பெண்களுடன் வாதாடாதே (Post No.2913)

RelationshipFighting

Article written by London swaminathan

 

Date: 22 June 2016

 

Post No. 2913

 

Time uploaded in London :– 8-33 AM

 

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனிதனுக்கு இழிவை ஏற்படுத்தும் 6, பெருமை தரும் 4, விஷயங்கள்

donkey ride

பால சகித்வம் = சிறுவர்களுடன் நட்பு (பக்குவம் அடையாதோருடன் நட்பு)

அகாரண ஹாஸ்யம் = காரணமில்லாமல் தனக்குத் தானே சிரித்தல் (மொபைல் போன், ஐ பேட் – இவைகளைப் பார்த்து பொது இடங்களில் சிரித்தல்)

ஸ்த்ரீஷு விவாதோ= பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் (மனைவி, சஹோதரிகளுடனோ, அடுத்தவீட்டுப் பெண்களுடனோ சண்டை போடுதல்)

 

அசஜ்ஜன சேவா = கெட்டவர்களுக்குச் செய்யும் உதவி (லஞ்சம் கொடுத்தல்)

கார்தப யானம் = கழுதை சவாரி (ஓட்டை காரில் சவாரி செய்தல்)

அசம்ஸ்க்ருதவாணி = கொச்சை மொழியில் பேசுதல் (பண்பற்ற மொழி; கீழ்மக்கள் பயன்படுத்தும் மொழி)

ஷட்சு = இந்த ஆறில்

நர: – மனிதன்

லகுதாம் = சிறுமையை

உபயாதி = அடைகிறான்.

 

பாலசகித்வமகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷு விவாதோ(அ)சஜ்ஜனசேவா

கார்தபயானமசம்ஸ்க்ருதவாணீ ஷட்சு நரோ லகுதாமுபயாதி

Xxxx

school boys

பெருமை தரும் நான்கு விஷயங்கள்

एको धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा।
विद्यैका परमा दृष्टिरहिंसैका सुखावहा॥

ஏகோ தர்ம: பரம்ஸ்ரேய: க்ஷமைகா சாந்திருத்தமா

வித்யைகா பரமா த்ருஷ்டிரஹிம்சைகா சுகாவஹா

 

 

தர்மம் (என்ற ‘ஒன்று’ ) மாபெரும் மேன்மையைத் தரும்

பொறுமை (என்ற ‘ஒன்று’ ) சிறந்த அமைதியைத் தரும்

கல்வி (என்ற ‘ஒன்று’ ) அளவற்ற நிறைவைத் தரும்

அஹிம்ஸை (என்ற ‘ஒன்று’ ) தொடர்ந்து சுகத்தைத் தரும்.

–உத்யோக பர்வம், மஹாபாரதம்

 

–subam–

 

 

அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

Himalaya1_BA_26_567px

சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 32 by ச.நாகராஜன்
Post no 867 Dated 26th February 2014

தர்மங்களில் எது உயர்ந்த தர்மம்? அஹிம்சையே உயர்ந்த தர்மம். யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது சிறந்த கொடையாகும்.
இதை வலியுறுத்தும் கவிதை இது:

அஹிம்சா பரமோ தர்ம: ததாஹிம்சா பரோ தம: I
அஹிம்சா பரமம் தானம் அஹிம்சா பரமம் தப: II

அஹிம்சா பரமோ தர்ம: – அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்
ததாஹிம்சா பரோ தம: – அந்த அஹிம்சை மிக உயர்ந்த சுய கட்டுப்பாட்டாலேயே அடைய முடியும்.
அஹிம்சா பரமம் தானம் – யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது மிகச் சிறந்த கொடையாகும்
அஹிம்சா பரமம் தப: – அஹிம்சையே மிக உயர்ந்த தவமாகும்.

தர்மப்படி வாழ வேண்டும் என்கின்றன நமது அற நூல்கள். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கவிஞர்கள் இதை வலியுறுத்தத் தவறுவதே இல்லை.

தர்மம் சரத் மா(அ)தர்மம் சத்யம் வதத் நாந்ருதம் I
தீர்கம் பஷ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஷ்யத மா(அ)பரம் II

தர்மம் சரத் – தர்மத்தைக் கடைப்பிடி
மா அதர்மம் – அதர்ம வழியை அல்ல
சத்யம் வதத் – உண்மையே பேசு
ந அந்ருதம் – பொய்யைப் பேசாதே
தீர்கம் பஷ்யத பரம் பஷ்யத– தொலைவில் இருந்தாலும் கூட உறுதியான லட்சியத்தின் மீது கண்களைப் பதி
மா ஹ்ரஸ்வம்,மா அபரம் – உடனடியாக நிறைவேறும் அருகில் உள்ள லட்சியத்தின் மீது அல்ல

என்ன அருமையான அறிவுரை! மனத்தில் எப்போதும் நிலை நிறுத்தி வைக்க வேண்டிய அருளுரை அல்லவா இது!

இனி மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாடலைப் பார்ப்போம்:

தர்மம் யோ பாததே தர்மோ ந ச தர்ம: ப்ரகீர்தித: I
அவிரோதாத் து யோ தர்ம: ச தர்ம: சத்யவிக்ரம: II

(ய) தர்மம் (அன்யம்) தர்மம் பாததே – எந்த மதமானது இதர மதத்தைப் பின்பற்றுபவர்களை கொடுமைப் படுத்துகிறதோ

ச தர்ம: ந ப்ரகீர்தித: – அந்த மதம் உண்மையான மதம் அல்ல!
ய தர்ம: அவிரோதாத் (ஸ்வீகார்யதே) – எந்த மதமானது மற்றவர்களுக்குத் தடையாக இருக்காமலோ அல்லது மற்றவைகளை அடக்காமல் இருக்கிறதோ
ச தர்ம: சத்யவிக்ரம: – அந்த மதமே உண்மையானது, சாசுவதமாக நிலை பெற்றிருப்பதாகும்.

இந்த சாசுவதமான சத்தியத்தை கவிஞர் வாயிலாக நாம் அறியும் போது உளம் மகிழ்கிறோம்.

இதைப் படிக்கும் போது ஹிந்து மதத்தைச் சார்ந்தோர் பெருமிதம் அடைவர்.
ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் ஒரு நாளும் பிற மதத்தினரை இழிவாகப் பேசுவதில்லை. அடக்குவதில்லை.

சாசுவதமான தர்மத்தை சகிப்புத் தன்மையுடன் சொல்வதோடு அதைப் பின்பற்றுவோர் இதர மதத்தினரை மரியாதையுடன் நடத்துகின்றனர்.

அதனால் தான் அது சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது.
அது ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை; நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சனாதமாக இருக்கும் ஒரு தத்துவம், சத்தியம் அது!

Contact swami_48@yahoo.com
*****************