Agastya in Indonesia
Research Article written by London Swaminathan
Date:26 July 2016
Post No. 3007
Time uploaded in London :– 16-45
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Agastya in London V and A Museum
இலக்கியமின்றி யிலக்கணமின்றே
எள்ளின்றாயினெண் ணெயுமின்றே
எள்ளின் றெண்ணெயெடுப்பது போல
இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்
என்று பேரகத்தியத்தில் ஒரு பாட்டுளது.
பொருள்:-
இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது. எள் இல்லாமல் எண்ணை வராது. எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்திலிருந்தே இலக்கணம் வரும்.
இது மிக அருமையான கருத்து. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? பதில் சொல்லுவது கடினம். கோழி இல்லாமல் முட்டை வராது. முட்டை இல்லாமல் கோழி வராது.
ஆண் முதலில் பிறந்தானா? பெண் முதலில் பிறந்தாளா? ஆணில்லாமல் பெண்ணில்லை; பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பதில் சொல்வது கடினம்.
ஆதாம், முதலில் வந்ததாகவும், அவரது இடது விலா எலும்பிலிருந்து ஏவாள் வந்ததாகவும் பைபிள் கூறும். இது இந்து மதக் கதை. ஆதாம் = அத்மா, ஈவ் (ஏவாள்)= ஜிவ்+ஆத்மா. அர்த்தநாரீஸ்வர ர்- சிவனின் இடப்பாகம் உமா. அதுதான் ஏவாள் .
சதரூபா- பிரம்மா கதையிலும் இது வருகிறது. பிரம்மா தனது சொந்த மகள் மீதே காதல் கொண்டதாக புராணம் கூறும். இதன் உட்பொருள் ஆதாம் தானே உருவாக்கிய ஒரு பெண்ணுடன் கூடி மனித இனத்தை உருவாக்கினான் என்பதே இதன் உட்கருத்து.
முட்டையோ கோழியோ ஏதோ ஒன்று முதலில் வந்திருக்கவேண்டும். அதே போல் ஆணோ பெண்ணோ யாரோ ஒருவர் முதலில் வந்திருக்கவேண்டும்..
இலக்கணம் முதலில் வந்ததா?
இலக்கணம் முதலில் வந்ததா, இலக்கியம் முதலில் வந்ததா? என்பது மற்றொரு புதிரான கேள்வி இதற்குப் பேரகத்தியம் என்னும் நூலே பதில் சொல்லும்
Agastya in Nepal
இலக்கியமின்றி யிலக்கணமின்றே
எள்ளின்றாயினெண் ணெயுமின்றே
எள்ளின் றெண்ணெயெடுப்பது போல
இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்
இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில் லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.
இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்தவை!
தமிழ் மொழிக்கு அகத்தியர் என்னும் வடபுல முனிவர் இலக்கணம் எழுதினார். அவருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்தது . இலக்கியங்களும் இருந்தன. அதைப் பயன்படுத்தி அகத்தியர் இலக்கணம் யாத்தார். அகத்தியர் காலம் குறித்து பல கருத்துகள் உள்ளன. முதல் அகத்தியர் கி.மு 1000 வாக்கில் அல்லது கி.மு 700 வாக்கில் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்படியானால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியும் இருந்தது; இலக்கியங்களும் இருந்தன. ஆயினும் அவை அனைத்தும் அழிந்து போயின. பிற்கால அகத்தியரின் சீடரே தொல்காப்பியர் எனக் கொள்ளல் வேண்டும் ஏனெனில் தொல்காப்பியர் காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு என்றே மொழியியல் காட்டுகிறது. ஆயினும் அவர் சொல்லும் ஏராளமான உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் இல்லாததால் அவருக்கு முந்தியிருந்த இலக்கியத்தில் இருந்தவற்றையே அவர் எழுதியிருக்கவேண்டும்.
பல அகத்தியர்கள் இருந்ததை சம்ஸ்கிருத இலக்கியமும் ஒப்புக்கொள்கிறது.
Agastya Statue
உலக மஹா இலக்கிய அதிசயம்!
இதே கருத்தை வடமொழிக்கும் பயன்படுத்தினால் உலக மஹா அதிசயம் வெளியாகும்.
தமிழ் மொழி இலக்கியத்தின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு. ஆனால வ்வேத இலக்கியத்தின் காலமோ கி.மு.1400 முதல் கி.மு,.6000 வரை என்று அறிஞர்கள் ஒப்புவர். அதற்குப் பின் ஏராளமான இலக்கண ஆசிரியர்கள் தோன்றினர். வேத இலக்கியத்திற்குப் பின் எழுந்த பாணினி என்னும் முனிவரின் இலக்கன்ணமே என்று எஞ்சி நிற்கிறது. அவர் கி.மு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்றுள்ள இலக்கணங்களில் அவர் எழுதியதே பழமையான இலக்கணம். அவரே பத்து இலக்கணகர்த்தாக்களின் பெயர்களைச் சொல்லுகிறார்.
அபிசாலி, கார்க்ய,காஸ்யப, காலவ, சக்ரவர்மண,பாரத்வாஜ, சாகடாயன, சாகல, சேனக, ஸ்போடாயன.
இவர்களில் ஒருவர் எழுதிய இலக்கணமும் நமக்குக் கிடைக்கவில்லை. வேதங்களின் பெரும்பாலான பகுதிகளும் ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களும் அழிந்துவிட்டன.
ஆயினும் வேதங்களில் இந்த முனிவர்கள் சிலரின் பெயர்கள் காணப்படுகின்றன.
ஆனால் ரிக்வேதத்திலேயே இலக்கணம் பற்றிய சொற்கள் இருக்கின்றன. இதனால் கி.மு 1400 அல்லது அதற்கு முன்னரே இலக்கணம் இருந்ததை அறிகிறோம். இன்றுள்ள மொழிகளில் மிகவும் பழமையான சம்ஸ்கிருதத்தில் இப்படி இருப்பது உலக அதிசயம் மட்டுமல்ல. உலக நாகரீகம் தோன்றியது இந்தியாவே என்பதை ஐயம் திரிபற, உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காட்டும். ஏனெனில் ஒரு நாட்டின் மொழி வளர்ச்சி அந்நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவு கோலாகும். இலக்கியமும் இலக்கணமும் வேத காலத்திலேயே தோன்றியது என்றால் அதற்கு முன்னரே சம்ஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும்.
உலகில் மிகப்பரிய மொழி அதிசயம் இது;
உலகில் மிகப்பரிய இலக்கண அதிசயம் இது;
உலகில் மிகப்பரிய இலக்கிய அதிசயம் இது;
உலகில் மிகப்பரிய மொழி இயல் அதிசயம் இது.
வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!
–Subham–
You must be logged in to post a comment.