakes refusing to bite, elephants refusing to kill holy men even when ordered by the kings or his attendants.

Saints can control Fire, Water, Earth, Wind and Space. They can make Inter Galactic Travel by becoming Light. They beat all that is said by Einstein and Newton. Theory of Relativity and Three Laws of Motion do not work there.

–subham–

Tags- Sita’s Prayer, Agni, Fire God, Fir Miracles, Valmiki Ramayana

திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி- 1 (Post No.11,375)                        

WRITTEN BY B. KANNAN

Post No. 11,375

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா                           

                திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி

               Written By B.Kannan,New Delhi

 தமிழ் மொழியிலுள்ள 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி–அதாவது ஒரு செய்யுளின் கடைச் சொல் (அ) எழுத்து அடுத்து வரும் பாட்டின் முதற்சொல்லாக அமைத்து இயற்றுவதாகும். இவ்வகையில் யமக அந்தாதி, ஏகபாத அந்தாதி, திரிபந்தாதி, இதழகலந்தாதி எனப் பல வகைகள் உள்ளன. நாம் காண இருப்பது இதழகலந்தாதி என்று அறியப்படும் ‘நிரோஷ்ட’ (அ) ‘நிரோட்ட யமக அந்தாதி யைத்தான். நிர்+ஓஷ்ட(உதடு)= உதடு ஒட்டாமல் இருப்பது என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். தமிழ் இலக்கண விதிப்படி பகரம், மகரம் என உதடுகள் ஒட்டிக் கலக்கா மலும், குவிந்தும் வரும் சொற்களைக் கொண்டு பொருள் வருமாறு இணைத்துப்  பாடுவது நிரோட்டச் செய்யுளாகும்.

இப்படிப்பட்ட நிரோட்டச் செய்யுளுடன் யமகவடிவைச் சேர்ப்பது நிரோட்டயமக மாகும். யமகம் என்றால், பாடலின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துகளோ, சோற்றொடரோ திருப்பித் திருப்பி வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி நிரோட்டம்+யமகம்+அந்தாதி என இம்மூன்றும் இணைந்து இயற்றப்பெறும் பாடல்    களே நிரோட்டயமக அந்தாதி ஆகும். ‘கற்பனைக் களஞ்சியம்’ துறைமங்கலம் ஶ்ரீ சிவப்பிரகாசர் சுவாமிகள் கட்டளைக் கலித்துறையில் திருச்செந்தூர் செந்திலாண் டவன் பேரில் இவ்வணி அலங்காரத்தில் பாடல் இயற்றியுள்ளார். இந்நூலே ‘நிரோட்ட யமக அந்தாதி வகையின் முன்னோடி நூலாகப் போற்றப்படுகிறது.

அந்தாதி என்றால் 100 செய்யுள்கள் இருக்க வேண்டும். ஆனால் இதில் அடங்கி யிருப்பதோ 30 பாடல்கள்தான். மற்றவை செல்லரித்துப் பாழாகிவிட்டன என்பது வருந்தற்குரிய விஷயமாகும் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். மேலும்  இவ்வகை நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக (இது மண்டலித்தல் எனப்படும்) அமையக் கூடியச் சாத்தியக் கூறுகளின் பாடல் இங்குக் காணப்படாததும் இக்கூற்றை உறுதி செய்கிறது. இந்நூலாசிரியர் பற்றியும் மற்றும் இவ்வந்தாதி இயற்றப்படுவதற்குக் காரணமாயிருந்த நிகழ்வைப் பற்றியும் அறிந்து கொள்வோம்….

காஞ்சிபுரத்தில் வேளாளர் மரபில் சிவபக்தரான குமாரசாமி தேசிகருக்கு மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசர். இளமையில் திருவண்ணாமலையில் கல்விகற்றுத் தேர்ந்து, பின்னர் பெரம்பலூர் துறைமங்கலம் சென்று ஊர்ப்பிரமுகர் அண்ணாமலை ரெட்டி யாரின் ஆதரவில் சிறப்பாகச் சிவபூஜை செய்து வந்தார். இயற்கையிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால்,திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சிந்துபூந்துறை யிலுள்ள தருமபுர ஆதீனகர்த்தா வெள்ளியம்பல சுவாமிகளிடம் இலக்கண இலக் கியம் கற்க ஆவல் கொண்டு அவரை அணுகினார். சுவாமிகள் சிவப்பிரகாசருக்கு நுழைவுத் தேர்வு ஒன்றை வைத்தார்.

“ ‘கு’ வில் ஆரம்பித்து ‘கு’ என்ற எழுத்தில் முடிய வேண்டும். இடையில் ‘ஊருடை யான்’ என்ற சொல் வரவேண்டும். இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுக!” என்றார். எவ்விதத் தயக்கமுமின்றி உடனே சிவப்பிரகாசர்,

“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்

முடக்கோடு முன்னமணி வாற்கு–வடக்கோடு

தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்

ஊருடையான் என்னும் உலகு!” என்ற வெண்பாவை இயற்றிச் சமர்ப்பித்தார்.

(பொருள்: மேற்கு நோக்கி ஓடும் சூரியனின் பற்களை உடைத்தவருக்கு, ஆண் பன்றியின்(கேழல்) வளைந்த கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு, வடக்கு நோக்கி ஓடுகின்றத் தென்றலாகிய ரதத்தையுடைய மன்மதனின் பகைவருக்கு (மகேசனுக்கு), தில்லை நகர் ஊராகும், யானைத்தோல், புலித்தோல் உடுத்தும் ஆடைகளாகும், ஏறிச்செல்லும் வாகனம் காளைமாடு ஆகும் என்று உலகத்தார் சொல்லுவர்).

இதைக் கேட்டு மகிழ்வுற்ற ஆதீனம் சிவப்பிரகாசரை மாணாக்கனாக ஏற்றுக்கொண்டு, முறையாக இலக்கணப் பாடங்களைக் கற்பித்தார். குருகுலவாசம் முடிந்ததும் ஆசா னுக்குக் குருதட்சணையாகத் தன்னிடமிருந்தக் காசுகளைத் தர, அதை வாங்கமறுத்த தம்பிரான் அவரை வேறொரு பணியை முடித்துக் கொடுக்குமாறு அன்புக் கட்டளை யிட்டார்.

அக்காலகட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு தலைக்கனம் பிடித்தப் புலவன் இருந்தான். கோயிலுக்கு வரும் தமிழறிஞர்களை வாதுக்கு அழைத்து,வம்பு செய்து மானபங்கப் படுத்தித் துரத்தியவாறு இருந்தான். தன்னை ‘வென்றிமாலைக் கவிராயர்’ என்றும் பீற்றிக் கொண்டிருந்தான். நெல்லைத் தம்பிரான் சுவாமிகளையும் சகட்டுமேனிக்குத் தரக் குறைவாகப் பேசி வந்தான். அவனுக்குப் புத்திபுகட்ட, அவனை வாதில் வென்று, தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார் தேசிகர் அவர்கள். அதன்படி செந்தில் சென்று முருகனைப் பாடிப்பரவிக் கொண்டிருக்கையில், அந்த அடாவடிப் புலவன் அவரை யாரென வினவ சிவப்பிரகாசர், ‘தாம் வெள்ளியம்பலத் தம்பிரானின் அடிப் புழுதி’ எனப் பதில் அளித்தார்.

அதற்கு அப்புலவன், ‘அந்தப் புழுதி என் புலமைக் காற்றில் பறந்து போய்விடும்’ எனக்கூற, சிவப்பிரகாசரோ, ‘பாதத்துக்குக் கீழுள்ளப் புழுதி காற்றில் பறப்பதுண்டோ!’

என எதிர்க்கேள்வி கேட்டு அவனை வாதத்துக்கு அழைத்தார். செந்தில்நாதன் கோயி லை ஒருமுறை வலம் வருவதற்குள் இருவரில் யார் முதலில் நிரோஷ்ட யமக அந்தாதி தொகையில் அதிகப் பாட்டுகள் இயற்றுகிறார்களோ அவரே வாதில் வென்ற வராவார் என்ற நிபந்தனைக்கு உட்பட்டனர். முதல் வலம் வருகையில் சிவப்பிர காசர் 30 செய்யுட்களை இயற்றிவிட, வென்றிமாலைக் கவிராயரோ ஒரு பாடலைக் கூடப் பாட முடியாமல் தத்தளித்து, ‘ஒன்றுமறியா கவிராய’ராக நின்றுத் தன் தோல் வியை ஒப்புக்கொண்டான். சிவப்பிரகாசர் அவனைத் தன்னுடன் அழைத்துச்சென்றுத் தம்பிரானிடம், விஜயன் மன்னன் துருபதனைத் துரோணாச்சாரியாரிடம் இழுத்துச் சென்று மண்டியிட வைத்தது போல், அவற்சொற்படி குருதட்சணையாக அளித்தார்…. இதுதான் திருச்செந்தில் நிரோட்ட யமக அந்தாதி பிறந்த நிகழ்வாகும்.

திருச்செந்தில் என்பது அருளுடைய ஆன்மா அடைக்கல நிலையம் என்று பொருள் படும். ( திரு=அருள், செந்து=ஆன்மா, இல்=இல்லம் ). இப்பிரபந்தம் மிறைக்கவி (சித்தி ரக் கவி) இனத்தைச் சேர்ந்தது. திருமந்திரம் சொல்வது போல், பதினாறு மாத்திரை அளவு மூச்சுக் காற்றை இடதுபக்க மூக்கு வழியாக உள்ளே இழுப்பது பூரகம் ஆகும்; இழுத்த மூச்சுக் காற்றை 64மாத்திரை அளவு உள்ளேயே நிறுத்தி வைப்பது கும்பகம் ஆகும்; வலதுபக்க மூக்கு மூலம் 32 மாத்திரை அளவில் மூச்சை வெளியே விடுவது ரேசகம் ஆகும். கட்டளைக் கலித்துறையில் அமைத்து, உதடு ஒட்டாது பாடுவதால் ரேசக, பூரக நிலை நேராக வியக்கத்தக்க வகையில் கும்பகம் விளையும் என்பது சான்றோர் வாக்கு. அவ்வகையில் இந்நூல் முழுவதும் மந்திரச் சொரூபம் தொக்கி நிற்கின்றது. ஆகையால் சில பாடல்களைப் பொருள் அறிந்து மனனம் செய்து பயன டைவோம், வாருங்கள்…..

To be continued………………………………….

இந்தியாவின் மகத்தான சாதனை ஐ.என்.எஸ். விக்ராந்த்! (Post.11,374)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,374

Date uploaded in London – –    20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் மகத்தான சாதனை ஐ.என்.எஸ். விக்ராந்த்!

ச.நாகராஜன்

இந்தியாவின் மகத்தான சாதனைகளுள் ஒன்றாகத் திகழும் ஐ.என்.எஸ்,விக்ராந்த் நமது பாரத கடற்படையிடம் தரப்பட்டது.

2022 செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அதை பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்கள் கடற்படையிடம் தந்தார்.

ஒரு கப்பலைக் கட்டுவது பெரிய சாதனை என்று சொல்ல முடியுமா என்று சிலர் நினைக்கலாம்.

ஆகவே தான் அதைப் பற்றிய விவரங்களை அறிதல் இன்றியமையாததாக ஆகிறது.

ஐ.என்.எஸ். விக்ராந்த் ஒரு மிதக்கும் விமான தளம். அது ஒரு மிதக்கும் நகரம்.

அதன் நீளம் 262 மீட்டர் அதாவது 859.58

அதன் அகலம் 62 மீட்டர் அடி. (203.41 அடி.)

அதில் 30 போர் விமானங்களை நிறுத்தலாம்.

அந்தக் கப்பலில் உள்ள 76 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே 500 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன. இதை பி.பி,சியே சொல்கிறது!

இந்தப் போர்க்கப்பல் இரண்டு கால்பந்து மைதானம் அளவிற்குச் சமமாகப் பெரிய ஒன்று.

18 அடுக்கு மாடிகள் கொண்டது இது.

இதில் 2400 பிரிவுகள் – compartments – உள்ளன. பெண் அதிகாரிகளுக்காகவும் பெண் மாலுமிகளுக்காகவும் இதில் தனி அறைகள் உள்ளன.

இதில் உள்ள ஏவியேஷன் ஹாங்கர் (Aviation Hangar) இரண்டு ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்குப் பெரியது.

இதில் உள்ள சமையலறையில் மணிக்கு 3000 ரொட்டிகளைத் தயார் செய்யலாம். அவ்வளவு பெரிய சமையலறை! 3 பெரிய உணவருந்தும் விசாலமான சாப்பாட்டு அறைகள் உள்ளன. இங்கு காபி-வெண்டிங் மெஷின்கள் உள்ளன. மேஜை நாற்காலிகள் தாராளமாக உள்ளன.

ஒரே சமயத்தில் 600 பேர் உணவருந்தலாம்.

ரஷிய  மிக் 29 K ரக விமானங்களை இங்குள்ள ஹாங்கரில் நிறுத்தலாம். இதில் போர் கால எச்சரிக்கைக் கருவிகள் ஏராளமாக உள்ளன. Kamov 31 மற்றும் அமெரிக்க MH 60R ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை இங்கு நிறுத்திக் கொள்ளலாம். அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் மற்று லை காம்பாட் ஏர்க்ராப்டை இதில் வைத்துக் கொள்ள முடியும்.

1600 பேர்கள் இந்தக் கப்பலில் பணி புரிகின்றனர்.

1957இல் முதலில் இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்ட ஹெர்குலிஸ் என்று பெயருள்ள ஹர் மெஜஸ்டிஸ்  ஷிப் 1961இல் பாரத கடற்படையில் சேர்க்கப்பட்டது. அந்த விமானம் தாங்கி கப்பலுக்கு அப்போது   விக்ராந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. அதையொட்டி இந்தப் பெயர் இந்த அதி நவீனமாய வடிவமைக்கப்பட்டக் கப்பலின் பெயராக அமைந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் போர் 1971இல் நடைபெற்றா போது இது அரும்பணி ஆற்றியது.

அந்தப் போரில் இதன் சாகஸங்கள் தனி ஒரு வரலாற்றைப் படைத்தவை.

இந்தக் கப்பல் இப்போது உலகினர் வியக்கும் படி இந்திய கடற்படை அணியில் சேர்க்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்குப் பெருமை தரும் ஒரு பெரிய நிகழ்வாகும்.

வாழ்க நமது கடற்படை! வாழிய பாரதம்! வாழிய நமது சேனாவீரர்கள்!

***

 புத்தக அறிமுகம் – 92

மாயாலோகம் (பாகம் 2)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 1   

 2. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 2   

 3. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 3   

 4. வியப்பூட்டும் தற்செயல் ஒற்றுமைகள்! – 4   

 5. எண்ணியதை எண்ணியவுடனேயே செய்யும்  அதிசய கணிணி!    

 6. மின்னல் மன்னன் டாமி காருதர்! 

 7. எதிர்கால விண்வெளிப் போர்கள்! 

 8. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 1

 9. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 2

10. ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! – 3

11. ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா!

12. பாதாள நகரம் டெரின்குயு!  

13. வந்து விட்டது மூளையியல் விற்பனை!

14. 200 நிமிடங்கள் அந்தரத்தில் நின்று சாதனை! 

15. அமெரிக்க ரகசியம்! – 1

16. அமெரிக்க ரகசியம்! – 2

17. அமெரிக்க ரகசியம்! – 3

18. விஞ்ஞானியின் எச்சரிக்கை: அயல்கிரகவாசி இருக்கிறான்! ஆனால்  

   அபாயகரமானவன்!!    

19. அதிசய புருஷர் தலாய்லாமா – 1 

20. அதிசய புருஷர் தலாய்லாமா – 2 

21. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும்-1   

22. அதிசய ரொபாட்டும் பறக்கும் சப்மரீனும்-2   

23. சந்திரனை அடைய விண்வெளி தூக்கி! 

24. நிரந்தரமாக உயிர் வாழ பழைய மூளை; புதிய உடல்!  

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book is a treasure that contains the information about mysterious men, places and events. A few of the interesting chapters are Blood drinking Subakaapraa, Brainology Market, The astronaut lift for Moon etc. The book is the second part of a collection of articles called Mayagolam which was published in Tamil weekly Bhagya.

‘பாக்யா’ வார இதழில் வெளிவந்த தொடரின் இரண்டாம் பாகம் நூலாகப் பூத்துள்ளது. விசித்திரமான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் நூல்! ‘ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா’, ‘மூளையியல் விற்பனை’, ‘சந்திரனை அடைய விண்வெளித் தூக்கி’ என நூலின் அத்தியாயங்கள் பிரமிக்கச் செய்கின்றன. படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல். 

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

சங்க இலக்கியத்தில், பகவத் கீதையில், பிரபஞ்ச உற்பத்தி Big Bang, Biggest Number (Post.11,373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,373

Date uploaded in London – 19 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

இந்துக்கள் மட்டுமே பிரபஞ்சத்தின் தோற்றத்தை (Big Bag) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார்கள் . இது ரிக் வேதத்தில் பிரபஞ்ச உற்பத்தி (Creation Hymn in Rig Veda ரிக் வேதம் 10-129) பற்றிய கவிதையில் உள்ளது.  ஆயினும் பகவத் கீதை ஒரு படி மேலே சென்று பிரபஞ்ச அழிவு அல்லது ஒடுக்கம் (Big Crunch) பற்றியும் பகர்கிறது. அத்தோடு நில்லாமல் கால அளவையும் (Time Scale) சொல்கிறது

இதை ஆங்கிலத்தில் பிரபஞ்ச வெடிப்பு அல்லது பிரபஞ்சத் தோற்றம் Big Bang என்பர். பிரபஞ்ச ஒடுக்கம்  Big Crunchபற்றி அவர்கள் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அதற்கான தடயம் இப்போது தென்படவில்லை என்பது அவர்களுடைய வாதம். ஆனால் விண்மீன்கள் என்றாலே என்ன என்று அவர்களுக்குத் தெரியாதபோதே நாம் பஜனைப்பாடல்களிலும் பகவத் கீதையிலும் ஆயிரம் சூரியன்கள் (Divi Surya Sahasrasya in BG) பற்றிக் கதைத்து விட்டோம் . விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சஹஸ்ரகோடி யுக தாரிணே என்ற வரி வருகிறது. அதை எல்லாம் கூட பிற் காலச் சேர்க்கை என்று கருதுவோருமுளர். ஆகையால் பகவத் கீதையிலும் சங்க இலக்கியத்திலும் வரும் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்வோம்.

BIGGEST NUMBER IN SANGAM TAMIL LITERATURE

உலகிலேயே பெரிய எண் பகவத் கீதையிலும் பதிற்றுப்பத்து நூலிலும்தான் உள்ளது.

முதலில் பதிற்றுப்பத்து பாடலைக் காண்போம். பிராமணப் புலவர் கபிலர் , சேர மன்னன் செல்வக் கடுங்கோ ஆழியாதனைப் பாராட்டுகையில் அவனை ஆயிரம் வெள்ளம் ஊழி (1000 ChaturyugaX Vellam) காலம் வாழ்க என்கிறார்

செல்வக் கோவே! சேரலர் மருக!

கால்திரை எடுத்த முழங்கு குரல் வேலி

நனந் தலை உலகம் செய்த நன்று உண்டெனின்

அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்

ஆயிர வெள்ள ஊழி

வாழி யாத ! வாழிய பழவே 63-20

பரிபாடலில் பிரபஞ்சத் தோற்றமும் ஒடுக்கமும் பல பாடல்களில் வருகின்றன

பரி 2-1/4; 2-1/12

பதிற்றுப் பத்திலும் 72-8ல் ஒடுக்கம் பற்றி வருகிறது

சதுர் யுகத்தைக் குறிக்கவும் ஊழி பயன்படுகிறது -பரி  3-80

மேலும் தோற்றத்தின்போதும் ஒடுக்கத்தின்போதும் என்ன வரிசையில் அது நிகழும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை மேலை நாட்டு விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளும் காலம் வெகு தலைவில் இல்லை. புறம் 51-ல் இளங்கீரனார் பாட்டிலும் இதைக்  காணலாம். முதலில் வெளி Space, பின்னர் வளி Wind/Star dust , தீ Fire , நீர் Water , நிலம் Land/Earth என்ற வரிசையை விஞ்ஞான  முறைப்படி கூறுகின்றனர்.

இதில் குறிப்பாக கபிலர் சொல்லும் எண் மிகப்பெரியது. ஆம்பல் என்னும் சொல்லைச் சொல்லி விட்டு மற்றோரு எண் ஆகிய  வெள்ளம் என்னும் எண்ணைச் சொல்கிறார்.

இரண்டாவது உலகத் தமிழ்நாட்டின்போது சா.கணேசன் தலைமையில் அறிஞர்கள் வெளியிட்ட கையேடு இந்த  எண்ணை விவரிக்கிறது : 1 என்ற எண்ணுக்குப்பின்னால் 16 பூஜ்யங்களைப் போடவேண்டும் ; அதைப்போல ஆயிரம் யுகம் அல்லது 1000 சதுர் யுகம் என்று இரு வகையிலும் பொருள் கொள்ளலாம். இதை சரியெனக் காட்டும் ஸ்லோகம் பகவத் கீதையில் வருகிறது. அதை மனதிற்கொண்டே பிராமண கபிலர், சம்ஸ்க்ருத மன்னன் இப்படிப் பாடியிருக்க வேண்டும்

Following is from my English article Tamil Hindu Encyclopaedia:

‘Vellam’ literally meant Flood or Water.

Vellam in mathematical jargon means

1 followed by 16 zeros

1,0000000000000000

(see page 275 of Second World Tamil Conference Hand Book)

Brahmin poet Kabilar used this number with 1000 UUzi(Chatur Yuga)

That means 1000X4,320,000X1,0000000000000000

Years.

Xxx

கீதை ஸ்லோகங்களில் Big Bang, Big Crunch, Biggest Number

கீதையிலும் கண்ணன் இதைக் கதைக்கிறார் ; கீழ்க்கணட ஸ்லோகங்களில் பிரம்மாவின் பகலில் பிரபஞ்சம் தோன்றுவதும் பிரம்மாவின் இரவில் அது ஒடுங்குவதும் சொல்லப்படுகிறது. பகவத் கீதை எழுதி 2500 ஆண்டுகள் ஆகிவிட்டதாக வெள்ளைக்காரர்கள் கதைப்பார்கள். நாமோ அது 5150 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பரமாத்மா சொன்னது என்பதை பஞ்சாங்கம் மூலம் அறிகிறோம்.

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ரயுக³பர்யந்தமஹர்யத்³ப்³ரஹ்மணோ விது³: |
ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||

பிரம்மாவுக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல்; ஆயிரம் யுகம் ஓரிரவு.; இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.


अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥८- १८॥

அவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |
ராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||

பிரம்மாவின் பகல் தொடங்கும் போது எல்லா விதமான சராசர தொகுதிகளும்
மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன (BIG BANG) ; இரவு வந்தவுடன்
அந்த மறைவுலகத்திலேயே மீண்டும் மறைகின்றன (BIG CRUNCH)

Thanks to http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-8

இந்த இடத்தில் அந்த எண்ணை மட்டும் எடுத்து கபிலர் பாட்டுடன் ஒப்பிடுவோம் .

பிரம்மாவின் பகல் 1000 யுகம்

பிரம்மாவின் ஒரு இரவு 1000 யுகம்

இது அவருடைய ஒரு நாள். அவருடைய வாழ்நாள் – 100 ஆண்டு x  365 நாட்கள் x 2000 சதுர் யுகம் x 4,320,000

இதை ஒரு பரம் என்று அழைப்பர் (காண்க – பகவத் கீதை- அண்ணா உரை- பக்கம் 216; ராமகிருஷ்ண மடம், சென்னை

மேற்கூறிய எண்ணுக்கு இணையான நம்பர் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை. இதை ஒரு காகிதத்தில் எழுத முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்

 இப்படிப்பட்ட ஒரு இடம் பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் உள்ளது. அதை நாம் பிரம்ம லோகம் அல்லது சத்ய லோகம் என்போம். அதையும் தாண்டி வைகுண்டம் உளது. பிரம்ம லோகம் வரை சென்று வருவோருக்கு மறு பிறப்பு உண்டு. அதற்கு மேல் இல்லை என்ற வியப்பான செய்தியையும் கிருஷ்ணன் செப்புகிறார்.

பகவத் கீதை ஆன்மீக நூல் மட்டும் அல்ல. விண்வெளி இயல், வெளி உலக வாசிகள் இயலும் கூட.

 –subham–tags- பெரிய எண் , வெள்ளம், ஆயிரம் ஊழி, பிரபஞ்ச , தோற்றம், ஒடுக்கம், கபிலர், கீதை 

Learn Tamil Verbs: Lesson 13 –Two More Verbs (ஆகு , ஆக்கு) Post No.11,372

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,372

Date uploaded in London – 19 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆக்கு make

நான் சோறு ஆக்கினேன் = I made rice ( I cooked rice)

xxx

ஆகு- become

நான் சந்யாசி ஆனேன் I became an ascetic

The two verbs look almost similar, but completely different in meaning.

Now you may practise Present, Past and Future with these two New Verbs.

From today, I split the page into two, so that you can see them clearly.

Let us learn Imperative (Commands) in the next class (but have a look at the tables for Imperatives)Tags- Make, become, Tamil verbs, lesson 13

Tamil Hindu Encyclopaedia -14 ; Ramayana unknown to Valmiki (தெரியாத ராமாயணம்)- Post 11,371

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,371

Date uploaded in London – 19 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Ramayana is mentioned directly only in two places in the 2000 year old Sangam Tamil literature. But those two anecdotes are unknown to either Valmiki or Kamban. But there is a rare mention of a Tamil Poet by name Valmiki in Purananuru. These unknown anecdotes show that Ramayana was part of ordinary Tamil folks. Because the rule for using similes is that it should be known to everyone.

Let us look at the details:

Purananuru verse 378 composed by Unpothi Pasunmkudaiyar ( uunpothi pasumkudaiyaar= Mr Green Umbrella of Unpothi)

 The poet met a Choza king and he gave the poet and his group of men and women many different ornaments. The group was so poor that they have never seen such jewels. So without knowing what to wear where in the body, the folks used the ear ring on hand and hand jewels in ears. The scene was a big comedy similar to the monkeys that wore jewels in wrong places when Sita Devi threw her jewels from the air plane when abducted by Ravana. This anecdote is not found in famous Ramayanas. But Tamils knew this 2000 years ago.

The poet used two epithets to Rama and Ravana; Rama ‘who destroys enemies’ and Ravana , ‘the demon who has a strong hand’. So Ravana was never portrayed as a goody in Tamil; he was called an ARAKKAN,  tamilized word for Rakshasa.

Xxxx

Akananuru 70 by Kaduvan Mallan ( full name of the poet- mathurai thamiz kuuththanaar Kaduvan Mallanaar)

This poet gives a beautiful comparison. A town was full of gossip because one gentleman was meeting a beauty there very often, but was dodging actual wedding. Her lady companion compelled him to marry her friend. He agreed and the whole town became quiet without any gossip when the news of impending marriage was known.

Poet says the gossip disappeared like Rama quietened the birds in the big banyan tree under which he was having a secret meeting with the engineers about building a bridge to Sri Lanka to attack the demon king Ravana.

The commentators add that Rama just signed with his hand saying ‘Be Quiet’ and the birds obeyed his command. So, this is reported as a Tamil Miracle. the second thing mentioned in the poem is the location. Poet says it happened in Tol Muthu Koti of Pandya country; some people think it was Dhanushkoti or Setu near Tiruppullaani in Ramanathapuram district of Tamil Nadu.

 We must also note the epithet given to Rama ‘Vel Por’, literally ‘War Winning’; actual meaning is Ever Victorious.

So Rama is always praised and Ravana was always denounced by the Tamil community 2000 years ago.

This confirmed by Kalittokai verse 38 by Brahmin poet Kabilar. He compared an elephant piercing a tiger with its tusk but unable to extricate the tusk from tiger’s body with Ravana trying to lift the Himalayas with Uma and Siva and suffering unable to take his crushed hands. Here also the poet described Ravana as a demon with ten heads. (ten heads are not actual heads; he had ten bad habits or qualities .See Manu Smrti 12-5/7 where he listed the ten bad qualities).

Xxx

Mysterious Tamil Valmiki

Sangam Tamils have Sanskrit names along with pure Tamil names. Many of the Sanskrit names were Tamilized which is confirmed by the doyen of Tamil literature U VE Saminatha Iyer and Kanchi Paramacharya (1894-1994). Both agree that Tamil poetess Kaaamakkani is Kamakshi, goddess of Kanchipuram. We have one poet by name Vaanmiiki who composed verse 358 of Puram. Commentators say he may be a descendent of great Sanskrit poet Valmiki or a name given to him because he praised  Sanyaasam (ascetic life)  better than Grahasthaashram (family life). He also said where Goddess Lakshmi would reside in the same philosophical verse.

In short ancient Tamils were great Hindus upholding the Sanaatan Dharma.

Tamil references:

ஐயிரு தலையின் அரக்கர் கோமான் – கலி  38

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வெளவிய ஞான்று – புறம் 378

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் – அகம் 70

To be continued…………………….

 tags- ராமாயணம், Ramayana, Valmiki, Tamil Sangam, Rama, Ravana, in Sangam poems,